வெண்மையான பளபளப்பு நிறத்தில் உள்ள வாஸ்லினில் மருத்துவ குணாதிசயங்கள் அடங்கியுள்ளது. 1859ம் ஆண்டு ஆங்கில வேதியியலாளர் ராபர்ட் செஸ்ப்ரோ பெட்ரோலியம் ஜெல்லியை கண்டுபிடித்தார். எண்ணெய் உற்பத்தி அதிகரித்த 19ம் நூற்றாண்டில் எண்ணெய் கிணறுகளில் வழவழப்பான பொருள் ஒன்று இருந்தது தெரியவந்தது. இந்த வழவழப்பான ஜெல்லியை தடவினால் காயங்கள் விரைவில் குணமடைவதாக கூறப்பட்டது. இதன் பிறகே ராபர்ட், பெட்ரோலியம் ஜெல்லியைத் தனியாகப் பிரித்தெடுக்கும் ஆய்வுகளில் இறங்கி அதில் வெற்றி பெற்றார். பின்னர் பெட்ரோலியம் ஜெல்லிக்கு வாஸ்லின் (vaseline) என்ற பெயரை வைத்து விற்பனை செய்யப்பட்டது.
வாஸ்லின் பல்வேறு அழகு பயன்பாட்டில் முக்கிய பங்காற்றுகிறது. சருமம் பராமரிப்பு மற்றும் கூந்தல் அழகிற்கும் வாஸ்லின் பயன்படுகிறது. வாஸ்லினை பயன்படுத்தி நமது சரும அழகை மெருகேற்றுவது குறித்து இங்கே காண்போம்.
நமது தோலில் புரோட்டீன்கள் இருப்பதால், மேல்புற தோல் ஈரப்பதத்தை இழக்கும் போது அவை வறண்டு போக வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க தூங்குவதற்கு முன்பு வாஸ்லினை கொண்டு செய்ய வேண்டும். இதனை தொடந்து செய்து வந்தால் சருமத்திற்கு ஈரப்பதம் அளித்து வறண்ட மேல்புற தோல்லை சரி செய்யும். சூரிய ஒளியால் உடலில் ஏற்படும் சிவந்த பகுதி, சிராய்ப்புகள் வராமல் தடுக்கவும் வாஸ்லின் பயன்படுகிறது.
வாசலினை பயன்படுத்தி கண்களில் போடப்பட்டுள்ள மேக் அப்பை ஒரு சில விநாடிகளில் எளிதாக அகற்றிவிடலாம். கண்களில் போட்ட மேக்கப்பை சாதரணமாக கழுவ கூடாது. அப்படி செய்வதால் சரும துளைகளில் அந்த மேக்கப் துகள்கள் அடைத்துக் கொண்டு சரும பாதிப்பை தரும். ஆகவே முகத்தை கழுவதற்கு முன் முகம் முழுக்க வாசலினை (vaseline) தடவுங்கள். எரிச்சலை தடுக்க உடனடியாக அந்த பகுதியை துடைத்துவிடுவது நல்லது.
சிலருக்கு கூந்தல் வறண்டு காணப்படும். இதனால் முடியில் பிளவு ஏற்பட்டு அசிங்கமாக இருக்கும். அதனை சரி செய்ய சிறிய அளவு வாஸ்லினை எடுத்து முடியும் தடவுங்கள். இது கூந்தலில் உள்ள சுருள்களை அகற்றி, முடி பிளவுகளை சரி செய்யும். இதை அதிக அளவு பயன்படுத்தக் கூடாது. அப்படி செய்தால் கிரீஸி கூந்தலாக மாற்றிவிடும். கூந்தல் நுனிப் பகுதியில் உள்ள சிபிளவை சரி செய்து, வறண்ட நிலையை வாஸ்லின் நீக்கும்.
கால் பாத வெடிப்பை குணப்படுத்தவும், மென்மையான பாதங்களை பெறவும் வாஸ்லின் பயன்படுகிறது. தினமும் இரவில் படுக்கும் போது பாதம் முழுவதிலும் வாசிலினை தடவிவிட்டு அதன் மேல் சுத்தமான சாக்ஸை அணிந்து கொண்டு தூங்குங்கள். பெட்ரோலியம் ஜெல்லியில் உள்ள எண்ணெய் பாதத்தில் ஈரப்பதத்தை நீண்ட நேரம் தக்கவைத்திருக்கும். மற்ற லோஷன்களை விட வாஸ்லின் பாதங்களை மிருதுவாக்குகிறது.
