logo
ADVERTISEMENT
home / அழகு
சருமத்தில் வெள்ளை புள்ளிகளால் அவதியா? எளிதாக நீக்கலாம்!

சருமத்தில் வெள்ளை புள்ளிகளால் அவதியா? எளிதாக நீக்கலாம்!

சிலருக்கு முகத்தில் வெள்ளை (whiteheads) புள்ளிகளும் உருவாகின்றன.சருமத்தில் உள்ள எண்ணெய் சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக எண்ணெயை சுரப்பதே இதற்கு காரணமாகும். இத்தகைய வெள்ளை புள்ளிகள் மூக்கின் பக்கவாட்டில் அல்லது மூக்கின் மேலே பொதுவாக ஏற்படும். இவை அதிகம் வந்தால், முகத்தில் பருக்கள் வருவதற்கான அறிகுறிகளாகும். சரியான சரும பராமரிப்பின்மை, ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கம், அதிகப்படியான சூரிய வெப்பம் போன்றவையும் வெள்ளை புள்ளிகள் வருவதற்கு காரணங்களாகும். இதனை எப்படி சரி செய்வது என இங்கே காணலாம். 

கற்றாழை பேஷ் பேக்

  • உருளைக்கிழங்கை துருவியோ அல்லது சாறு எடுத்தோ வெள்ளை புள்ளிகள் இருக்கும் இடத்தில் தினமும் இரண்டு முறை தடவி மசாஜ் செய்து வந்தால் வெள்ளை புள்ளிகள் தானாக உதிர்ந்துவிடும்.
  • 1/2 டீ ஸ்பூன் பென்டோனைட் களிமண்ணுடன் 1 டீ ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை புள்ளிகள் உள்ள இடத்தில் அப்ளே செய்யவும். பிறகு குளிர்ந்த நீரை கொண்டு கழுவ வேண்டும் இதை வாரத்திற்கு என்ற முறையில் செய்து வந்தால் எதிர்ப்பார்க்காத மாற்றத்தை காணலாம்
  • எலுமிச்சையை வைத்து பருக்கள், வெள்ளை புள்ளிகள் மற்றும் கரும்புள்ளிகளை போக்கலாம். எலுமிச்சை பழத்தை வெள்ளை புள்ளிகள் உள்ள இடத்தில் மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் தேனை தடவியும் சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும். எலுமிச்சை வறட்சியை ஏற்படுத்தும் என்பதால் தேன் அதனை சரி செய்துவிடும்.
  • முகத்தில் உள்ள அழுக்குகளை ஆவி பிடிப்பதன் மூலம் அகற்ற முடியும். தோலில் உள்ள உயிரற்ற செல்களை இதன் மூலம் போக்க முடியும். இதனை வாரம் ஒருமுறை செய்ய வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் வெள்ளை மற்றும் கருப்பு புள்ளிகள் நீங்கிவிடும். 

pixabay

  • தயிரில் நிறைய அழகு இரகசியங்கள் உள்ளன. அவை சருமத்தை மென்மையாக்குவதோடு, வறட்சியின்றியும் வைக்கும். ஆகவே தயிரை, பால் மற்றும் ஓட்ஸ் உடன் சேர்த்து கலந்து முகத்தில் தடவி சிறிது நேரம் ஸ்கரப் செய்தால் வெள்ளை புள்ளிகள் நீங்கிவிடும்.
  • 1/2 டீ ஸ்பூன் ப்ரவுன் சுகரை 1 டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யுடன் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை கொண்டு உங்கள் நெற்றி, தாடை போன்ற பகுதிகளில் நன்றாக தேய்க்க வேண்டும். பிறகு 5 நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான மற்றும் குளிர்ந்த நீர் கலந்த கலவையில் அலச வேண்டும். இந்த முறையை வாரத்திற்கு 3-4 தடவை செய்து வந்தால் நல்ல மாற்றத்தை காணலாம்
  •  உடலையும், சருமத்தையும் குளிர்ச்சியோடு வைக்கும் சந்தன தூள் வெள்ளை புள்ளியை நீக்க உதவியாக உள்ளது. சந்தன பொடியுடன், ரோஸ் வாட்டரை கலந்து தடவினால் சருமம் புத்துணர்ச்சியுடனும் வெள்ளை புள்ளிகளின்றியும் (whiteheads) இருக்கும்.
  • தேனின் நன்மைகளுள் வெள்ளை புள்ளிகளை நீக்குவதும் ஒன்றாகும். அதற்கு தேனை தினமும் பாதிக்கப்பட்ட பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்.
  • ஓட்ஸை, பாலுடன் சேர்த்து வெள்ளை புள்ளிகள், கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் உள்ள இடங்களில் ஸ்கரப் செய்தால் அவை எளிதில் போய்விடும். சருமமும் அழகாக இருக்கும். 
  • அனைத்து சமையலறைகளிலும் கிடைக்கும் பொருட்களில் ஒன்று தான் பூண்டு. இந்த பூண்டின் வாசனை தான் கெட்டதாக இருக்குமே தவிர, அதில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளன. அதில் ஒன்று தான் வெள்ளைப் புள்ளிகளை நீக்குதல். அதற்கு பூண்டின் சாற்றை வெள்ளை புள்ளிகள் உள்ள இடத்தில் தடவி, 10 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும்.
  •  வாழைப்பழத்தில் நிறைய அழகு நன்மைகள் நிறைந்துள்ளது. அதில் இந்த பழத்தை மசித்து தினமும் தடவி வந்தால், அவை வெள்ளை புள்ளிகளை அறவே போக்கிவிடும்.

தேன் மற்றும் வென்னிலா

  • ஒரு காபி சாம்பலைப் பயன்படுத்தி தூள் தூளாக மாற்றுவோம், ஒரு டீஸ்பூன் சோடா மற்றும் இறுதியாக சிதைந்த உப்பு சேர்க்கவும். முகம் கழுவுதல் மற்றும் முகத்தில் விண்ணப்பித்தல், பாதிக்கப்பட்ட இடங்களை மசாஜ் செய்தல். அதன் பிறகு, உங்கள் முகத்தை முழுமையாக கழுவுங்கள்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

ADVERTISEMENT

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

13 Sep 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT