மாதவிலக்குக்கு ஏன் விடுமுறை தர வேண்டும்? அந்த நாளின் அவஸ்தைகளை ஆண்கள் அறிவதும் அவசியம்

மாதவிலக்குக்கு ஏன் விடுமுறை தர வேண்டும்? அந்த நாளின்  அவஸ்தைகளை ஆண்கள் அறிவதும் அவசியம்

இந்த மாதத்தின் ஆரம்பத்தில் நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு மாதவிலக்கு நேரங்களில் (periods time) விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்கிற கவன ஈர்ப்பு தீர்மானத்தை முன்வைத்திருந்தார் நாடாளுமன்ற உறுப்பினரான ரவிக்குமார்.

இந்த தீர்மானத்தை பற்றி மாதவிலக்கு நாள்களில் பெண்களை ஒதுக்கி வைக்கும் பழங்கால மூடப்பழக்க வழக்கத்தின் இன்னொரு பரிமாணம்தான் இந்த தீர்மானம் என்று இதனை விமர்சித்திருந்தார் சமூக செயல்பாட்டாளர் அ. மார்க்ஸ்.

இதனை இப்போது நினைவு கூறுவது எதற்காக என்றால் மாதவிலக்கு பற்றி ஒவ்வொரு ஆணும் ஒவ்வொரு விதமான கருத்துக்களையே வைத்திருக்கின்றனர். உண்மையில் ஒரு பெண்ணாக இல்லாமல் இருந்தும் அவர்கள் வேதனையை எடுத்து வைத்த நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் பாராட்டுதலுக்கு உரியவரே.

இங்க வலிக்குதா? உள் உறுப்புகள் பற்றி நீங்கள் அறிந்ததாக வேண்டிய சில அறிகுறிகள்

Pinterest

மாதவிலக்கு நாட்களில் பெண்களை ஒதுக்கி வைப்பது தவறானதுதான். ஆனால் எல்லாப் பெண்களுக்கும் மாதவிலக்கு என்பது ஒன்று போல நடப்பதில்லை என்கிற உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அதனால் கூட அனைவருமே அந்த காலத்தில் ஒதுக்குபுறமாக வைக்கப்பட்டிருக்கலாம்.

ஒரு சிலருக்கு வயிற்று வலி அதிகமாக இருக்கலாம். ஒரு சிலருக்கோ உதிரப்போக்கு அதிகமாக இருக்கலாம். ஒரு சிலருக்கு உடல் முழுதும் பிழிந்தெடுக்கும் வலி ஏற்படலாம். ஒரு சிலருக்கோ இது பற்றி எதுவுமே தெரியாமல் இருக்கலாம்.

ஆகவே பெண்களுக்கு மாதவிலக்கு நேரங்களில் ஓய்வு என்பது அவசியமானதுதான். அதற்காக ஒவ்வொரு பெண்ணிற்கும் மாத விளக்கு நேரங்களில் ஓய்வு தனித்தனியாக தருவது என்பது முடியாது. சம்பளத்துடன் கூடிய விடுப்பு நாட்களை பெண்களுக்கு அதிகரித்தால் அவர்கள் தேவைப்படும் நாட்களில் அதனைப் பயன்படுத்திக் கொள்வார்கள்.

பொன்னிற மேனி வேண்டுமா ! மலிவான விலையில் பார்லரின் பளபளப்பைத் தரும் கொத்தமல்லி பேக் !

Pinterest

மாதவிலக்கு விடுமுறை பற்றி நாம் இப்போதுதான் பேசத் தொடங்கி இருக்கிறோம். இன்னும் சில சிறிய நிறுவனங்களில் மகப்பேறு விடுமுறைகள் கூட சரிவரத் தருவதில்லை. மகப்பேறு நேரங்களில் வேலையை இழக்கும் பல பெண்கள் இன்னமும் இருந்து கொண்டுதான் இருக்கிறார்கள்.

மகப்பேறு மாதவிலக்கு போன்ற நேரங்களில் உடல் ரீதியாக பெண்ணை பாதுகாக்க வேண்டியது ஆண்களின் கடமையும்தான். ஆனால் பெரும்பாலான ஆண்கள் பெண்கள் இந்த நேரங்களை தங்கள் சுயலாபத்திற்காக பயன்படுத்திக் கொள்வதாகவே நினைக்கும் வழக்கம் இருக்கிறது.

கடுமையான வேலை பளு வரும்போது அதில் இருந்து தப்பிக்க பெண்கள் பயன்படுத்தும் ஆயுதமாகவே இந்த மாதவிலக்கு நேரங்களை ஆண்களில் சிலர் கற்பனை செய்கின்றனர். இந்த எண்ணங்களின் அடிப்படையில்தான் பெண்களுக்கு வேலை கிடைக்கும்போது பல இன்னல்களை அனுபவிக்கின்றனர். பெரும்பாலான நேரங்களில் மன அழுத்தங்களும் பெண்களுக்கு கூடுதலாக சேர்கின்றன.

பெண் என்பவள் இயற்கையின் ஒரு பாகம். மிருகங்கள் கூட பிரசவிக்கும் நேரத்தில் சக மிருகத்தை பாதுகாக்கின்றன. யானைகளின் வழக்கங்கள் இதற்கு மிகப்பெரிய உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம். ஆனால் மனிதர்கள் இன்னும் இதில் மேம்பட வேண்டி இருப்பது வேதனையான ஒன்றுதான்.

அவரை இன்னொரு பெண்ணிடம் விட்டுக்கொடுக்க கஷ்டமாக இருந்தது - திருமதி. சூர்யா சரவணன்!

 

 

 

Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                  

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.