உடல் உறவின் போது பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள் என்னென்ன தெரியுமா ?

 உடல் உறவின் போது பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள் என்னென்ன தெரியுமா ?

காமம், கலவி, உடலுறவு என்று பல பெயர் கொண்டிருக்கும் ஒரு உணர்விற்குத்தான் இந்த உலகம் இப்போது அதீத முக்கியத்துவம் கொடுக்கிறது. உடலின் தாகம் தீர்வதே இல்லை என்கிறபடியான ஒரு உணர்வை இயற்கை நமக்குள் விதைத்திருப்பதே அதற்கான காரணம்.

உடல் உறவிற்கு பல பெயர்கள் இருந்தாலும் தாம்பத்யம் என்று சொல்லும்போதுதான் அதற்கான அர்த்தம் முழுமையடைகிறது. திருமணம் முடிந்த தம்பதிகள் தாங்கள் ஒருவரை ஒருவர் நன்கு அறிந்த பின்னரே தாம்பத்தியத்திற்கு தயாராக வேண்டும் .

அதிலும் பெண்ணை காமத்திற்காக நெருங்கும்போது பல படிகள் அதற்காக இருக்கின்றன. தனக்கான பெண் என்ன விரும்புகிறாள் என்ன வெறுக்கிறாள் என்பதை அறிந்து செயல்பட வேண்டும். விருப்பத்திற்கு மாறாக கூடினால் அது திருப்தியற்ற தாம்பத்ய வாழ்க்கையில் சென்று முடியும்.

பெண்ணின் உடலில் இத்தனை ஜி ஸ்பாட்களா ! இனி உங்கள் தாம்பத்யம் உச்சத்தில் பறக்கட்டும் !

Youtube

தாம்பத்யம் (sex) தொடங்கும் முன் பெண்ணின் விருப்பங்களை கேட்டறிய கூச்சப்படுபவர்கள் இருக்கலாம். ஆனாலும் முதலில் அன்றைக்கு அவர்கள் சரியான மனநிலை உடல்நிலையுடன் இருக்கிறார்களா என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியமானது.

ஒரு சில புத்திசாலி ஆண்கள் பெண்களின் உணர்வுகளைத் தூண்டுவதன் மூலம் அவர்களை மாலை முதலே அதற்காக தயார்படுத்துவதும் உண்டு. அவர்கள் பெரும்பாலும் அதில் வெற்றி பெற்று விடுவார்கள்தான். அதையும் தாண்டி பெண்களுக்கு அதில் விருப்பம் இல்லாவிட்டால் அவர்களைத் தொந்தரவு செய்யாதீர்கள்.

முன்விளையாட்டுக்களை அவசரம் அவசரமாக செய்வதை எந்த பெண்ணும் விரும்புவதில்லை. இதனை நீங்கள் பொறுமையாகத்தான் நடத்தியாக வேண்டும். அப்போதுதான் பெண் உறுப்பு ஒரு அற்புதமான கலவிக்காகத் தன்னைத் தயார் செய்யும்.

உச்சக்கட்டம் என்பது ஆண்களுக்கு மட்டுமே ஆனதல்ல. அதனால் முதல்முறை ஆண் உச்சக்கட்டம் அடைந்து விட்டாலும் பெண்ணிற்கு உச்சக்கட்டம் வரும்வரை சிறிது இடைவெளி விட்டு முயற்சிக்க வேண்டும். பெண்கள் உச்சக்கட்டம் அடைய அவர்களுக்குப் பிடித்தமான அல்லது அதற்கு ஏற்ற வழிகளிலும் முயற்சிக்க வேண்டும். அதை விட்டு விட்டு எனக்கு வந்தால் போதுமானது என்று முடித்து விட்டு உறங்கக் கூடாது.

தாம்பத்யத்தில் சிக்கலா ! வீட்டில் உள்ள இந்தப் பொருள் ஆண்மையை அதிகரிக்கும் என்பது தெரியுமா!

Youtube

பெண்ணின் உடலோடு உறவாடும் நேரங்களில் உங்கள் கைகள் கால்கள் எல்லாம் சுத்தமானதாக இருக்க வேண்டும். அழுக்கான விரல் நகங்கள் , நீண்ட நகங்கள் போன்றவை பெண் உறுப்பை காயப்படுத்தலாம். அல்லது தொற்று உருவாக்கலாம். இருவரும் குளித்து விட்டு ஆரம்பிப்பதே சாலச்சிறந்தது.

கலவியின் போது பெண்ணை உச்ச கட்டம் கொண்டு செல்லும் வகையில் ஆணும் ஆணை உச்சக்கட்டம் கொண்டு செல்லும் வகையில் பெண்ணும் உரையாட வேண்டும். செயல்கள் புரிய வேண்டும். அதில் இருந்து திசை மாறும் பேச்சுக்களை தவிருங்கள்.

ஆக்ரோஷமான உடல் உறவு என்பது பெண்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. அவர்கள் உடல் பாகங்கள் அப்படிப்பட்டது அல்ல. வலிக்கும் படியான செய்கைகள் அவர்களை உடல் உறவு என்றாலே பயம் கொள்ளும் ஒரு விஷயமாக மாற்றி விடும். மென்மையாக மெதுவாக பொறுமையாக பெண்ணிற்கும் பிடிக்கும்வகையில் உங்கள் கலவி அமைய வேண்டியது அவசியம்.

உடல் உறவின் போது அந்தரங்க உறுப்புகளில் உள்ள முடிகள் ஆண்களுக்கு எப்படி பிடிக்காதோ அதைப்போலவே பெண்களுக்கும் பிடிக்காது. இதனால் இருவருமே அந்த இடங்களை சுத்தம் மற்றும் சுகாதாரமாக பார்த்துக் கொள்ள வேண்டும். தாம்பத்யம் என்பது அப்போதைய உணர்ச்சி வேட்கை அல்ல எதிர்காலத்திற்கும் தேவையானது என்பதை அறிந்து செயல்படுவது நல்லது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.