மேலும் படிக்க - அழகிய பெண்கள் என்றால் அது கோவைப்பெண்கள்தான் ! அவர்கள் ஆடைகள் எல்லாமே தனித்துவம்தான் !
உங்கள் கண் இமை ரோமங்களின் வேராக விளங்குவது உங்கள் கண் இமைகளே. வாஸ்லின் கொண்டு உங்கள் கண் இமைகளையும் சீரான முறையில் மசாஜ் செய்தால் இமை முடிக்கள் வளரும். கண் இமை ரோமங்கள் நன்றாக இருந்தால் கண்கள் அழகா இருக்கும்.
சருமத்தில் உள்ள பருக்களை நீக்கவும், சூரியக்கதிர்களின் தாக்கத்தினால் ஏற்பட்ட சரும நிற மாற்றத்தையும் நீக்குவதற்கும் வாஸ்லின் பயன்படுகிறது. தினமும் வாஸ்லின் ஜெல்லை முகத்தில் தடவி 5-10 நிமிடம் ஊற வைத்து குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் முகப்பரு காரணமாக உருவாகும் வடுக்களும் மறைந்து விடும்.
முக சுருக்கங்களை குறைக்க வாஸ்லினை பயன்படுகிறது. வாஸ்லினை சுருக்கமிருக்கும் இடங்களிலெல்லாம் குறிப்பாக கண்கள் ஓரத்தில் மற்றும் கன்னங்களின் ஓரத்தில் தடவுங்கள். தினமும் காலை வைட்டமின் ஈ எண்ணெய்யுடன் வாஸ்லினை (vaseline) கலந்து சுருக்கம் உள்ள இடத்தில மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்வதால் சுருக்கங்கள் மறைவதை கண்கூடாக காணலாம்.
வாஸ்லினை கொண்டு மென்மையான உதடுகளை பெறலாம். அதற்கு கொஞ்சம் வாஸ்லினுடன் சிறிதளவு சர்க்கரையை நன்றாக கலக்க வேண்டும். இதை சாதாரணமாக உதட்டின் மீது பூசுங்கள். அப்படியே லேசாக மசாஜ் செய்து துடைத்துவிடுங்கள். இதனால் உதடுகள் மென்மையாகும். இதன் பின்னர் லிப்ஸ்டிக் போட்டால் எடுப்பாக இருக்கும்.
டயப்பரை தொடர்ந்து பயன்படுத்துவதால் சொறிகள் மற்றும் தடுப்புகள் உண்டாகும். டயப்பர் சருமத்தை ஆக்ஸிஜனுடன் நிறைவு செய்ய அனுமதிக்காது. இதற்காக மற்ற மருந்துகளுடன் பெட்ரோலிய ஜெல்லியை மாற்றுவது அவசியம். டயப்பரால் உண்டான அலர்ஜிகளை நீக்க வாஸ்லின் பயன்படுகிறது. இதனை தொடர்ந்து பயன்படுத்தி வர டயப்பர் சொறிகள் நீங்கள் சருமம் இயல்பு நிலைக்கு திரும்பும்.
நகங்களுக்கு வாஸ்லினை தடவி மசாஜ் செய்யவும் 20 நிமிடம் கழித்து கழுவுங்கள். தினமும் செய்தால் நகங்கள் உடையாமல் நன்றாக வளரும். நகங்களில் சொத்தை இருந்தால் அதன் பாதிப்பு குணமடையும். வாஸ்லினில் இருக்கும் நல்ல ரசாயன மூலக்கூறுகள் நகங்களுக்கு போஷாக்கு அளிக்கின்றன. இதனால் ஆரோக்கியமான நகங்கள் வளர்கின்றது.
மேலும் படிக்க - எண்ணெய் பசை சருமத்திற்கான காரணங்கள் மற்றும் இயற்கை முறையில் பராமரிக்கும் வழிமுறைகள்!
