மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் மன ஏற்றத்தாழ்வுக்கான சரியான தீர்வு இதுவே!

 மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் மன ஏற்றத்தாழ்வுக்கான சரியான  தீர்வு இதுவே!

நீங்கள் நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் போது ஒரு நிமிடம் சிரித்து சந்தோசமாக இருக்கிறீர்கள், மறு நிமிடம் அது அழுகையாக மாறுகிறதா? அதிகம் சோர்வாகவும், உங்கள் கட்டுப்பாட்டில் உங்கள் உணர்வுகள் இல்லாதது போல உணர்கிறீர்களா? கவலைப் படாதீர்கள். இது மெனோபாஸ்(menopause) எனப்படும் மாதவிடாய் நிற்கும் காலத்திற்கு உங்களை தயார் செய்துகொள்ளும் முதல் நிலை. நாற்பது வயதை எட்டிய பெண்களுக்கு (women) இது பொதுவாக தோன்றுவது இயற்கை. 

இது எதனால் வருகிறது?

மருத்துவரீதியாக, பெண்கள் வயது முதிர முதிர அவர்கள் உடலில் ஈஸ்ட்ரோஜென் அளவுகள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் மாறிக்கொண்டே இருக்கும். ப்ரோஜெஸ்ட்ரோன் குறைவாக சுரக்கிறது. ஏற்றத்தாழ்வுள்ள ஈஸ்ட்ரோஜென், ப்ரோஜெஸ்ட்ரோன் அளவுகள், மற்றும் வேறு காரணிகள் போன்றவை மனநிலையை கட்டுப்படுத்தும் (mental health) செரோட்டினை பாதிக்கிறது. அதனால் மனநிலையில் ஏற்றத்தாழ்வுகள் தோன்றுகிறது. 

சரி, இதற்காக என்ன செய்வது?

கவலையை விடுங்கள். எல்லாம் நம் கையில்தான் இருக்கிறது. ஒரு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றினால் இதை எளிதில் சமாளித்து விடலாம். அடுத்தவரை தொந்தரவு செய்யாமல் நமக்கு ஏற்படும் ஏற்றத்தாழ்வு கொண்ட மனநிலை வராமல் எப்படி சந்தோசமாக வாழ்ந்து நம்மை சுற்றி இருப்பவர்களையும் எப்படி சந்தோசமாக வைத்துக்கொள்வது  என்ற 15 வழிகளை இங்கே காணலாம்.

1. உற்சாகத்தோடு நடங்கள்

நீங்கள் உற்சாகமாக இல்லை என்றாலும் நீங்கள் நடக்கும்போது கைகளை வீசி வளர்ந்ததாக உணர்ந்து நடந்து பாருங்கள், உங்கள் மனநிலையை மாற்றி விடும்.

2. எப்போதும் சிரித்துக் கொண்டே இருங்கள்

Pixabay

உங்கள் மனநிலையை எளிதில் உயர்த்த வேண்டுமென்றால் சிரிங்கள். நீங்கள் சிரிக்கும்போது அதை உணர்ந்து மூளையில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும், அது உங்களை குதூகலமாக வைக்க உதவும். 

3. தன்னார்வம் கொள்ளுங்கள்

தன்னார்வலராக ஒரு குழுவிற்கோ அல்லது உங்கள் நண்பருக்கோ உதவி செய்யுங்கள். அது உங்களை நல்ல மனநிலையில் வைத்திருக்க உதவும்.

4. உங்களுக்கு கிடைத்திருக்கும் வாழ்த்துக்களை எண்ணுங்கள்

உங்கள் வாழ்க்கையில் நடந்த நல்லவற்றை எழுதுங்கள். நல்லவற்றை பார்க்க முற்பாட்டால், உங்கள் நோக்கமும் நேர்மறை ஆகிவிடும்.

5. புதிய நண்பர்களை சேகரியுங்கள்

Pixabay

புது புது நண்பர்களோடு இணைந்து கொள்ளுங்கள். அவர்களோடு நீண்ட காலம் தொடர்போடு இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். எவ்வளவு நிறைய நண்பர்களை வைத்திருக்கிறீர்களோ, அவ்வளவு சந்தோஷம் உங்களைத் தேடி வரும்.

