ஸ்லோவாக்கியா சதுரங்க போட்டியில் 6வது முறையாக உலக சாம்பியன் : திருச்சி ஜெனிதா சாதனை!

ஸ்லோவாக்கியா சதுரங்க போட்டியில்  6வது முறையாக உலக சாம்பியன் : திருச்சி ஜெனிதா சாதனை!

மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டியில் 6வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார் ஜெனிதா (jennitha) ஆண்டோ. 3 வயதில் போலியோ தாக்கியதால்  உடல் பகுதி செயலிழந்தாலும் மன உறுதியில் மலையளவு உயர்ந்து மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறார் திருச்சியை சேர்ந்த ஜெனிதா. சதுரங்க போட்டியில் பல்வேறு விருதுகள் வாங்கியுள்ள நிலையில் ஸ்லோவாக்கியா நாட்டில் நடைபெற்ற 19வது உலக மாற்றுத்திறனாளிகளுக்கான தனிநபர் சதுரங்க போட்டியில்  6வது முறையாக உலக சாம்பியன் ஆகியுள்ளார். 

பாத வெடிப்புகள் நீங்க சிம்பிள் டிப்ஸ் : அழகான கால்களுடன் நடைபோட தயாராகுங்கள்!

twitter

இந்த போட்டியில் 13 நாடுகளை சேர்ந்த 44 வீரர், வீராங்கனைக கலந்து கொண்டனர். இந்தியா சார்பில் திருச்சி பொன்மலை பட்டியை சேர்ந்த ஜெனிதா ஆண்டோ கலந்து கொண்டு, ரஷ்ய வீராங்கனையை வீழ்த்தி உலக சாம்பியனாகியுள்ளார். செஸ் உலகில் பல சாதனைகள் படைத்து வரும் ஜெனிதா ஆண்டோ போலியோ நோயால் பாதிக்கப்பட்டு பல்வேறு துயரங்களுக்கு மத்தியில் சாதனை படைத்துள்ளார். இது குறித்து பேசிய அவர், எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 2013ல் இருந்து 2017 வரை தொடர்ந்து 5 முறை தங்கம் வென்றேன். 

சென்ற வருடம் வெண்கலம்தான் வென்றேன். தங்கம் வெல்ல முடியாமல் போய்விட்டது. அதனால் இந்தமுறை தங்கம் வென்றே ஆக வேண்டும் என்கிற வெறியோடு பயிற்சி எடுத்தேன். தற்போது 6வது முறையாக தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. சுவாரசியமான விஷயம் என்னவென்றால் விஸ்வநாதன் ஆனந்த் சார் 5 முறை உலக சாம்பியன் ஆகியிருக்கிறார். அவரின் சாதனையை தாண்ட உழைத்தேன். அதன்படி 6வது முறையாக தங்கம் வென்றது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. 

சதுரங்க போட்டியின் மீதான ஆர்வம்

எனக்கு சதுரங்க போட்டியில் ஆர்வம் வர அப்பாதான் காரணம். 9 வயதில் எனக்கு ஆர்வம் தொடங்கியது. அப்பா ஆசிரியராக பணிபுரிந்த போது 8ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு ஆங்கில பாடம் நடத்தினார். அந்த பாடம் முழுவதும் மாற்றுத்திறனாளிகள் எப்படி விளையாட்டு போட்டிகளில் ஜொலிக்கிறார்கள் என்பதை பற்றியது. அப்பாவுக்கு அப்போது தோன்றியது, ஏன் எனக்கு விளையாட்டு சொல்லித்தர கூடாது என்று. அன்றைய தினமே அப்பா என்னிடம் வந்து, நான் உனக்கு ஒரு விளையாட்டு சொல்லி தருகிறேன்.

அம்மனுக்கு உகந்த ஆடி மாத ஸ்பெஷல் ரெசிபிகள் ஈஸியாக செய்யலாம்!

twitter

அதை நீ சரியாக பயின்றால் சாம்பியனாகலாம். விளையாடுகிறாயா என்றார். அதற்கு நான் என்னால் எப்படிப்பா விளையாட முடியும் என்றேன். உன்னால் நிச்சயம் விளையாட முடியும் என ஊக்கப்படுத்தினார். அப்போது வரை பிறர் விளையாடுவதை பார்ப்பதுதான் விளையாட்டு என்று இருந்த என்னை எனது அப்பா விளையாட வைத்தார். செஸ் கற்றுக்கொண்ட 3 மாதங்களிலேயே திருச்சியில் நடந்த போட்டியில் முதல் பரிசு பெற்றேன். அப்போது தான் சாதிக்க முடியும் என எனக்குள் தன்னம்பிக்கை உதிர்த்தது. 

