ஆரோக்கியம், தலைமுடி வளர்ச்சி மற்றும் சரும அழகிற்கு அற்புத பலன் தரும் புதினா!

ஆரோக்கியம், தலைமுடி வளர்ச்சி மற்றும் சரும அழகிற்கு அற்புத பலன் தரும் புதினா!

புதினா(Mint) என்று சொல்லிவிட்டாலே, அனைவருது நினைவுகளில் வருவது, சுவையான புதினா உணவு வகைகள். மேலும் அதன் அருமையான நறுமணத்தை பற்றி கூறவே வேண்டாம். புதினாவில் அதிக நற்பண்புகள் உள்ளன. இது உடலுக்கு பல நன்மைகளை தருகின்றது. மேலும் மருத்துவத்திலும் புதினா பயன்படுத்தப்படுகின்றது. புதினாவை உடல் நலத்திற்காக உணவுகளில் சேர்ப்பது மட்டுமல்லாது, இதனை சரும ஆரோக்கியத்திற்கும், தலைமுடி வளர்ச்சிக்கும் கூட பயன்படுத்தலாம். சருமத்தில் இருக்கும் தழும்புகள், பருக்கள் மற்றும் பிற பிரச்சனைகளை போக்குவதோடு, நல்ல புத்துணர்ச்சியையும் அது தருகின்றது.

புதினா எந்த வகையிலெல்லாம் பயன்படுகின்றத்து என்பதை பற்றி தெரிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக ஒரு சுவாரசியமான தொகுப்பு!

Table of Contents

  புதினாவில் நிறைந்துள்ள சத்துக்கள்(Nutritional values of mint)

  1௦௦ கிராம் புதினாவில் என்னென்ன சத்துக்கள் எந்த அளவில் உள்ளது என்று இங்கே பார்க்கலாம்:

  • சக்தி கலோரிகள்-37
  • புரத சத்து-4.66 கிராம்
  • கார்போஹைட்ரேட்-2.39 கிராம்
  • கொழுப்பு சத்து-0.65 கிராம்
  • மொத்த செரிமான நார் சத்து- 5.89 கிராம்
  • வைட்டமின் C -17.16 மில்லி கிராம்
  • பீட்ட கரோடின் -4602 மில்லி கிராம்
  • கால்சியம் -205 மில்லி கிராம்
  • இரும்பு -8.56 கிராம்
  • பொட்டாசியம் -539 மில்லி கிராம்
  • சோடியம்-10.79 கிராம்

  புதினாவை பற்றிய சில சுவாரசியமான தகவல்கள்(Interesting facts about mint)

  புதினாவில் பல அற்புத குணங்கள் உள்ளன. அவற்றை பற்றி தெரிந்து கொள்ள, இங்கே சில தகவல்கள்

  •  இந்த மூலிகையில் செய்யப்படும் குளிர் பானங்கள், குறிப்பாக கோடைகாலத்தில் நல்ல சக்தியை உடலுக்குத் தரும்
  • புதினா பானங்கள் உடலுக்கு புத்துணர்ச்சியை உண்டாக்குவதோடு, மனதையும் அமைதி அடைய செய்யும்
  • இதை சுரம் அல்லது உடல் சோர்வு இருக்கும் நேரங்களில் எடுத்துக் கொண்டால், உடனடியாக நல்ல தீர்வைத் தரும். விரைவாக சுரத்தில் இருந்தும் குணமடையலாம்
  • சருமத்தில் ஏதாவது எரிச்சல் அல்லது தீ காயங்கள் இருந்தால், இந்த புதினா இலைகள் ஒரு நல்ல மருந்தாக செயல்படும்
  • வாத நோயை குணப்படுத்த இந்த புதினா பெரிதும் உதவுகின்றது
  • இந்த மூலிகை மூலையில் செயல்திறனையும் அதிகப்படுத்த உதவுகின்றது
  • இது நரம்பு மண்டலத்தில் ஏற்படும் சில பிரச்சனைகளை விரைவாக குணப்படுத்த உதவுகின்றது
  • வாய் துர்நாற்றம் மற்றும் பற்கள் மற்றும் ஈறுகளில் இருக்கும் பிரச்சனைகளை போக்கவும் இது உதவுகின்றது
  Pixabay

  புதினாவால் கிடைக்கும் உடல்நல பலன்கள்(Health benefits of mint)

  புதினா பல நல்ல குணங்களை கொண்டுள்ளது. இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் பல்வேறு நன்மைகளைப் பெறலாம். நீங்கள் இந்த புதினாவில் இருந்து கிடைக்கும் பலன்களைப் பற்றி தெரிந்து கொள்ள விரும்பினால், இங்கே உங்களுக்காக சில பயனுள்ள தொகுப்புகள்.

