இன்று திங்கள் கிழமை ஏகாதசி திதி பூராட நட்சத்திரம் .ஆவணி மாதம் 23ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை சரிபாருங்கள்.
மேஷம்
புதிய ஆரம்பங்கள் ஏற்படும் ஆனால் ஆர்வ மிகுதியால் அதிகமான செயல்களை தவற விடுவீர்கள். வேலை நல்ல செய்தியை கொண்டு வரும். அதிக படைப்புத்திறனை உருவாக்கும். புதியதாக யாருடனும் பங்குதாரர் ஆக விரும்பாதீர்கள். உங்கள் கண்களையும் முதுகு தண்டையும் கவனியுங்கள்.குடும்ப வாழ்க்கை சுமுகமாக இருந்தாலும் கடந்த கால கசப்புகளால் உங்களை தனித்திருக்க வைக்கும்.
ரிஷபம்
வேலை பரபரப்பாக இருக்கும். புதிய சிந்தனைகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நினைப்பீர்கள். ஆனால் கொஞ்சம் நிதானியுங்கள். இன்னமும் அதன் செயல்படும் தன்மைகளை நீங்கள் பரிசோதிக்கவில்லை. முடிவுகளுக்கு தாவுவதோ அதீத நம்பிக்கையோ அறவே வேண்டாம். கீழ் முதுகில் வலி ஏற்படும்.சமூக வேலைகளால் குடும்பத்தில் நேரம் செலுத்த முடியாது. மனதின் வேகத்தை மட்டுப்படுத்துங்கள்
மிதுனம்
இன்று உங்களுக்கு பிஸியான நாள். யாருக்கோ தூது செல்ல வேண்டும், குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும் ஒரு நண்பனின் உணர்வுகளை புரிந்து கொண்டு நடக்க வேண்டும் என்று பல வேலைகள் இருக்கும்.இதற்கு நடுவே உங்கள் ஈமெயில் வேலைகள் மற்றும் காகித வேலைகளை பார்க்க வேண்டி வரும். இத்தனை வேலையும் முடிந்த பின்னர் ஆழ்ந்த உறக்கம் உங்களுக்கு தேவை
கடகம்
வேலை நிலைத்தன்மையோடு இருக்கும். நீங்கள் புதிய திட்டங்களிலோ வாடிக்கையாளர் மூலம் வரும் வேலைகளிலோ பிசியாக இருப்பீர்கள். சாப்பிடும் முறையை சமமாக வைத்து கொள்ளுங்கள். இல்லாவிட்டால் உடல்நலத்தை பதம் பார்த்து விடும். குடும்ப சூழ்நிலை சாதகமாக இருக்கும் ஆனாலும் ஒரு குடும்ப உறுப்பினர் கொஞ்சம் வித்யாசப்படுவார். ஆகவே அவர்களுடன் சண்டை இல்லாமல் இருப்பது நல்லது
சிம்மம்
வேலை தாமதமாக இருந்தாலும் உங்கள் புதிய சிந்தனைகள் மூலம் புதிய வாய்ப்புகளை பெறுவீர்கள். பொருளாதார காகிதங்களை ஒழுங்குபடுத்துங்கள். உங்களுக்கு சைனஸ் தொந்தரவுகள் இருந்தால் தொண்டை மற்றும் கண்களை கவனித்து கொள்ளுங்கள் குடும்பம் மற்றும் சமூகம் இரண்டு உறவுகளும் சுமுகமாக இருக்கும்
கன்னி
வேலை மெதுவாக சென்றாலும் பணி குறித்ததான நல்ல தெளிவு மற்றும் திட்டம் கிடைக்க பெறும். பணி சுமையில் இருந்த மன அழுத்தம் இன்று குறைய வாய்ப்பு உள்ளது. குடும்ப வாழ்க்கையில் சற்று நேரம் செலவழியுங்கள்.
துலாம்
திட்டமிட்ட படி சரியான பாதையில் செல்ல வேண்டிய நாள் இது. கவனமாக வேலை செய்யுங்கள். சிறு கவன சிதறல்கள் கூட மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும். வாழ்க்கையில் முக்கியமான நபர்களை சந்திக்கும் வாய்ப்பு இன்று ஏற்படலாம்.
விருச்சிகம்
உங்கள் துணை நீண்ட காலமாக வாழ்க்கையில் சுமைகளோடு இருக்கிறார் அவரது பாரத்தை இறக்கி வைக்க நீங்கள் உதவி செய்யும் முயற்சியில் இருக்கிறீர்கள். இதற்காக இன்னும் கொஞ்சம் முயற்சி செய்தால் நீங்கள் நினைத்தது நடக்கும்
தனுசு
குடும்பத்தில் உங்கள் தேவை அதிகமாக இருப்பதால் பணியில் கவனம் செலுத்த முடியாத சூழல் ஏற்படும். இது வரை கிடப்பில் இருந்த அலுவல பணிகளை அவசரமாக முடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறீர்கள்.சமாதானமாக செல்ல முயற்சி செய்யுங்கள்
மகரம்
உங்களைப்போலவே உள்ள ஒரு மனிதரை நீங்கள் சந்திப்பீர்கள். ஆனால் இது நீண்ட கால உறவாக மாறுமா என்பது பற்றி இப்போது நிர்ணயிக்க முடியாது.
கும்பம்
வேலையில் நிறைய ஆச்சர்யங்கள் காத்திருக்கும். நீங்கள் இன்றைக்கு எந்த ஒரு மீட்டிங்கையும் மிஸ் செய்யாதீர்கள். தாமதங்களை தவிருங்கள். நீங்கள் மற்றவர்களுக்கு எடுத்துரைக்கும் தெளிவாக அவர்களுக்கு புரியும் வகையில் பேசுங்கள். நிறைய நீர் குடிக்கவும். குடும்பத்தில் குழப்பங்களோடு நாடகங்கள் நடக்கலாம். யார் பக்கமும் இல்லாமல் இருப்பதே நல்லது.
மீனம்
இன்று வேலைப்பளு காகித வேலைகள் என அதிகமாக இருக்கும். குடும்பம் காரணமாக நீங்கள் அதனை சரியாக செய்ய முடியாமல் போகலாம்.உங்கள் அருகில் வேலை செய்பவர்கள் உங்கள் முடிவுகளை பின்பற்றி நடப்பதால் பணியில் கவனமாக இருங்கள். விஸ்தரிக்க வேண்டிய நேரம் என்பதால் காகித வேலைகளை கவனமாக செய்யவும். குடும்ப உறுப்பினரின் அக்கறையை குறையாக நினைக்காதீர்கள்
ஜோதிட பலன்களை வழங்கியவர் astro ஆஷா ஷா
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன