கவின் மீதான கோவத்தில் டாஸ்கை விட்டு வெளியேறிய ஷெரின் : சமாதானபடுத்திய தர்ஷன்!

கவின் மீதான கோவத்தில் டாஸ்கை விட்டு வெளியேறிய ஷெரின் : சமாதானபடுத்திய தர்ஷன்!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் இன்னும் இரு வாரங்களில் முடிவுக்கு வர உள்ளது. இந்த  நிகழ்ச்சியில் டிக்கெட் டு பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற போட்டியாளர்கள் கடுமையாக போராடி வருவதால் இனி வரும் நாட்களில் டாஸ்குகள் கடுமையாகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. 

இருப்பினும் கடந்த சீசன்களில் நடத்தப்பட்ட பினாலே டாஸ்க் போல தற்போது நடத்தப்பட்டு வரும் பினாலே டாஸ்க் இல்லை என்று ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில் இரண்டாவது புரோமோவில் லாஸ்லியாவிடம் சென்று கவின் பேசுகிறார். அப்போது லாஸ்லியா நீ சென்று முதலில் விளையாடு பின்னர் பேசி கொள்ளலாம் என கூறுகிறார். அப்போது அனைவரும் விளையாட்டை சற்று நிறுத்தவும் என முகென் கூற, இதனை கேட்ட ஷெரின் கோவமடைந்து கவின் விளையாடவில்லை என்றால் நிறுத்த வேண்டுமா? என கேள்வி எழுப்புகிறார். 

மேலும் விளையாட விருப்பம் இல்லை என்றால் ஏன் வர வேண்டும் எனகேட்கிறார் அதற்கு கவின் நான் விளையாட தான் மச்சான் வந்தேன் என கூறுகிறார். மேலும் நீங்கள் அனைவரும் என்ன நியாயமாக விளையாடிவிட்டீர்கள்? என கவின் கேட்க, தனது கூடையை காலால் எட்டி மிதித்து விட்டு நான்சென்ஸ் என கூறியவாறு ஷெரின் விளையாட்டை விட்டு வெளியேறி வீட்டிற்குள் செல்கிறார்.

மூன்றாவது புரோமோவில், தர்ஷன் சென்று ஷெரினை சமாதானப்படுத்துகிறார். அது ஒரு சின்ன பிரச்னை அதற்கு ஏன் நீ விளையாட்டை விட்டு வந்தாய் என தர்ஷன் கேட்கிறார். அதற்கு இங்கு விளையாட வந்தார்களா அல்லது நாடகம் நடத்த வந்தார்களா என எனக்கு புரியவில்லை எல்லாருக்கும் விளையாடும் போது அடிபட தானே செய்கிறது என கோவமாக கூறுகிறார.

அதற்கு தர்ஷன் கூலாக, இவ்வளவு அழகான பெண் கோவப்படலாமா? என கூற ஷெரின் சிரித்து விடுகிறார். இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரோமோவில், டாஸ்கின் போது லாஸ்லியாவை, சாண்டி தெரியாமல் தள்ளி விடுவது போல தெரிகிறது. இதனால் பதறி போன கவின் (kavin) , சாண்டியிடம் வாக்குவாதம் செய்கிறார். 

ஓரமா விளையாடலாம்ல என சாண்டியிடம் சண்டையிடுகிறார். அப்போது குறுக்கிடும் தர்ஷன் விளையாட்டு என்றால் அப்படி தானே இருக்கும் விடுங்கள் என சமரசம் செய்ய முயல்கிறார். அதற்கு கவின் இல்லை நான் பார்த்தேன் நீங்கள் லாஸ்லியாவை தள்ளி விட்டதை என கூற, லாஸ்லியாவே விடுங்கள் எனக்கு ஒன்றும் இல்லை என கூறுகிறார். இதனை கேட்ட சாண்டி நான் தெரியாமல் தான் செய்தேன், நீ ஓவராக போகிறாய் என கவினை (kavin) கோவமாக கூறுகிறார்.

twitter

பிக் பாஸ் வீட்டில் கவின் மற்றும் சாண்டி நல்ல நண்பர்களாக இருந்து வருகின்றனர். கவினுக்கு பிரச்னை ஏற்படும் சமயத்தில் அவருக்கு எப்போதும் ஆதரவாக சாண்டி இருந்தார். எனினும் ஏற்கனவே கவின் - லாஸ்லியா விஷயத்தில் சாண்டியிடம் கொஞ்சம் மனம் நோகும்படி கவின் நடந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது ஒருபுறம் இருக்க இது வரை ஆறு டாஸ்க்குகள் முடிவடைந்த நிலையில் நேற்று ஒரு டாஸ் கொடுக்கப்பட்டது.

முதுகில் மூட்டையை கட்டி ஓடும் பிக் பாஸ் போட்டியாளர்கள் : ஷெரின், லாஸ்லியாவுக்கு காயம்!

போட்டியாளர்கள் தூங்கிய பிறகு நள்ளிரவு 1 மணிக்கு மேல் லைட்டை போட்டு போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் ஒரு டாஸ்க் கொடுத்துள்ளார். அதை கேட்டு அவர்கள்  அதிர்ச்சி ஆகிவிட்டனர். ஒரு தங்க முட்டையை ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் கொடுத்த அதை மற்றவர்கள் உடைக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதே போல மற்ற போட்டியாளர்களின் தங்க முட்டைகளை அவருக்கே தெரியாமல் உடைக்க வேண்டும் என்றும் பிக்பாஸ் அறிவித்திருந்தார். 

twitter

அதை விடிய விடிய போட்டியாளர்கள் செய்துகொண்டிருந்தனர். இதுவரை நடைபெற்ற ஆறு டாஸ்கில் சேரன் - 22, கவின் (kavin) - 17, லாஸ்லியா - 21, முகென் - 29, சாண்டி - 29, ஷெரின் - 26 மற்றும் தர்ஷன் 24 மதிப்பெண்களையும் பெற்றுள்ளனர். இவற்றை வைத்துப் பார்க்கும் போது டிக்கெட் டு பினாலே சாண்டி அல்லது முகெனுக்கு கிடைக்கவே அதிக வாய்ப்புகள் உள்ளது. சாண்டியும், முகெனும் சரிசமமான மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

தர்ஷனின் நண்பரை மணந்த பிக் பாஸ் போட்டியாளர் ரம்யா! தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி வாழ்த்து !

இன்றைய டாஸ்கின் மதிப்பெண்கள் அடிப்படையில்  டிக்கெட் டு பினாலேவில் வெற்றி பெறப்போவது யார் என்பது தெரிவரும். இத்தகைய நெருக்கடியான சூழ்நிலையில் போட்டியாளர்கள் விளையாடி வருவதால் பிக் பாஸ் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதனிடையே இந்த வாரம் நடைபெற்ற நாமினேஷனில் கவின், லாஸ்லியா, சேரன், ஷெரின் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

twitter

தற்போது நடைபெற்று வரும் ஒட்டிங்கில் வழக்கம் போல கவினுக்கு தான் அதிகபடியான வாக்குகள் விழுந்து வருகிறது. மேலும், ஷெரினுக்கு தான் குறைவான வாக்குகள் விழுந்து வருகிறது. இந்த வாரம் ஷெரின் வெளியேறவே அதிக வாய்ப்புகள் உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. டிக்கெட் பினாலே டாஸ்கில் ஷெரின் கவனத்தை செலுத்தி நல்ல பாயிண்டுகளை பெற்றுவருகிறார். இந்நிலையில் இந்த வாரம் அவர் வெளியேற்றப்படுவாரா என பொறுத்திருந்து பார்போம்!.  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!