6. வேர்வை வர வேலை செய்யுங்கள்

ஒரு 5 நிமிட உடற்பயிற்சி உங்களை நல்ல மன நிலையில் வைத்திருக்க உதவும். அது உங்கள் உடலுக்கும் நீண்ட காலத்திற்கு நன்மை பயக்கும். சீராக தினமும் உடற்பயிற்சி செய்துவந்தால் மனநிலையும் சீராக இருக்கும். செய்துதான் பாருங்களேன்!

7. மன்னிக்கவும் மறக்கவும் பழகுங்கள்

சொல்வது எளிது. செய்வது கடினம். ஆனால் கொஞ்சம் சுயநலமாக யோசித்து உங்கள் ஆரோக்கியத்திற்காக மனதில் இருக்கும் பகையை மறந்து மன்னிக்க பழகுங்கள். உங்கள் வாழ்க்கை சொர்கமே!

8. தியானம் செய்யுங்கள்

Pixabay

மனதில் அமைதி நிலவ, சந்தோஷம், மனநிறைவு பெற தவம் செய்யுங்கள். அதுமட்டுமின்றி அது உங்கள் மூளையில் புது வழியையும் காண்பிக்கும்.

9. இசையை கேளுங்கள்

நல்ல இசையை தினமும் கேட்க  தவறாதீர்கள்.அது நேரடியாக உங்கள் மனநிலையை மாற்ற உதவும். 

10. “ஏன்” என்ற கேள்வியை மறக்காதீர்கள்

நாம் ஏன் செய்கிறோம், எதற்காக செய்கிறோம், நீங்கள் உடற்பயிற்சி செய்யும்போதும், வேலை செய்யும்போதும், மற்றவர்களுக்கு நன்மை செய்யும்போதும் ஏன் என்பதை உணர்ந்து செய்யும்போது உங்கள் வாழ்க்கைக்கு ஒரு நல்ல அர்த்தத்தை தரும். உங்கள் இலக்கை அடைந்த நிறைவையும் தரும்.

11. போதுமானவரை தூங்குங்கள்

Pixabay

நல்ல உறக்கம் மிக மிக அவசியம். 7 முதல் 8 மணி நேரமாவது நல்ல தூக்கம் தேவை. நன்றாக உறங்கி எழுந்தாலே புத்துணர்வு கிடைக்கும்.

 

12. உங்கள் மனசாட்சியை கேட்டு நடங்கள்

உங்கள் மனம் உங்களுக்கு எதிரியாகாமல், உங்கள் மனதை கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொள்ள முயலுங்கள். சில சமயங்களில் அது உங்களை நல்வழிப்படுத்தும். சில நேரங்களில் அது நிலைமையை மோசமாக்க முனையும்போது “இது உண்மையா?” என்று கேட்டுப்பாருங்கள்.

13. உங்கள் இலக்கை நிர்ணயுங்கள்

யதார்த்தத்தில் உங்களால் இயலும் இலக்கை நிர்ணயுங்கள். அதை எழுதி வைத்துக்கொண்டு, அதை செய்து முடித்தபின் உங்களுக்கு நீங்களே வெகுமதி அளித்துக்கொள்ளுங்கள்.

14. உங்களை சுற்றி நேர்மறை எண்ணம் கொண்டவர்களோடு இருங்கள்

Pixabay

மன உறுதியோடும், ஆரோக்கியமாகவும், உற்ச்சாகமாகவும் இருக்கும் நண்பர்களோடு நேரம் செலவிடுங்கள். அது உங்களையும் தொற்றிக்கொள்ளும். உங்களிடம் இருந்து மற்றவர்களுக்கும் அது போய்ச் சேரும்.

15. ஒரு ஆலோசகரை அணுகுங்கள்

மேற்கூறியவற்றைப் பின்பற்றி உங்கள் மன நிலையை மாற்ற சிரமப்படுகிறீர்கள் என்றால் ஒரு நல்ல ஆலோசகரை அணுகவும். நீங்கள் மன நிலை பாதிப்பிற்குள்ளாகவில்லை என்றாலும், உங்களுக்கு உதவும் வகையில் உங்களை நல்வழிப்படுத்தும்.

பட ஆதாரம் - Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.