இங்க வலிக்குதா? உள் உறுப்புகள் பற்றி நீங்கள் அறிந்ததாக வேண்டிய சில அறிகுறிகள்

இங்க வலிக்குதா? உள் உறுப்புகள் பற்றி நீங்கள் அறிந்ததாக வேண்டிய சில அறிகுறிகள்

ஒரு சில நேரங்களில் நமக்கு தொடர்ந்து ஒரு குறிப்பிட்ட இடத்தில் வலி தோன்றலாம். அதற்கான காரணங்களாக நாம் பலதையும் யோசித்து குழப்பிக் கொள்ளலாம். மருத்துவரிடம் சென்று தீர விசாரிக்கும் முன்னர் உங்கள் உடலில் தொடர்ந்து குறிப்பிட்ட உள் உறுப்பு (inner parts)  இடங்களில் வலித்தால் அதற்கான காரணங்கள் உங்கள் தவறுகள் பற்றி யோசியுங்கள். அதன் பின் அதைப் பற்றி தெளிவாக மருத்துவரிடம் பேசுங்கள்.

பொதுவாக வயிறு பகுதிகளில்தான்  பெரும்பான்மையான வலிகள் ஏற்படுகின்றன. வயிறு என்பது பல்வேறு முக்கியமான உறுப்புகளை உள்ளடக்கியது. வயிற்றில் ஏற்படும் எல்லா வலிகளும் வாயு அல்லது ஜீரணமின்மை காரணமாக ஏற்படுவதில்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். வயிற்றில் ஏற்படும் வலிகள் மற்றும் காரணங்களை நீங்கள் அறிந்து கொள்ளுங்கள். 

Youtube

வயிறு என்கிற பையில் கடவுள் பல்வேறு முக்கிய உறுப்புகளை போட்டு அதனை நாம் பத்திரமாக பார்த்துக் கொள்ளும் வகையில் வடிவமைத்திருக்கிறார்.  கிட்னி, ஈரல், கல்லீரல், மண்ணீரல், உணவுப்பை, பெருங்குடல், சிறுகுடல், மலக்குடல், கனையம், சிறு நீர்பை கர்ப்பப்பை, விந்துபை, சினைப்பை என்கிற எல்லாமே இங்கேதான் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன.

வயிற்று வலி என்று சொல்லும்போது மருத்துவர்களால் கூட உடனே இந்த வலி இதனால்தான் வந்தது என்று ஊகிக்க முடியாது. அதற்காக பல்வேறு விதமான பரிசோதனைகளை அவர்கள் பரிந்துரைப்பதும் அதனால்தான். ஆனால் சின்ன ட்ரிக் மூலம் நமக்கு எந்த உறுப்பில் வலி இருக்கிறது என்பதை நாமே அறிய முடியும். 

Pinterest

உங்கள் வயிற்றை மேலிருந்து கீழாக மூன்று பகுதிகளாகப் பிரித்துக் கொள்ளுங்கள். அதே போல இடமிருந்து வலமாகவும் மூன்று பகுதிகளாக பிரித்துக் கொள்ளுங்கள். இப்போது நம் வயிற்றின் மேல் 9 செஸ் கட்டங்கள் இருக்கும். மேல்பகுதி, நடுப்பகுதி, கீழ்ப்பகுதி எனவும் , இடது பகுதி, நடுப்பகுதி, வலது பகுதி எனவும் வயிறு பிரிக்கப்பட்டிருக்கும். 

இதில் எந்தெந்த இடங்களில் வலி இருந்தால் என்னென்ன உறுப்புகளில் பிரச்னை என்பதை பற்றி பார்க்கலாம்.

Youtube

1. மேல்வயிறு வலது மூலையில் வலித்தால் பித்தப்பை, கல்லீரல் தொடர்பான பிரச்னைகள் எழலாம்.


2. மேல் வயிறு இடது மூளை மற்றும் நடுப்பகுதியில் வலித்தால் அது அல்சர் வலியாக இருக்கலாம்.


3. நடு வயிறு வலது மற்றும் இடது மூலைகளில் வலித்தால் நீர் கடுப்பு மற்றும் சிறுநீரகக் கல்லாக இருக்கலாம்.


4. அடி வயிறு வலது மூலை வலித்தால் அப்பென்டிசைடிஸாக இருக்கலாம்.


5. அடி வயிறு நடுப்பகுதியில் வலித்தால் சிறுநீர்ப்பை வீக்கம் கர்ப்பப்பை பிரச்னைகள் இருக்கலாம்.


6. அடி வயிறு இடது மூலையில் வலித்தால் குடலிறக்கம் ஏற்பட்டிருக்கலாம்.

Youtube

இப்படித்தான் மருத்துவங்கள் கண்டுபிடிக்கப் படும் முன்பே மனிதர்கள் தங்கள் பிரச்னைகளை புரிந்து கொண்டு அதற்கேற்ப செயல்பட்டு நீண்ட வலிமையான ஆயுளுடன் இருந்தனர். அதனால்தான் நமது தாத்தா பாட்டிகள் பேரப்பிள்ளைகள் வயிற்று வலியால் துடித்தால் அதற்கேற்ற மூலிகை மருந்துகளை புகட்டினார்கள்.


ஆனால் இப்போதைய தாத்தா பாட்டியினருக்கு இது பற்றி எதுவும் தெரியாமலே போய்விட்டது. எனவே உங்கள் வலிகளை உணர்ந்து அதற்கேற்ப மருத்துவரை நாடுங்கள். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.