எதிர்காலக் கனவுகள் எல்லாம் நிறைவேறப் போகும் அதிர்ஷ்ட ராசி யாருடையது என்று பார்த்து விடுங்க

எதிர்காலக் கனவுகள் எல்லாம் நிறைவேறப் போகும் அதிர்ஷ்ட ராசி யாருடையது என்று பார்த்து விடுங்க

இன்று திங்கள் கிழமை சித்திரை நட்சத்திரம் துவிதியை திதி. புரட்டாசி மாதம் 13ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள். சிவவழிபாடு சுபம் தரும்.

மேஷம்

சில விஷயங்கள் உடனே நடக்க வேண்டும் என அதிக அழுத்தம் கொடுக்கிறீர்கள். ஆனால் அது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும். இருந்தாலும் உங்கள் அவசரம் அதை முடிக்க சொல்கின்றது. குடும்ப உறுப்பினர்கள் பக்க பலமாக இருப்பார்கள். நல்ல தெளிவான முடிவை இன்று காண்பீர்கள்.

ரிஷபம்

எதிர்காலத்தை குறித்து நீங்கள் வைத்திருக்கும் கனவு மிகப்பெரியது. நீங்கள் கானும் பகல் கனவு நிறைவேறும் போது மிகுந்த சந்தோஷத்தினை அடைகின்றீர்கள்

மிதுனம்

சூழ்நிலைகளை பற்றி கவலைப்படாமல் உங்கள் வாழ்க்கைக்கு எது முக்கியம் என்பதில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடைந்த ஆசீர்வாதங்களை பற்றி நினையுங்கள். இந்த தருணத்தை கடக்க அது உதவும்.

கடகம்

வெளிக் காரணங்கள் காரணமாக வேலை தாமதமாக நடக்கும். கூட்டம் ஈமெயில் போன்ற எதாவது ஒன்றில் தாமதம் இருக்கும். ஆனால் அதே சமயம் எல்லாமே உங்களுக்கு சாதகமாக முடியும். புதிய ஐடியாக்களை கொண்டு வருவதில் சுறுசுறுப்பாக செயல் படுவீர்கள். திடீரென பயணங்கள் அமையும் அல்லது குடும்ப ஆசைகளை நிறைவேற்றுவீர்கள்.

சிம்மம்

பணியில் நல்ல விஷயங்கள் நடந்தாலும் நீங்கள் மன ரீதியாக குறைவாக உணர்வீர்கள். கெட்டதை நினைத்து கவலைப்படுவீர்கள் அல்லது உங்கள் சுய பாதுகாப்பின்மையை நினைத்து பயப்படுவீர்கள்.குடும்ப வாழ்க்கை நிலையானதாக இருக்கும். ஆனால் அவ்வப்போது நீங்கள் விளிம்பில் இருக்கிறீர்கள் என்பதால் தாமதமாக குடும்ப விஷயங்களை செட்டில் செய்வீர்கள்.மற்றவர்ர்களை சந்திக்க விரும்ப மாட்டீர்கள்.

கன்னி

உங்கள் திட்டங்கள் உடையலாம். நிலுவையில் வேலைகளை முடிப்பதில் சமநிலை மாறி போகலாம். அலுவலக அழுத்தங்களை வீட்டுக்கு கொண்டு வராதீர்கள். வீட்டில் இருப்பவர்களிடம் மனம் விட்டு பேசுவது உங்களுக்கு தெளிவை கொடுக்கும்.குடும்ப சிக்கல்களுக்கு வழி கிடைக்கும். பொறுமை கடைபிடிக்கவும்.

துலாம்

நீங்கள் உங்களை போலவே இருக்கும் பிற நபர்களை கண்டறிந்து நேற்றை விட இன்று நன்றாக உணரலாம் . நீங்கள் உங்கள் எண்ணங்களையும் செயல்களையும் ஒன்றிணைக்க வேண்டும். உங்கள் கண்களை கவனித்துக் கொள்ளுங்கள். நீங்கள் சில கடமைகளில் கலந்து கொள்ள வேண்டி இருப்பதனால் குடும்ப வாழ்க்கை பரபரப்பாக இருக்கும். ஒரு நண்பர் வாழ்க்கையை பற்றி தெளிவு பெற உங்களிடம் திரும்பலாம் .

விருச்சிகம்

விளைவு என்னவாக இருந்தாலும் நீங்கள் வேளையில் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். புதிய யோசனைகள் மற்றும் வாய்ப்புகள் உள்ளது ஆனால் எதிலும் அவசரம் வேண்டாம். நிதி ரீதியாக நன்மை பயக்கும் வேலை வர உள்ளது. பணியில் மூத்தவர்களிடமிருந்து ஆலோசனைகள் எடுங்கள். மாலையில் அன்பானவர்களுடன் செலவழிக்கப்படும்.

தனுசு

நீங்கள் கடந்த காலத்தில் யாரோ ஒருவர் மீது எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கலாம். அவர்கள் இன்னும் உங்களை அப்படித்தான் நினைக்கிறார்கள் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால் நேர்மறை ஆக இருங்கள் , ஏனெனில் இந்த நபர் உங்களை உண்மையில் வெறுக்கவில்லை.

மகரம்

இது பரிசுகள் வாங்க மற்றும் கொடுக்கும் நேரம். தகுதியான ஒரு நபருக்கு நீங்கள் பரிசுகள் கொடுக்கலாம். அது அவருக்கு உதவியாக இருக்கலாம் அவரை பாராட்டுவதற்காக இருக்கலாம் அல்லது உண்மையான பரிசாகக் கூட இருக்கலாம்.அதே போல இதுநாள் வரை உங்களுக்குத் தரப்பட்ட பரிசுகளுக்காக நீங்கள் நன்றியுடன் இருங்கள்.

கும்பம்

நீங்கள் எதிர்பார்த்ததை விட பணியில் இன்று ஒரு மிகப்பெரிய முன்னேற்றம் நடக்கும். அதாவது புகழை தேடி தரக்கூடிய மிகப்பெரிய நாளாக இன்று இருக்கும். உங்கள் காரியங்கள் அனைத்தும் இன்று கைகூடி வரும். குடும்ப வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சி காத்திருக்கின்றது. நண்பர்களின் ஆதரவு அதிகம் கிடைக்கும்.

மீனம்

நீங்கள் பணியில் கவனம் செலுத்த வேண்டும் மற்றும் தனிப்பட்ட முறையில் விஷயங்களை எடுத்து நிறுத்த வேண்டும். இன்றைய தினம் முன்னேறுவதைத் தடுக்க சில பிரச்சணைகள் வரும். வேலை மெதுவாக இருக்கும் ஆனால் நிலுவையிலுள்ள திட்டங்களை திட்டமிட்டு மறுகட்டமைக்கும் நேரம் இது. உங்கள் கண்களையும் தொண்டையையும் கவனித்துக் கொள்ளுங்கள். மற்றவர்களின் உணர்ச்சியின் காரணமாக குடும்ப வாழ்க்கை வியத்தகு அளவில் இருக்கும்.

Predicted by astro ashah shah

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!