பிக் பாஸ் மோசடி - நடிகை பளார், ஷெரினுக்காக தர்ஷன்! கவினை காப்பாற்ற தயங்கும் லாஷ்லியா!

பிக் பாஸ் மோசடி - நடிகை பளார், ஷெரினுக்காக  தர்ஷன்! கவினை காப்பாற்ற தயங்கும் லாஷ்லியா!

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி என்பதால் வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இன்னும் இரண்டே வாரத்தில் டைட்டில் வின்னர் யார் என்பது தெரிந்து விடும். இந்நிலையில் கடந்த வார எவிக்ஷனில் யாரும் எதிர்பாராத வகையில் சேரன் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்டார். 

இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர் ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து மக்கள் வாக்குகள் அடிப்படையில் எலிமினேட் ஆகி அதன்பிறகு சீக்ரெட் ரூமில் வைக்கப்பட்டு மீண்டும் பிக்பாஸ் வீட்டுக்குள் வந்தவர். தற்போது அவர் இரண்டாவது முறையாக எலிமினேட் செய்யப்பட்டுள்ளார். இரண்டாவது சீசனில் அநியாயமாக சென்றாயனை வெளியேற்றியது போல இந்த சீசனில் சேரனை (cheran) வெளியேற்றி விட்டதாக கூறி வருகின்றனர். 

இந்நிலையில் சேரன் வெளியேற்றப்பட்டது குறித்து நடிகை கஸ்தூரி மறைமுகமாக ட்வீட் செய்துள்ளார். அதில் சே.. ஏமாற்றம், அதிகம் மோசடி செய்யும் நிகழ்ச்சி.. எச்சே' என பதிவிட்டுள்ளார். அவர் ட்விட்டில் பிக்பாஸ் பெயரை குறிப்பிடவில்லை என்றாலும் அவர் பிக்பாஸ் லோகோ கண் குறியை பதிவில் போட்டுள்ளார்.  இதனால் இது அவர் சேரனின் வெளியேற்றத்தை பற்றிய ட்வீட் தான் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். 

twitter

இந்த சீசனில் சக போட்டியாளர்களையும், மக்களையும்  மகிழ்ச்சி அடைய வைத்தவர்களில் சேரனும் (cheran) ஒருவர். வனிதா, கஸ்தூரி போன்றோர் பிக் பாஸ் வீட்டில் தங்கி இருக்க சேரன் முக்கிய காரணம். இதை வனிதாவே கூட நிகழ்ச்சியில்  கூறி இருந்தார் மேலும் வீட்டில் நடந்த பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு சொல்லும் நடுநிலைவாதியாகவே சேரன் இருந்தார். 

எப்படியும் இந்த முறை டைட்டிலை ஜெயித்தே தீருவது என்ற தீர்க்கமான முடிவில் விளையாடினார் சேரன். கடந்த இரண்டு சீசன்களிலுமே இளம் வயதுக்காரர்களே டைட்டிலை வென்றனர். அந்த வரலாற்றை மாற்றி இம்முறை தான் வெல்ல வேண்டும் என அவர் கூறி வந்தார். அதற்கு தன் உடல் நிலை ஒத்துழைக்காத போதும் தொடர்ந்து சக போட்டியாளர்களுடன் போராடி வெற்றிக்காக உழைத்தார். 

டிக்கெட் டு பினாலே டாஸ்கி போது கூட விடாமுயற்சியுடன் போராடினார். ஆனால் கடைசியில் அவரது ஆசை நிறைவேறாமலேயே அவர் வெளியேற்றப்பட்டு விட்டார். இம்முறையாவது மூத்த போட்டியாளருக்கு டைட்டில் கிடைக்க வேண்டும் என்ற அவரது ஆசை நிறைவேறாமலேயே போய் விட்டது. வெளியே சென்றபோது சேரன் அனைவருக்கும் வாழ்த்துக்கள் கூறிவிட்டு சென்றார். 

குறிப்பாக கவினை ஊக்கப்படுத்தும் விதமாக பேசிய சேரன், மீதமிருக்கும் நாட்களில் சரியாக விளையாண்டால் கூட ஜெயிப்பதற்கு நிறைய வாய்ப்பிருக்கிறது” என்று கூறினார். சேரன் (cheran) வெளியேற்றத்திற்குப் பின் தற்போது வீட்டில் இருப்பவர்கள் தர்ஷன், முகென், கவின், சாண்டி, ஷெரின் மற்றும் லாஸ்லியா. 

 

twitter

இவர்கள் அனைவருமே இளம் போட்டியாளர்கள் தான் இம்முறையும் இளம் போட்டியாளர் ஒருவருக்குத் தான் டைட்டில் என்பது உறுதியாகி விட்டது. இன்று காலை ஒரு புதிய புரொமோ வந்துள்ளது, அதில் தர்ஷனிடம் யாரை காப்பாற்ற நினைக்கிறீர்கள் என பிக்பாஸ் கேட்க அதற்கு அவர் ஷெரின் என கூறுகிறார். ஷெரினை காப்பாற்ற பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும் என பிக்பாஸ் கூற அதையும் செய்கிறார்.

பின் சாண்டி அவர்களையும் காப்பாற்ற விரும்புகிறேன் என அவருக்காகவும் பச்சை மிளகாய் சாப்பிடுகிறார். இதே போல மற்ற போட்டியார்கள் யாரை காப்பாற்ற போகிறார்கள் என்ற  எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இரண்டாவது புரோமோவில் லாஸ்லியா, கவினை காப்பாற்ற மிளகாய் சாப்பிடும் வீடியோ வெளியாகியுள்ளது. கவின் மற்றும் சாண்டி வெற்றி பெறவில்லையென்றாலும் நண்பர்கள் வெற்றி பெற வேண்டும் என கூறிவருகின்றனர். இதனால் இவர்கள் இருவரும் யாரை காப்பாற்றுவார்கள், கவின் லாஸ்லியை காப்பாற்ற  மிளகாய் சாப்பிடுவாரா என்று இன்றைய நிகழ்ச்சியில் பார்க்கலாம்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!