ஆகாயத்திலேயே அஸ்தமனமான சௌந்தர்யா.. இறுதியாக சொன்ன ரகசியம்.. கண்ணீரில் இயக்குனர்..

ஆகாயத்திலேயே அஸ்தமனமான சௌந்தர்யா.. இறுதியாக சொன்ன ரகசியம்.. கண்ணீரில் இயக்குனர்..

90ஸ் கிட்ஸ்களின் மனம் கவர்ந்த நடிகை சௌந்தர்யா. அவரது அழகும் திறமையையும் கண்டு தமிழ் சினிமா அவருக்கு பல வாய்ப்புகளை வழங்கியது.

இவர் முதல் முதலில் தமிழில் அறிமுகம் ஆன திரைப்படம் "பொன்னுமணி" இந்தப் படத்தை இயக்குனர் ஆர் வி உதயகுமார் இயக்கினார். இதில் கார்த்திக்குடன் ஜோடி சேர்ந்து நடித்தார் சௌந்தர்யா (soundarya).

முதல் படத்திலேயே தனது தனித்துவமான நடிப்பால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டவர் சௌந்தர்யா. அவருடைய உதடு சுழிக்கும் சிரிப்பிற்காகவே அவரது திரைப்படங்களை பல முறை பார்த்த ரசிகர்களும் உண்டு.

இப்போது போல அந்த சமயத்தில் பென் ட்ரைவுக்குள் சேமிக்க முடியாததால் அப்போதெல்லாம் பலமுறை ரசிகர்கள் நேரில் சென்று படங்களை பார்ப்பது வழக்கமாக இருந்தது.

Youtube

அந்த வகையில் சௌந்தர்யாவிற்காகவே பல படங்கள் ஓடியது. அதன் பின்னர் சௌந்தர்யாவின் கிராஃப் ஏறு வரிசையில்தான் இருந்தது.

ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்ட பலருடன் சௌந்தர்யா முன்னணி நாயகியாக வலம் வந்தார். அதன்பின்னர் தெலுங்கு மற்றும் கன்னட திரைப்படங்களில் முன்னணி நாயகியான சௌந்தர்யா ரகு என்பவரை 2003ம் வருடம் திருமணம் செய்தார்.

1992 முதல் 2004 வரை முன்னணியில் திகழ்ந்த சௌந்தர்யா பாஜக கட்சியில் சேர்ந்தார். கட்சி கூட்டத்துக்காக கரீம்நகருக்கு செல்லும்போது இவர் பயணித்த விமானம் விபத்துக்குள்ளானதில் ஆகாயத்திலேயே அஸ்தமனமானார் சௌந்தர்யா.

 

Youtube

அவர் இறக்கும் முன்னர் அவருடைய அப்பாவின் பெயரில் பெங்களுருவில் ஏழை அனாதை குழந்தைகள் படிப்பதற்காக 3 பள்ளிக்கூடங்களை அவர் நிறுவி இருந்தார். அதன் பின்னர் அப்பள்ளிகளை அவரது அம்மா கவனித்துக் கொள்கிறார். கூடவே சௌந்தர்யாவின் மனம் சாந்தி அடையும் வகையில் பல பள்ளிகள், அனாதை இல்லங்களை சௌந்தர்யாவின் பெயரிலேயே நடத்தி வருகிறார் அந்த அன்னை.

இவருடைய திடீர் மரணம் இன்று வரை அவரது ரசிகர்கள் மனதில் ஆறாத வடுவாகவே இருக்கிறது. இந்நிலையில் நீண்ட நாள் கழித்து சௌந்தர்யா இறக்கும் முன்னர் தன்னிடம் கூறிய ரகசியம் ஒன்றை வெளியிட்டிருக்கிறார் இயக்குனர் ஆர் வி உதயகுமார்.

Youtube

சௌந்தர்யாவை தமிழில் கொண்டு வந்த இயக்குனர் என்பதால் ஆர் வி உதயகுமார் மீது சௌந்தர்யாவிற்கு பாசம் அதிகமாக இருந்ததும் அவர் இயக்குனர் ஆர் வி உதயகுமாரை அண்ணா என்றுதான் அழைப்பார் என்பதும் இப்போதுதான் தெரிய வந்துள்ளது.

இறப்பதற்கு முன்னர் கடைசியாக இயக்குனர் ஆர் வி உதயகுமாரிடம் பேசிய சௌந்தர்யா தான் இரண்டு மாத கர்ப்பமாக இருப்பதாகக் கூறி இருக்கிறார். தவிர்க்க முடியாத காரணங்களால் அவர் பிரச்சாரத்திற்கு செல்ல நேர்ந்ததால் திருமணமான ஒரே வருடத்தில் வயிற்றில் இரண்டு மாத குழந்தையுடன் நம் அனைவருக்கும் பிரியமான சௌந்தர்யா ஆகாயத்திலே அஸ்தமனம் ஆகியிருக்கிறார்,

மரண வீட்டில் துக்கம் கேட்க ஆர் வி உதயகுமார் சென்ற போது அப்போதுதான் கட்டப்பட்ட புதிய வீட்டில் ஆர் வி உதயகுமாரின் படமும் இருந்திருக்கிறது. அதைக் கண்டு நெஞ்சு நெகிழ்ந்தது என்று கண்ணீருடன் கூறி இருக்கிறார் இயக்குனர் ஆர் வி உதயகுமார். எத்தனை வருடம் ஆனாலும் சௌந்தர்யாவின் மரணம் அனைவர் மனதையும் சற்று கனமாக்கி விடுவது உண்மைதான்.

 

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.