பேரழகு வேண்டுமா? தினம் ஒரு பேரிக்காய் சாப்பிடலாமே!

பேரழகு வேண்டுமா? தினம் ஒரு பேரிக்காய் சாப்பிடலாமே!

ஆப்பிளை போன்ற தோற்றம் இருந்தாலும், தனக்கென ஒரு தனி சுவையோடு பேரிக்காய் இருகின்றது. பலருக்கும் பிடித்த ஒரு பழமாய் இந்த பேரிகை இருகின்றது. மலிவான விலையில் கிடைப்பதாலும், நல்ல புளிப்பு கலந்த இனிப்பான சுவையில் இருப்பதாலும், அனைவராலும் விரும்பப்படுகின்றது. பேரிக்காய்(Pear) பல வகைகளில் கிடைகின்றன. சிறிய அளவிலான பேரிக்காய் முதல், பெரிய அளவிலும் கிடைகின்றன. இது ஆண்டு முழுவதும் கிடைக்கும். அதனால், கடைகளில் எப்போதும் இது விற்ப்பனைக்கு இருக்கும். இந்த பேரிக்காயில் பல உடல் நல பலன்கள் உள்ளன. இவை சத்துக்கள் நிறைந்ததாக இருப்பதால், உடல் நலனுக்கு மட்டுமல்லாது, சரும ஆரோக்கியம் மற்றும் தலைமுடி நன்கு வளரவும் உதவுகின்றது.

Table of Contents

  பேரிக்காயில் நிறைந்துள்ள சத்துக்களின் விவரம்(Nutritional values of pears)

  பேரிகாயில் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. சுமார் 178 கிராம் பேரிக்காயில் எவ்வளவு சத்துக்கள் உள்ளன என்பதை பற்றிய ஒரு சிறிய தகவல் இங்கே:

  • கலோரிகள்-1௦1
  • கொழுப்பு சத்து- ௦ கிராம்
  • கார்போஹைட்றேட்ஸ்-27 கிராம்
   (இதில் 17 கிராம் சர்க்கரையும் அடங்கும்)
  • புரத சத்து-1 கிராம்
   இந்த சத்துக்கள் மட்டுமல்லாது, பேரிக்காயில் மேலும் பல சத்துக்கள் நிறைந்துள்ளது. அவை
  • வைட்டமின் C, B6, மற்றும் K
  • பொட்டாசியம்
  • கால்சியம்
  • இரும்பு
  • மக்னேசியம்
  • ரிபோப்லவின்
  • போலேட்
   சிவந்த நிறத்தில் தோல் இருக்கும் பேரிக்காயில் அதிக அளவு காரோடேநாயட்ஸ், ப்லவோநோல்ஸ் மற்றும் அன்தொச்யநின்ஸ் நிறைந்துள்ளது. இது மட்டுமல்லாது இதில் செம்பு, போன்ற தாது சத்துக்களும் நிறைந்துள்ளது.

  பேரிக்காயின் வகைகள்(Types of pears)

  பேரிக்காய் உலகம் முழுவதும் பல நாடுகளில் உற்பத்தி செய்யப்படுகின்றது. மேலும் ஏற்றுமதி, இறக்குமதி காரணமாக பல வகை பேரிக்காய்கள் அனேக நாடுகளில் எளிதாக கிடைகின்றன. ஒவ்வொரு பேரிக்காய் வகிக்கும் ஒரு தனித்துவம் உள்ளது. அடிப்படையில் அவற்றில் நிறைந்திருக்கும் சத்துக்களில் பெரிதாக எந்த மாறுபாடுகளும் இல்லை என்றாலும், அதன் சுவையிலும், தோற்றத்திலும் மற்றும் அளவிலும் வேறுபாடுகள் இருக்கும். உலகம் முழுவதும், ஏறத்தாழ 3௦௦௦ வகை பேரிக்காய் வகைகள் உள்ளன. நீங்கள் அறிந்து கொள்ள இங்கே, அவற்றுள் சில வகைகள்:

  • பச்சை அஞ்சோ
  • சிவப்பு அஞ்சோ
  • பார்ட்லெட்
  • ரெட் பார்ட்லெட்
  • பாஸ்க்
  • கொமிஸ்
  • போறேல்லே
  • சேக்கேள்
  • ஸ்டார்கிம்சன்

