கல்லூரி மாணவர்கள் தங்கள் பணத்தை திட்டமிட்டு சேமிக்க சில அவசிய குறிப்புகள் !

கல்லூரி மாணவர்கள் தங்கள் பணத்தை திட்டமிட்டு சேமிக்க சில அவசிய குறிப்புகள் !

கல்லூரி என்றாலே, குதூகலமும், அதற்கு ஏற்ற செலவுகளும் இருக்கத் தான் செய்யும். ஏதோ ஒரு தொகையை தினசரி அல்லது வாரம் அல்லது மாதம் கணக்கில் பெற்றோர்கள் கல்லூரிக்கு செல்லும் தங்கள் மகன் அல்லது மகளுக்கு கொடுக்கின்றனர். இதுவும் ஒரு வகையில் மாணவர்களுக்கு கிடைக்கும் வருமானம் என்றே சொல்லலாம். 

மேலும் சில மாணவர்கள் பகுதி நேர வேலை பார்த்து அதிலும் தங்களுக்கென்று ஒரு வருமானத்தை ஈட்டுகின்றனர். ஆக, நீங்கள் படிக்கும் காலத்திலேயே, உங்களுக்கு செலவுக்காக ஒரு வருமானம் கிடைகின்றது. ஆனால் இந்த பணத்தை நீங்கள் எப்படி திட்டமிட்டு செலவு செய்கின்றீர்கள் மற்றும் சேமிக்கின்றீர்கள் என்பதில் தான் உங்கள் திறமை உள்ளது.

மேலும், தற்போது நீங்கள் கற்றுக்கொள்ளும் உங்கள் நிதியை கையாளும் திறன், நீங்கள் உங்களுக்கென்று தனியொரு வாழ்க்கையை தொடங்கும் போது பெரிதும் உதவியாக இருக்கும். இதனால் நீங்கள் பாதுகாப்பாகவும், திட்டமிட்டும், மேலும் மகிழ்ச்சியாகவும் உங்கள் வாழ்க்கையை நடத்த இது உதவியாக இருக்கும்.

நீங்கள் கல்லூரி படிக்கும் மாணவராக இருந்து, உங்களுக்கு கிடைக்கும் பணத்தை எப்படி திட்டமிட்டு செலவு செய்வது மற்றும் சேமிப்பது (savings) என்று, சிந்தித்துக் கொண்டிருந்தால், உங்களுக்காக சில சுவாரசியமான மற்றும் பலன் தரக்கூடிய குறிப்புகள் இங்கே, உங்களுக்காக; தொடர்ந்து படியுங்கள்

Youtube

1.   ஒரு பட்ஜெட்டை வகுக்க வேண்டும்: உங்கள் பணத்தை திட்டமிட வேண்டும் என்றால், முதலில் உங்களுக்கென்று ஒரு பட்ஜெட்டை வகுக்க வேண்டும். அந்த பட்ஜெட் உங்களது அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதோடு, நீங்கள் ஒரு தொகையை சேமிக்க உதவும் வகையிலும் இருக்க வேண்டும். தொடக்கத்தில் சில குழப்பங்கள் ஏற்படத் தான் செய்யும், ஆனால் காலப்போக்கில், உங்களது தேவைகளை நீங்கள் சறியாக புரிந்து கொண்டு, உங்கள் பட்ஜெட்டை சரியாக வகுக்கத் தொடங்குவீர்கள்.

2.   வரவு செலவை எழுதி வையுங்கள்: அன்றாடம் நீங்கள் செய்யும் செலவுகளை எழுதி வையுங்கள். இதற்கென்றே ஒரு புத்தகத்தை தனியாக வைத்துக் கொள்ளுங்கள். இப்படி தினமும் எழுதி வைக்கும் வரவு செலவு கணக்கை, மாத இறுதியில் ஒரு கண்ணோட்டம் விடுங்கள். அப்படி செய்யும் போது நீங்கள் செய்த செலவுகளில் எத்தனை தேவையானது, எத்தனை தேவையற்றது மேலும் எத்தனை செலவுகளை பிறகு தள்ளிப்போட்டிருக்கலாம் என்று பாருங்கள். இப்படி மாதா மாதம் பார்க்கும் போது, நீங்கள் தானாகவே உங்கள் செலவுகளை கட்டுப்பாடிற்குள் கொண்டு வந்து விடுவீர்கள்.

3.   தேவையான செலவுகளை மட்டுமே செய்யுங்கள்: கல்லூரி வாழ்க்கையில் உங்கள் நண்பர்களும், உடன் படிப்பவர்களும் ஏதாவது ஒரு புதிய ஆடை அல்லது வேறு பொருட்களை வாங்கினால், அதனை நோக்கி உங்கள் மனம் ஈர்க்கப்படுவது இயல்பே. ஆனால், அவசரப்பட்டு அதை நீங்கள் வாங்க முயற்சிக்கும் முன், ஒரு கணம் அந்த பொருள் உங்களுக்குத் தேவைதான என்று சற்று சிந்தித்து பாருங்கள். இப்படி செய்யும் போது, நீங்கள் உங்களுக்கு அத்யாவசியமான மற்றும் தேவையான பொருளை மட்டுமே வாங்க முயற்சி செய்வீர்கள். தேவையற்றதை தவிர்த்து விடுவீர்கள். இதனால் உங்கள் பணம் சேமிக்கப்படும்.

