அமேசான் காடுகளில் திடீரென பற்றி எரியும் காட்டுத்தீ : பூமியின் நுரையீரல் அழியும் அபாயம்!

அமேசான் காடுகளில் திடீரென பற்றி எரியும் காட்டுத்தீ : பூமியின் நுரையீரல் அழியும் அபாயம்!

உலகளவில் மிகவும் பிரபலமான காடு பிரேசிலின் அமேசான் காடு ஆகும். இந்தக் காட்டில் பல அரிய வகை உயிரினங்கள் வசித்து வருகின்றன. உலகின் நுரையீரலாக கருதப்படும் அமேசான் காடுகள் பற்றி எரிந்து வருகிறது. எனவே பிரேசிலின் சாவ் பாலோ நகரத்தின் பெரும்பாலான இடங்களில் காட்டுத் தீயின் புகை அதிகரித்து வருகிறது. இந்த வருடத்தில் அமேசான் காடுகளில் அதிகமான தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் பிரேசிலின் அமேசான் காடுகளில் 9,500 இடங்களில் காட்டுத் தீ ஏற்பட்டு தீக்கிரையாகி வருகின்றன. 

முகுந்தா முகுந்தா கிருஷ்ணா : உங்கள் மனதை கொள்ளை கொள்ளும் கிருஷ்ணர் பாடல்கள் !

twitter

கடந்த ஆண்டு 40,000 முறை வனத்தீ ஏற்பட்ட நிலையில், தற்போது 8 மாத காலத்தில் மட்டுமே 74,000 முறை காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. முந்தைய காலங்களை விட கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 88 விழுக்காடு வரை அமேசான் காடுகள் அழிக்கப்பட்டதாக பிரேசில் நாட்டின் விண்வெளி ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. உலகின் கார்பன் டை ஆக்சைடை கட்டுக்குள் வைத்திருப்பதில் அமேசான் காடுகளின் பங்களிப்பு முக்கியத்துவம் வாய்ந்தது எனக் கருதப்படும் நிலையில், புவியின் நுரையீரல் எரிந்து வருகிறது என இயற்கை ஆர்வலர்கள் வேதனை தெரிவித்து வருகின்றனர். 

பொதுவாக இந்த பருவத்தில் காடுகளில் தீ பிடிப்பது இயல்பு என்றாலும் அமேசான் காட்டில் தீ பரவுவது சற்று கடினம் தான். எனினும் தற்போது மக்களின் செயல்பாடுகளால் காட்டுத் தீ சம்பவங்கள் அமேசான் காடுகளில் அதிகரித்துள்ளதாக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். அமேசான் காட்டுத் தீயால் அரிய வகை உயிரினங்களும் உயிரிழந்திருக்கின்றனர். அதன் புகைப்படங்கள் வெளியாகி மனதை வதைக்கின்றன. இந்தக் காட்டுத் தீயால் மேலும் பாதிக்கப்படுவது அமேசானில் வாழும் பழங்குடிகள்தான். ஏறத்தாழ 9 லட்சம் பழங்குடிகள் பிரேசிலில் உள்ள அமேசான் வனப்பகுதியில் வாழ்கிறார்கள்.

twitter

அமேசானுக்கு ஏற்படும் எந்த சிறு பாதிப்பும் முதலில் இவர்கள் மீதுதான் தாக்கம் செலுத்தி வருகிறார்கள். அருகாமையில் உள்ள பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட காலநிலை மாற்றமும், அதீத விவசாய உரத்துக்கு பயன்படும் மீத்தேன் வாயு உருவாக்கமும் இந்த காட்டுத் தீ ஏற்படுவதற்கு காரணம் என கூறப்படுகிறது. ஆனால் இதன் தொடக்கம் எங்கே என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் தீ பரவுவதை தற்போதுவரை தடுக்கவும் முடியவில்லை. இந்த காட்டுத் தீ காரணமாக ஏற்பட்ட புகை பிரேசில், சாவ் பாவ்லோ, கொலம்பியா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி உள்ளது. அந்த அளவிற்கு இந்த காட்டுத் தீ பெரிதாக்கிக் கொண்டே செல்கிறது.

உங்கள் அன்பானவர்களுடன் பகிர இனிய இரவு வணக்கங்கள்!

twitter

மிக முக்கியமாக சாட்டிலைட் மூலமாக பார்த்தாலே தெரியும் அளவிற்கு இந்த காட்டுத் தீ விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஒரு பக்கம் அண்டார்டிக்காவில் ஐஸ் வேகமாக உருகிக் கொண்டு இருக்கிறது. இன்னொரு பக்கம் தற்போது அமேசான் காடுகள் எரிந்து கொண்டு இருக்கிறது. இயற்கையின் இந்த கோபம் உலக அழிவிற்கான அறிகுறியாக இருக்குமோ என்று இயற்கை ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் அமேசான் காட்டுத் தீ தொடர்பில் தமது வேதனையை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார், ஆஸ்கார் நாயகன் லியோனார்டோ டிகாப்ரியோ. 

 


அதில் இந்த கிரகத்தின் மிகப்பெரிய மழைக்காடு அமேசான். இது பூமியன் நுரையீரல் போன்றது. இது கடந்த 16 நாட்களாக காட்டு தீயால் அழிந்து வருகிறது என்று தன்னுடைய வேதனையை குறிப்பிட்டுள்ளார். நடிகர் டிகாப்ரியோ உலகின் பருவநிலை மாற்றம் தொடர்பில் தொடர்ந்து விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புவியின் ஆக்சிஜனில் 20 சதவீதத்தை அமேசான் காடுகள்தான் உருவாக்குகின்றன.  நாம் அனைவரும் நல்ல காற்றை சுவாசிக்க வேண்டுமானால் அமேசான் உயிருடன் இருக்க வேண்டும் எனபதே நிதர்சனம்! 

நீல நிறத்தில் மிளிர்ந்த கடல்.. அழகாய் இருந்தாலும் ஆபத்து தான் !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.