பேரழகுடன் அஜித்தின் மகள் அனிகா.. சமீபத்திய புகைப்படங்கள் வைரல்: ரசிகர்கள் ஷாக்!

பேரழகுடன் அஜித்தின் மகள் அனிகா.. சமீபத்திய புகைப்படங்கள் வைரல்: ரசிகர்கள் ஷாக்!

An சினிமாவில் 2010 ம் ஆண்டு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அனிகா சுரேந்திரன் (anika). தமிழில் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்திருந்த என்னை அறிந்தால் படத்தில் அஜித்துக்கு மகளாக நடித்திருந்தார். இந்த படத்தில் அவரது நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. "உனக்கென்ன வேணும் சொல்லு" என்ற பாடல் பெரும்பாலான ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது. 

அதைத்தொடர்ந்து மிருதன் படத்தில் ஜெயம் ரவிக்கு தங்கையாக நடித்த அனிகா, இந்தப் படத்தை தொடர்ந்து அப்பா - மகள் பாசத்தை மையப்படுத்தி உருவான விஸ்வாசம் படத்தில் நடித்தார். விஸ்வாசம் படத்தில் அஜித் மற்றும் நயன்தாரா ஜோடிக்கு மகளாக நடித்திருந்தார். அஜித்துக்கும், அனிகாவுக்கும் இடையே தந்தை, மகள் என்ற உறவு சரியாக பொருந்திவிட்டது. 

twitter

இதனால் விஸ்வாசம் படத்தில் இவருக்கும் இடையே இருந்த அப்பா, மகள் செண்டிமெண்ட் பார்ப்போர் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் ரசிகர்கள் அனைவரையும் தங்களது தந்தையையும், மகளையும் நினைக்க வைத்தது. இந்த படத்தில் தனது சிறப்பான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர்களிடம் நல்ல பாராட்டுகளை பெற்றார்.

இந்நிலையில் தற்போது வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் 60வது படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் அனிகா நடிக்கவுள்ளதக தகவல்கள் வெளியாகின. அஜித் 60 படத்தில் அனிகா இணைந்திருப்பது குறித்த எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழு வெளியிடாத நிலையில், விரைவில் ‘தல 60’ படத்தில்  நடிக்கும் நடிகர், நடிகைகள் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

இந்நிலையில் கடந்த வாரம் அனிகா தாது டிவிட்டர் பக்கத்தில் தல 60 படத்தில் நடிக்க உள்ளதால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். பப்பா அஜித்துடன் சேர்ந்து மூன்றாவது முறையாக நடிக்க உள்ளதாக மகிழ்ச்சியாக தெரிவித்திருந்தார். அதற்கு ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சி தெரிவித்து கமெண்டுகள் போட்டிருந்தனர். தொடர்ந்து இரு படங்களில் அஜீத் மகளாக நடித்ததுடன் அவரை பப்பா என்றே அனிகா அழைப்பதால் அவர் ஏறத்தாழ அஜீத்தின் மகள் போலவே ஆகிவிட்டார்.

twitter

அஜித்தே தனது 60வது படத்தில் அனிகாதான் (anika) மகளாக நடிக்க வேண்டும் என்று கூறியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு ஒரு முக்கிய காரணம் ‘தல’ அஜித்தின் மகள் அனோஷ்காவிற்கு, அனிகா நெருங்கிய தோழியாம். இதன் காரணமாக அவ்வப்போது அஜித்தின் வீட்டிற்கு அனிகா சென்று வருவாராம். அனோஷ்கா மட்டுமல்லாமல் ஷாலினிக்கும்,  அனிகாவும் செல்லப்பிள்ளையாம். 

இதன் காரணமாக அஜித் தனது படங்களின் வெற்றிக்கு அனிகாவை ஒரு ராசியாக கருதுகிறாராம். இதனால் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் கேரளத்தில் களைகட்டியிருக்கும் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் ஓணம் அலங்கார உடை உடுத்திய படம் ஒன்றை அனிகா பதிவிட்டிருந்தார். 

instagram

அந்த உடையில் அவர் பேரழகியாக இருப்பதாகவும் விரைவில் கதாநாயகியாக வாழ்த்துக்கள் என்று பலரும் பதிவிட்டனர். விஜய் டி.வியின் நிகழ்ச்சி தொகுப்பாளரும், நடிகையுமான ஜாக்குலின் ஃபெர்ணாண்டஸ், அழகாக இருக்கிறாய் அனிகா, ஓணம் தின வாழ்த்துக்கள் என கமெண்ட் செய்திருந்தார். இதனை தொடர்ந்து அனிகா போட்டோஷூட் நடத்திய புகைப்படங்கள் சிலவற்றையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்.

அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் அவை தான் இப்போது வைரலாக உள்ளது. அனைத்து புகைப்படங்களிலும் அனிகா (anika) அழகாக இருக்கிறார். பேபி அனிகாவா இது? என எண்ணத்தோன்றும் வகையில் அனிகா வளர்ந்துவிட்டதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். மேலும் டீன் ஏஜ் பருவத்துக்கே உரிய பேரழகுடன் அனிகா இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால் அவருக்கு எண்ணற்ற புதுப்பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருக்கின்றதால் மகிழ்ச்சியில் இருக்கிறாராம் அனிகா! 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

செய்தி செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shop ல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.