குழந்தைகள் தூங்கும்போது தாம்பத்யம் வைத்துக் கொள்கிறீர்களா ? இது உங்களுக்குத்தான் !

குழந்தைகள் தூங்கும்போது தாம்பத்யம் வைத்துக் கொள்கிறீர்களா ? இது உங்களுக்குத்தான் !

தாம்பத்ய சுகத்தின் அருமை பெருமைகளை பற்றி அதிகம் பேச வேண்டிய அவசியமே இல்லை. அதன் சந்தோஷங்கள் அனுபவிப்பவருக்கு நன்கு விளங்கும். சந்ததியை பெருக்குவதற்காகவே தாம்பத்ய சுகம் ஏற்பட்டது. அதனை அடிப்படையாக கொண்டே அவர்களின் திருமண வாழ்க்கை அமைக்கப்பட்டது.

குழந்தை பிறந்த உடன் இந்த இன்பங்கள் குறைய தொடங்குகின்றன. முதல் ஐந்து வயது வரைக்கும் குழந்தைகள் தங்கள் பெற்றோர் அருகில்தான் உறங்குகின்றனர். அந்த சமயத்தில் தாம்பத்ய ஆசைகளை சூழ்நிலைக்காக பலர் கட்டுப்படுத்திக் கொள்கின்றனர்.

பெரும்பாலான தம்பதிகள் இரவில் குழந்தைகள் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விட்டதை உறுதி செய்த பின்னர் தாம்பத்யத்தை தொடங்குவார்கள். இது தம்பதிகளுக்குள் பயம் நிறைந்த ஒரு கலவி (sex)ஆகவே இருக்கிறது. இது பல்வேறு விதமான மனப்பிரச்னைகளுக்கு கொண்டு செல்லும் என்று மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.                     

pinterest

பெரும்பான்மை சமயங்களில் குழந்தைகள் சிறு அசைவிற்கே விழித்துக் கொள்கின்றன. தாம்பத்ய தாபங்கள் காரணமாக இதனை சரிவர கவனிக்காமல் தம்பதிகள் அவசரமாக இயங்குகின்றனர். தம்பதிகளை பொறுத்தவரை குழந்தைகள் உறங்கியதாகவே நினைத்துக் கொள்வார்கள்.

உண்மையில் நூற்றுக்கு 70 குழந்தைகள் இந்த அவசர தாம்பத்யத்தின் சாட்சியாக மாறி நடப்பதைக் கவனிக்கின்றனர் என்கிறது ஆய்வு முடிவுகள். இதனால் குழந்தைகளின் ஆழ்மனதில் தந்தை மற்றும் தாயின் பிம்பங்கள் தவறாகவே பதிகின்றன. தாயை தந்தை துன்புறுத்துகிறார் என்று அவை யோசிக்க வாய்ப்பிருக்கிறது.                         

 

Pinterest

பெண் குழந்தைகள் இந்த சாட்சி நிலையில் இருக்கும்பட்சத்தில் அவர்களின் திருமணத்தின் மீது கூட அவர்களுக்கு நம்பிக்கை இல்லாமல் போகலாம். தாம்பத்யம் என்றாலே அருவெறுப்பு பயம் மற்றும் கோபம் ஆகியவை அக்குழந்தைகளுக்கு பிற்காலத்தில் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

குழந்தை பிறந்தததற்காக தாம்பத்யம் நிறுத்த தேவையில்லை. குழந்தைகள் கண் பார்வை படாத இடங்களில் உங்கள் தாம்பத்யத்தை நிகழ்த்துவதுதான் சரியான தீர்வு. இதை பற்றி முன்னரே யோசித்து முடிவெடுத்து இடம் தீர்மானித்து அதன் பின்னர் அதனை செயல்படுத்த வேண்டும் என்று குழந்தைகள் மனோதத்துவ வல்லுநர்கள் பரிந்துரைக்கிறார்கள்.                     

Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                               

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.