  பல வகைகள் இருந்தாலும், உங்கள் ஊருகளில் கிடைக்கும் பேரிக்காய் குறைந்த விலையிலும், புதிதாகவும் கிடைக்கும்.

  pixabay

  ஏன் பேரிக்காய் சாப்பிட வேண்டும்(Reasons to eat pears)

  பல வகை பழங்கள் இருந்தாலும், பேரிக்காயை ஏன் குறிப்பிட்டு சாப்பிட வேண்டும்?
  இது ஒரு இயல்பான கேள்விதான். ஆனால் இதன் பதில், உங்களுக்கு சில சுவாரசியமான தகவல்களை கொடுப்பதோடு, பேரிக்காய் சாப்பிட வேண்டிய முக்கியத்துவத்தையும் புரிய வைக்கும். உங்களுக்காக, இங்கே சில காரணங்கள்

  • பேரிக்காயில் அதிக நார் சத்து நிறைந்துள்ளது
  • ஒரு பேரிக்காயில் 3௦ கிராம் வரையிலும் நார் சத்து நிறைந்திருக்கும். இது மல சிக்கலை போக்குவதோடு, ஜீரணத்தை சீர்படுத்தும்
  • இதில் வைட்டமின் C, K, B2, B3, மற்றும் B6 நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள்  பாலூட்டும் தாய்மார்களுக்கு மிகவும் தேவையான ஒன்று
  • இதில் கால்சியம், மக்னேசியம், பொட்டாசியம், செம்பு, மற்றும் மங்கனீஸ் ஆகிய தாது பொருட்கள் நிறைந்துள்ளது. இவை நோய் எதிர்ப்பு அமைப்பை நன்கு செயல்பட செய்ய உதவும்
  • இதில் போரோன் நிறைந்துள்ளது. அது உடலில் கால்சியத்தை தக்க வைக்க பயன்படுகின்றது
  • இதில் இருக்கும் தாவர ஊட்டசத்துக்கள், வயிற்றில் ஏற்படும் புற்றுநோயை தடுக்கவும், குணப்படுத்தவும் உதவும்
  • இது ஒவ்வாமை குறைவான பழம். அதனால் எந்த வித விளைவுகளையும் தராது. யார் வேண்டுமானாலும் பயம் இல்லாமல் உண்ணலாம்
  • ஒரு நாளைக்கு ஒன்றுக்கு மேல் இந்த பழத்தை உண்ணும் போது, வயது முதிர்வு அறிகுறிகளை போக்கி, இளமையான தோற்றத்தை பெற உதவும். மேலும் நல்ல சுறுசுறுப்பாகவும் இருக்க செய்யும்
  • இதில் ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளதால் புற்றுநோய், மற்றும் இரத்த கொதிப்பு போன்ற பிரச்சனைகளை தடுக்க உதவும்
  • இதில் கலோரிகள் மிக குறைவாக உள்ளதால், உடல் எடை அதிகரிக்கும் என்ற என்ன வேண்டாம் 
  • பெருங்குடல் அழற்சி, நாள்பட்ட பித்தப்பை கோளாறுகள், கீல்வாதம் மற்றும் கீல்வாதம்.ஆகிய பிரச்சனைகளைகுணப்படுத்த இது ஒரு பாரம்பரிய மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றது

  பேரிக்காயால் கிடைக்கும் உடல் நல பலன்கள்(Health benefits of pears)

  பேரிக்காயில் பல உடல் நல பலன்கள் நிறைந்துள்ளது. தினமும் இதில் ஒரு பழத்தை உண்டால், நிச்சயம் உங்கள் ஆரோக்கியம் அதிகரிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த பழத்தில் நிறைந்திருக்கும் பலன்களை பற்றி இங்கே பார்க்கலாம்

  நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

  பேரிக்காயில் அதிகம் ஆக்சிஜனேற்றம் மற்றும் வைட்டமின் C நிறைந்துள்ளதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இதனால் பல நோய்கள் வரவிடாமல் தவிர்க்கதால்.

  எலும்புப்புரை தடுக்கும்

  தற்போது பலர் பலவீனமான எலும்பு மற்றும் அது குறித்த பிரச்சனைகளை அதிகம் சந்திக்கின்றனர். இதனால் எலும்பின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது. எலும்புப்புரை போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்க pHயின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். மேலும் போதிய கால்சியம் உடலுக்குத் தேவை. இந்த பழத்தை தினமும் எடுத்துக் கொண்டால், அதிக கால்சியம் மற்றும் pH கிடைக்கும்.