  1. ஆஸ்த்மாவை குணப்படுத்தும்

   புதினானா சுவசகுலாயில் ஏற்படும் இறுக்கத்தை போக்க உதவுகின்றது. இதனால் எளிதாக சுவாசிக்க முடிகின்றது. மேலும் இது ஒரு நல்ல அமைதிபடுத்தும் நிவாரணியாகவும் செயல்படுகின்றது. இதனால், மேலும் சுவாச குழாய் மற்றும் நுரையீரல் அமைதியாக தளர்ந்து, எளிதாக சுவாசிக்க உதவுகின்றது. மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளையும் இது குணப்படுத்த உதவுகின்றது.

  2. சுரம்

  வெப்ப நிலை மாறுதல் ஏற்படும் போது பலருக்கும் சுரம் மற்றும் சளி போன்ற தொந்தருவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. இந்த வகையில், புதினா சாறு சுரம் மற்றும் ஒவ்வாமை போன்ற பிரச்சனைகளை எளிதில் போக்க உதவுகின்றது. இதனால், நீங்கள் விரைவாக புத்துணர்ச்சி பெறலாம்.

  3. ஜீரணத்தை சீற்படுத்துகின்றது

  சரியான உணவு முறை இல்லாததாலும், சரியான அளவு உணவை எடுத்துக் கொள்ளாததாலும் அல்லது வேறு பல காரணங்களாலும், ஜீரண பிரச்சனைகள் ஏற்பட வாய்புகள் உண்டாகின்றது. இந்த வகையில், புதினாவில் இருக்கும் நார் சத்தும், பிற சத்துக்களும், ஜீரண பிரச்சனைகளை குணப்படுத்தி வயிற்றை எளிதாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

  4. சுவாச கோளாறுகளை குணப்படுத்தும்

  இன்று பலருக்கும் காற்று மாசுபடுவதால், வண்டிகளில் இருந்து உண்டாகும் நச்சு புகை அதிகரிப்பதால் மற்றும் மேலும் பிற காரணங்களால், சுவாச பிரச்சனைகள் அதிகமாகின்றது. எனினும், புதினாவில் இருக்கும் நற்குணங்கள், தொண்டை, மூக்கு, நுரையீரல், சுவாச குழாய் மற்றும் சுவ அமைப்பு ஆகியவற்றை நல்ல நிலையில் செயல் பட உதவுகின்றது. மேலும் இது உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கி, சூட்டினால் உண்டாகும் சுவாச பிரச்சனைகளையும் போக்க உதவுகின்றது.

  5. வாய் துர்நாற்றத்தை போக்கும்

  புதினா என்று வந்துவிட்டாலே, முதலில் அதன் நறுமணம் தான் நினைவிற்கு வரும். மேலும் புதினாவில் இருக்கும் சில பண்புகள், துர்நாற்றத்தை உண்டாக்கும் பக்டீரியாக்களையும், கிரிமிகளையும் கொன்று, வாய் மற்றும் பற்களை சுத்தமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது.  அதனால் வாய் துர்நாற்றமும் குறைகின்றது. புத்துணர்ச்சியான சுவாசம் கிடைகின்றது.

  6. மன அழுத்தத்தை குறைக்கும்

   புதினாவில் இருக்கும் நறுமணத்தால், இது சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேதம், போன்ற மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகின்றது. இதில் இயற்கையான மயக்கும் குணங்கள் உள்ளது. அதனால் தினமும் புதினா தேநீர் அருந்துவதால் மன அழுத்தம், மற்றும் பதற்றம் குறையும். இது ஒரு நல்ல நிவாரணியாக செயல்படுகின்றது.

  7. ஞாபக சக்தியை அதிகப்படுத்தும்

  புதினா மூளை செயல்பாட்டை அதிகப்படுத்தும் வகையில் சில பண்புகளை வெளியிடுகின்றது. இதனால் நரம்பு மண்டலமும் நல்ல சக்தியைப் பெறுகின்றது. இதன் விளைவாக, மூளை சிறப்பாக செயல்படத் தொடங்குகின்றது. ஞாபக சக்தியும் அதிகரிகின்றது.

  Pixabay

  8. வாய் மற்றும் பற்களின் ஆரோக்கியம்

  நாக்கு, பற்கள், ஈறுகள், வாய் மற்றும் அது சார்ந்த உறுப்புகள் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க புதினா உதவுகின்றது. இது வாயில் உண்டாகும் தீய கிருமிகளை அழிக்கின்றது. மேலும் இதில் இருக்கும் நற்பண்புகள் பிரச்சனைகளை உண்டாக்கும் பக்டீரியாக்களை அழிக்க உதவுகின்றது. இதனால் வாய் மற்றும் அது சார்ந்த உறுப்புகளும் ஆரோக்கியம் பெறுகின்றது.

  9. குமட்டலை போக்கும்

  புதினாவில் நறுமணம் குமட்டலை போக்க உதவுகின்றது. இது வயிற்றில் இருக்கும் பிரச்சனைகளை குணப்படுத்தி, குமட்டல் உண்டாகும் காரணங்களை தடுக்கின்றது. இதனால் குமட்டல் தடுக்கப்படுகின்றது.

  10. தலைவலியை போக்கும்

  புதினா தையலம் பல பிரச்சனைகளை போக்க உதவுகின்றது. குறிப்பாக தலைவலி மற்றும் உடலில் வெப்பம் அதிகரிப்பு போன்ற பிரச்சனைகளை உடனடியாக குணப்படுத்த உதவுகின்றது. இதனால் மைக்ரேன் போன்ற பிரச்சனைகளுக்கும் புதினா ஒரு நல்ல தீர்வாக உள்ளது.

  11. மன அழுத்தத்தை போக்கும்

  புதினாவின் நறுமணம் ஒரு நல்ல நிவாரணியாக உள்ளது. இதன் மனம் உடனடியாக மனதில் இருக்கும் அழுத்தத்தை குறைக்க உதவுகிநிட்ர்த்து. இதனால், மனம் தெளிவு பெற்று, இலகுவாகின்றது. மேலும் புதினா தையலத்தை பயன்படுத்தி சுடு நீரில் ஆவி பிடித்தால், உடனடி நிவாரணமாக மனம் அமைதி பெறுவதை நீங்கள் உணரலாம்.

  12. மலட்டுத் தன்மையை குறைக்கும்

  சில ஆய்வுகள் புதினா மலட்டுத் தன்மையை குறைத்து, கரு உண்டாக உதவுகின்றது என்று கண்டறிந்துள்ளது.  இதனால், இதனை சரியான முறையில் பயன்படுத்தினால், இதில் இருக்கும் நற்பண்புகள் கரு உண்டாக உதவுகின்றது.

  13. ஒவ்வாமையை போக்குகின்றது

  பலருக்கும் உடலிலும், சருமத்திலும் ஒவ்வாமை ஏற்படுவது இயல்பு. இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், சரியான தீர்வை கண்டறிவது முக்கியம். இந்த வகையில், புதினாவில் இருக்கும் ஆக்சிஜெனேற்றம் மற்றும் ரோச்மரினிக் அமிலம் என்னும் அழற்சி எதிர்ப்பு பண்பு ஒவ்வாமையை குனபடுத்த பெரிதும் உதவுகின்றது. இதனால் ஒவ்வாமைக்கான அறிகுறிகள் விரைவாகவே, இந்த இயற்க்கை மூலிகையால் குணப்படுத்தப்படுகின்றது.

  14. சளி

  புதினாவில் இருக்கும் மென்தால், இயற்கை இரத்த சேர்க்கை நீக்கத்தை போக்க உதவுகின்றது. இதனால் இது சளியை உடைத்து, விரைவாக வெளியேற்ற உதவுகின்றது. மேலும் இந்த மென்தால் நல்ல குளிர்ச்சியையும் உடலுக்கு தருவதால், தொண்டையில் இருக்கும் பிரச்சனைகளும் குனமாகின்றது.

  Pixabay

  15. வாயுவை போக்கும்

   வயிற்றில் வாயு பிரச்சனை உண்டானால், பல இன்னல்கள் ஏற்படும். இதனால் அசௌகரியங்கள் அதிகமாகும். மேலும் வயிற்றில் ஜீரண கோளாறுகள் உண்டாகும். புதினா பித்த சுரப்பு மற்றும் பித்த ஓட்டத்தை ஊக்குவிக்கின்றது. இதனால் உடனடியாக ஜீரண பிரச்சனைகளில் இருந்தும், வாயு பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கிடைகின்றது. இது ஒரு நல்ல வீட்டு வைத்தியமாக உள்ளது.