சமீப காலமாகதான் மாற்றுத்திறனாளிகளுக்கான சதுரங்க போட்டி கொண்டுவரப்பட்டது. அதற்கு முன்பு எல்லா பிரிவு வீரர்களிடமும் போட்டியிட்டு வென்று படிப்படியாக மாநில அளவு, தேசிய அளவு என முன்னேறினேன் என்று தெரிவித்துள்ளார். உலக அளவில் பெண்கள் பிரிவில் முதல்முறை தொடர்ந்து 6 முறை சாம்பியனாக ஜெனிதா முடிசூடப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தினமும் பயிற்சியாளரிடம் 4 மணி நேரம் பயிற்சி எடுக்கும் ஜெனிதா (jennitha) , பின் தனியாக ஒரு நாளைக்கு 3 அல்லது 4 மணி நேரம் பயிற்சி எடுப்பாராம். 

விஸ்வநாதன் ஆனந்துடன் விளையாட ஆசை

என்னதான் பயிற்சியாளரிடம் பயிற்சி எடுத்தாலும், தன்னம்பிக்கையை அதிகரிக்க நானும் தனியாக பயிற்சி எடுத்துகொள்வேன் என அவர் மகிழ்ச்சியாக கூறுகிறார். மன அமைதி, மன நிலையை சம அளவில் வைத்து குறிக்கோளுடன் எப்போதும் விளையாட தொடங்குவேன் என ஜெனிதா கூறுகிறார். அவருடைய வாழ்நாள் லட்சியம் கிராண்ட்மாஸ்டர் ஆகிவிட வேண்டும் என்பதாம். விஸ்வநாதன் ஆனந்த் எனக்கு மிகவும் பிடித்த மனிதர். 

என்னை ஒருமுறை அவரது வீட்டிற்கு அழைத்து விருந்தளித்து செஸ் குறித்த பல வழிகாட்டுதல்களை காட்டினார். ஒருமுறை என் அழைப்பை ஏற்று திருச்சிக்கு வந்திருந்தார். அப்போது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். அவருடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தால் நிச்சயம் விளையாடுவேன் என உறுதியளிக்கிறார். ஜெனிதாவின் வெற்றிக்கு விஸ்வநாதன் ஆனந்த் ட்விட்டரில் வாழ்த்து கூறியிருந்தார். ஜெனிதாவின் முதல் இன்ஸ்பிரேஷன் அமெரிக்க செஸ் கிராண்ட்மாஸ்டர் ராபர்ட் ஜேம்ஸ் ஃபிஷ்ர். 1972ம் ஆண்டு உலக சாம்பியன் ஆனார்.

சருமத்தின் அழகை மீட்டு தரும் ஒயின் : பயன்படுத்தும் முறைகள் குறித்து எளிமையான டிப்ஸ்!

twitter

அவருக்கு பின் விஸ்வநாதன் ஆனந்த் என தகவல் அளித்துள்ளார். இந்திய விளையாட்டு துறையிடம் இருந்து 2015க்கும் பின் எல்லா போட்டிகளுக்குமான உதவி தரப்படுவதாகவும், தமிழ்நாடு விளையாட்டுத் துறையிடம்  இருந்தும் உதவிகள் தரப்படுகிறது என்று அவர் கூறினார். சீனாவில் நடக்க இருக்கும் ஆசிய மாற்றுத்திறனாளிகளுக்கான செஸ் போட்டியில் வெல்லவேண்டும் என்ற நோக்குடன் அதற்கு தயாராகி  கொண்டிருக்கும் ஜெனிதா, அதில் வெற்றி பெறுவதே அவரது அல்ட்டிமேட் எய்ம் என கூறியுள்ளார்.

ஜெனிதாவின் நம்பிக்கை வரிகள்

இந்த உலகில் சாதிக்க முடியாதது என்பது எதுவும் இல்லை. எதுவுமே கடினமல்ல. மனம் இருந்தால் மார்க்கமுண்டு. ஏதாவது ஒன்றை செய்யவேண்டும் என மனதில் நினைத்துகொண்டே முயன்றால் நிச்சயம் வெல்ல முடியும். அதற்கு நம் உடல் தடையல்ல. மனதை உறுதி வேண்டும் என தன்னம்பிக்கையுடன் பேசுகிறார் ஜெனிதா. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

மேலும் பல்வேறு சாதனைகள் புரிய வாழ்த்துக்கள் ஜெனிதா!