  உடலில் சக்தியை அதிகரிக்கும்

  இதில் க்ளுகோஸ் அளவு அதிகமாக உள்ளது. அதனால், இந்த பழத்தை எடுத்துக் கொண்ட உடன், உடலில் தேவையான சக்தி கிடைகின்றது. இதனால் நீங்கள் சுறுசுறுப்பாக செயல் பட முடியும்.

  ஜீரணம்

  ஒரு பேரிக்காய் பழத்தில் 25% வரை நார் சத்து நிறைந்துள்ளது. இது கரையா நார் சத்து. அதனால் மல சிக்கல் ஏற்படுவதை தவிர்த்து, நல்ல ஜீரனத்தையும் உண்டாக்குகின்றது. இது மேலும் உடல் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த உதவுகின்றது.

  pixabay

  கர்ப்பிணி பெண்களுக்கு

  இந்த அபலத்தில் பாலிக் அமிலம் நிறைந்துள்ளது. அதனால் இதை கர்ப்பிணி பெண்கள் அதிகம் எடுத்துக் கொள்ளும் போது, குழந்தை பாதுகாப்பாகவும், நல்ல வளர்ச்சியையும் பெறுகின்றது. மேலும் மாதவிடாய் பிரச்சனைகளையும் இது போக்க உதவுகின்றது.

  சிறு குழந்தைகளுக்கு

  இந்த பழத்தில் ஒவ்வாமைத் தன்மை குறைவாக இருப்பதாலும், அமிலத்தன்மை குறைவாக இருப்பதாலும், ஜீரண பிரச்சனைகளை இது சரி செய்து விடும் என்பதாலும். இந்த பழத்தை குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இது குழந்தைகள் நல்ல ஆரோக்கியத்தோடு வளர பெரிதும் உதவும்.

  பித்தப்பை, பெருங்குடல் அழற்சி, கீல்வாதம், கீல்வாதம்

  பேரிக்காயில் பல சிறப்பான சத்துக்கள் நிறைந்துள்ளது. இந்த சத்துக்கள் உடலில் உண்டாகும் பல பிரச்சனைகளை போக்க உதவுகின்றது. குறிப்பாக, பித்தப்பை, பெருங்குடல் அழற்சி, கீல்வாதம், கீல்வாதம் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த பேரிக்காய் ஒரு சிறந்த மருந்தாகவே செயல்படுகின்றது.

  இரத்த அழுத்தம்

  பேரிக்காயில் எதிர்ப்பு புற்றுநோய் குளுதாதயோன் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் அதிக அளவு உள்ளது. இதனால் இது இரத்த அழுத்தத்தை குறைக்க அல்லது சீரான அளவில் வைத்துக் கொள்ள பெரிதும் உதவுகின்றது.

  சுரம்

  பேரிக்காவிற்கு குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ளதால், இது உடலில் வெப்பம் அதிகமாகும் போது, அதனை குறைத்து சீரான வெப்ப நிலையில் வைத்துக் கொள்ள உதவும். இதனால் குறிப்பாக சுரம் போன்ற உடல் உபாதைகள் உண்டாகாமல் தடுக்கலாம்.

  அழற்சி எதிர்ப்பு

  பேரிக்காவில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் அதிக அளவு உள்ளன. இதனால் இது மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துவதோடு, பல நன்மைகளையும் உடலுக்குத் தருகின்றது.

  சுவாச பிரச்சனையை போக்கும்

   கோடை காலத்தில் அதிக வெப்பம் உண்டாவதால், பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு சுவாச பிரச்சனைகள் உண்டாக வாய்புகள் அதிகம் உள்ளது. ஆனால், பேரிக்காய் உடலுக்கு குளிர்ச்சியை தந்து உடல் சூட்டை குறைக்க உதவுவதால், இத்தகைய பிரச்சனைகளை போக்க முடியும்.

  pixabay

  தொண்டையில் பிரச்சனை

  கோடை காலங்களில் தொண்டையில் பிரச்சனைகள் ஏற்பட வாய்புகள் அதிகம் உள்ளது. இந்த் சமயங்களில் தினமும் பேரிக்காய் சாறு செய்தோ அல்லது அப்படியேவோ சாப்பிட்டால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, தொண்டையில் இருக்கும் பிரச்சனைகள் குணமாகும்.

  நார் சத்து

  பேரிக்காயில் நார் சத்து நிறைந்துள்ளது. இது உடல் ஆரோக்கியத்திற்கு மிக முக்கியமான ஒன்று. குறிப்பாக பெண்களுக்கு நார் சத்து அதிக அளவு தேவைப் படுகின்றது. இது உடலில் இருக்கும் ஜீரண பிரச்சனை, மல சிக்கல், குடல் புண் போன்ற பிரச்சனைகளை குறைக்க மற்றும் தடுக்க உதவுகின்றது.

  டைவேர்டிகிலோசிஸ் (diverticulosis)

  பெரிய குடலில் உள்ள புரணியில் வீக்கம் உண்டானால், அதை  டைவேர்டிகிலோசிஸ் என்பார்கள். இதை குணப்படுத்த அதிக நார் சத்து தேவைப்படுகின்றது. மேலும் அதிக நீர் சத்தும் தேவைப்படுகின்றது. பேரிக்காயில் இந்த இரண்டும் அதிக அளவு உள்ளது. அதனால், தினமும் பேரிக்காய் சாப்பிடும் போது, அத்தகைய பிரச்சனைகளை போக்கலாம்.

  உடல் எடை குறைப்பு

  பேரிக்காயில் அதிக நார் சத்து உள்ளது. இதில் கொழுப்பு சத்தும், கலோரிகளும் மிகக் குறைவாக உள்ளது. அதனால், உடல் பருமனாக இருப்பவர்கள், இந்த பழத்தை தினமும் எடுத்துக் கொண்டால், அதிக நார் சத்து கிடைத்து, உடல் பருமன் குறைய அதிக வாய்ப்புகள் உள்ளன.

  இருதய ஆரோக்கியம்

  பேரிக்காயில் கொழுப்பு சத்து மிக குறைந்த அளவே உள்ளது. மேலும் இதில் நார் சத்தும், ஆக்சிஜனேற்றமும் அதிக அளவு உள்ளது. இது இருதயத்தின் ஆரோக்கியத்தை அதிகப்படுத்த உதவும்.

  கொழுப்பை குறைக்கும்

   குறிப்பாக வயிற்று பகுதி மற்றும் குடலில் இருக்கும் கொழுப்பை விரைவாக கரைக்க இந்த பேரிக்காய் பழம் பெரிதும் உதவுகின்றது. இது உடலில் இருக்கும் மொத்த தீங்க தரக்கூடிய கொழுப்பை விரைவாக கரைக்க உதவும்.

  நீரழிவு நோய்

  இது இன்று பல மக்களை அச்சுறுத்தும் நோயாக உள்ளது. இந்த நோயை குணப்படுத்த அதிக நார் சத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இது நீரழிவு நோயின் தாக்கத்தை குறைக்க உதவும். அதனால் தினமும் பேரிக்காயை எடுத்துக் கொள்வதால், நீரழிவு நோயின் பிரச்சனைகளை குறைக்கலாம்.

  நச்சை நீக்கும்

  பேரிக்காயில் 84% நீர் சத்து நிறைந்துள்ளது. இது மல சிக்கலை போக்க பெரிதும் உதவும். மேலும் நீர் சத்து அதிகம் உள்ளதால், உடலில் இருக்கும் அசுத்தங்களை போக்கவும் இது உதவும். இதனால் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.

  ப்ரீ ராடிகல்ஸ்

  பேரிக்காவில் அதிக அளவு ஆக்சிஜனேற்றம் இருப்பதாலும், வைட்டமின் C மற்றும் K மற்றும் செம்பு இருப்பதாலும், ப்ரீ ராடிகல்ஸ்சை குறைத்து, உயிர் அணுக்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகின்றது.

  குடல் ஆரோக்கியம்

  பேரிக்காவில் கரையும் மற்றும் கரையா நார் சத்து நிறைந்துள்ளது. இவை இரண்டும் நல்ல ஜீரணத்திற்கு பெரிதும் தேவை. மேலும் இது மலமிளக்கியாகவும் செயல்படுகின்றது. இதனால் குடலில் எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்க இது உதவுகின்றது.

