கேக் எடு கொண்டாடு !! உங்கள் செலெப்ரேஷனை இன்னும் இனிமையாக்க, சென்னையின் சிறந்த கேக் ஷாப்கள்

கேக் எடு கொண்டாடு !! உங்கள் செலெப்ரேஷனை இன்னும் இனிமையாக்க, சென்னையின் சிறந்த கேக் ஷாப்கள்

எந்த ஒரு விழாவாக இருந்தாலும் இன்று கேக் வெட்டி கொண்டாடுவது என்பது நம் ஊரிலும் குதூகலமான விஷயமாகி விட்டது. கேக் இல்லாமல் அந்த விழாவே இல்லை என்றளவிற்கு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, அனைவரையும் கவரக்கூடியது. உங்கள் சிறப்பான நாளை பிரகாசமாக கொண்டாட , அல்லது சோர்வான நாளை புதுப்பிக்க , சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள சிறந்த கேக் கடைகள்(chennai cake shop), அவர்களை எவ்வாறு தொடர்பு கொள்வது, ஒவ்வொரு கடைகளின் சிறப்பு என்ன என்று அனைத்தையும் இங்கு பார்க்கலாம்.

இவர்களின் கடைக்கு சென்று இவர்கள் வழங்கும் சுவையான கேக்குகளை ருசித்துப் பாருங்கள் அல்லது உட்கார்ந்தபடியே ஆன்லைனில் ஆர்டர் செய்யுங்கள்!

சென்னையின் சிறந்த கேக் ஷாப்கள்

1. கேக் பார்க் (Cake Park)

கேக் பார்க்கில் ரெகுலர் பிரெஷ் கிரீம் கேக் முதல் தீம் கேக் வரை பல வகையான கேக்கள் உள்ளன. இணையதளத்தில் ஒவ்வொரு வகையாக அழகாக வரிசைப்படுத்தி, புது புது கேக்கள் ஒவ்வொரு வகையின் கீழும் அட்டகாசமாக காண்பித்துள்ளனர்.

இங்கு என்ன எதிர்பார்க்கலாம் ? 

 • 23 வகையான பிரெஷ் கிரீம் கேக்கள் காட்சிப்படுத்தியுள்ளனர். அதில் குறிப்பாக,ப்ளூபெர்ரி மங்கோ கேக் பார்க்க மிகவும் வித்யாசமாக, பிரமாதமாக காட்சி தருகிறது. 
 • ஹஸில்நட் ப்ளிஸ், ஜெர்மன் ஃபாரஸ்ட், ஆஸ்திரேலியன் ஃபாரஸ்ட், ஹனி ரெயின்போ, ஐரிஷ் காபி, ஃபெர்ராரோ எக்ஸ்டசி, ப்ளூபெர்ரி கேட்ஆக்ஸ், லிச்சி ஸ்மாஷ் போன்ற பிரெஷ் கிரீம் கேக்கள் பெயரைப் போன்றே தோன்றத்திலும், சுவையிலும் கலக்குகிறது.
 • 34 வகையான பிறந்தநாள் கேக்கள், குழந்தைகளுக்கு ஏற்றவராரு கார்ட்டூன் கேரக்டர் வடிவத்தில் சூப்பராக செய்திருக்கிறார்கள்.
 • ஹார்ரி பாட்டர், மஞ்சள் நிற ஹேட்(தொப்பி) வடிவ கேக், டைகர், தாமஸ் ரயில், ஆங்கிரி பிரட், அலெக்ஸ் தி லைன், டோரா, டோரேமான் இப்படி அட அட அட வித விதமான பிறந்தநாள் கேக்கள் உள்ளது.
 • 55 விதமான போட்டோ கேக்கள், 11 விதமான வெட்டிங் கேக்கள், 11 வகையான எக்ஸோடிக் கேக்கள், தவிர 17 தீம் கேக்கள் கொடுத்திருக்கிறார்கள்.

