இன்று சனிக்கிழமை நவமி திதி கேட்டை நட்சத்திரம் ஆவணி மாதம் 21ம் நாள். இன்றைய நாளில் உங்கள் ராசிபலனை அறிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
சிலர் உதவாத ஆலோசனை சொல்வர். செயல் குறையை சரிசெய்வதால் வாழ்வியல் நடைமுறை சீராகும். தொழில் கூடுதல் உழைப்பினால் வளர்ச்சி பெறும். பணச்செலவு அதிகரிக்கும். ஒவ்வாத உணவு உண்ணக்கூடாது
ரிஷபம்
செயல்திறன் கண்டு சிலர் பொறாமைப்படுவர். நீங்கள் சாத்வீக மனதுடன் செயல்படுவது நல்லது. கூடுதல் உழைப்பினால் தொழில், வியாபாரம் சீராகும். குடும்ப தேவைகளை சிக்கனமாக நிறைவேற்றுவீர்கள். பணியாளர்கள் பாதுகாப்பு தவறாமல் பின்பற்ற வேண்டும்.
மிதுனம்
முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் தேடி வரும். தயக்கம் ஏதுமின்றி புதிய வாய்ப்புகளை ஏற்றுக்கொண்டு செயல்படுங்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். சேமிப்பு சீரடையும். வீட்டிற்கு தேவையான புதிய பொருட்கள் வாங்குவீர்கள். உடனடியாக தங்கம், வெள்ளி வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
கடகம்
நெருங்கிய உறவினர் ஒருவரோடு மனஸ்தாபம் வரும். பிள்ளைகளின் வழியில் செலவுகள் கூடும். பெற்றோரின் உடல்நிலையில் அதிக கவனம் அவசியம். உடன்பிறந்தோரோடு இணைந்து செயல்பட்டு நிலுவையில் உள்ள சொத்துப்பிரச்னைக்கு தீர்வு காண்பீர்கள். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் தேடிவரும்.
சிம்மம்
உடல் ஆரோக்கியத்தை பேணி காத்திட வேண்டும். மனைவியின் சொல்லும், செயலும் நம்பிக்கையை தரும். தொழில், வியாபாரத்தில் அளவான பணவரவு கிடைக்கும். பணியாளர்கள் இதமான அணுகுமுறையால் ஓரளவு சலுகை பெறுவர்.
கன்னி
சேமிப்பு உயரும். புதிய வீடு கட்ட எண்ணுவோருக்கு கடனுதவி கிட்டும். தற்காலத்தில் செய்யும் முதலீடு அடுத்த தலைமுறைக்கு உதவும் வகையில் ஸ்திரமாக இருக்கும். உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கெடுத்துக் கொள்வீர்கள்.
துலாம்
உங்கள் உழைப்பால் அடுத்தவர்கள் உள்ளங்களில் இடம்பிடிப்பீர்கள். பிள்ளைகள் எதிர்பார்ப்பினை நிறைவேற்றுவர். கலைத்துறையினரின் பேச்சு முக்கியத்துவம் பெறும். உத்யோகஸ்தர்களுக்கு பதவி உயர்வு இருக்கும்.
விருச்சிகம்
உடல் ஆரோக்கியம் சீராக இருக்கும். மனைவி குடும்ப நலன் மேம்பட உதவிகரமாக இருப்பார். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்காக சில மாற்றம் செய்வீர்கள். பெண்கள் பிரார்த்தனை நிறைவேறி தெய்வ வழிபாடு நடத்துவர்
தனுசு
எந்த காரியத்திலும் நேரடியாக செயல்பட இயலாது. நண்பர் அல்லது உறவினரர்களை பின்னால் இருந்து இயக்கி நினைத்த காரியத்தை சாதித்துக் கொள்ளலாம். குடும்பத்தில் குழப்பம் தோன்றும். நகைச்சுவைக்காக பேசும் வார்த்தைகள் தவறாகப் பொருள் காணப்பட்டு புதிய பிரச்னையை தோற்றுவிக்கும்.
மகரம்
உறவினர்களுடனான சந்திப்பு மகிழ்ச்சி தரும். பிள்ளைகளின் வழியில் செலவுகள் கூடும். தம்பதியராக இணைந்து செயல்படும் விவகாரங்களில் நற்பலன் கிட்டும். கலைத்துறையினர் புதிய முயற்சிகளில் சிரமம் காண்பர். சமூக நிகழ்வு இனிய படிப்பினையை தரும்.
கும்பம்
நீங்கள் உலகோடு ஒழுங்கற்ற தொடர்பற்ற நிலையில் இருப்பீர்கள். மனிதர்கள் உங்களை கேட்டு கொண்டே இருப்பார்கள் நீங்கள் உங்களால் முடியாத போதும் அதனை கொடுத்து கொண்டே இருப்பீர்கள்.அமைதி இருக்காது. பழைய வாடிக்கையாளர்கள் திரும்ப வருவதால் அதிக வேலைப்பளு இருக்கும்.உங்கள் வாழ்க்கை துணையுடன் உரசலை தவிருங்கள்
மீனம்
தங்கம், வெள்ளி நகைகள் சேரும். வீட்டில் சுபநிகழ்வுகள் பற்றிய பேச்சுகள் துவங்கும். மணமாகாத பிள்ளைகளுக்கு வரன் தேடி வரும். அண்டை வீட்டுக்காரர்களால் ஒரு சில பிரச்னைகளை சந்திக்க நேரிடும்.
ஜோதிட பலன்களை வழங்கியவர் astro ஆஷா ஷா
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.