மாணவர்களுக்கு ஷாப்பிங் செய்ய ஒரு வழிகாட்டுதல் – எப்படி சரியான ஷாப்பிங் செய்வது?

மாணவர்களுக்கு ஷாப்பிங் செய்ய ஒரு வழிகாட்டுதல் – எப்படி சரியான ஷாப்பிங் செய்வது?

ஷாப்பிங் என்று வந்துவிட்டாலே அனைவருக்கும் ஒரு உற்சாகம் பிறந்து விடும். இதற்கு வயது வரம்பு இல்லை. அப்படி இருக்கும் போது இளம் வயது மாணவர்களுக்கு சொல்லவா வேண்டும்! மாணவர்களுக்கு தொடர்ந்து ஏதாவது ஒரு பொருளை வாங்க வேண்டும் என்கின்ற தேவைகள் இருந்து கொண்டே இருக்கும். அது மட்டும் அல்லாது, சக மாணவர்கள் சில பொருட்களை வாங்கும் போது, தானும் அதை வாங்க வேண்டும் என்று தூண்டப்படுவார்கள். 

ஒரு கணம் அந்த பொருள் அல்லது இப்போது இந்த ஷாப்பிங் (shopping) உண்மையிலேயே நமக்குத் தேவையான என்று சிந்திக்க மாட்டார்கள். அதிலும் ஒரு சிலர் கடன் வாங்கியாவது ஷாப்பிங் செய்து விட வேண்டும் என்று எண்ணுவார்கள். இதற்கு அவர்களது வாழ்க்கை அனுபவம் குறைந்த வயதும், பணத்தின் மதிப்பை பற்றி தெரியாமல் இருக்கும் குறைந்த விழிப்புணர்வும் தான்.

நீங்கள் பள்ளி அல்லது கல்லூரி மாணவரா?

நீங்கள் உங்கள் ஷாப்பிங் தேவைகளையும், ஆர்வத்தையும் கட்டுப்படுத்தி, உங்கள் பணத்தை சேமிக்க நினைகின்றீர்களா? அப்படி என்றால் தொடர்ந்து படியுங்கள்! உங்களுக்காக இங்கே சில பயனுள்ள குறிப்புக்கள் உள்ளன:

pixabay

1. தேவைகளை முதலில் நிர்ணயிங்கள்:

நீங்கள் ஷாப்பிங் செய்ய வேண்டும் என்று எண்ணிய அடுத்த வினாடியே, உங்களுக்கு எது தேவை, எது தேவை இல்லை என்பதை நிர்ணயிங்கள். இதற்குத் தகுந்தவாறு உங்கள் ஷாப்பிங்கை முடிவு செய்யுங்கள்.

ஆரோக்கியமான உணவு முறைகளால் சருமத்தின் காவலன் கொலாஜனை அதிகரிக்கும் வழிமுறைகள்!

2. மால்களை தவிருங்கள்:

அதிகமாக ஷாப்பிங்  (shopping) மால்களுக்கு செல்வதை தவிர்ப்பது நல்லது. இது உங்களை தேவையற்ற பொருட்களை வாங்கத் தூண்டுவதோடு, நூறு ரூபாயில் முடிய வேண்டிய உங்கள் ஷோப்பிங்கை ஆயிரம் ரூபாய்க்கு இழுத்து சென்று விடும்.

3. ஷாப்பிங் நேரத்தை தள்ளிப்போடுங்கள்:

ஒரு பொருளை வாங்க வேண்டும் என்று நினைத்த உடனே ஷாப்பிங் செய்ய கிளம்பி விடாதீர்கள். உங்களது ஷாப்பிங்கைத் தள்ளிப் போடுங்கள். இப்படி நேரத்தைத் தள்ளிப் போடும் போது, உங்கள் தேவைகளும் மாறும், அதனால் வாங்க வேண்டிய சூழும் மாறும்.

pixabay

4. தள்ளுபடி விலைகள் மற்றும் கூப்பன்களை பயன்படுத்துங்கள்:

முடிந்த வரை இணையதளங்களில் கிடைக்கும் தள்ளுபடி விற்பனைகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள். தள்ளுபடி கூப்பன்கள் மற்றும் வவுச்சர்கள் போன்றவற்றை பயன்படுத்தி ஷாப்பிங் (shopping) செய்யுங்கள்.

உங்கள் ஸ்மார்ட் போனில் குறுஞ்செய்தி / தட்டச்சு விளையாட்டுகளை விளையாட தயாரா?

5. விலைகளையும், தரத்தையும் ஒப்பிட்டு பார்த்து வாங்க வேண்டும்:

ஒரு பொருளை தேர்வு செய்வதற்கு முன், அந்த பொருளை வேறு நிறுவனத்தை சேர்ந்த மற்ற பொருட்களோடு, விலை மற்றும் தரம் ஆகியவற்றை ஒப்பிட்டு பாருங்கள். இப்படி செய்யும் போது, சரியான விலையில் தரமான பொருளை வாங்க முடியும்.

6. கடன் வாங்கி செலவு செய்யாதீர்கள்:

எந்த தருணத்திலும் கடன் வாங்கி பொருட்களை வாங்காதீர்கள். இது உங்களாது சுமைகளை அதிகமாக்குவதோடு, அந்த கடனை திருப்பி கட்டுவதை ஒரு சவாலாகவே உங்கள் வாழ்க்கையில் மாற்றி விடும். இதனால் உங்கள் படிப்பும் பாதிக்கப்படலாம்.

7. கிடைக்கும் பாக்கட் பணத்தில் ஒரு பங்கை சேமியுங்கள்:

உங்கள் பெற்றோர்கள் உங்களுக்கு கொடுக்கும் பாக்கட் பணத்தை சேமிக்க முயற்சி செய்யுங்கள். பெற்றோர்கள் கொடுக்கும் அத்தனை பணத்தையும் செலவு செய்யக் கூடாது. அதில் ஒரு பங்கை உங்கள் சேமிப்பில் போட்டு விட வேண்டும். இது உங்கள் எதிர்கால அவசர அல்லது முக்கிய தேவைகளை, பணம் இல்லாத சூழலில், யாரிடமும் கடன் வாங்காமல் பூர்த்தி செய்து கொள்ள உதவும்.

அழகை அதிகரிக்க இந்த ஒரு வாதுமைப் பழத்தை சாப்பிட்டால் போதும்!

8. மொத்த விலைக் கடைகளில் வாங்குங்கள்:

முடிந்த வரை மொத்த விலைக் கடைகளுக்கு சென்று பொருட்களை வாங்க முயற்சி செய்யுங்கள். அப்படி செய்யும் போது, நிச்சயம், சில்லறை விலையில் வாங்கும் விலையை விட, அந்த பொருளுக்கு இரண்டு ரூபாயாவது குறைவாக இருக்கும். இது உங்களுக்கு ஒரு நல்ல சேமிப்பாகவும் இருக்கும்.

pixabay

9. வெறும் வயிற்றில் ஷாப்பிங் செய்யாதீர்கள்:

எந்த சூழலிலும் வெறும் வயிற்றில் பசியோடு ஷாப்பிங் செய்யாதீர்கள். அப்படி செய்தால், தேவை இல்லாமல், உங்கள் பசி, உணவு பொருளை வாங்கி உண்ண வேண்டும் என்று உங்கள் மனதை தூண்டும். இதனால் நீங்கள் தேவை இல்லாமல், அதிக விலை கொடுத்து நொறுக்கு தீனிகள் அல்லது வேறு ஏதாவது தின்பண்டங்களை வாங்க நேரிடலாம். இது ஒரு தேவையற்ற செலவாகவும் ஆகலாம்.

10. தினசரி எந்த நேரத்தில் விலை குறைக்கப்பட்டு விற்கப்படுமோ, அந்த நேரத்தில் ஷாப்பிங் செய்யுங்கள்:

பெரும்பாலான பெரிய சில்லறை வியாபாரக் கடைகளில், குறிப்பாக சூப்பர் மார்கெட்களில், தினமும் மாலை நேரங்களில் காய் மற்றும் பழங்கள் குறைந்த விலையில் தனியாக விற்கப்படும். அப்படி நீங்கள் ஒரு சரியான நேரத்தை தெரிந்து கொண்டு நீங்கள் விரும்பு பொருட்களை வாங்கலாம். இது உங்கள் சேமிப்பை அதிகரிக்கும், செலவை குறைக்கும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.