காவலரின் தொப்பி போன்று, கேனான்-கேமரா போன்று, மரக்கட்டில் போன்று இப்படி பல கேக்குகள் தத்துரூபமாக அதே வடிவில், அதே நிறத்தில் செய்திருப்பது மிகவும் ஆச்சர்யமாக இருக்கிறது.இது குழந்தைகள் விளையாடும் பொம்மையா அல்லது கேக்கா என்று வியக்கும் அளவிற்கு பிரமாதமாக இருக்கிறது.

தொடர்புகொள்ள: +91 - 94454 75094
இணையதளம்:https://cakepark.net

2. டோனா கேக்ஸ் வேர்ல்ட் (Dona Cakes World)

Pinterest

டோனா கேக்ஸ் வேர்ல்ட்டில் பிரமாதமான அழகிய விதவிதமான கேக்களை வழங்குகிறார்கள். ஆன்லைன் பர்த்டே கேக்,வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்ப போட்டோ கேக்,கேக் மற்றும் கிஃப்ட் ஆகிய வகைகளில் டோனா கேக்ஸ் வேர்ல்ட் டெலிவரி செய்கிறது. ஆன்லைன் ஆர்டர்களுக்கு காலை 9 மணிமுதல் இரவு 8 மணிவரை கீழே கொடுக்கப்பட்டுள்ள போன் நம்பரை அழைக்கலாம். காலை 10 மணி முதல் இரவு 11 மணிவரை டெலிவரி தருகிறார்கள். சென்னையில் மொத்தம் 64 ஏரியாகளுக்கு டெலிவரி செய்கிறார்கள். 

இங்கு என்ன எதிர்பார்க்கலாம் ? 

இங்கு பல வகையான கேக்கள் 600 ரூபாயில் இருந்து 5000 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

 • 2-3 அடுக்கு கொண்ட கேக்,
 • ஜெர்மன் ப்ளாக் பாரஸ்ட் கேக்,
 • ரெட் வெல்வெட் கேக்,
 • லிட்சி கேக்(ஒரு கிலோ கேக் 650 ரூபாய் மட்டுமே),
 • சாகோ ட்ராபில்ஸ் கேக்(இதில் 18 விதமான கேக் டிசைன் உள்ளது)

இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம். எந்த கேக் ஆர்டர் செய்வது என்று குழம்பப் போகிறீர்கள்! அத்தனை வகைகள்! விலையும் பெரிய அளவிற்கு இல்லை. அப்புறம் என்ன? கிண்டி பக்கம் போனா இந்த கேக் கடையை மிஸ் பன்னாதீர்கள். உங்களுக்கு விருப்பமானவர்களுக்கு ஆன்லைனில் ஆர்டர் செய்து அசத்துங்கள்.

தொடர்பு கொள்ள: +91- 99405 89480, +91-72000 56300
இணையதளம்: http://www.cakesworld.in

3. ஓவென்பிரெஷ் (Oven Fresh)

எல்லா வகையான தீம் கேக்கள் கிடைக்கும் இடம் என்றால்,மற்றுமொரு  சிறந்த இடம் ஓவென்பிரெஷ் கேக் ஷாப் . பம்மல், சிறுசேரி, கே.கே. நகர், மடிப்பாக்கம், முகலிவாக்கம், முகப்பேரு, வேளச்சேரி  இப்படி சென்னையில் பல இடங்களில் இதன் கிளைகள் இருக்கின்றது. உங்கள் நண்பர்களுடன் சென்று வர ஒரு சிறந்த இடம். 

இங்கு என்ன எதிர்பார்க்கலாம் ? 

