பார்லர் செல்லவும் நேரமில்லை என கவலைப்படுகிறீர்களா? உடனடியாக பொலிவான சருமத்தை பெற வாழைப்பழத்தை ட்ரை பண்ணுங்கள். வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளது. இதனால் உடலில் ஏற்படும் பல நோய்களை போக்கி உடலை ஆரோக்கியத்துடன் வைத்து கொள்ள உதவுகிறது. மேலும் சருமம் பாதுகாப்பிற்கும் வாழைப்பழம் உதவுகிறது.
உங்கள் சருமம் அழகை அதிகரிக்க வாழைப்பழத்தை எப்படி பயன்படுத்துவது என இங்கே காண்போம்!
இயற்கையான ப்ளீச்சிங் : ஒரு வாழைப்பழத்துடன் (banana) தோல் மற்றும் 2 ஸ்பூன் ஓட்ஸ் எடுத்துக் கொள்ளுங்கள். அவற்றுடன் சிறிது சர்க்கரை கலந்து நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இவற்றுடன் சிறிது பால கலந்து முகத்தில் தடவி, 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவினால் சருமத்திலுள்ள அழுக்கு, செல்களை அகற்றி ப்ளீச்சிங் செய்த பலன் கிடைக்கும்.
pixabay
கருவளையங்ளை நீக்க : இரண்டு துண்டுகள் வாழைப்பழத்துடன், சிறிது பால் சேர்த்து அரைக்கவும். இதை கண்களை சுற்றி அப்ளை செய்து 10 நிமிடங்களுக்கு மசாஜ் கொடுத்து, பின்னர் கழுவவும். இவ்வாறு தொடர்ந்து செய்துவர நாளடைவில் கருவளையங்கள் நீங்கும்.
சரும நிறத்தை அதிகரிக்க : வாழைப் பழ தோலை நன்ராக மசித்து அதனுடன் 1 ஸ்பூன் சமையல் சோடாவை கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இது சருமத்தில் இருக்கும் கருமையை போக்கி சருமத்திற்கு நிறம் அளிக்கிறது.
பாரம்பரிய ஆடைகளிடம் உங்களை ஈர்க்கும் ஸ்னேஹாவின் 11 அசத்தலான தோற்றங்கள்!
தழும்புகளை நீக்க : சிலருக்கு முகத்தில் அதிகாகமான தழும்புகள் இருக்கும். இவற்றை நீக்க நான்கு துண்டுகள் வாழைப்பழத்துடன், இரண்டு டீஸ்பூன் ஓட்ஸ் சேர்த்துக் கலந்து தினமும் அந்தத் தழும்புகள் மேல் தடவி வந்தால் நாளடைவில் மறையும். பிரசவம் ஆன பெண்கள் உடலில் இருக்கும் ஸ்ட்ரெட்ச் மார்க்ஸ்கிலும் இதனை அப்ளை செய்யலாம்.
pixabay
பளபளப்பான சருமத்திற்கு : சிலர் முகம் சுருங்கி பொலிவிழந்து காணப்படும். இதனை நீக்க இரண்டு துண்டுகள் வாழைப்பழம், ஒரு டீஸ்பூன் தேங்காய்த் துருவல், ஒரு டீஸ்பூன் வெள்ளரிச் சாறு இவற்றை மிக்ஸியில் போட்டு அடித்து வைத்து கொள்ளவும். இதனை தினமும் `பேக்’ போட்டு கொள்ள ஈரப்பதம் தக்கவைக்கப்பட்டு சருமம் பளபளக்கும்.
கழுத்து கருமை நீங்க : வாழைப்பழம் (banana), பப்பாளி, இரண்டு டீஸ்பூன் பாதாம் பொடி, கால் கப் தேங்காய்ப்பால், சிறிது குங்குமப்பூ இவற்றை ஒன்றாகக் கலக்கவும். முழு கழுத்துக்கும் அதை `பேக்’ போட்டு உலர விடவும். இரண்டு நாட்களுக்கு ஒருமுறை இதனை செய்து வந்தால் கழுத்து கருமை நீங்கிவிடும்.
சரும பொழிவை அதிகரிக்கும் பாடி ஸ்கரப் மற்றும் க்ரீம் : குறைந்த விலையில் வாங்கலாம்!
சுருக்கங்களை போக்க : பாலாடையுடன் வாழைப் பழத்தோலை கலந்து பேஸ்ட் போல் செய்து முகத்தில் போடுங்கள். 20 நிமிடம் கழித்து கழுவவும். வறட்சி போய் மிருதுவாகும். சுருக்கங்களும் மறையும். வாரம் இருமுறை செய்யலாம்.
pixabay
சீரான சருமத்திற்கு : ஒரு வாழைப்பழம் (banana), இரண்டு டீஸ்பூன் பால், கால் டீஸ்பூன் பயத்த மாவு, கால் டீஸ்பூன் கடலை மாவு, ஒரு டீஸ்பூன் சந்தனம் ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். உடலில் முதலில் நல்லெண்ணெய் மசாஜ் கொடுத்து பின்னர் இந்தக் கலவையை அப்ளை செய்து மசாஜ் செய்து குளித்து வர சரும நிறம் சீராக இருக்கும்.
அலர்ஜி பிரச்னை நீங்க : இரண்டு துண்டுகள் வாழைப்பழம் மற்றும் இரண்டு துண்டுகள் சப் போட்டா பழத்தை இரண்டு டீஸ்பூன் பாலுடன் நன்கு கலந்து, அலர்ஜி வந்த இடங்களில் தடவி காயவிட்டு அலச, சருமப் பிரச்னைகள் மறையும்.
பேரழகு வேண்டுமா? தினம் ஒரு பேரிக்காய் சாப்பிடலாமே!
பருக்கள் மறைய : வாழைப்பழம், எலுமிச்சை சாறு மற்றும் பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். அல்லது வாழைப்பழம், எலுமிச்சை சாறு மற்றும் யோகட் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடங்கள் அப்படியே வைத்து பின் முகத்தில் தடவி மசாஜ் செய்து கழுவி வரலாம். இப்படி செய்து வந்தால் முகப்பரு மற்றும் கரும்புள்ளிகள் மறையும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!