தினமும் பணமழை பெய்யாது.. பணத்தை பார்த்து செலவழிக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள்தான்

தினமும் பணமழை பெய்யாது.. பணத்தை பார்த்து செலவழிக்க வேண்டிய ராசிக்காரர்கள் இவர்கள்தான்

இன்று ஞாயிற்றுக் கிழமை மஹாளய பட்ச ஆரம்பம் . முன்னோர் திதி செய்ய 15 நாட்கள் நேரம் தரப்படுகிறது. உத்திரட்டாதி நட்சத்திரம் ஆவணி மாதம் 29ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனைக் காணலாம்.

மேஷம்

வேலை நிலையானதாக இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் உதவியாக இருப்பார்கள். ஏற்கனேவே நீங்கள் போட்ட திட்டம் நல்ல முன்னேற்றத்தை இன்று கொண்டு வரும். மகிழ்ச்சியாக இருங்கள். தேவைக்கேற்ப அனைத்து காரியமும் கை கூடும்

ரிஷபம்

உங்கள் பணத்தை சரியான முறையில் பயன்படுத்த பழகிக்கொள்ளுங்கள். தினமும் பண மழை பெய்யாது. காதல் அம்பு உங்களை தேடி வரும் நேரம்.காத்திருந்த நாள் கைகூடி வரும்

மிதுனம்

வாழ்க்கை குறித்த தெளிவோடு சுதந்திரமான மனநிலையில் இருப்பீர்கள். சமீபத்தில் நீங்கள் தேர்ந்தேடுத்த தேர்வுகள் உங்களை தன்னம்பிக்கை கொள்ள வைக்கும்.குடும்ப உறுப்பினர்கள் அவரவர் வேலையை பார்ப்பார்கள் அதனால் உங்கள் உடனடி எதிர்காலத்தை பற்றிய வேலைகளில் நீங்கள் இறங்கலாம். நேரத்துக்கு சாப்பிடுங்கள்

கடகம்

அடுத்தவர்கள் எடுக்கும் தாமதமான முடிவுகள் காரணமாக வேலை மெதுவாக நடக்கும். புதிய வேலைக்கு விரும்புபவர்கள் கொஞ்சம் தாமதிக்க நேரிடலாம்.பொறுமையாக இருக்கவும். காகித வேலைகளை ஈமெயில் தொடர்புகளை ஒழுங்குபடுத்தி வைக்கவும். உங்கள் முதுகு வலி மற்றும் கண்கள் காரணமாக உடல்நலன் குறையலாம்.குடும்ப உறுப்பினர்கள் அதிகாரம் செய்யலாம். அவர்கள் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கவும்.

சிம்மம்

உங்கள் தட்டில் நிறைய இருக்கிறது. அதனால் நீங்கள் அதனை ஒரு ஒழுங்கு முறையுடன் அணுகுவது நல்லது. வேலை அடுத்த கட்டத்திற்கு நகர இது உதவி செய்யும்.புதிய சிந்தனை தன்னம்பிக்கையை தூண்டினாலும் பணியில் பொறுமை காப்பது நல்லது.குடும்ப உறுப்பினருடன் நேரம் செலவழியுங்கள். சமூக உறவுகள் அழுத்தம் தரலாம்.

கன்னி

வேலையில் நேர்மறை தன்மை அதிகம் இருக்கும். புதிய சிந்தனைகள் உங்கள் மூளையில் இருந்து வெளியாகலாம். இன்று புது வேலை, புது தகுதி அல்லது புது ப்ராஜெக்ட் உங்களுக்கு வரலாம். இன்று நீங்கள் பயோடேட்டா அனுப்ப, ப்ரெசன்ட்டேஷன் கொடுக்க அல்லது நேர்முக தேர்வுக்கு செல்ல ஏற்ற நாள்.குடும்ப உறுப்பினர்கள் அவர்களுடைய சொந்த முடிவுபற்றி பேச உங்கள் நேரத்தை வேண்டி நிற்கலாம்.

 

 

Youtube

துலாம்

புதிய ப்ராஜெக்ட்களுக்கு பொறுப்பேற்க இருப்பதால் உங்கள் பணியிடம் பரபரப்பாக அமையும். உங்களுக்கு காலகெடு இருக்கிறது என்பதற்காக மற்றவர்களிடம் அழுத்தம் போடாதீர்கள். அவர்களால் உங்கள் அளவிற்கு வேகம் காட்ட முடியாது.வாடிக்கையாளர் பங்குதாரர்களுடன் தெளிவான தொடர்பில் இருங்கள்.குடும்ப உறவுகளில் லேசான உரசல் இருந்தாலும் சாயங்காலம் சரியாகி விடும்.

விருச்சிகம்

வேலை நிலைத்தன்மையோடு இருக்கும். நீங்கள் புதிய திட்டங்களிலோ வாடிக்கையாளர் மூலம் வரும் வேலைகளிலோ பிசியாக இருப்பீர்கள். சாப்பிடும் முறையை சமமாக வைத்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உடல்நலத்தை பதம் பார்த்து விடும். குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்கும் ஆனாலும் ஒரு குடும்ப உறுப்பினர் கொஞ்சம் வித்யாசப்படுவார். ஆகவே அவர்களுடன் சண்டை இல்லாமல் இருப்பது நல்லது

தனுசு

வேலை நேர்மறையானதாக இருந்தாலும், நீங்கள் கடந்தகால வேலைகளை மீண்டும் செய்ய வேண்டும் அல்லது தொடர்ந்து கருத்துக்களை மறுகட்டமைக்க வேண்டும். அதற்கு பெரும்பாலான நேரம் எடுக்கும். நிலுவையிலிருக்கும் பணம் கிடைக்கும். சுகாதாரத்தில் கவனம் தேவை. கடைசி நிமிட நிகழ்வுகள் அல்லது குடும்பம் மற்றும் சமூக வாழ்க்கை நன்றாக இருக்கும்.

மகரம்

சீரான வாழ்க்கை மிகப்பெரிய கிரீடத்தை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். சரியான பாதையில் செல்லுங்கள். அதிர்ஷ்டம் காத்திருக்கின்றது. கோபத்தை கட்டுப்படுத்துங்கள். வீணான வார்த்தைகளை அலப்ப வேண்டாம்

கும்பம்

முக்கியமான பணி ஒப்பந்தம் உங்களை நம்பி இன்று வருகின்றது. மகப்பெரிய முன்னேற்றத்திற்கு வழி வகுகின்றது. வாய்ப்பை விட்டு வடாதீர்கள். குடும்ப உறுப்பினர்களுக்கு நிலமையை புரிய வையுங்கள்.

மீனம்

வேலை நிலையானதாக இருக்கும். மற்றவர்களுடன் இருக்கும் மனகசப்பு காரணமாக வேலையை தட்டி கழிக்க வேண்டாம். சுறுசுறுப்பாக இருங்கள், அனைவருடன் கலந்து பேசுங்கள்.

 

Predicted by astro asha shah

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.