கற்றாழை சருமத்தில் ஏற்படும் எரிச்சலுக்கும், புண்ணை குணப்படுத்துவது மட்டுமின்றி, உங்கள் முகத்தில் இருக்கும் முகப்பரு, கரும் புள்ளி, கறை போன்ற எப்படிப் பட்ட சருமமாக இருந்தாலும், கற்றாழை பயன்படுத்துங்கள். 7 நாட்களில் பொலிவான முகத்தைப் பாருங்கள். எப்படி இவ்வளவு தைரியமாக சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? அதற்கு என் சருமமே உதாரணம். நான் பயன்படுத்தாத கிரீம் இல்லை, நான் முயற்சிக்காத இயற்கை வைத்தியங்கள் இல்லை. கடைசியில் கற்றாழை (aloe vera) தான் எனக்கு கைகொடுத்தது.
என்னுடைய சருமம் வறண்டும் இல்லாமல், எண்ணெய் வடியும் சருமமும் இல்லாமல், இரண்டும் கலந்த மிகவும் உணர்ச்சி மிகு சருமம். அதனால் நான் பார்த்து பார்த்துதான் க்ரீம்களை பயன்படுத்தினேன். விளைவு இருக்கும் முகப்பருக்கள் அதிகமானதே அன்றி குறையவில்லை. முகத்தில் இருக்கும் சிறிய கரும்புள்ளிகளை நீக்கப்போய், நிறைய இடத்தில் பரவிவிட்டது. இதை நினைத்து நினைத்து மனம் உடைந்து போய் இருக்கும்போது தான் கற்றாழை பற்றி கேள்விப்பட்டேன்(skin benefits). அது எந்த எரிச்சலும் தராமல், குளிர்ச்சியாக இருந்தது. முதல் நாள் பயன்படுத்தும்போது நம்பிக்கையே இல்லை. இதில் ஒரு வாசனை கூட இல்லையே இது எப்படி குணமாகும் என்று இரண்டு, தொடர்ந்து மூன்று முறை பயன்படுத்தியபோதே கருமை குறைய ஆரம்பித்தது. மூன்று வாரங்களில் பெரும்பாலான சரும (skin) பிரெச்சனைகள் மறைந்து, இப்போது பளிச்சிடும் முகத்துடன் இருக்கிறேன்.
கற்றாழையில் பல்வேறு சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இதில் வைட்டமின் எ, பி, சி, டி, ஈ மற்றும் பி12 உள்ளது. பி12 அரிதாக இருக்கும் ஒரு சில தாவரங்களில் இதுவும் ஒன்று.
Pexels
கற்றாழையை எவ்வாறு பயன்படுத்தினேன் என்று பார்க்கலாம்
- கற்றாழையை பயன்படுத்துவதற்கு முன் நன்றாக அலசிய பின், மேலே உள்ள பச்சை நிற தோளை சீவிவிட்டு, உள்ளே உள்ள கண்ணாடி போன்ற ஜெல்லை மட்டும் பயன்படுத்தினேன்.
- தினமும் ஒரு சிறிய துண்டு கற்றாழையே என் முகத்திற்குப் போதுமானதாக இருந்தது.
- மீதமுள்ள கற்றாழையில் இருந்து நீர் வடியும். அதனால், கவனமாக எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.
உங்களுக்கு தினமும் சுத்தம் செய்து பயன்படுத்த சிரமமாக இருந்தால், கற்றாழையில் இருந்து எப்படி ஜெல் செய்து வைத்துக் கொள்ளலாம் என்று பார்க்கலாம்.
1. கற்றாழையை பெரிய துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் 10 நிமிடம் ஊற விடுங்கள்.
2. பிறகு தோள்களை நீக்கி, மீதமுள்ள கண்ணாடி போன்ற ஜெல் பகுதியை மட்டும் சிறு துண்டுகளாக்குங்கள்.
3. அதை ஒரு மெதுவாக அரைத்து சாரு பிழியும் ஜூஸரில் போட்டு, சாரை மட்டும் எடுத்துவைத்துக் கொண்டு தினமும் பயன்படுத்தலாம்.
4. மீதமுள்ள சக்கையை தூக்கி எரியாமல், அதோடு சிறிது தண்ணீரும், தேனும் கலந்து பருகி விடுங்கள். உடலுக்கும் ஆரோக்கியம்.