 • இங்கு பிரூட் கேக், பிரெஷ் க்ரீம் கேக், ஹார்ட் ஷேப் கேக், போட்டோ கேக், குழந்தைகளுக்கான கேக், 3டி கேக், மூஸ் மற்றும் சீஸ் கேக் ஆகிய பல வகைகளில் கேக்குகள் கிடைக்கும்.
 • பார்க்கவே மிகவும் அழகாக ஸ்ட்ராபெர்ரி கேக் என்றால், ஸ்ட்ராபெர்ரி வடிவத்திலும், வாட்டர்மெலான் என்றால் அந்த வண்ணத்திலும், என குழந்தைகள் மிகவும் விரும்பும் வண்ணமாக இருக்கிறது.
 • ஐரிஷ் காபி பவுண்ட் கேக், ப்ளூபெர்ரி கேலக்ஸி கேக், பால் கிருஷ்ணா போட்டோ கேக், பென்10 கேக் போட்டோ கேக், சோட்டா பீம் போட்டோ கேக், டோரா கேக், இப்படி பல வகையான ஸ்பெஷல் கேக்கள் இருக்கின்றது.
 • அதோடு மட்டுமல்லாது 3டி கேக் என்ற வகையில், கேக் மேலே ஸ்பைடர் மேன், பிரின்சஸ் போன்ற கேரக்டர்களை அதன் மீது நிற்க வைத்து அசத்தி இருக்கிறார்கள். 

தொடர்புகொள்ள:  +91 - 99400 14005
இணையதளம்: https://ovenfresh.co

 

 

4. தி கப்கேக் கம்பெனி (The Cupcake Company)

Pinterest

இந்தக்கடையின் சிறப்பம்சம் என்னவென்றால் கப்கேக்குகள்தான். மேலும் உங்கள் விருப்பத்தைக் கேட்டு அதன்படி கேக்கள் செய்கின்றனர். இங்கு விரிக்கப்படும் கப்கேக்குகள் மிகவும் பெரிய அளவில் இருக்கும். அதனால் ஒன்றன் பின் ஒன்றாக ஆர்டர் செய்து சுவைத்துப்பாருங்கள்.இது நீங்கள் நிச்சயம் விரும்பும் ஒரு இடம் ஆக இருக்கும் .

இங்கு என்ன எதிர்பார்க்கலாம் ?

 • இங்கு கப்கேக்குகள் மட்டுமல்ல, முட்டை இல்லாத கேக்குகள், குக்கீஸ், பாப்கார்ன், கேக் ஷேக்ஸ், கொண்டாடப்படும் நாளிற்கான கேக்குகள் என பல வகையான ஐட்டங்கள் இருக்கின்றது.
 • உங்கள் குடும்பத்துடனோ, நண்பர்களுடனோ சென்று உட்கார்ந்து சாப்பிட இடம் இருக்கிறது.
 • ஸ்ட்ராபெர்ரி கிராம்பில், சிப் என் டேல், காரமேலிடா, சாகோ கிராஸி , பிங்க் பாந்தர், லேடி இன் ரெட், டெத் பை சாக்லேட் போன்ற சுவையான சிறப்பான கப்கேக்குகள் 115 ரூபாயில் இருந்து துவங்கி 130 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
 • செலிப்ரேஷன் கேக்கள் 2000 ரூபாயில் இருந்து 3500 ரூபாய் வரை வித விதமாக இருக்கிறது.

போன்: +91 - 91768 08806
இணையதளம்: https://www.thecupcakecompany.com/

5. ஃபெர்ன்ஸ் அண்ட் பெட்டல்ஸ் (Ferns and Petals)

சரி, நீங்கள் கேக் மற்றும் பரிசுகளின் கலவையை உங்கள் பிரியமானவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்க விரும்பினீர்கள் என்றால், ஃபெர்ன்ஸ் அண்ட் பெட்டல்ஸ் அதற்கு சரியான இடம் ஆகும். சென்னை வட்டாரத்தில் ஆன்லைனில் ஆர்டர்கள் எடுத்து வீட்டிற்கு டெலிவரி செய்கிறார்கள். கேக்குகளில் இத்தனை வகைகளா என்று ஆச்சர்யப்படும் அளவிற்கு பல விதமாக கேக்குகளின் லிஸ்ட் இருக்கிறது.

இங்கு என்ன எதிர்பார்க்கலாம் ?