  பலன் தரும் தாவர கலவைகள் நிறைந்துள்ளது

   பேரிக்காவில் அதிக அளவு பலன் தரும் தாவர கலவைகள் நிறைந்துள்ளது. இவை உடல் நல்ல ஆரோக்கியத்தோடு இருக்க பெரிதும் தேவைப்படுகின்றது. மேலும் இந்த தாவர கலவை உடலுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்களையும் தருகின்றது.

  pixabay

  பேரிக்காய் மற்றும் உடல் எடை(Pears and weight loss)

  இன்று பெரும்பாலான மக்கள் அதிக உடல் எடையால் அவதிப்படுகின்றனர். இதனால் அவர்களது வாழ்க்கை பாதிக்கப்படுவதோடு, பல பிரச்சனைகளும் உடலில் உண்டாகின்றது. குறிப்பாக, நீரழிவு நோய், இரத்த அழுத்தம், இருதய நோய், மூட்டு வலி, அதிக கொழுப்பு சத்து என்று மேலும் பல.
  பேரிக்காய் எப்படி உங்கள் உடல் எடையை குறைக்க உதவுகின்றது என்று இங்கே பார்க்கலாம்

  • இந்த பழத்தில் கலோரிகள் மிகக் குறைந்த அளவே உள்ளது, அதனால் இதை அவ்வளவு எடுத்துக் கொண்டாலும், உங்கள் உடல் எடையை இது அதிகரிக்காது
  • இயற்கை சர்க்கரை. சர்க்கரை என்றாலே மக்கள் இன்று பெரும்பாலும் பயன்படுத்துவதை வெகுவாக குறைத்துக் கொண்டனர். ஆனால், பேரிக்காயில், இயற்கை சர்க்கரை குறைந்த அளவு உள்ளது. இது உடலுக்கு பாதுகாப்பானதும் கூட. அதனால், உங்கள் உடல் எடையை இது பாதிக்கும் வகையில் இருக்காது
  • நார் சத்து. பேரிக்காயில் கரையும் மற்றும் கரையா நார் சத்து அதிகம் உள்ளது. இந்த நார் சத்து குடல் ஆரோக்கியம், நல்ல ஜீரணம், என்று பல நன்மைகளை தருகின்றது. இதுவே உடல் எடை குறைய ஒரு முக்கிய காரணமாகவும் உள்ளது
  • பேரிக்காயில் அதிக நீர் சத்தும் நிறைந்துள்ளது. இதனால் உடலுக்குத் தேவையான நீர் கிடைப்பதால், உடல் எப்போதும் சக்தி நிறைந்து, புத்துணர்ச்சியோடு உள்ளது. இதனால் நீங்கள் உடல் எடையை குறைக்க உடற்பயிச்சி செய்தாலும், சக்தியோடு காணப்படுவீர்கள்
  • உங்கள் உணவு கட்டுபாட்டிற்கு இது ஏற்ற பழம். நீங்கள் தினமும் உண்ணும் உணவில் சில கட்டுபாடுகளை கொண்டு வர எண்ணினால், அதில் இந்த பழத்தை தினசரி உணவு பட்டியலில் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் உடல் எடையை குறைக்கத் தேவையான அத்தனை பண்புகளும் இதில் நிறைந்துள்ளது 

  பேரிக்காயும் சரும ஆரோக்கியமும்(Pears and skin health)

  பேரிக்காய் உடல் நலத்திற்கு மட்டுமல்லாது, உங்கள் சரும ஆரோகியத்தையும் அதிகப்படுத்த உதவுகின்றது. இதனால் நீங்கள் நல்ல அழகான, மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம். எப்படி இந்த பேரிக்காய் உங்கள் சரும ஆரோக்கியத்திற்கு உதவுகின்றது என்று இங்கே பார்க்கலாம்;

  சருமம் சேதம் அடைவதை தடுக்கும்

  பேரிக்காவில் அதிகம் நார் சத்து இருப்பதால், இது சருமத்தை மிருதுவாகவும், மென்மையாகவும் வைத்துக் கொள்ள உதவுகின்றது. இரத்த ஓட்டத்தில் இருந்து சர்க்கரை வெளியேறுவதை குறைத்து, சருமத்தில் சேதம் ஏற்படுவதை தடுக்கின்றது. இதனால் சருமம் நல்ல ஆரோக்கியத்தோடு இருகின்றது.