  16. எரிச்சல் கொண்ட குடல் நோய் அறிகுறிகளை போக்கும்

  குடலில் பல காரணங்களால் பிரச்சனைகள் உண்டாகும். இது பல இன்னல்களையும், அசௌகரியங்களையும் உண்டாக்கும். எனினும், புதினாவில் இருக்கும் சில நல்ல பண்புகள், குடல் புண் மற்றும் எரிச்சல் போன்ற பிரச்சனைகளி போக்கி உடனடி நிவாரணத்தைப் பெற உதவுகின்றது.

  17. இரைப்பையில் புண்

   இரைப்பையில் புண் ஏற்பட்டால், அது வலியை உண்டாக்கி, அசௌகரியத்தை மேலும் அதிகரிக்கும். புதினாவை தினமும் பயன்படுத்தி வரும் போது, இத்தகைய புண் ஏற்படாமல் தடுக்க முடியும். மேலும் புண் அல்லது எரிச்சல் இருந்தாலும், அது விரைவாக குணமடையும்.

  18. வலி நிவாரணி

  புதினா சாறை உங்களுக்கு வெளி ஏற்பட்டிருக்கும் இடத்தில் தடவினால், உடனடியாக நிவாரணம் கிடைப்பதை உணரலாம். மேலும், புதினா தேநீர் உங்கள் உடலில் ஏற்படும் பல வகை வழிகளை போக்கவும் உதவுகின்றது.

  புதினா தேநீர் செய்வது எப்படி?(How to make mint tea)

  புதினா பயன்படுத்தி தேநீர் செய்தால், அது மிக சுவையாகவும், நல்ல நறுமனத்தொடும் இருக்கும். இது மேலும் உங்கள் உடல் நலத்தை அதிகப்படுத்தவும் உதவும். எப்படி பல வகை புதினா தேநீர் செய்வது என்று இங்கே பார்க்கலாம்;

  புதினா தேநீர் 1

  செய்முறை:

  •         தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்
  •         இதில் சில புதினா இலைகளை சேர்க்கவும்
  •         நன்கு கொதிக்க விடவும்
  •         பின் இறக்கி இதனுடன் தேவைப்படும் அளவு நாட்டு சர்க்கரை அல்லது தேன் சேர்த்து அருந்தலாம்

  புதினா தேநீர் 2

  செய்முறை

  • தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்
  • இதில் சிறிது புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது இஞ்சியை நன்கு தட்டி சேர்க்கவும்
  • நன்கு கொதிக்க விடவும்
  • பின் இறக்கி, தேவையான நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து அருந்தவும்
  Pixabay

  புதினா தேநீர் 3

  செய்முறை

  • தேவையான தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது புதினா இலைகளை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  • இந்த நீரில் சிறிது எலுமிச்சைப் பழச்சாறு சேர்க்கவும்
  • அல்லது சிறிது எலுமிச்சை பழத்தை நறுக்கி இந்த தண்ணீருடன் சேர்த்து கொதிக்க விடலாம்
  • பின் இறக்கி, தேவையான நாட்டு சர்க்கரை அல்லது தேன் கலந்து அருந்தவும்

  புதினா தேநீர் 4

   செய்முறை

  • தேவையான தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்
  • இதில் அரை தேக்கரண்டி தேயிலைத் தூளை சேர்க்கவும்
  • இதனுடன் சிறிது இஞ்சித் துண்டை இடித்து சேர்த்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது புதினா இலைகளை சேர்த்து கொதிக்க விடவும் அல்லது இறுதியில் புதினா இலைகளை சேர்த்து இறக்கி விடலாம்
  • நன்கு கொதித்த பின், இறக்கி, தேவைப்பட்டால் எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கொள்ளலாம்
  • இதனுடன் தேன் அல்லது நாட்டு சர்க்கரை சேர்த்து அருந்தலாம்

  உடல் எடையை குறைக்க புதினா(Mint for weight loss)

  புதினா உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது. இதில் இருக்கும் நார் சத்து மற்றும் ஆக்சிஜெனேற்ற பண்புகள், மற்றும் இதில் நிறைந்துள்ள சத்துக்கள் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.
  புதினா எப்படி உடல் எடையை குறைக்க உதவுகின்றது என்று இங்கே பார்க்கலாம்:

  • புதினா உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சி கொழுப்பை உட்கொண்டு அதை பயன்படுத்தக்கூடிய ஆற்றலாக மாற்றும் செரிமான நொதிகளைத் தூண்ட உதவுகிறது
  • வெள்ளை சர்க்கரை சேர்க்காமல் புதினா தேநீரை செய்து அருந்தி வந்தால், அது கலோரிகள் அளவை குறைத்து, உடலில் உள்ள கொழுப்பின் அளவை  குறைத்து, உடல் எடை குறையவும் உதவுகின்றது
  • புதினாவிற்கு தனித்துவமான, இனிமையான பண்புகள் உள்ளன. இது மன அழுத்தத்தை குறைக்க உதவுகின்றது. உடல் எடை அதிகரிக்கவும், இந்த மன அழுத்தம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது
  • புதினாவில் வைட்டமின் A மற்றும் C, மற்றும் மென்தோல், பொட்டாசியம், கால்சியம், போலிக் அமிலம், ப்லவோனைட்ஸ் மற்றும் நார் சத்து அதிகம் உள்ளது. இவை அனைத்தும் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது
  • தினமும் புதினாவை பயன்படுத்தி வந்தால், உடல் எடை குறைவதோடு மட்டும் இல்லாமல், உடல் முழுவதும் நல்ல ஆரோக்கியத்தைப் பெறுகின்றது
  • புதினா வளர்சிதை மாற்ற செயல்முறைகளை ஊக்கவிக்கின்றது. இதனால் உடலில் தேங்கி இருக்கும் நச்சுக்கள் வெளியேற்றப் படுகின்றது. இதனால் நல்ல ஜீரணமும் உண்டாகின்றது. மேலும் வயிற்றில் வாயு உண்டாவது தடுக்கப்படுகின்றது. குடலில் இருக்கும் பிரச்சனைகள் குறைகின்றது. மேலும் வயிற்றில் இருக்கும் அமிலத்தன்மையை குறைகின்றது. மொத்தத்தில் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து உடல் எடை ஆரோக்கியமான் முறையில் குறைய உதவுகின்றது.
  • புதினா பசி உண்டாவதை குறைக்க உதவுகின்றது. தினமும் 2 அல்லது 3 முறை புதினா தேநீரை எடுத்துக் கொண்டால், பசி உடாகும் உணர்வு குறையும். இதனால் குறைந்த அளவே உணவு தேவைப்படும். இதனால் உடல் எடையும் வெகுவாக குறைய வாய்ப்பு உள்ளது. எனினும், இதனால் உங்கள் உடலில் எந்த பாதிப்புகளும் உண்டாகாது. உடல் நல்ல ஆரோக்கியத்தோடும், தெம்போடும் இருப்பதை நீங்கள் உணருவீர்கள்

  உடல் எடையை குறைக்க புதினா தேநீர்

  நீங்கள் உடல் எடையை குறைக்க முயற்சி செய்து கொண்டிருகின்றீர்கள் என்றால், இந்த தேநீர் வகைகள் உங்களுக்காக

   செய்முறை 1

  • சிறிது புதினா மற்றும் கெமோமில் எடுத்துக் கொள்ளவும்
  • தேவையான அளவு தண்ணீர் எடுத்து, இவை இரண்டையும், தண்ணீரில் சேர்த்து, கொதிக்க விடவும்
  • நன்கு கொதித்ததும், அடுப்பில் இருந்து இறக்கி, வடிகட்டி அருந்தலாம்
  • தேவைப்பட்டால் தேன் சேர்த்துக் கொள்ளலாம்

  செயற்முறை 2

  • அரை தேக்கரண்டி கிரீன் டீ எடுத்துக் கொள்ளவும்
  • தண்ணீரில் இதை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
  • இதனுடன் சிறிது புதினா இலைகளை சேர்த்துக் கொள்ளவும்
  • நன்கு கொதித்த பின் இறக்கி, மிதமான சூட்டிற்கு வந்தவுடன் அருந்தலாம்
  • தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கொள்ளலாம்

  செய்முறை 3.