 • பெஸ்ட்செல்லெர் கேக்ஸ்,காஃபீ, எக்லெஸ் கேக்ஸ்,கார்ட்டூன் கேக்ஸ், ஸ்ட்ராபெர்ரி ,ஃபோட்டோ கேக்ஸ், பைஃவ் ஸ்டார் கேக்ஸ், ரெட் வெல்வெட்,கேராமெல்,வால்நட் போன்ற வெவ்வேறு சுவை கொண்ட வகைகளும்,
 • பிறந்தநாள் , அனிவெர்சரி, மற்றும் அணைத்து கொண்டாடத்திற்கும் சுவையான கேக்குகள் உள்ளது.
 • கேக்கோடு சேர்த்து பூக்கள், செடிகள், சாக்லைட்ஸ், பரிசுப் பொருட்கள் ஆகியவை சேர்த்து ஒரு காம்போவாகவும் ஆர்டர் செய்து கொள்ளும் வசதி இருக்கிறது.

இப்படி பல வகையான கேக்குகளில் சாதாரண கேக் 549 ரூபாயில் இருந்து 2000 ரூபாய் வரையிலும் விற்கப்படுகிறது.

தொடர்பு கொள்ள: +91- 921 242 2000
இணையதளம்:  https://m.fnp.com

6. கேக் வாக் (Cake Walk)

Pinterest

சென்னை, பெங்களூரு என்ற இரண்டு இடங்களிலும் கேக் வாக் செயல்படுகிறது.  இங்கிருக்கும் அணைத்து  கேக்கள் வகைப்படுத்தப்பட்டிருக்கிறது. இங்கு சென்று பாருங்களேன்,மயங்கி விடுவீர்கள்!

இங்கு என்ன எதிர்பார்க்கலாம் ? 

 • கிளாசிக் கேக் வகைகளில் (ரூ. 900 முதல் ரூ. 1350 வரை), 
 • எக்ஸ்குவிசைட் கேக் வகைகளில் (ரூ. 1450 முதல் ரூ. 2500 வரை),
 • ப்ரீமியம் கேக் வகைகளில் (ரூ. 1350 முதல் ரூ. 1650 வரை) உள்ளது. 

பட்டர்ஸ்காட்ச் கேக்,சாக்லேட் பட்ஜ்,பைன்ஆப்பிள்/ஸ்டராபெர்ரி கேக், லிச்சி ரோஸ், கேக்வாக் கின் சாக்லேட் டிராஃபில்,மாங்கோலிஸியஸ்,டேட்ஸ் கேரமல்,ராஸ்ப்பெர்ரி ரோஸ்,டர்கிஷ் டிலைட்,ஃபேராரா ரௌச்சர்,ரெயின்போ கேக் இப்படி பல  வகைகளை அடுக்கிக்கொண்டே  போகலாம். 

பெயரைப்  போன்றே கேக்களும் கலக்கலாக இருக்கிறது. ஒரு சில கேக் வகையைத்  தவிர மீதி உள்ள அனைத்து கேக்களையும் முட்டை இல்லாமல் ஆர்டர் செய்து கொள்ள ஒவ்வொரு கேக் அருகிலேயே உங்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வசதி இருக்கிறது. ஒரு முறை அதன் இணையதளத்திற்கு சென்று பாருங்கள். சிறப்பான நாளிற்காக காத்திருக்காமல்  இன்றே ஆர்டர் செய்து விடுவீர்கள்.

தொடர்பு கொள்ள: +91 - 44 28252829 / +91- 44 28252855
இணையதளம்: https://www.cakewalk.co.in

 

7. தி பிரெஞ்ச் லோஃப் (The French Loaf)

இது வரை பார்த்ததில் எதுவும் உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு இல்ல என்றால், இந்த கேக் கடையில் ட்ரை பண்ணுங்க. உங்கள் மன அழுத்தத்திற்கோ அல்லது அலுப்பான நாளிலோ தி பிரெஞ்ச் லோஃப் சென்று இவர்களின் கேக்குகளை சுவைத்து ரசியுங்கள்.

இங்கு என்ன எதிர்பார்க்கலாம் ?