இது எனக்கு சில நல்ல முடிவுகளைக் காட்டத் தொடங்கியிருந்தாலும், நான் ஒரு முழுநேர எழுத்தாளராக இருப்பதால், கூடுதல் மணிநேரம் பணிபுரியும் போது, மேற்கூறியவற்றைத் தயாரிக்க எனக்கு போதுமான அளவிற்கு நேரம் இருந்ததில்லை . அப்போதுதான் , ஒரு நீண்ட ஆராய்ச்சிக்குப் பிறகு, POPxo வின் அலோ வேரா தயாரிப்புகள் எனக்கு பல வழிகளில் மிகவும் பயனுள்ளதாக இருப்பதை நான் கண்டேன். நான் முன்பு ஜெல்லைப் பயன்படுத்தினேன், ஆனால் இந்த தயாரிப்பு கற்றாழையை கொண்டு மூன்று வெவ்வேறு தோல் பராமரிப்புப் பயன்பாடுகளை அளிக்கிறது என்று கண்டறிந்தேன்.
கெமோமில் & அலோ வேரா டீப் க்ளென்சிங் க்ரீம் (POPxo Chamomile Chamomile & Aloe Vera Deep Cleansing Creme)
முதலில், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் மற்றும் கெமோமில் ஆகியவற்றைக் கொண்ட POPxo வின் டீப் க்ளென்சரைப் பயன்படுத்தத் தொடங்கினேன். இது என் உணர்திறன் வாய்ந்த சருமத்தில் லேசாக இருந்தது, மேலும் அழுக்கை அகற்ற இது சிறப்பாகச் செயல்பட்டு, என் தோலை ஒரு பிரகாசத்துடன் மாற்றியது. மேற்கொண்டு பருக்கள் அதிகம் ஆகாமல் தப்பித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி!
அலோ வேரா ஃபேஸ் ஸ்க்ரப் (POPxo Aloe Vera Face Scrub )
அடுத்து, டெட் செல்கள் மற்றும் பிளாக்ஹெட்ஸிலிருந்து விடுபட சருமத்தை எக்ஸ்போலியெட் செய்வது அவசியம் என்பதால், இந்த கற்றாழை அடிப்படையிலான POPxo அலோ வேரா ஃபேஸ் ஸ்க்ரப்பை முயற்சித்தேன். ஆஹா! இது என் சருமத்தில் அதிசயங்களைச் செய்தது, இது முகப்பரு அனைத்தையும் அகற்றியது. கற்றாழை க்ளென்சருடன் என் முகத்தை கழுவிய பிறகு வாரத்திற்கு இரண்டு முறை இதைப் பயன்படுத்தினேன்.
அலோ வேரா ஃபேஸ் பேக் (POPxo Aloe Vera Face Pack)
இப்போது கற்றாழை அடிப்படையிலான தயாரிப்புகளுக்கு என் தோல் மிகவும் நன்றாக பதிலளிப்பதால், அதே POPxo தயாரிப்புகளிலிருந்து ஒரு ஃபேஸ் பாக்கை முயற்சிக்க விரும்பினேன். எனவே நான் POPxo அலோ வேரா ஃபேஸ் பேக்கை முயற்சித்தேன். நான் சோம்பேறியாகவும், சொந்தமாக ஒரு பேக் தயாரிக்க நேரமில்லாத நாட்களிலும் இது எனக்கு உதவியது.வைட்டமின் ஈ, ஜஜோபா ஆயில், ஆர்கான் ஆயில் மற்றும் சந்தன் பவுடர் போன்ற ஒரு ஃபேஸ் பேக் என் முகப்பருவை லேசாக்கி, மாயமாகியது.
அலோ வேரா ஃபேஸ் & பாடி ஜெல் (POPxo Aloe Vera Face & Body Gel)
குளிர்காலமாக இருப்பதால், என் தோல் அடிக்கடி வறண்டு போய் விடும். இறுதியாக நான் இந்த POPxo வின் ஃபேஸ் அண்ட் பாடி ஜெல்லை முயற்சித்தேன். இது என் சருமத்தை நீரேற்றமாகவும் ஊட்டச்சத்துடனும் இருக்க உதவியது.இதை தினமும் குளித்த பிறகு உங்கள் சருமத்தில் தடவினால் , மென்மையான சருமத்தை விரைவில் பெறலாம்.
உடனே பயன்படுத்தத் தொடங்கி, ஒளிரும் சருமத்தை பெறுங்கள் !
பட ஆதாரம் -Pexels
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!