கிரகங்கள் பார்வையால் நன்மை கிடைக்கப்பெறும் ராசிக்காரர்கள் : உங்கள் ராசியும் இருக்கிறதா?

கிரகங்கள் பார்வையால் நன்மை கிடைக்கப்பெறும் ராசிக்காரர்கள் : உங்கள் ராசியும் இருக்கிறதா?

இன்று செவ்வாய் கிழமை தசமி திதி புனர்பூசம் நட்சத்திரம். புரட்டாசி மாதம் 7ம் தேதி. இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை (astro) சரிபாருங்கள்.

மேஷம்

வேலை நிலையானதாக இருக்கும். அலுவலகத்தில் உடன் இருப்பவர்களுடன் பிரச்சனைகள் வேண்டாம். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.  முக்கிய விஷேசங்களுக்கு செல்வீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். நினைத்ததை முடிமுக்கியக்கும் நாள்.  

ரிஷபம்

மகிழ்ச்சியான செய்தி உங்களை தேடி வரும். அலுவலகத்தில் சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பார்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதைத் தவிர்க்கவும். மாலையில் குடும்பத்துடன் உறவினர், நண்பர்கள் வீட்டுக்குச் சென்று வருவீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஒத்துழைப்புத் தருவார். உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

இயற்கை மருத்துவம் : வயிற்றுக்கு இதமளிக்கும் ஓமத் திரவத்தின் நன்மைகளை அறிவோம்!

மிதுனம்

ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் அலைச்சலும், சிறுசிறு ஏமாற்றமும் வந்து நீங்கும். உறவினர்கள் வருகையால் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை அனுகூலமாக முடியும். எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும், சுபச் செலவாக இருக்கும் என்பது ஆறுதல் தரும். உத்யோகத்தில் சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்.  

கடகம்

அலுவலகத்தில் பணிச்சுமை குறைவதால் உற்சாகமாகக் காணப்படுவீர்கள். சிலருக்கு தாய்வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். எனினும் குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துப்போகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சித்து பேச வேண்டாம்.நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். 

சிம்மம்

புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். உங்கள் யோசனையை குடும்பத்தினர் ஏற்றுக்கொள்வார்கள். அலுவலகத்தில் சக ஊழியர் களின் பணிகளில் உதவி செய்து உற்சாகப்படுத்துவீர்கள். குடும்ப உறுப்பினர்கள் ஆதரவாக இருப்பார்கள். மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். இன்பம் பெறும் நாள்.

கன்னி

அலுவலகப் பணிகளில் மிகுந்த கவனம் தேவை. உத்யோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் புகழ், கௌரவம் கூடும் நாள்.குடும்பம் அல்லது வேலை தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை இன்றைக்கு தவிர்ப்பது நல்லது. உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். நீண்ட காலத்திற்கு பின்னர் நண்பர்களை சந்திப்பீர்கள். மகிழ்ச்சியான நாள். 

 

 

youtube

துலாம்

தேவையான பணம் கிடைக்கும். தாய்வழி உறவினர்கள் வருகையால் வீட்டில் உற்சாகம் உண்டாகும். குடும்பத்தாரின் ஆதரவுப் பெருகும். உறவினர்கள் மதிப்பார்கள்.  குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றி மகிழ்ச்சியடைவீர்கள். அலுவலகத்தில் வழக்கமான நிலையே காணப்படும். புதிய சிந்தனைகள் தோன்றும். சிலருக்குப் புதிய ஆடை, ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்பு ஏற்படக்கூடும்.

விருச்சிகம்

அலுவலத்தில் நிலுவையில் இருந்த பணிகளை முடிப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். எதையும் தனிப்பட்ட முறையில் எடுத்து கொள்ள வேண்டாம். சிலருக்கு தாய்வழி உறவுகளால் செலவுகள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் வீண்விவாதம் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது. சிலர் கோயில்களுக்குச் சென்று வழிபடும் வாய்ப்பு ஏற்படும். 

தனுசு

எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. தந்தையின் தேவையை பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும்.குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்குச் சென்று வரும் வாய்ப்பு ஏற்படும். சிலருக்கு எதிர்பாராத பொருள் சேர்க்கைக்கும் வாய்ப்பு உண்டு. உத்யோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள்.  

மகரம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள் வருகையால் திடீர் செலவுகள் ஏற்பட்டாலும் சமாளித்து விடுவீர்கள். சிலருக்குக் குடும்பத்துடன் வெளியூரில் உள்ள கோயில்களை தரிசிக்கும் வாய்ப்பு ஏற்படும். வயிறு தொடர்பான பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் உணவு விஷயத்தில் கவனம் தேவை. உத்யோகத்தில் சில நுணுக்கங்களை கற்றுக்கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

கும்பம்

காரியங்களில் அனுகூலம் உண்டாகும் நாள். குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை கண்டறிவீர்கள். அலுவலகத்தில் சக ஊழியர்களின் விஷயத்தில் தலையிடவேண்டாம். கனவு நனவாகும் நாள்.  

மீனம்

மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முடிவுகளைத் துணிந்து எடுப்பீர்கள். வாழ்க்கைத் துணையால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தினர் உங்கள் யோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். மாலை நேரத்தில் நண்பர்களுடன் வெளியே செல்ல திட்டமிடுவீர்கள். சமூக வாழ்க்கை நிலையானதாக இருக்கும். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!