 • புத்தம் புதிய கேக்ஸ், 1 கிலோ கேக் 30 சதவிகிதம் மற்றும் 20 சதவிகிதம் தள்ளுபடியில், இலவசமாக விநியோகம் செய்கிறார்கள்.
 • மேலும் மதியம் 12 மணிக்குள் ஆர்டர் செய்தீர்களானால் அதே நாள் 6 மணிக்குள் விநியோகம் செய்யப்படும்.
 • இவை ஆன்லைனில் தற்போது இருக்கும் ஆஃபர்கள்.
 • சென்னை, பெங்களூரு, கொல்கத்தா, சேலம், கோவை ஆகிய இடங்களில் இதன் கிளைகள் இருக்கின்றது.
 • பிறந்தநாள் கேக், வெட்டிங் கேக், அதே நாளில் விநியோகம் செய்யப்படும் கேக், 3டி கேக், போட்டோ கேக், கிளாசிக் கேக், மிட்டாய் வகை கேக் போன்று ஏராளமான வகைகளில் பல கேக்கள் இருக்கின்றது. சாதாரணமான வெண்ணிலா கேக் 365 ரூபாயில் இருந்து, 3டி கேக்கள் 1500 ரூபாய் வரை விற்கப்படுகிறது.

இப்படி பல வகையில் பல விதமான சுவைமிக்க கேக்கள் பிரெஞ்ச் லோஃப்பில் ஆர்டர் செய்து சுவையுங்கள்.

தொடர்புகொள்ள: +91 - 76049 15027
இணையதளம்: https://thefrenchloaf.in/chennai

8. பிஃளவர் ஆரா (Flower Aura)

Pinterest

பிஃளவர் ஆரா பல ஊர்களில் கிளைகள் கொண்ட பிரபலமான கேக் ஷாப். சென்னையில் வேளச்சேரி, திருவான்மியூர், எழும்பூர், கந்தன்சாவடி போன்ற இடங்களில் கிளைகளை கொண்டுள்ளது. சென்னை மேட்டுப்பாளையத்தில் தலைமை ஷாப் இருக்கிறது.

இங்கு என்ன எதிர்பார்க்கலாம் ?

 • இவர்கள் அதே நாள் மற்றும் நள்ளிரவு கூட கேக் விநியோகம் செய்கிறார்கள்.
 • சுவைமிக்க பிளாக் பாரஸ்ட், பட்டர்ஸ்காட்ச், சாக்லேட், பிரூட், போட்டோ, ரெட் வெல்வெட், காபீ, ஸ்ட்ராபெர்ரி, ஹார்ட், அனிவெர்சரி கேக்கள் பல அற்புதமான வடிவங்களில் தயாரிக்கிறார்கள்.
 • உங்களுக்கு தேவையான கேக்குடன் சேர்ந்து கிஃப்ட்டும் ஆர்டர் செய்து கொள்ளலாம். அனைத்துமே தெளிவாக உங்கள் விருப்பப்படி தேர்ந்தெடுக்கலாம்.

பிஃளவர்ஆரா இணையதளத்தில் எல்லாவற்றையும் தெளிவாக கொடுத்திருக்கிறார்கள். விலையும் சாதாரணமாக இருக்கிறது.

தொடர்புகொள்ள: +91- 9650062220
இணையதளம்: https://www.floweraura.com

இந்த கதையை எழுதிய உடனேயே ஒரு சுவையான ரெட் வெல்வெட் கேக்கை சாப்பிட வேண்டும் என்ற ஆவலை எனக்குள் உணர்ந்தேன். ருசியான கேக்குகளின் நீண்ட பட்டியலைப் படித்த பிறகு, நிச்சயம் உங்களுக்கும் இதை ரசித்து சுவைத்து பார்க்கும் ஆவலை தூண்டியிருப்போம் என்று நம்புகிறோம்!

உடனடியாக உங்களுடையதை ஆர்டர் செய்யுங்கள்!

 

மேலும் படிக்க - சிறந்த ஷாப்பிங் அனுபவத்திற்கு, சென்னையில் 8 அற்புதமான ஷாப்பிங் மால்கள்!

பட ஆதாரம்  - Instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!