  சுருக்கங்களை போக்கும்

  தினமும் பேரிக்காவை எடுத்துக் கொண்டால், இது சருமம் முதிர்வடையும் தோற்றத்தை போக்கும். குறிப்பாக முகத்தில் தோன்றும் மெல்லிய கோடுகள் மற்றும் சுருக்கங்கள் மறையும். இதனால் உங்கள் முகமும், சருமமும் இளமை தோற்றத்தைப் பெரும்.

  சருமத்தில் எண்ணை பிசுக்கை போக்கும்

  பலருக்கும் சருமத்தில் அதிக எண்ணை உண்டாவதால், பிசுபிசுப்புத் தன்மை அதிகரிகின்றது. இதனால், சருமம் புத்துணர்ச்சியை இழக்கின்றது. நீங்கள் பெரிக்காவை சரும ஆரோக்கியத்திற்கு முறையாக பயன்படுத்தும் போது, அத்தகைய பிரச்சனைகள் குறையும்.

  முகப்பருக்களை போக்கும்

  பெண்களுக்கு அதிக முக பருக்கள் பல்வேறு காரணங்களால் உண்டாகின்றது. இது பல சிரமங்களை உண்டாக்குவதோடு, முக அழகையும் பாதிக்கின்றது. பேரிக்காய் நல நிவாரணியாக செயல்படுகின்றது, இதில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள், முகப்பருக்கள் மற்றும் தழும்புகளை போக்க உதவுகின்றது.

  சருமத்தில் ஈரத்தன்மையை அதிகப்படுத்தும்

  பேரிக்காய் எண்ணை பிசுக்கை போக்க மட்டும் பயன்படுவதில்லை, மேலும் சருமத்தில் இயற்க்கையான ஈரத்தன்மையை தக்கவைக்கவும் உதவுகின்றது. இதனால், சருமம் வறண்டு போகாமலும், தோல் உரிதல் ஏற்படாமலும் பாதுகாகின்றது. இது முக அழகையும் அதிகப்படுத்த உதவுகின்றது.

  pixabay

  இயற்க்கை ஸ்க்ராப்பர்

  பேரிக்காய் ஒரு நல்ல இயற்க்கை ஸ்க்ராப்பராகவும் செயல்படுகின்றது. இதனை முறையாக முகத்திற்கு பயன்படுத்தினால், சருமத்தில் இருக்கும் அழுக்கு, தூசு, கிருமிகள் போன்றவற்றை போக்க உதவுகின்றது. இதனால் சருமம் நல்ல தெளிவான தோற்றத்தைப் பெறுகின்றது.

  உதடுகளை குணப்படுத்துகின்றது

  பேரிக்காயில் இருக்கும் லாக்டிக் அமிலம் மற்றும் பிற சத்துக்கள், குறிப்பாக நீர் சத்து, உதடுகளை எப்போதும் நல்ல ஈரத்தன்மையோடு வைத்துக் கொள்ள உதவுகின்றது. இதனால் உதடுகள் மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும் காணப்படுகின்றது.

  பேரிக்காய் பேஸ் பாக்(pears face pack)

  நீங்கள் வீட்டிலேயே பேரிக்காய் பேஸ் பாக்கை செய்து பயன்படுத்தலாம். இது மிகவும் எளிமையானதாகவும், உடனடி பலனைத் தரக்கூடியதாகவும் இருக்கும். எப்படி பேஸ் பாக் செய்வது என்று இங்கே பார்க்கலாம்:

  செய்முறை 1

  • தேவையான அளவு பேரிக்காயை எடுத்துக் கொள்ளவும்
  • இதனை மசித்து பசை போல செய்து கொள்ளவும்
  • இதனுடன் இரண்டு தக்கரண்டி தேங்காய் பால் சேர்த்துக் கொள்ளவும்
  • பின் இதனுடன் தேவையான எண்ணை சேர்த்துக் கொள்ளவும்
  • சிறிது எலுமிச்சை பழச்சாற்றை சேர்த்துக் கொள்ளவும்
  • இவை அனைத்தையும் நன்கு கலந்து முகத்தில் தேய்த்து மசாஜ் செய்யவும்
  • பின் சிறிது நேரம் கழித்து மிதமான சுடு நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்