நீங்கள் ஸ்ப்ரே செய்யப்படும் வாசனை திரவியம் எளிதில் வாசனை அகன்று விடுகிறதெனில் கவலையே வேண்டாம். பர்ஃபியூம் அடிக்கும் முன் அந்த இடத்தில் வாஸ்லின் தடவிய பின் அடியுங்கள். வாசனை நீண்ட நேரம் நீடிக்கும். வாஸ்லின் பர்ஃபியூம் வாசனையை உறிஞ்சி அதை பாதுகாத்து நாள் முழுவதும் பரவுகிறது. எனவே உங்கள் மணிகட்டை மற்றும் கழுத்தில் வாசனை திரவியங்களை தெளிப்பதற்கு முன் முதலில் வாஸ்லின் தடவவும்.
வாஸ்லினை வீட்டிலேயே நாம் தயாரிக்கலாம். சில வகையான எண்ணெய்யை பயன்படுத்தி இயற்கை முறையில் நாம் வாஸ்லின் தயாரிக்கலாம். இதனை குளிர்சாதன பெட்டியில் வைத்து நாம் தினந்தோறும் பயன்படுத்தலாம்.
தயாரிப்பு முறை - 1 :
தேவையான பொருட்கள் :
தேங்காய் எண்ணெய் - 1/4 கப்,
டீ ட்ரீ எண்ணெய் - 2 ஸ்பூன்,
ஆலிவ் எண்ணெய் - 1/8 கப்,
தேன் மெழுகு - 1 ஸ்பூன்.
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி அடுப்பில் வைக்கவும். அதன் மேலே மற்றொரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெய், டீ ட்ரீ எண்ணெய், தேன் மெழுகு ஆகியவற்றை சேர்த்து மிதமான சூட்டில் சூடேற்றவும். இருந்து எண்ணெயையும் சூடாகி ஒன்றோடு இணைந்தவுடன் அடுப்பை அணைக்கவும்.
பின்னர் அந்த பாத்திரத்தை இறக்கி நன்றாக கலக்கவும். பின்னர் இந்த கலவையுடன் ஆலிவ் எண்ணெய்யை கலக்க வேண்டும். இவை ஒரு கிரீம் பதம் வரும் வரை நன்கு கலந்தால் வாஸ்லின் ரெடி. உங்கள் வாஸ்லின் வாசனையாக இருக்க விரும்பினால் எதாவது ஒரு வாசனை எண்ணெய் கலந்து கொள்ளலாம்.
தயாரிப்பு முறை - 2 :
தேவையான பொருட்கள் :
ஆர்கானிக் கோகோ வெண்ணெய் வேபர் - 1 கப்,
குளிர்ந்த சூரியகாந்தி எண்ணெய் - 1 கப்
செய்முறை :
ஆர்கானிக் கோகோ வெண்ணெய் வேபர் மற்றும் குளிர்ந்த சூரியகாந்தி எண்ணெய் ஆகியவற்றை சம அளவில் எடுத்து கலந்து கொள்ள வேண்டும். இந்த கலவை உருகும் வரை குறைந்த வெப்பத்தில் சூடாக்கவும். கோகோ வெண்ணெய் வேபர் உருக நேரம் எடுத்து கொள்ளும் என்பதால் 10-15 நிமிடங்கள் மிதமான தீயில் சூடேற்ற வேண்டும். இரண்டும் உருகி ஒன்றோடு ஒன்று கலந்தவுடன் அடுப்பில் இருந்து இறக்கி ஆறியதும் நன்கு கலக்கி டப்பாவில் சேமித்து வைத்து கொள்ளலாம்.
வாஸ்லினை எப்படி பயன்படுத்துவது என பலருக்கு சந்தேகம் எழும். பெட்ரோலியம் ஜெல்லி இயற்கையான பொருள் என்பதால் அதனை பயன்படுத்த தயக்கம் வேண்டாம். வாஸ்லினை எப்படி பயன்படுத்துவது என இங்கு பார்ப்போம்.
மேலும் படிக்க - நறுமண பொருளான இஞ்சியின் மருத்துவ குணங்கள் மற்றும் அழகு பலன்கள்!
