பாரம்பரிய ஆடைகளிடம் உங்களை ஈர்க்கும் ஸ்னேஹாவின் 11 அசத்தலான தோற்றங்கள்!

பாரம்பரிய ஆடைகளிடம்   உங்களை ஈர்க்கும்  ஸ்னேஹாவின் 11 அசத்தலான  தோற்றங்கள்!

சுஹாசினி இராஜாராம், இதுதான் நம்ம புன்னகை அரசி ஸ்னேஹாவின் உண்மையான பெயர். பல விருதுகள் பெற்று, சுமார் 20 வருடங்களில், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் 70 படங்களுக்கு மேல் நடித்து, சினிமா துறையில் இன்னும் இளமை குறையாமல் வளம் வந்து கொண்டு இருக்கிறார் ஸ்னேஹா!

எதையும் ரசித்துச் செய்வது மிகவும் பிடிக்குமாம் ஸ்னேஹாவிற்கு. அவர் பட்டுப்புடவைக்கும் பெயர்போனவர் என்பதில் ஆச்சர்யம் இல்லை. அவருடைய திருமணத்திற்கு முன்பிருந்தேகூட, அவர் மணக்கோலத்தில் நடித்த கதாபாத்திரங்கள், ஃபேஷன் ஷோ போன்றவற்றில் மிகவும் பிரபலமானவர். அவருடைய திருமணத்தில் அணிந்திருந்த ஒவ்வொன்றும் பிரபலமாகி விட்டது. ஏன் அவர் பயன்படுத்திய அழகிய நெத்திச்சூடி கூட பலர் விரும்பி வாங்கி பயன்படுத்தி இருக்கிறார்கள். அவர் தன்னுடைய ஸ்டைல்(style) பற்றி கூறும்போது, நம் உடல் வாகிற்குத்தகுந்தவாறு உடையோ அல்லது அதற்குப் பொருத்தமான நகைகள் அணிவது நன்றாக இருக்கும் என்பதே அவருடைய கருத்து.

மேலும் அவர் கூறுகையில், நம்முடைய தென்னிந்திய கலாச்சாரம் மிகவும் அழகானது. இங்கு திருமணம் ஒரு மணி நேரத்திலோ இரண்டு மணி நேரத்திலோ முடிவதில்லை. 5 அல்லது 6 நாட்கள் அமர்ந்து நன்றாக அனுபவிக்கும் விதத்தில் அற்புதமாக நடைபெறுகிறது. இப்போது இருக்கும் மணப்பெண்கள் மிகவும் புத்திசாலித்தனமாக, பிரமாதமாக தங்கள் நகைகளை, புடவைகளை தேர்ந்தெடுக்கிறார்கள். பெரும்பாலான பெண்கள் தங்கள் திருமணத்தில் தனித்துவமான வர்ணங்களில், நகைகளில் ஜொலிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

ஸ்னேஹா(sneha) உடுத்தும் உடைகளின் பாணி அனைத்து பெண்களையும் கவரும் வகையில் இருக்கும். அவருக்கென இருக்கும் அந்த தனி பாணி, தனி உணர்வு மிகவும் அழகாகவும், அனைவரையும் கவருவதாகவும் இருக்கும். அவர் புடவை உடுத்தும் அழகே தனிதான். எந்த வித அலட்டலும் இல்லாமல், எளிதாக அதைக் கையாளும்விதம் எல்லாப் பெண்களையும் புடவை (saree) உடுத்தும் ஆசையைத் தூண்டும். பாரம்பரிய உடைகளில் அவருக்கு நிகர் அவர்தான். வரும் பண்டிகை நாட்களில் அவருடைய பாணியை பின்பற்றி, பிரமாதமான உடைகளை நாம் தேர்ந்தெடுக்கலாமா?

