உங்கள் ராசிக்கு நீங்கள் இந்த தெய்வத்தை வணங்கினால் வேண்டியவை உடனே நிறைவேறும்..

உங்கள் ராசிக்கு  நீங்கள் இந்த தெய்வத்தை வணங்கினால் வேண்டியவை உடனே நிறைவேறும்..

ராசிபலன் பார்ப்பது என்பது தமிழர்களின் அன்றாட வழக்கங்களில் ஒன்று. அதற்காகவே நாளிதழ்களை வாங்கும் நபர்கள் உண்டு.

நமது ஒவ்வொருவரின் தனிப்பட்ட ராசியும் அவரவர் பிறந்த நட்சத்திர மற்றும் அதன் பாத அமைப்பின் படியே பிரிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு தெய்வம் அதிபதியாக இருப்பார்கள்.

Youtube

நமது இஷ்ட தெய்வ வழிபாடுகள் குல தெய்வ வழிபாடுகள் நம்மை எப்போதும் இடர்களில் இருந்து காக்கும் கவசமாக இருக்கிறது என்றாலும் நமது ராசிக்கேற்ற (zodiac) இறைவனை வணங்கும்போது கூடுதல் பலன்கள் கிடைக்கும்                                                  

வேண்டியன எல்லாம் வேண்டிய சமயத்திலேயே நிறைவேறும். நமது பிரார்த்தனைகள் நியாயமாக இருப்பின் நம் வாழ்க்கை மேம்படுவதற்கான வழிகள் வரைபடங்களை இறைவன் நல்குவார்.

Youtube

அதன்படி ஒவ்வொரு ராசிக்காரர்களும் வணங்க வேண்டிய தெய்வங்கள் பற்றி இங்கே பார்க்கலாம்.

மேஷ ராசிக்கார்கள் முழு முதற்கடவுளான விநாயகரை வணங்க வேண்டும். நன்மை உண்டாகும்.                        

ரிஷப ராசிக்காரர்கள் வள்ளி தெய்வானையுடன் இருக்கும் முருகரை வணங்கி வர நல்லின்பம் பெருகும்.                  

மிதுன ராசிக்காரர்கள் ஸ்ரீ விஷ்ணு அல்லது பெருமாளை பக்தியோடு வணங்க மாயன் அருள் கிட்டும்.                             

கடக ராசிக்காரர்கள் நரசிம்மர் அல்லது பிறை சூடிய பெருமான் சிவன் அல்லது அம்பாளை வழிபடலாம். வாழ்க்கை செழிக்கும்.             

Youtube

சிம்ம ராசிக்காரர்கள் சூரிய நாராயணர் அல்லது அனுமனை தெய்வமாக வழிபட நல்லது நடக்கும்.

கன்னி ராசிக்காரர்கள் ஹயக்ரீவர் அல்லது தசாவதார பெருமாளை வணங்க வேண்டும். தொட்டது துலங்கும்.

துலாம் ராசிக்காரர்கள் சூரசம்ஹாரமூர்த்தி அல்லது ஜீவா சமாதி அடைந்த மகான்களை தரிசிப்பது வாழ்வில் வளம் சேர்க்கும்.

விருச்சிக ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம் ஈசன் அல்லது அர்த்தநாரீஸ்வரர் அல்லது அம்பாள். இவர்களை வணங்க கேட்டது கிடைக்கும்.

Youtube

தனுசு ராசிக்காரர்கள் தட்சிணாமூர்த்தி அல்லது ஸ்வாமி மலை முருகன் அல்லது த்யான லிங்கத்தை வணங்கி வர கேட்ட எல்லாம் குறைவில்லாமல் கிடைக்கும்.

மகர ராசிக்காரர்கள் துர்க்கை அல்லது சாமுண்டீஸ்வரியை வணங்க வேண்டும். அப்படி வணங்கி வந்தால் நினைத்தது நிறைவேறும்.

கும்ப ராசிக்காரர்கள் அகிலாண்டேஸ்வரி அல்லது ராஜராஜேஸ்வரி அல்லது அனுமரை வழிபட வேண்டும். வேண்டியது சித்தியாகும்.

மீன ராசிக்காரர்கள் வணங்க வேண்டிய தெய்வம் ரங்கநாத பெருமாள் அல்லது வெங்கடேச பெருமாள். நிலையான செல்வம் நிலைத்திருக்கும்.                                        

வாசகர்கள் அந்தந்த ராசிக்குரிய கோயில்களுக்கும் சென்று வேண்டி வாழ்வில் எல்லா நலமும் பெற இறைவனை வேண்டுகிறேன்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.