வாஸ்லினில் பல்வேறு நற்குணங்கள் நிறைந்திருந்தாலும் அதனை அதிகமாக பயன்படுத்தும் போது பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. வாஸ்லினால் உண்டாக்கும் பக்க விளைவுகள் குறித்து இங்கே காணலாம்.
வாஸ்லினை அதிகம் பயன்படுத்தினால் ஒவ்வாமையை ஏற்படுத்தும். வாஸ்லின் நன்மைகள் கொடுத்தாலும் அதனை அதிகம் பயன்படுத்தும் போது சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். சொறி, அரிப்பு / வீக்கம், கடுமையான தலைச்சுற்றல், சுவாசிப்பதில் சிக்கல் போன்ற அறிகுறிகள் ஏற்படும். இவற்றில் ஏதேனும் உங்கள் உடம்பில் தென்பட்டால் உடனடியாக மருத்துவ உதவியை நாடுங்கள்.
வாஸ்லினை அதிகம் பயன்படுத்தும் போது எரிச்சல் உண்டாகும். சருமத்திற்கு வாஸ்லினை பயன்படுத்தினாலும் சிறிது நேரத்தில் அதனை நீக்கி/கழுவி விட வேண்டும். இல்லையென்றால் எரிச்சல் உண்டாக்கும். அப்படி உண்டாகும் நேரத்தில் வாஸ்லினை உடனடியாக நீக்கி ஐஸ் கட்டியால் மசாஜ் செய்ய வேண்டும். எரிச்சல் அதிகமாதற்க்கு முன்னர் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
சிலருக்கு வாஸ்லின் பயன்படுத்தினால் தோலில் சிவப்பு தடுப்புகள் உண்டாகும். முதலில் சிவப்பு நிறுத்தி சின்ன சின்ன பொறிகளாக உண்டாகும். பின்னர் இவர் பரவி தடிப்புகளை ஏற்படுத்தும். கடுமையான தோல் அரிப்பு திடீரென தோன்றும், தோல் அரிப்பு கடுமையானதாக இருக்கலாம். தடிப்பு பகுதியில் எரிச்சல், கூர்மையான வலி ஏற்படலாம். ஒரு வாரத்திற்கு மேல் தடிப்புகள் காணப்படால் வாஸ்லின் பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள்.
சிலருக்கு வாஸ்லின் பயன்படுத்தினால் நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. வாஸ்லின் மென்மையாக இருக்க அதனுடன் தாதுக்கள் மற்றும் மைக்ரோ கிரிஸ்டலின் மெழுகு உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்படுகிறது இந்த பொருட்கள் சிலருக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதனால் வாஸ்லினை குறிப்பிட்ட அளவிற்கு மேல் பயன்படுத்தும் போது நோய்த்தொற்று ஏற்படும் என்பதால் கவனம் தேவை.
வாஸ்லினை பரிந்துரைக்கப்பட்ட அளவை விட அதிகமாக எடுக்க வேண்டாம். அதிக அளவு எடுத்து கொள்வதால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்படும். ஏதேனும் அறிகுறிகள் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
வாஸ்லைன் மற்றும் பெட்ரோலியம் ஜெல்லியும் ஓன்று தான். பெட்ரோலிய ஜெல்லியின் பிராண்ட் பெயரே வாஸ்லின். தூய பெட்ரோலியம் ஜெல்லி, தாதுக்கள் மற்றும் மைக்ரோ கிரிஸ்டலின் மெழுகு கலந்த கலவையே வாஸ்லின் என்றழைக்கப்படுகிறது. ஹைட்ரோகார்பன்களின் கலவை பெட்ரோலியம் ஜெல்லியாகும்.
வாஸ்லின் சருமத்தை கருமையாக்காது. சருமத்திற்கு மாய்ஸ்டுரைசராக வாஸ்லின் செயல்படும். இதனால் சருமம் வறட்சியடையாமல் ஈரப்பதத்துடன் காணப்படும். மற்ற லோஷன் அல்லது கிரீம்கள் போன்று வாஸ்லின் சருமத்தை கருமையாக்கது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.