  செய்முறை 2

  • தேவையான அளவு பேரிக்காய் பழத்தை எடுத்துக் கொள்ளவும்
  • இதனை நன்கு மசித்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது தேன் சேர்த்து கலந்து கொள்ளவும்
  • இந்த கலவையை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்யவும்
  • பின் சிறிது நேரம் விட்டுவிட்டு பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்

  செய்முறை 3

  • தேவையான அளவு பேரிக்காய் எடுத்துக் கொண்டு மசித்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது பச்சை அரிசி மாவு சேர்த்துக் கொள்ளவும்
  • சிறிது பால் சேர்த்துக் கொள்ளவும்
  • இவை அனைத்தையும் நன்கு கலந்து கொள்ளவும்
  • பின் முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்
  • சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு பின் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விடவும்

  பேரிக்காய் மற்றும் தலைமுடி ஆரோக்கியம்(Pears and hair health)

  பேரிக்காய் உங்கள் தலை முடி நல்ல ஆரோக்கியமாக வளரவும் உதவுகின்றது. இதில் நிறைந்திருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள், தலை முடி நன்கு வளருவதற்கான சத்துக்களைத் தருகின்றது. அதனால், தலைமுடி அடர்த்தியாகவும், நல்ல ஆரோக்கியத்தோடும் வளருகின்றது. பேரிக்காய் எப்படி தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகின்றது என்று இங்கே பார்க்கலாம்.

  சுருள் முடியை பராமரிக்க உதவுகின்றது

  சுருள் முடியை பராமரிப்பது என்பது ஒரு சவால் நிறைந்த விடயமாக இருக்கும். எனினும், பேரிகை இதை உங்களுக்கு எளிமையாக்கும். சிறிது பேரிக்காயுடன், சோய்பீன் எண்ணை சேர்த்து மசித்துக் கொண்டு, தலை முடியில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து தலைமுடியை அலசி விட வேண்டும். இப்படி செய்தால், சுருள் முடி குறைந்து நல்ல நிறத்துடனான அழகான கூந்தளை நீங்கள் பெறலாம்.   

  தலை முடிக்கு போஷாக்குத் தருகின்றது

  பேரிக்காயில் சிறந்த பல நற்குணங்கள் உள்ளது. இது தலைமுடி நல்ல ஆரோக்கியத்தோடு வளரவும், போஷாக்குடன் இருக்கவும் உதவுகின்றது. குறிப்பாக இதில் இருக்கும் இயற்க்க சர்க்கரை மற்றும் நீர் சத்து தலை முடி எப்போதும் நல்ல பலபலப்போடும், ஈரத்தன்மையோடும் இருக்க உதவுகஈன்றது.

  pixabay

  வறட்சியை போக்கும்

  பலருக்கும் தலை முடி வறண்டு இருப்பது மிகுந்த சிரமத்தை உண்டாக்குகின்றது. இது கூந்தலின் அழகை பெரிதும் பாதிக்கின்றது. எனினும், பேரிக்காயில் வைட்டமின் C சத்து அதிகம் உள்ளதாலும், ஆக்சிஜனேற்றம் நிறைந்திருப்பதாலும், உங்கள் தலை முடி எப்போதும் ஆரோக்கியத்தோடு இருக்க இது உதவுகின்றது. இதனால், வறட்சி குறைகின்றது.

  சிக்குகளை போக்குகின்றது

  தலைமுடியில் அதிகம் சிக்குகள் ஏற்படுவதால், முடி உதிரவும் அதிகமாகக் கூடும். இதனால் கூந்தலின் அடர்த்தி பாதிக்கப்படுகின்றது. இதனை தடுக்க, பேரிக்காய் பெரிதும் உதவுகின்றது. இதை முறையாக தலைமுடி ஆரோக்கியத்திற்கு பயன்படுத்தும் போது, எளிதாக சிக்குகளை போக்கி, நல்ல அழகான கூந்தலைப் பெற உதவுகின்றது.

  நல்ல பொலிவைப் பெற உதவும்

  பேரிகாவை, ஆப்பிள் சிடார், தண்ணீர்  மற்றும் வினிகர் போன்றவற்றுடன் சேர்த்து கலவை போல செய்து, உண்டல் தலைமுடியில் தேய்த்து, சிறிது நேரம் கழித்து அலசி விட வேண்டும். இப்படி செய்தால், உங்கள் தலைமுடி இழந்த பொலிவை மீண்டும் பெறுவதோடு, நல்ல ஆரோகியத்தையும் பெரும்.

