இன்று திங்கள் கிழமை நவமி திதி திருவாதிரை நட்சத்திரம் புரட்டாசி மாதம் ஆறாம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள்
மேஷம்
வேலை மெதுவாக சென்றாலும் பணி குறித்ததான நல்ல தெளிவு மற்றும் திட்டம் கிடைக்க பெறும். பணி சுமையில் இருந்த மன அழுத்தம் இன்று குறைய வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சற்று நேரம் செலவழியுங்கள்.
ரிஷபம்
இந்த வாழ்க்கையை விட்டு விலக முயற்சி செய்ய வேண்டாம். நீங்கள் நீங்களாக இருக்கும் போது அனைத்தும் உங்களை தேடி வரும். பொறுப்புக்களையும் சுவாரசியங்களையும் துணையுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள். இருவரும் இணைந்து பயணிப்பதற்கு ஏற்ற தருணம் இது
மிதுனம்
இப்போது உள்முகமாக திரும்பி பொறுமையாக இருக்க வேண்டிய நேரம்.என்ன வருகிறது என்று காத்திருக்கலாம் அல்லது திட்டங்களை இன்னும் சரிபார்க்கலாம்.நேரம் அமைந்து வரும்போது மீதி எல்லாமே உங்கள் வசப்படும். இப்போது வாழ்க்கையில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராதீர்கள்.
கடகம்
உங்கள் வாழ்க்கையில் இந்த அத்தியாயத்தை வெற்றிகரமாக மூடிவிட வேண்டிய நேரம் இது.கடந்த காலத்தில் வாழ்வதற்கு பதிலாக வேறு ஒரு சிறந்த அத்தியாயத்தை எதிர்நோக்கி செல்லுங்கள்.
சிம்மம்
நீங்கள் ஒரு தெளிவான முடிவை எடுக்க முடியாது . உங்களுக்கு என்ன தேவை என்று உங்களுக்குத் தெரியும் , ஆனால் உங்கள் உடல் அதற்கேற்றபடி செயல்படுத்துவது இல்லை. கூட்டங்கள் அல்லது தெளிவுகளில் தாமதத்தால் வேலை மெதுவாக இருக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேறுபாடு இருக்கக்கூடும்.
கன்னி
வேலை நிலையானதாக இருக்கும், ஆனால் தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாக நீங்கள் தெளிவாக இருக்கமாடீர்கள். உங்கள் கூட்டாளருடன் சண்டையை தவிர்க்கவும், அது உங்கள் நாளின் நல்ல தருணங்களை அழித்துவிடும். உண்ணும் உணவு முறைகளை சமநிலை படுத்தவேண்டும் . பிற குடும்ப உறுப்பினர்களிடம் உங்கள் கோவத்தை காண்பித்து பின்னால் வருத்தப்படாதீர்கள்.
Youtube
துலாம்
பணியிடம் நன்றாக இருக்கும். புதிய வாடிக்கையாளர்கள் மற்றும் ப்ராஜெக்ட்கள் கைவசமாகும். அலுவலகத்துக்கு வெளியே உள்ள ஆட்களுடன் வேலை செய்யும்போது கவனம் வேண்டும்.உங்கள் துணையுடன் செய்யப்படும் கடைசி நேர திட்டங்கள் விளையாட்டாக முடியும். சூழ்நிலைகளை உங்கள் கட்டுக்குள் வைக்காமல் அதனோடு ஒத்து போங்கள்.
விருச்சிகம்
வேலை நிலையாக இருந்தாலும் காகித வேலைகளை ஒழுங்குபடுத்துங்கள். உங்களுக்கும் இன்னொருவருக்கும் நடுவே மூன்றாம் மனிதர் பிரச்னைகளை உருவாக்கலாம். உண்மை வெளியே வரும். இந்த அழுத்தங்களை வீட்டுக்கு எடுத்து போக வேண்டாம். மற்றவர்களை சந்திப்பதில் உங்களுக்கு விருப்பம் இருக்காது
தனுசு
வேலை உங்களை பரபரப்பாக வைத்திருந்தாலும் அடுத்தவர் தொந்தரவால் நீங்கள் துன்பப்படுவீர்கள். செயல் நடக்க எதையும் செய்யாதீர்கள். அதற்கு பதிலாக நிலுவைப்பணிகளை முடியுங்கள். உடல்நிலை கவனிக்கப்பட வேண்டும். இன்றைய மாலையை உங்களுக்கு ப்ரியமானவர்களுடன் செலவழிப்பீர்கள். வரும் நாட்களில் உங்கள் வேலைகளை நேர்த்தி செய்து கொள்ளுங்கள்.
மகரம்
உங்கள் பேஷனுக்கான புதிய சிந்தனைகள் உங்களுக்கு தோன்றலாம். ஒரு சிலருக்கு நேர்மாறாக புதிய மாறுபட்ட எண்ணங்கள் ஏற்படலாம். இப்போது செய்வதில் இருந்து அவை மாறுபடலாம். எவ்வளவு முடியுமோ அவ்வளவு கற்றுக் கொள்ளுங்கள்
கும்பம்
உங்கள் எண்ணங்கள் இப்போதே உங்களுடைய வாழ்க்கையை உருவாக்குகின்றன. அதிர்ஷ்டவசமாக நீங்கள் உங்கள் எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் தேர்வு செய்து அன்பையும் சமாதானத்தையும் பெற முயற்சிக்கின்றீர்கள். சந்தோஷமாக இருங்கள்.
மீனம்
நீங்கள் எவ்வளவு தான் நன்மையான காரியம் செய்தாலும் பெற்றோர் மற்றும் சகோதரரால் இன்னல்களுக்கு ஆழாவீர்கள். உங்கள் மனதை காயப்படுத்துவார்கள். இதை எண்ணி கலக்கம் அடைய வேண்டாம். நன்மையானது உங்களை விரைவில் தேடி வரும்.
predicted by astro asha shah
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!