வாழ்க்கை சலிப்பாக இருக்கிற அந்த ராசிக்காரர்களுக்கான தீர்வு என்ன தெரியுமா? படியுங்கள்

வாழ்க்கை சலிப்பாக இருக்கிற அந்த ராசிக்காரர்களுக்கான தீர்வு என்ன தெரியுமா? படியுங்கள்

இன்று அமாவாசை திதி உத்திர நட்சத்திரம் புரட்டாசி மாதம் 11ம் நாள். இன்று முன்னோர் தர்ப்பணம் செய்வது நலன் தரும். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்

வேலை மெதுவாக இருக்கும், ஆனால் சுகாதாரம் மற்றும் குடும்ப வாழ்க்கைக்கு முன்னுரிமை கொடுங்கள். குடும்ப அங்கத்தினர்களுடன் உராய்வு அல்லது மோதல் இருந்தாலும் மாலையில் அது தீர்ந்துவிடும்,உங்கள் நோக்கங்களில் தெளிவாக இருங்கள்.

ரிஷபம்

பலவீனத்தை சாதகமாக பயன்படுத்திக்கொள்பவர்களிடமிருந்து விலகியிருங்கள். இன்று சோதனைகள் பல வந்தாலும் கட்டாயம் வெற்றி கிடைக்கும். சோதனையான சூழ்நிலை இன்று சாதகமாக மாறும். பயம் கவலை வேண்டாம். அனைத்தையும் சாதிக்கும் திறன் உங்களிடம் இருக்கின்றது.

மிதுனம்

வெற்றியை உங்களோடு தக்க வைத்துக் கொள்ளுங்கள். உங்களது கடின உழைப்பு மற்றும் அதன் பலன்களை நீங்கள் பாதுகாக்க வேண்டியது அவசியம்.வேறு யாரோ ஒருவர் உங்கள் பெயரைத் தட்டிக் கொண்டு போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதுமட்டும் அல்ல வேறு யாரிடமும் உங்கள் தொழில் ரகசியங்களைக் கூறாதீர்கள்.

கடகம்

உங்களுக்கு சலிப்பாக இருக்கலாம். இந்த பாதையில் நீங்கள் நீண்ட காலம் போய்க் கொண்டிருக்கிறீர்கள் என்றதால் நீங்கள் இதை எதற்கு தொடங்கினீர்கள் என்பதை மறந்திருக்கலாம். அதை மனதில் வைத்தீர்கள் என்றால் இந்த செயல்முறை எளிதாகும்.

சிம்மம்

நீங்கள் இன்னும் சீரான நிலையில் இருக்க வேண்டும், உங்கள் இதயத்தை பின்பற்ற வேண்டும். எல்லா மக்களையும் நம்பிவிடாதீர்கள். வேலை நிலையானதாக இருக்கும், ஆனால் உன்னுடைய கடின உழைப்பில் இன்னும் சந்தோஷமாக இருக்க மாட்டாய். உங்கள் மீது கடுமையாக இருக்காதீர்கள். நிதி ஓட்டம் நன்றாக இருக்கும் மற்றும் நீங்கள் அன்பானவர்களுடன் வெளியில் சென்று வருவீர்கள் . சமூக வாழ்க்கை பின் தங்கும்.

கன்னி

உங்களுக்கு இது ஒரு அமைதியான நாள். எல்லாவற்றிற்கும் மேலாக நீங்கள் களிப்புடன் உணரலாம் அல்லது கவலையாக இருக்கலாம். வேலை நிலையானதாக இருக்கும், ஆனால் குடும்ப உறுப்பினர்கள் உங்களை சில விஷயங்களில் இழுப்பார்கள் , இன்று உங்களிடமிருந்து எதிர்வினை வராது. மாலை ஒரு புத்தகத்தை படித்து, உடற்பயிற்சி அல்லது மன அழுத்தத்தை குறைக்க வேண்டும். இது உங்களுக்கு உதவும்.

துலாம்

வேலை கடுமையாக இருந்தாலும் பலன் தருவதாக இருக்காது.முடிவெடுக்க முடியாமல் திணறுவீர்கள். தெளிவு வரும்வரை காத்திருங்கள்.நீங்கள் எந்த முடிவை எடுத்தாலும் மக்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.குடும்ப உறுப்பினர்கள் புரிந்து கொள்வார்கள். ஆனால் குடும்ப கவலைகள் உங்களை அழுத்தலாம்.அடுத்தவர் பிரச்னைகளை உங்கள் தலையில் போட்டுக் கொள்ள வேண்டாம்.

விருச்சிகம்

வேலை நிலையானதாக இருந்தாலும் பணப்பற்றாக்குறை காரணமாக வருத்தப்படுவீர்கள். நிலுவையில் உள்ள வரவுகளை பெற முயற்சிப்பீர்கள். உடன் பணிபுரிபவர்களுடன் உரசல் மற்றும் பழிகளை தவிருங்கள்.உங்கள் தொண்டையையும் வயிற்றையும் கவனித்து கொள்ளுங்கள். அலுவலக நண்பர்களோடு நேரம் செலவழியுங்கள்.

தனுசு

வேலை உங்கள் கவனத்தை எடுத்து கொள்ளும். நிறைய meeting இருக்கலாம். மற்றவர்கள் பற்றி அவசரகதியில் எந்த முடிவும் எடுக்க வேண்டாம். உடன் பணிபுரிபவர் உங்கள் உதவியை நாடலாம். அதிக வேலை நேரம் உங்கள் குடும்ப நேரத்தை ஈர்த்து கொள்ளும். ஆனாலும் நண்பர்களோடு விஷேசங்களில் கலந்து கொள்வீர்கள்.

மகரம்

உங்களை நீண்ட காலமாக தொந்தரவு செய்து கொண்டிருந்த சில பிரச்னைகள் சரியாகும். பரிசுத்தமான தெய்வீகத்தின் பேரருள் தற்போது உங்கள் மீது பொழிய தொடங்கி உள்ளது. நன்றியோடு இருங்கள்.

கும்பம்

உங்கள் பிராத்தனைகளும் பதில் கிடைக்கும் நேரம் இது. உங்கள் முயற்சியை கைவிடாதிருங்கள். கூடிய விரைவில் நல்லது நடக்கும்

மீனம்

வேலை செய்யும் இடத்தில் சாதகமான சூழ்நிலை தொடர்ந்து ஏற்படும். ஆனாலும் சில போட்டிகள் அவ்வப்போது வந்து போகும். ஆனால் இதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். குடும்பத்தில் மந்தமாக சூழ்நிலை நிலவும். குடும்ப உறுப்பினர்கள் உங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களை காயப்படுத்துவார்கள். ஆனால் நீங்கள் சிறிது நேரம் பொறுமை காத்தால் அனைத்தும் நன்றாக முடிவு பெறும்.

Predicted by astro ashah shah

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!