  • தேவையான தண்ணீர் எடுத்துக் கொண்டு அதில் சிறிது இஞ்சி மற்றும் புதினா சேர்த்துக் கொள்ளவும்
  • இதனை நன்கு கொதிக்க விடவும்
  • இதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்துக் கொள்ளவும்
  • இதனை நீங்கள் சூடாகவும் அருந்தலாம், அல்லது நன்கு குளிர வைத்து, குளிர் சாதனா பெட்டியில் வைத்து, தினமும், பழச்சாறு எடுத்துக் கொள்வதற்கு பதிலாக இதனை அருந்தலாம்

  சரும பாதுகாப்பிற்காக புதினா(Mint for skin care)

  புதினா உடல் நலத்திற்கு மட்டுமல்லாது, சருமத்தை பாதுகாக்கவும் பெரிதும் உதவுகின்றது. புதினா எப்படி உங்கள் சருமத்தை பாதுகாகின்றது என்று இங்கே பார்க்கலாம்;

  • புதினாவில் ஆண்டிசெப்டிக் மற்றும் ஆண்டிபிரூரிடிக் பொருள் உள்ளன. இவை உங்கள் சருமத்தை சுத்திகரிக்க உதவும்
  • மேலும் புதினா சருமத்தில் ஏற்படும் அரிப்பு மற்றும் புண் போன்றவற்றை குணப்படுத்தி, மிருதுவான சருமத்தைப் பெற உதவும்
  • முகத்தில் ஏற்படும் பருக்கள் மற்றும் பிற பிரச்சனைகளை போக்க உதவுகின்றது
  • இதில் இருக்கும் ப்ரூரிடிக் எதிர்ப்பு பண்புகள் பூச்சி கடி, கொசுக்கடி, தேனீ கடி மற்றும் வண்டுகள் கடி போன்றவற்றால் ஏற்படும் பிரச்சனைகளை போக்க உதவுகின்றது
  • புதினாவிற்கு குளிரவைக்கும் பண்புகள் அதிகம் உள்ளது. அதனால் சருமத்தில் எரிச்சல் உண்டானால், அதனை குணப்படுத்த இது பெரிதும் உதவும்
  • புதினா சருமத்தில் வீக்கம் உண்டாகாமல் இருக்க உதவும். குறிப்பாக பூச்சி கடித்ததால் உண்டாகும் வீக்கத்தை இது குறைகின்றது
  • கோடை கால சரும பாதுகாப்பிற்கு புதினா ஒரு நல்ல தீர்வு
  • புதினா சருமத்தின் நிறத்தையும் மேம்படுத்த உதவுகின்றது
  Pixabay

  புதினா பேஸ் பாக் செய்வது எப்படி

  நீங்கள் பயன் பெற, இங்கே சில எளிய மற்றும் நல்ல பலன்தரக்கூடிய பேஸ் பாக்;

  சருமம் பலபலக்க

  • தேவையான அளவு புதினா இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்
  • இதனை நன்கு பசை போல அரைத்துக் கொள்ளுங்கள்
  • இதனுடன் சிறிது வாழைப்பழத்தை மசித்து சேர்த்துக் கொள்ளலாம்
  • இந்த கலவையை முகத்தில் தடவி அப்படியே சிறிது நேரம் விட்டுவிடவும்
  • இப்போது மிதமான சூடு இருக்கும் தண்ணீரில் முகத்தை கழுவி விடவும்

   முகப்பருவை போக்க

  • தேவையான அளவு புதினா இலைகளை எடுத்துக் கொள்ளவும்
  • இதனை நன்கு அரைத்து, இதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறை சேர்க்கவும்
  • இந்த கலவையை முகத்தில் தேய்த்து நன்கு மசாஜ் செய்யவும்
  • சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்

  சருமத்தில் எண்ணை பிசுக்கு போக

  • சிறிது தேவையான அளவு புதினா இலைகளை எடுத்துக் கொள்ளவும்
  • இதை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது முல்தானி மட்டி மற்றும் சிறிது தயிர் மற்றும் தேன்  சேர்த்துக் கொள்ளவும்
  • இந்த கலவையை முகத்தில் தடவி மசாஜ் செய்யவும்
  • சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்

  சூரிய கதிர்களால் உண்டான எரிச்சலை போக்க

  • சிறிது புதினா இலைகளை எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது வெள்ளரிக்காயை சேர்த்துக் கொள்ளவும்
  • இதனை நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • இந்த கலவையை முகத்தில் மற்றும் பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்
  • சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவி விடவும்

