மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு - வெப் சீரிஸ் ஆகிறது.. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார்.

மறைந்த ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு - வெப் சீரிஸ் ஆகிறது.. கௌதம் வாசுதேவ் மேனன் இயக்குகிறார்.

தைரியம் என்கிற வார்த்தைக்கு அர்த்தமாக வாழ்ந்து காட்டியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா. தனது தன்னம்பிக்கையால் தைரியத்தாலும் நிர்வாக அறிவினாலும் மட்டுமே தனி ஒரு பெண்ணாக செல்வி.ஜெயலலிதா மூன்று முறை தமிழகத்தை முழுமையாக ஆண்டார்.

அவர் பெண்களுக்கெல்லாம் உதாரணமாக இருப்பவர். அவரது மறைவிற்கு பின்னர் தமிழக அரசியலில் அவரது இடம் வெற்றிடமாகவே இருக்கிறது. அவரது வாழ்க்கை வரலாறை (biopic) சினிமாவாக எடுக்க பலர் முயன்று வருகின்றனர்.

 

தலைவி என்கிற பெயரில் ஏ எல் அழகப்பனின் மகனான இயக்குனர் விஜய் செல்வி. ஜெயலலிதாவின் திரைப்படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இதில் நாயகியாக மணிகர்ணிகாவை இயக்கிய கங்கனா ரணாவத் நடிக்க இருக்கிறார்.

இது தவிர பாரதிராஜா, பிரியதர்ஷினி லிங்குசாமி ஆகிய இயக்குனர்களும் இவரது வாழ்க்கை வரலாறை எடுக்க திட்டம் இட்டனர். இதில் பிரியதர்ஷினி தி அயர்ன் லேடி என்கிற தலைப்பை தேர்ந்தெடுத்து நித்யா மேனனை நாயகியாக்கி பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டார்.                   

மற்ற எந்த திரைப்படங்களும் தொடங்கப்பட்டதா இல்லையா என்பது முடிவாகாத நிலையில் தற்போது இயக்குனர் கெளதம் மேனன் மறைந்த அரசியல் தலைவர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை வெப் சீரிஸ் ஆக இயக்கி இருக்கிறார்.

இதில் நாயகியாக நீலாம்பரி கதாபாத்திரத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன் நடித்திருக்கிறார். எம்ஜிஆராக இந்திரஜித், சசிகலா கதாபாத்திரத்தில் விஜி சந்திரசேகரும் சோபன் பாபு கதாபாத்திரத்தில் வம்சி கிருஷ்ணாவும் நடித்திருக்கின்றனர்.                                

 

சத்தமில்லாமல் மறைந்த முதல்வர். ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை எடுத்து முடித்திருக்கும் கெளதம் வாசுதேவ் மேனன் அந்த வெப் சீரிஸுக்கு 'குயின்' என்கிற தலைப்பு வைத்திருப்பது மிகப் பொருத்தமாக இருக்கிறது. ஆனாலும் இது நேரடி வரலாறாக இல்லாமல் கொஞ்சம் புனைவாகவும் இருக்கலாம் என கூறப்படுகிறது.                  

விரைவில் இந்த குயின் வெப் சீரிஸ் ஒளிபரப்பாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. நாளைக்கு என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் ரிலீஸ் என்கிற செய்திக்கு நடுவே இந்த புதிய செய்தி கெளதம் வாசுதேவ் மேனன் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி இருக்கிறது.               

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                           

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.