1. நவ நாகரிக தோற்றம்

Instagram

தென்னிந்திய பாரம்பரிய உடைகளில், (ஸ்னேஹாவின்) ஒரு எளிமையான மற்றும் ட்ரெண்டில் இருக்கும்  புடவையில் இருந்து ஆரம்பிக்கலாம். ஒரு பிளைன் புடவைக்கு, கிராண்டான பிலௌஸ் உடன் மேட்ச் செய்திருக்கிறார்.    பார்டி அல்லது கெட் டுகெதர் போன்ற இடங்களுக்கு இது பொருத்தமாக இருக்கும்.ஆக்ஸிடைஸ்ட் நகைகள் இந்த தோற்றத்தின்  அழகை எடுத்துக் காட்டுகிறது.

இதற்க்கு POPxo பரிந்துரைப்பது - ரூபன்ஸ் ஒக்ஸிடைஸ்ட் வெள்ளி-நிற மற்றும் இளஞ்சிவப்பு கல் மற்றும் முத்து செட் (ரூ 1,650)

2. பட்டு புடவையும் பிளாக் மெட்டலும்

Instagram

இந்த கம்பீரமான பட்டுப்புடவைக்கு, தங்க நகை அணிய வேண்டும் என்ற எண்ணம்தான் வரும். ஆனால் அவர் ப்ளாக் மெட்டல்(oxidised jewelry) நகைகளை அணிந்து, வித்யாசமான திருப்பத்தை இளைஞர்களுக்கு உருவாக்கி காண்பித்திருக்கிறார்.

3. அனார்கலியில் ஒரு அழகு

Instagram

தரையைத் தொடும் கிளிப்பச்சை நிற அனார்கலி, அதற்கு கனமான சிவப்பு நிற பனாரஸ் பட்டு துப்பட்டா ஒரு அற்புதமான காம்பினேஷன் . இந்த கம்பீர உடையை பகல்/இரவு இரண்டு நேர விசேஷங்களுக்கும் ஏற்றதாக இருக்கும். இத்துடன் ஒரு மேட்சிங் கிளட்ச் எடுத்து சென்றால் இந்த தோற்றம் முழுமை அடையும்.

4. மஞ்ச காட்டு மைனா

Instagram

சிவப்பு நிற பார்டர் கொண்ட மஞ்சள் நிற பனாரஸ் புடவை, அதற்கு கழுத்துவரை தைத்த மஞ்சள் நிற பிலௌஸ், முழங்கைவரை நீண்ட பஃப் கை, இவை கட்டாயமாக புடவை அணிந்து செல்ல வேண்டிய இடங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும். உங்கள் தலைமுடியை ஒரு பன் ஸ்டைலில் அலங்கரிக்கலாம் அல்லது லேசான சுருட்டைகளுடன் விரித்து விடலாம்.

இதற்க்கு POPxo பரிந்துரைப்பது - பனராசி சில்க் கட்டான் ப்ரோகேட் புடிதார் சேலை ( ரூ 6,119)

5. திருமண தோற்றம்

Instagram

பிளைன் சந்தேரி பட்டுப்புடவைக்கு, அருமையான வேலைப்பாடுடன் பிங்க் பிலௌஸ், ஒரு பிரமாண்டமான தோற்றத்தை தருகிறது. முழுமையான ஒரு தென்னிந்திய திருமணத்திற்கான தோற்றம் இதுவே! ஒரு பிங்க் பியூஷியா நிற லிப்ஸ்டிக் உடன் இந்த தோற்றம் அட்டகாசமாக இருக்கும்!

6. ஜாக்கெட் புடவை

Instagram

புடவையில் மாடர்ன் லுக் வேண்டுமா? பெல்ட் கொண்ட புடவை, தரையை தொடும் அளவு நீளமான ஜாக்கெட், இதற்கு மேட்சான ஆன்ட்டிக் அல்லது குந்தன் மோதிரமும் மூக்குத்தியும் இந்த தோற்றத்தை நாசூக்காக அலங்கரிக்கிறது.