  வறண்ட சருமத்திற்கு

  • தேவையான புதினா இலைகளை எடுத்துக் கொள்ளவும்
  • இதை நன்கு அரைத்து அதன் சாறை எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சைபழச்சாறு சேர்த்துக் கொள்ளாம்
  • இதை சருமத்தில் தேய்த்து சிறிது நேரம் விட்டுவிடவும்
  • பின் குளிர்ந்த நீரில் கழுவி விடவும்

  சருமத்தில் இருக்கும் கறைகளை போக்கும்

  • தேவையான அளவு புதினா இலைகளை எடுத்து, அரைத்துக் கொள்ளவும்
  • இதனுடன் முல்தானி மட்டி, தக்காளி பழச்சாறு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  • அனைத்தையும் நன்கு கலந்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும்
  • பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்
  • இது கோடை காலத்திற்கு ஏற்ற சரும பாதுகாப்பாகும்

   டோனர்

  • சிறிது புதினா இலைகளை எடுத்துக் கொள்ளவும்
  • இந்த இலைகளை நன்கு தண்ணீரில் கொதிக்க விடவும்
  • பின் இந்த நீரை வடிகட்டி எடுத்துக் கொண்டு குளிர வைக்கவும்
  • இந்த தண்ணீரை நீங்கள் தினமும் பயன்படுத்தி வந்தால் நல்ல டோனராக செயல்பட்டு உங்கள் சருமத்திற்கு ஒரு புத்துனர்சியைத் தரும்

  தலைமுடி வளர்ச்சிக்கு புதினா(Mint for hair growth)

  சரும அழகிற்கு மட்டுமில்லை, புதினா உங்கள் தலைமுடியை நன்கு வளர் வைக்கவும் பெரிதும் உதவுகின்றது. புதினா எண்ணை தலைமுடி நாங்கு வளர அதிகம் பயன்படுத்தப்படுகின்றது. இது உங்கள் தலைமுடிக்கு நல்ல நறுமணத்தை தருவதோடு, நல்ல அழகான தோற்றத்தையும் தருகின்றது.

  • புதினா நுண்ணுயிராக செயல்படுகின்றது
  • இது ஒரு நல்ல  பூச்சிக்கொல்லியாக செயல்பட்டு, தலைமுடி வேர்களில் இருக்கும் பேன் போன்ற பிரச்சனைகளை போக்க உதவுகின்றது.
  • தலையில் ஏற்படும் அரிப்பு மற்றும் பொடுகு பிரச்சனைகளை போக்க உதவுகின்றது
  • இது தலைமுடி உதிர்வை அதிகம் குறைக்க உதவுகின்றது
  • முடி நன்கு அடர்த்தியாக வளர உதவுகின்றது
  • தலைமுடிக்கு நல்ல நிறத்தையும் பெற இது உதவுகின்றது
  Pixabay

  தலைமுடி பராமரிப்பிற்கு புதினா பாக்

  பொடுகை போக்க

  • தேவையான புதினா இலைகளை எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது எழுமிச்சைபழ சாறை சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்
  • இந்த கலவையை தலையில் நன்கு தேய்த்து சிறிது நேரம் விட்டுவிடவும்
  • பின் குளிர்ந்த நீரில் சீயக்காய் அல்லது ஷாம்பூ போட்டு அலசி விடவும்

  தலைமுடி உதிர்வை போக்க

  • இதற்கு நீங்கள தினமும் புதினா எண்ணையை பயன் படுத்தலாம், அல்லது
  • தேவையான அளவு புதினா இலைகளை எடுத்துக் கொள்ளுங்கள்
  • இதை நன்கு அரைத்துக் கொண்டு தேங்காய் எண்ணையுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்
  • இதை தலை முடியில் வேர் முதல் நுணி வரை நன்கு தேய்த்து கொள்ளவும்
  • சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் சீயக்காய் பயன்படுத்தி தலைமுடியை அலசி விடவும்

  பேன் தொல்லை நீங்கள்

  • சிறிது புதினா இலைகளை எடுத்துக் கொள்ளவும்
  • இதனை நன்கு அரைத்து தலையில் தேய்க்க்கவும்
  • சிறிது நேரம் விட்டுவிட்டு பின் குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசவும்
  • இப்படி தொடர்ந்து வாரம் 3 அலல்து 4  முறை செய்து வந்தால் பேன் தொல்லை நீங்கும்

  தலைமுடி நன்கு வளர

  • சிறிது புதினா இலைகளை எடுத்து நன்கு அரைத்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளவும்
  • இரண்டையும் நன்கு கலந்து தலையில் தேய்த்துக் கொள்ளவும்
  • பின் சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசி விடவும்

