சாலைப்பயணத்தில் குறுக்கிடும் அமானுஷ்யங்கள்.. பெசன்ட் நகரிலும் சுற்றி வரும் ஆவிகள்!

சாலைப்பயணத்தில் குறுக்கிடும் அமானுஷ்யங்கள்..   பெசன்ட் நகரிலும் சுற்றி வரும் ஆவிகள்!

பயணம் என்பது பெரும்பாலோருக்கு பிடித்த விஷயம். மழைப்பொழுதுகளிலோ , மாலை நேரங்களிலோ, குளிர்காற்று மேனியில் பட சிலுசிலுப்பான பயணம் செல்வது என்பது இயற்கை ஆர்வலர்களின் விருப்பமான அம்சம்.

அதே சமயம் மந்திரவாதிகள் உலவும் இடம் அல்லது ஆவிகள் உலவும் இடமும் (haunted palces) அவர்களின் பயணத்தின் பாதையில் குறுக்கிடலாம். அப்படி அவைகளிடம் மாட்டி கொண்டோம் என்றால் அவற்றின் செயல்கள் நம்மை தெறிக்க வைக்கின்றன . இந்திய சாலைகளில் அப்படியான இடங்கள் நிறையவே இருக்கின்றன.

Youtube

சேலம் - பெங்களூரு நெடுஞ்சாலை அருகே இருக்கும் தோப்பூர் கணவாய் எனும் இடம் இதற்கான இடம்தான். தருமபுரி அருகே இருக்கும் இந்த இடத்தில் பயணிகள் பலர் ஆவிகளின் நடமாட்டத்தை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆயினும் ஒரு சிலர் இந்த இடத்தின் அமைப்பினால் தான் விபத்துகள் ஏற்படுகிறது என்றும் கூறுகின்றனர். இந்த இடம் வழியாக செல்லும்போது கவனம் சாலையில் வைத்துக் கொள்ளுங்கள். அல்லது அதற்கும் முன்பு உள்ள முனியப்பன் கோயிலில் வேண்டிக்கொண்டு செல்லலாம்.

மும்பை கோவா நெடுஞ்சாலையில் மந்திரவாதிகள் சூனியக்காரர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கின்றன. இந்த சாலையில் பயணிக்கும்போது அசைவம் கொண்டு சென்றால் நீங்கள் பயங்கரமான அனுபவங்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.

 

Youtube

இந்த இடத்தில் முன்பு நடந்த ஒரு பயங்கர சம்பவத்தை இந்த பகுதி மக்கள் நினைவு கூர்கின்றனர், ஒருமுறை இளம் தம்பதிகள் காரில் சிக்கனை வாங்கி வைத்துக் கொண்டு அந்த வழியாகப் பயணித்துள்ளனர். குறிப்பிட்ட இடம் வந்ததும் காரின் ஹெட்லைட்கள் வேலை செய்யாமல் அணைந்து அணைந்து எரிந்தன.

காரில்தான் பிரச்னை என்று நம்பிய ஜோடி காரை விட்டு இறங்கி என்ன என்று பார்த்திருக்கிறார்கள். அவர்கள் இறங்கியவுடன் காரின் கதவுகள் தானாக மூடிக்கொண்டனவாம். திறக்கவே முடியவில்லையாம். திடீரென காரில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. கதவுகள் தானாக திறந்தனவாம்.

தவறான இடத்தில் சிக்கியிருக்கிறோம் என்பதை அந்த ஜோடி உணர்ந்தார்களாம். நள்ளிரவு நேரம் உதவிக்கு யாருமற்ற இடத்தில் அந்த தம்பதி அச்சத்தில் உறைந்து போயிருக்கின்றனர். காரின் கதவுகள் திறந்த பின்னர் இளைஞர் சென்று காருக்குள் பார்க்க காரில் இருந்த அசைவ உணவுகளைக் காணவில்லையாம்.

அதே நேரம் அவர் மனைவி பயங்கரமாக அலறியிருக்கிறார். காரணம் அவரை ஏதோ ஒன்று கடுமையாக அறைந்து விட்டு போயிருக்கிறது. முகத்தில் கீறல்கள் இருந்தன. இதைப்பற்றி அதிகம் யோசிக்காமல் உடனடியாக அங்கிருந்து தப்பித்தால் போதும் என அந்த ஜோடி அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு வந்திருக்கின்றனர். இந்தக் கதையைத்தான் அந்தப் பகுதி மக்கள் குறிப்பிட்டு சொல்லி அந்த வழியாக இறைச்சி போன்றவற்றை எடுத்து போகக்கூடாது என்று கூறுகின்றனர்.

Youtube

இந்தியாவில் அதிக அளவில் விபத்துக்கள் நடக்கும்பகுதியாக ராஞ்சி ஜெம்ஷெட்பூர் தேசிய நெடுஞ்சாலை 33 இருக்கிறது. மூன்று வருடங்களில் தொடர்ந்து குறிப்பிட்ட இடத்தில் மட்டுமே 245 விபத்துக்கள் அரங்கேறி இருக்கின்றன. இந்த இடத்தைக் கடக்கும் பெண் உருவம்தான் இதற்கு காரணம் என டிரைவர்கள் கூறுகின்றனர். ஒரு சிலரோ குறுகலான மலைப்பாதை எனவும் சொல்கின்றனர்.

கிழக்கு கடற்கரை சாலை சென்னைவாசிகளின் சொர்க்க பூமி. இங்கிருந்து பாண்டிச்சேரி வழியாக கடலை ரசித்தபடியே பயணிக்க முடியும். ஆனாலும் இந்த ஈசிஆர் ரோட்டிலும் குறிப்பிட்ட இடத்தில் இரவு நேரங்களில் ஆவிகள் நடமாட்டம் காரணமாக விபத்துக்கள் ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. ஒரு சிலர் இந்த சாலையில் வேகமாக செல்வதே காரணம் என்றும் கூறுகின்றனர்.

பெசன்ட் நகர் சென்னை வாசிகளுக்கு விருப்பமான இடம். அடர்ந்த மரங்கள் நிறைந்த பெசன்ட் அவென்யூ சாலையில் இருள்குவியும் நேரங்களில் இங்கே சில அமானுஷ்ய ரூபங்கள் உலவுவதாக சொல்லப்படுகிறது. நள்ளிரவு நேரங்களில் விசித்திரமான சப்தங்கள் மர்ம உருவ நடமாட்டம் போன்றவை நடப்பதாக சொல்கின்றனர். மர்ம அறைகளையும் அந்த ஆவிகள் தருவதாக அனுபவப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!