logo
ADVERTISEMENT
home / Health
இன்று உலக கொசு தினம்  : உயிரை பறிக்கும் கொசுக்களால் பாதிப்புகள், அழிக்கும் வழிமுறைகள்!

இன்று உலக கொசு தினம் : உயிரை பறிக்கும் கொசுக்களால் பாதிப்புகள், அழிக்கும் வழிமுறைகள்!

இன்றைய நவீன காலத்தில் பல்வேறு மருத்துவ வசதிகள் வந்த போதிலும் அளவில் மிகவும் சிறியதாக இருக்கும் கொசு நம்மை பாடாய்ப்படுத்துகிறது. டெங்கு,  மலேரியா என்று பல நோய்களைப் பரப்பும் ஆதாரமாக கொசுக்கள் இருப்பதால் அவைகளை சமாளிப்பது மருத்துவ உலகத்துக்கு சவாலானதாகவே இருக்கிறது. ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கானோர் கொசுக்களால் ஏற்படும் நோய்களுக்கு பலியாகின்றனர். 

twitter

கடந்த1897ம் ஆண்டு ஆக., 20ல்  ‘அனாபெலஸ்’ என்ற பெண் கொசுக்கள் மூலம் மலேரியா நோய் மனிதர்களுக்கு பரவுகிறது என்பதை டாக்டர் ரொனால்டு ரோஸ் கண்டுபிடித்தார். இதை அங்கீகரிக்கும் விதமாக இந்த நாளை ‘உலக கொசு ஒழிப்பு தினமாக’ கடைபிடிக்கப்படுகிறது. கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதே கொசு தினம் அனுசரிக்கப்படுவைத்தன் நோக்கம். கொசுக்கள் 210 மில்லியன் வருடங்களுக்கு முன்பே தோன்றிவிட்டன. 

ADVERTISEMENT

கண்களுக்கு காஜல்களைப் பயன்படுத்தும்போது நாம் மிகக் கவனமாக இருக்க வேண்டியவைகள்

கொசுக்கள் வகைகள்

கொசுவானது (mosquitoes) க்யூலிசிடே (Culicidae) குடும்பத்தை சேர்ந்த ஒரு பூச்சியினம். இவை உருவத்தில் சிறியவையாக இருந்தாலும் நோய்களைப் பரப்புவதில்  அசுர வேகம் கொண்டவை. உலகளவில் 3,000க்கும் மேற்பட்ட கொசு வகைகள் உள்ளது. அதில் உலகளவில் மூன்று விதமான கொசுக்கள் மட்டும்தான் மிகக் கொடிய நோய்களை பரப்புகின்றன. மலேரியாவை பரப்பும் அனோபிலஸ் (Anopheles), டெங்கு மற்றும் சிக்கன் குனியாவை பரப்பும் ஏடிஸ் (Aedes) மற்றும் யானைக்கால்  நோயைப் பரப்பும் கியூலெக்ஸ் (Culex) போன்றவையே அந்த மூன்று கொசுக்கள். 

அனாஃபிலஸ் என்கிற பெண் கொசுக்கள் (mosquitoes) கடிப்பதன் மூலம் மலேரியா நோய்  பரவுகிறது. ‘பிளாஸ்மோடியம்’ என்ற ஒட்டுண்ணி ‘அனோபிலிஸ்’ எனும் பெண் கொசுவின் வயிற்றில் தொற்றிக் கொள்கிறது. இந்த கொசு ஒருவரை கடிப்பதன் மூலம், மலேரியா பரவுகிறது. இது உடலில் கல்லீரலை தாக்குகிறது. பின் ரத்த சிவப்பு அணுக்களை அழிக்கிறது. சில சமயங்களில் மரணத்தையும் ஏற்படுத்துகிறது.

ADVERTISEMENT

twitter

ஏடீஸ் (Aedes) வகை கொசுக்கள் நம்மை பகல் நேரத்தில் கடித்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. க்யூலெக்ஸ் (Culex) வகை கொசுக்கள் இரவு நேரத்தில் கடிக்கின்றன. கடற்கரைப் பகுதிகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் கியூலெக்ஸ் கொசுக்களால் பைலேரியா என்கிற யானைக்கால் நோய் உருவாகிறது. இவ்வகை கொசுக்கள் இரவில்தான் கடிக்கும். சாக்கடை, வயல்வெளி போன்ற இடங்களில் இவ்வகை கொசுக்கள் இனப்பெருக்கம் செய்து பல்கி பெருகுகிறது. யானைக்கால் வியாதிக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃப்ரீடம் சேல் : இந்த சேல் சீசனில் சலுகையில் வாங்க வேண்டிய சில பிராண்டட் பொருட்கள் !!