  கேள்வி பதில்கள்(FAQ)

  பேரிக்காய் சரும ஆரோக்கியத்திற்கு நல்லதா?

  நிச்சயம் நல்லது. பேரிக்காயில் நிறைந்திருக்கும் சத்துக்கள், உங்கள் சருமதிற்குத் தேவையான சக்தியை தருகின்றது. இதனால் உங்கள் சருமம் நல்ல பொலிவையும், புத்துணர்ச்சியையும் பெறுகின்றது. மேலும், இது இளமையான தோற்றத்தைப் பெறவும் உதவுகின்றது.

  ஒரு நாளைக்கு எத்தனை பேரிக்காய் சாப்பிடலாம்?

  ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு பேரிக்காய் சாப்பிடலாம். ஒரு பேரிக்காயில் 25% நார் சத்து நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின் C சத்து அதிக அளவு உள்ளது. அதனால், இது உங்கள் உடலுக்கு தேவையான சத்துகளை தருகின்றது.

  உடல் எடையை குறைக்க பேரிக்காய் ஏற்ற பழமா?

  ஆம். பேரிக்காவில் இருக்கும் நீர் சத்து, நார் சத்து மற்றும் குறைந்த கலோரிகள் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது. மேலும் இது ஜீரணத்தை சீர் படுத்துவதாலும், மல இலக்கியாக செயல்படுவதாலும், இது மேலும் உடல் எடையை சீராக வைத்துக் கொள்ள உதவுகின்றது.

  பேரிக்காயில் அதிக சர்க்கரை உள்ளதா?

  பேரிக்காயில் இயற்கையான சர்க்கரை சீரான அளவே உள்ளது. மேலும் இது உடலுக்கு தேவையான மற்றும் நன்மைத் தரக்கூடிய சர்க்கரையே. இது உடலுக்கு எந்த விதத்திலும் தீங்கு தராது. அதனால், நீங்கள் பேரிக்காயை நம்பிக்கையோடு உண்ணலாம்.

  எது சிறந்தது பேரிகை அல்லது ஆப்பிள்லா?

  இரண்டிற்கும் அதற்கான தனித்துவத்தோடு, சத்துக்கள் நிறைந்துள்ளது. எனினும், ஆப்பிள் பழத்தை ஒப்பிட்டு பார்க்கும் போது, பலருக்கும் பேரிக்காயே சிறந்த தேர்வாக இருக்கும். இதில் நார் சத்து அதிகம் இருப்பதும், ஆக்சிஜினேற்றம் அதிகம் இருப்பதாலும், விலை மலிவாகவும், எளிதாகவும் கிடைப்பதாலும் இது ஒரு நல்ல தேர்வாக இருக்கும்.

  யாரெல்லாம் பேரிக்காய் பழத்தை சாப்பிடலாம்?

  இது அனைவருக்கும் ஏற்ற பழமாகும். எனினும், குறிப்பாக கர்ப்பிணி பெண்கள், சிறு பால்குடி குழந்தைகள் மற்றும் உடல் எடையை குறைக்க எண்ணுபவர்கள் இதனை அதியம் எடுத்துக் கொள்ளலாம்.

  எப்போது பேரிக்காய் சாப்பிடலாம்?

  இதற்கென்று தனியாக நேரம் கிடையாது. நீங்கள் எப்போது வேண்டும் என்றாலும் பேரிக்காயை சாப்பிடலாம். எனினும், காலை வேளையில், அல்லது மாலை நேரத்தில் இதனை சாப்பிடலாம்.

  பேரிக்காயை தோல் நீக்கி விட்டு சாப்பிட வேண்டுமா?

  நீங்கள் தோலுடன் பேரிக்காயை சாப்பிடலாம். இப்படி செய்யும் போது மேலும் சத்துக்கள் கிடைக்கும். எனினும், தூசி போன்று ஏதாவது மேலே படிந்திருக்கும் என்பதால், நன்கு சுத்தமாக கழுவி விட்டு சாப்பிடலாம்.

  பட ஆதாரம்  - Pixabay, Shutter Stock

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது!ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!