Youtube

4.   கடன் வாங்காதீர்கள்; எந்த சூழலிலும் உங்கள் நண்பர்களிடம் இருந்து கடன் வாங்கி ஒரு பொருளை வாங்க முயற்சி செய்யாதீர்கள். அப்படி ஏதாவது உங்களுக்கு செலவுகள் ஏற்பட்டால் முடிந்த வரை அதனை சில நாட்களுக்குத் தள்ளிப்போடுங்கள். அப்படி சில நாட்களுக்குத் தள்ளிப்போடும் போது, உங்களுக்கு காலப் போக்கில் அந்த பொருள் தேவைப்படாமலும் போகலாம். இதனால், அது உங்களுக்கு ஒரு தேவையற்ற செலவாகவும் இருந்திருக்கும். மேலும் நீங்கள் உங்கள் பணத்தையும் சேமித்து இருந்திருப்பீர்கள்.

5.   விலை மற்றும் தரத்தை ஒப்பிட்டே பொருட்களை வாங்க வேண்டும்:  நீங்கள் ஒரு பொருளை வாங்க எண்ணினால், அதனை உடனடியாக வாங்கி விடாமல், சிறிது நேரம் எடுத்துக் கொண்டு, அந்த பொருளுக்கு இணையான ஒன்றை மற்றும் வேறு நிருவனத்தோடும் அதன் விலை மற்றும் தரத்தை ஒப்பிட்டு பார்க்க வேண்டும். அப்படி ஒப்பிட்டு நீங்கள் ஒரு பொருளை தேர்வு செய்யும் போது விலை மற்றும் தரம் இரண்டுமே உங்கள் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் இருக்கும்.  

6.   கட்டாயம் மாதம் ஒரு தொகையை சேமிப்பில் போட வேண்டும்:  எந்த சூழலிலும், நீங்கள் முதலில் ஒரு தொகையை உங்கள் சேமிப்பிற்கு எடுத்து வைத்து விட்டு, பின் மீதம் இருக்கும் பணத்தையே செலவு செய்ய பயன் படுத்த வேண்டும். அப்படி கட்டாயமாக ஒரு தொகையை நீங்கள் சேமிப்பில் போடும் போது, உங்களுக்கு ஒரு பாதுகாப்பு வைப்பு நிதி உண்டாகின்றது.

pinterest

7.   தள்ளுபடி விலைகளில் பொருட்களை வாங்கலாம்: உதாரணத்திற்கு  நீங்கள் சில ஆடைகள் வாங்க எண்ணினால், உடனடியாக கடைக்கு சென்று வாங்கி விடாமல், விழாக் கால தள்ளுபடி, வருட இறுதி தள்ளுபடி மற்றும் ஆடி மாத தள்ளுபடி என்று சிறப்பு சலுகைகள் இருக்கும் நேரங்களில் வாங்கலாம். அப்படி வாங்கும் போது, உங்களுக்கு நிச்சயம் ஓரளவிற்காவது குறைந்த விலையில் வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். இதனால் உங்கள் சேமிப்பும் அதிகரிக்கும்.

8.   மாணவர்கள் சலுகை: பல உணவு விடுதி, புத்தக கடைகள் மற்றும் பயண சீட்டு போன்றவற்றில் மாணவர்களுக்கென்றே சிறப்பு சலுகைகள் கிடைகின்றது. இதனை நீங்கள் பயன்படுத்தி ஓரளவிற்கு பணத்தை சேமிக்கலாம். வழக்கமாக விற்கும் விலையில் இருந்து மாணவர்களுக்கு இந்த சலுகையில் ஒரு குறிப்பிட்ட தொகையை கழித்து பின்னர் சேவைகள் வழங்கப்படும். இது உங்களுக்கு பயனுள்ளதாகவும், சேமிக்க உதவும் வகையிலும் இருக்கும்.

9. கிரெடிட் கார்டுகளை தவிர்ப்பது நல்லது: மாணவர்கள் முடிந்த வரை அல்லது முற்றிலும் கிரெடிட் கார்டுகளை தவிர்ப்பது நல்லது. அது உங்களை மேலும் மேலும் கடனில் பொருட்களை வாங்கத் தூண்டும்.  இதனால் உங்கள் கடன் சுமை அதிகரிக்கும். இதன் விளைவாக உங்கள் சேமிப்பு மற்றும் வருமானமும் பாதிக்கலாம். அதனால் முடிந்த வரை கிரெடிட் கார்டை தவிர்ப்பது நல்லது.

10. இணையதள சேவைகள்: கடைகளில் விற்கும் விலைகளை விட இணையதளங்களில் பொருட்களின் விலை சற்று குறைவாகவே கிடைக்கும். அதனால் நீங்கள் இந்த சேவைகளையும் பயன்படுத்தி உங்கள் செலவை குறைத்து, சேமிப்பை அதிகரிக்கலாம். 

pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன