புறக்கணிக்கப்படும் அனைவருமே கடவுளின் குழந்தைகள்.. வாழ்வை உயர்த்தும் திருநங்கை ஆசிர்வாதம்!

புறக்கணிக்கப்படும் அனைவருமே கடவுளின் குழந்தைகள்.. வாழ்வை உயர்த்தும் திருநங்கை ஆசிர்வாதம்!

உலகில் மூன்று பாலினங்கள் இருக்கின்றன. ஆண், பெண் மற்றும் திருநங்கை/திருநம்பி. இதனைப் பற்றி பல்வேறு இதிகாசங்களிலும் திருவாசகம் முதலான பழங்கால தொல்லியல் நூல்களிலும் பலமுறை எடுத்து சொல்லப்பட்டு இருக்கிறது.

மற்றவருக்கு பாடமாக இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட இதிகாசம் புராணங்களை வெறும் கதைதானே என்று அலட்சிய மனோபாவத்துடன் கடப்பதால்தான் இப்போதும் திருநங்கைகள் தங்கள் வாழ்வாதாரத்திற்கு பெரும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்,

எப்போதோ சொல்லப்பட்ட இதிகாசங்கள் மூன்று பாலினம் என்பதை உறுதி படுத்தினாலும் இந்திய அரசியல் சட்டத்தில் இதற்கான இடம் கிடைக்க திருநங்கை/திருநம்பிகள் நீண்ட காலம் போராட்டம் நடத்தினார்கள். அதன் விளைவாக தற்போது பல திருநங்கைகள் (transgenders) பல உயர்பதவிகள் வகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இலட்சியத்தை நோக்கிய பயணத்தில் ஆண் /பெண்/திருநங்கை என்கிற பாகுபாடுகள் இனி இருக்காது.

 

திருநங்கைகள் வாழும் தேவதைகள். அவர்களிடம் ஆசி வாங்கினால் நம் வாழ்வின் தரம் உயரும். அவர்களின் வாழ்க்கைத் தரம் பற்றிய யோசனைகளை தவிர்த்து அவர்களின் ஆன்மாவின் தரம் உயர்ந்ததாக இருக்கும் என நினைக்க வேண்டியது அவசியம்.

திரு என்றால் மஹாலக்ஷ்மி என்கிற பொருள் உண்டு. மஹாலக்ஷ்மியின் முழு அருளையும் பெற்றவர்கள் திருநங்கைகள். திருநங்கைகளிடம் ஆசிர்வாதம் வாங்கினால் கண்திருஷ்டி விலகும். பணவரவு அதிகரிக்கும். மஹாலக்ஷ்மி கடாட்சம் நிலையாக இருக்கும்.

திருநங்கைகள் சனி மற்றும் புதன் கிரகத்தின் வசமானவர்கள். அவர்களை பழிக்க கூடாது. சிவசக்தி சொரூபமாக அவர்கள் இவ்வாறு இருக்க அவர்களது கர்மாவே தான் காரணம். அவர்களிடம் ஆசி வாங்குவது உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தும்.

Youtube
Youtube

அதனால்தான் ரயில் பயணம் மற்றும் பல பயணங்களில் திருநங்கைகளுக்கு பணம் தருகின்றனர். தங்களிடம் இருந்து சிறு பணத்தை திருநங்கைகள் அவர்களுக்கு கொடுத்து ஆசிர்வதிக்கின்றனர். இப்போதும் வியாபார தலங்களில் இவர்கள் கை தட்டி பணம் கேட்பார்கள். அதனை மதித்து அவர்களுக்கு 10 ரூபாய் மற்றும் 20 ரூபாய் பணத்தை கடைக்காரர்கள் வழங்குவார்கள். அதனை வாங்கிய திருநங்கைகள் தங்களிடம் இருந்து 1 ரூபாயை ஆசிர்வாதம் செய்து அந்தக் கடைக்காரருக்கு தந்துவிட்டு செல்வார்கள்.

அவர்களிடம் இருந்து பணம் வாங்கினால் வியாபாரம் பெருகும் என்பது அவர்களின் நம்பிக்கை. அப்படி பெருகுவது நடப்பதாலேயே அவர்களுக்கு அந்த ஆசிர்வாதம் தொடர்ந்து தேவைப்படுகிறது.

வடநாட்டை சேர்ந்தவர்கள் திருநங்கைகளை மிகவும் மதிப்பார்கள். மிகப்பெரிய கடை முதலாளிகள் எல்லோரும் தங்கள் கடையை தினமும் திறந்து வைக்கும் முன்னர் திருநங்கைகளுக்கு பணம் கொடுத்து அவர்களிடம் ஆசிர்வாதம் வாங்கிய பின்னர்தான் தங்கள் வியாபாரத்தை ஆரம்பிப்பார்கள்.

 

Youtube

மேலும் ஒரு சில வடநாட்டு பணக்காரர்கள் திருநங்கைகளை தங்கள் வீட்டிலேயே தங்க வைப்பார்கள்.தினமும் காலையில் அவர்கள் முகத்தில் விழிப்பார்கள் அதன் பின்னரே அடுத்த வேலைகளை தொடங்குவார்கள். அவர்கள் திருமகளின் அங்கம் என்பதை வடநாட்டவர் அறிந்து வைத்திருப்பதால்தான் சேட்டுக்கள் இன்னமும் பாரம்பர்ய பணக்காரர்கள் ஆக இருக்கின்றனர்.

மற்றவருக்கு தானம் செய்வதன் மூலம் உங்கள் கர்மாக்கள் கரைகிறது என்கிற நம்பிக்கை உங்களுக்கு இருக்கிறதல்லவா? உங்கள் கர்மாக்களை கரைப்பதற்காகவே திருநங்கைகள் கையேந்தி தானம் கேட்கின்றனர். அவர்களுக்கு உதவுவது உங்களுக்கு நீங்களே உதவிக் கொள்வதை போன்றது.

திருநங்கைகள் உங்கள் சகோதர சகோதரியாக நினைத்து அவர்களிடம் அன்பாக இருங்கள். திருநங்கைகளிடம் திருஷ்டி நீக்கும் சக்தி உண்டு. இன்றும் மேல்மலையனூரில் இந்த அற்புதம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இவர்களிடம் திருஷ்டி கழித்தபின்னர் நமது உடல் உபாதைகள் மனவேதனைகள் தீர்ந்துதான் போகிறது.

Youtube

தொழிலில் தொடர்ந்து நஷ்டம், வருமானம் தடைபடுதல், கடந்தபிரச்னை உள்ளவர்கள் திருநங்கைகளை தங்களின் வியாபார ஸ்தலத்திற்கு வரவழைத்து மூன்றுமணி நேரம் அமர வைத்து அவர்களுக்கு பசியாற உணவு கொடுத்து அனுப்பி பாருங்கள். தொய்வடைந்திருக்கும் உங்கள் வியாபாரம் நிமிரும் அதிசயம் நடக்கும். மார்வாடிகள் இதனை செய்வார்கள்.

தம்பதிகளுக்குள் சிக்கல் என்றாலும் அர்த்தநாரீஸ்வரர் போன்ற திருநங்கைகளிடம் ஆசி வாங்குவது அவர்களுக்குள் உண்டான சிக்கலை நீக்கி நன்மைகளை அதிகரிக்கும். மனதில் எதுவும் இல்லாமல் எல்லோரையும் நம்புவது இவர்களின் பிறவிக்குணம். இப்படிப்பட்டவர்கள் கையால் ஆசிர்வாதம் பெறுவது உங்கள் வாழ்வை பலமடங்கு உயர்த்தும் என்பதில் சந்தேகம் இல்லை.

இனி அடுத்த முறை இவர்களை பார்த்தல் பழித்து பேசாமல் முகத்தை சுளிக்காமல் அவர்கள் கை நீட்டி காசு கேட்டால் கொடுத்து பாருங்கள். நிச்சயம் அவர்கள் அன்றாடம் அன்று உங்களால் நடந்தேறும். உங்கள் வாழ்க்கைத்தரம் உயரும்.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.