  எண்ணை பிசுக்கை போக்க

  • தேவையான அளவு புதினா இலைகளை எடுத்து அரைத்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது மருதாணி இலைகளையும் சேர்த்து அரைத்து கலந்து கொள்ளலாம்
  • சிறிது ஊற வைத்த வெந்தயத்தை அரைத்து கலந்து கொள்ளலாம்
  • அனைத்தையும் நன்கு கலந்து தலை முடியில் தேய்க்கவும்
  • சிறிது நேரம் கழித்து சீயக்காய் தேய்த்து தலைமுடியை அலசவும்

  கேள்வி பதில்கள்(FAQ)

  புதினா தண்ணீர் ஆரோக்கியமானதா?

  எந்த சந்தேகமும் இன்றி புதினா தண்ணீர் அதிக ஆரோக்கியத்தை தரும் என்று நம்பலாம். இதில் வைட்டமின் A சத்து அதிகம் உள்ளது, மேலும் இது கண் பார்வையை மேம்படுத்தி, உடலுக்குத் தேவையான ஆக்சிஜிநேற்றத்தை தருகின்றது. இது ஒரு நல்ல உடனடி நிவாரணம் தரக் கூடிய மூலிகை.

  சரும ஆரோக்கியத்திற்கு புதினா நல்லதா?

  புதினாவில் ஆண்டிசெப்டிக் மற்றும் ஆண்டிபிரூரிடிக் பொருள் உள்ளன. இது உங்கள் சருமத்தை சுத்தம் செய்து, அதில் இருக்கும் நுன்கிரிமிகள், கெடுதல் விளைவிக்கும் பக்டீரியா மற்றும் தூசி அல்லது அழுக்கை போக்க உதவுகின்றது. இதனால் சரும ஆரோக்கியமும் அதிகமாகின்றது.

  Pixabay

  புதினா இலைகளை அப்படியே சாப்பிடலாமா?

  சாப்பிடலாம். இப்படி செய்தால், உங்கள் வயிற்றில் இருக்கும் எரிச்சல் மற்றும் ஜீரண பிரச்சனைகள் வெகுவாக குறையும். இதில் இருக்கும் பச்சையம், பச்சையாக இலைகளை சாப்பிடும் போது அதிக பலனைப் பெற உதவுகின்றது. அதனால் உங்கள் வாயில் இருக்கும் துர்நாற்றமும் குறையும். புத்துணர்ச்சி அதிகமாகும்.

  தலைமுடி வளார்ச்சிக்கு புதினா ஏற்ற மூல்லிகையா?

  ஆம். புதினாவிற்கு தலைமுடி வளர்ச்சியை தூண்டும் பண்புகள் உள்ளன. மேலும் தலைமுடி அடர்த்தியாக வளரவும் இது உதவும். இதில் இருக்கும் மென்தோல் நல்ல புத்துணர்ச்சி தரும் நறுமணத்தையும் உண்டாக்குகின்றது. இதனால், தலையில் அரிப்பு மற்றும் பிற பிரச்சனைகளையும் புதினா போக்கும்.

  உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்ற புதினா உதவுமா?

  புதினா அதிக அளவு ஜீரணம் மற்றும் உடல் எடையை குறைக்க உதவுகின்றது. இது குறிப்பாக உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றுவதால் பெரும் பலனாகும். மேலும் புதினா இலைகள் இரத்தத்தை சுத்தம் செய்ய உதவுகின்றது. இது மேலும் உங்கள் உடலில் இருக்கும் பிற பிரச்சனைகளையும் போக்க உதவுகின்றது.

  புதினா இலைகளை எப்படி புதிதாக பாதுகாப்பது?

  பொதுவாக அனைவரும் குளிர் சாதன பெட்டியில் வைத்து பாதுகாப்பார்கள். எனினும், அதிக நாட்கள் புதிதாக இருக்க, புதினாவை அப்படியே ஒரு பருத்தி துணியில் சுற்றி தண்ணீர் படாமல் வைத்து விடவும். இதனால் பல நாட்கள் புதினா தன்னுடைய புதுமைத் தன்மையை தக்க வைத்துக் கொள்ளும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும், எடுத்து பயன்படுத்தலாம்.

  பட ஆதாரம்  - Shutterstock, Pixabay

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!