7. ஆரஞ்சு மற்றும் பிங்க் புடவை

Instagram

வாவ்! நம்ம வீட்டுப் பெண்போல இருக்கிறார் அல்லவா? ஆரஞ்சு மற்றும் பிங்க் நிற காஞ்சிப்பட்டு, ஆப்-வைட் பிலௌஸ், ஒரு முரணான அழகான காம்பினேஷன். பிஷ்டைல் ப்ரைட் ஹேர் ஸ்டைல் உடன் இந்த தோற்றம் உங்க தோழியின் திருமண விழாவிற்கு ஏற்றதாக இருக்கும்.

இதற்க்கு POPxo பரிந்துரைப்பது - ரூபன்ஸ் பெண்கள் வைட் கோல்ட் நகை (ரூ 2,965) 

8. வெள்ளை அழகு

Instagram

நெருங்கிய சினேகிதியின் திருமணமா? இந்த தோற்றத்தை ட்ரை பண்ணுங்க. வெள்ளை நிற பட்டுப்புடவைக்கு, வெள்ளை மற்றும் பச்சை நிற கல் வைத்த நகை பூரணமாக தோற்றமளிக்கிறது. திருமணம், மணப்பெண் வரவேற்பு என்று அனைத்திற்கும் இந்த உடை அசத்தலாக இருக்கும். வெள்ளை நிறம் மட்டுமின்றி அணைத்து வெளிர் நிற புடவைகளுக்கும் இது போன்ற பச்சை கல் / மரகதம் பதித்த நகைகள் அற்புதமாக இருக்கும்.

9. சுடிதாரில் ஒரு தேவதை

Instagram

கழுத்து முழுவதும் பிரமாண்ட வேலைப்பாடுடன் ஒரு அழகிய கருப்புநிற சுடிதார் உடன் சிவப்பு பார்டர் கொண்ட வெள்ளை நிற துப்பட்டா வை மேட்ச் செய்துள்ளார் . உங்கள் காலேஜில் நடக்கும் விழாவிற்கு, பர்த்டே , பார்ட்டி போன்ற அனைத்திற்கும் இது பொருத்தமாக இருக்கும். ஒரு பிஷ் டெயில் பிரெய்ட் அணிந்து இந்த தோற்றத்தை(look) இன்னும் அழகாக்குங்கள்.

10. நேர்த்தியில் அழகு

Instagram

நெக்லஸ் போல கழுத்தை ஒட்டியில்லை, ஆரமாக நீண்டுமில்லை, இருப்பினும் பிரமாண்டமாக தோன்றும் ஒரு மாங்காய் மாலை, வித்யாசமாக பவுடர் ப்ளூ நிறத்தில் காஞ்சீவரம் பட்டுப்புடவைக்கு பாந்தமாக பொருந்தி இருக்கிறது. வரும் பண்டிகை மற்றும் பூஜைகளுக்கு அசத்தலாக இருக்கும்.

இதற்க்கு POPxo பரிந்துரைப்பது - மிமோசா பெண்கள் பட்டு சேலை (ரூ 2,249)

11. கண்டாங்கிச் சேலை தோற்றம்

Instagram

இதில் , புடவை முழுவதும் கட்டங்கள் இல்லாமல் பார்டரில் மட்டும் கருப்பில் தங்க நிற ஜரியில் அழகாக இருக்கிறது. கிராமத்துப் பெண் கண்டாங்கிச் சேலை அணிவது போல் அணிந்து நவராத்திரிக்கு பாரம்பரிய(traditional) தோற்றத்தில் வளம் வரலாம். குறிப்பு எடுத்தீர்களா?

வரும் பண்டிகை நாட்களுக்கு, ஸ்னேஹாவின் பிரமாதமான தோற்றங்ககளில் இருந்து உங்களுக்கு பிடித்தமான தோற்றத்தை தேர்ந்தெடுத்து, அசத்துங்கள்!

 

கெட் தி லுக் : பார்ட்டி சீசன்களில் பிரகாசமான தோற்றத்தை எவ்வாறு அடையலாம்?

மேலும் படிக்க - திருமண நாள் நெருங்கி விட்டதா? குறைபாடற்ற பிரைடல் மேக்கப்பிற்கான 8 படிகள் !

பட ஆதாரம்  - Instagram 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!