கொசுக்களால் ஏற்படும் பாதிப்புகள்

ஒரு சிறிய கொசுக்கடி (mosquitoes) பெரிய ஆபத்துகள் உருவாக வழிவகுக்கிறது. கொசுக்கடியால் மலேரியா, டெங்கு, சிக்கன்குனியா, ஜப்பானிய மூளையழற்சி, யானைக்கால்  நோய், மஞ்சள் காய்ச்சல், சிக்கா வைரஸ் பாதிப்பு போன்ற உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தும் நோய்கள் ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் அதிகம் பேர் உயிரிழக்க காரணமாக இருப்பது  கொசுக்கள்தான். 

ADVERTISEMENT

தேங்கிய நீர் நிலைகள், வடியாத மழைநீர், திறந்தவெளி சாக்கடைகள், குப்பைத் தொட்டிகள், மூடப்படாத நீர் இருக்கும்  பாத்திரங்கள் மூலமாக கொசுக்கள் பெருகுகிறது. மழைக் காலமானது கொசு பெருகி பல நோய்களைப் பரப்புவதற்கு ஏற்றதாக இருக்கிறது. தற்போது மழை காலம் தொடங்கி இருப்பதால், கொசுக்கள் உருவாவதை நாம் தடுக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு காணலாம்,

கொசு உற்பத்தியை தடுக்கும் முறைகள்

  • வீட்டுச் சுவர்கள் மீது ‘டி.டி.டி.’ மருந்தைத் தெளித்தால் கொசுக்கள் ஒழியும். வீட்டைச் சுற்றியும், தெருவோர சாக்கடையிலும் ‘டெல்டாமெத்திரின்’ மருந்தைத் தெளிக்க கொசுக்கள் மடியும். மக்கள் நெருக்கடி மிகுந்த குடியிருப்புகளில் 1000 கன அடி இடத்துக்கு 4 அவுன்ஸ் ‘கிரிசாலைப் புகைய விட்டால் கொசுக்கள் அழியும். 
  • சுத்தமான தண்ணீரில் மலேரியா கொசுக்கள் உற்பத்தி ஆவதால், வீட்டின் மேல்நிலைத் தொட்டிகளையும்  கீழ்நிலைத் தொட்டிகளையும் நன்றாக மூடிவைக்க வேண்டும். குப்பைத் தொட்டி, தேங்காய் மூடி, உபயோகம் அற்ற டப்பாக்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஸ்லோவாக்கியா சதுரங்க போட்டியில் 6வது முறையாக உலக சாம்பியன் : திருச்சி ஜெனிதா சாதனை!

twitter

ADVERTISEMENT
  • வீட்டில் பாழடைந்த கிணறு இருந்தால் மூடிவிட வேண்டும். வீட்டில் உள்ள நீர்த் தொட்டிகளை வாரம் ஒரு முறை சுத்தம்செய்து, குறைந்தது இரண்டு மணி நேரம் காயவைப்பதன் மூலமும் கொசு உற்பத்தியைத் தடுக்கலாம். 
  • வீடுகளில் வாளிகளில் நிரப்பிவைக்கப்படும் தண்ணீரையும் வாரம் ஒரு முறை முற்றிலும் வெளியேற்றி, வாளியை இரண்டு மணி நேரம் காயவைத்துப் பயன்படுத்த வேண்டும். 
  • பூந்தொட்டிகள், ஏர்கூலர் ஆகியவற்றில் உள்ள தண்ணீரையும் இவ்வாறே சுத்தப்படுத்த வேண்டும். வீட்டைச் சுற்றி தண்ணீர் மற்றும் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வது, சாக்கடை நீர் தேங்குவதைத் தவிர்ப்பது, தெருக்களைச் சுத்தமாக வைத்துக்கொள்வது போன்ற நடவடிக்கைகள் மூலமும் கொசுக்களின் உற்பத்தியைத் தடுக்க முடியும்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

20 Aug 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT