தனியார் தொலைக்காட்சியில் நடந்து வரும் பிக் பாஸ் 3 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று வருகிறது. இந்த வாரம் ரேஷ்மா வெளியேற்றப்பட்ட நிலையில் நேற்று நடிகர் சரவணன், பிக் பாஸ் வீட்டிலிருந்து திடீரென வெளியேற்றப்பட்டார். யாரும் எதிர்பார்க்காத நிலையில் சரவணனை (saravanan) வெளியேற்றியதால் போட்டியாளர்கள் மற்றும் பார்வையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்றைய எபிஸோட்டின் முடிவில் சரவணன் திடீரென கன்ஃபெஷன் அறைக்கு அழைக்கப்பட்டார்.
பிக் பாஸிலிருந்து வெளியேறினார் ரேஷ்மா.. சாக்ஷியால் அழும் அபிராமி, கண்டுகொள்ளாத முகென்!
அங்கு அவரிடம், மீரா மிதுன் – சேரன் பிரச்சனை குறித்து கமல்ஹாசன் பேசிக் கொண்டிருக்கும்போது பேருந்தில் பெண்களிடம் தவறாக நடந்துகொள்வதற்காகவே சிலர் வருவது குறித்துப் பேசினார். அப்போது கையை உயர்த்திய நீங்கள் தானும் அப்படி நடந்திருப்பதாகக் கூறினீர்கள். அந்தத் தருணத்தில் மீரா – சேரன் பிரச்சனையால் இதைக் கவனிக்க முடியவில்லை. அதற்கு பின்னர் ஜூலை 29ம் தேதி ஒளிபரப்பான நிகழ்ச்சியில் இதற்காக மன்னிப்பும் கேட்டீர்கள். ஆனால் இந்த நிகழ்ச்சி கோடிக்கணக்கானவர்களால் பார்க்கப்படுகிறது.
பெண்களை தவறாக நடத்துவதை அனுமதிக்க முடியாது. அதனை கண்டிக்கிறோம். இதன் காரணமாக நீங்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்படுகிறீர்கள். உங்களுக்கு இடதுபுறம் இருக்கும் கதவைத் திறந்து வெளியேறுங்கள் என்று சொல்லப்பட்டது. உடனே சரவணன் (saravanan) எதுவும் கூறாமல் அங்கிருந்து வெளியேறினார். இரு வாரங்களுக்கு முன்பாக, நடந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கிராம வாழ்க்கை டாஸ்க் கொடுக்கப்பட்டது. அந்த டாஸ்கின்போது இயக்குநர் சேரனுக்கும் மற்றொரு போட்டியாளரான மீரா மிதுனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது சேரன் தன் மீதான முன்பகையால் டாஸ்கின் போது என்னிடம் கடுமையாக நடந்து கொண்டதாக மீரா மிதுன் குற்றம் சாட்டினார். இந்நிலையில் வார இறுதியில் போட்டியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், இருவருக்குமிடையேயான பிரச்சனை குறித்து விரிவாக அலசினார். மேலும் குறும்படமும் போட்டு காட்டி விளக்கப்பட்டது. சேரன் மீதான மீரா மிதுனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்து பேசிய கமல், தங்களால் பேருந்துகளில் நெரிசலின்போது செல்ல முடியாது, அங்கு யாரும் வேண்டுமென்று வந்து இடிப்படிதில்லை. ஆனால் சிலர் உரசுவதற்காகவே வரலாம் என்றும் கூறினார்.
அப்போது சேரன் – மீரா இருவருக்கும் இடையே அமர்ந்திருந்த சரவணன் கையை உயர்த்தி என்னுடைய கல்லூரி காலத்தில் நான் அவ்வாறு இடித்துள்ளேன் என்று கூற கூட்டத்தினரும் கைத்தட்டி ஆரவாரம் செய்தனர். இதனை தொடர்ந்து சரவணனின் இந்த கருத்தை விஜய் டிவி ஒளிபரப்பியதும், சரவணின் கருத்தை வரவேற்று பார்வையாளர்கள் கைத்தட்டியதும் பெரும் விவாவதத்தை கிளப்பியது. சரவணின் இந்த கருத்துக்கு இணையத்தில் பெரும் எதிர்ப்புகள் கிளம்பின.
A Tamil channel aired a man proudly proclaiming he used the Public Bus Transport system to molest/grope women – to cheers from the audience.
And this is a joke. To the audience. To the women clapping. To the molester.
Damn. https://t.co/kaL7PMDw4u
— Chinmayi Sripaada (@Chinmayi) July 27, 2019
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த பாடகி சின்மயி பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய பேருந்து சேவையில் ஒருவர் பெருமையாக பெண்களை இடிப்பதற்காக செல்வேன் என்கிறார். அதையும் அந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒளிப்பரப்பியுள்ளது. இது பார்வையாளர்களுக்கும், கைத்தட்டும் பெண்களுக்கும், சம்பந்தப்பட்டவருக்கும் நகைச்சுவையாக இருக்கிறது” என்று ஆதங்கத்துடன் பதிவிட்டிருந்தார். இதனை தொடர்ந்து பிரச்னை பெரிதாவதை உணர்ந்த பிக் பாஸ் அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை ஹாட் ஸ்டாரிலிருந்து நீக்கினார்.
உண்மையை மறைக்க பிரச்சனையை சென்டிமெண்டாக திசை திருப்பிய சேரன் : மீரா அதிரடி பேட்டி!
இந்நிலையில் நேற்றைய நிகழ்ச்சியில் அதிரடியாக வெளியேற்றியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சரவணன் (saravanan) திடீரென பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்டது குறித்து ட்விட்டரில் அவரது ஆதரவாளர்கள் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். சரவணனை வெளியேற்ற சொல்லப்பட்ட காரணம் பொருத்தமாக இல்லை, அப்படியே வெளியேற்றுவதாக இருந்தாலும் வார இறுதியில் வெளியேற்றியிருக்கலாம் என்றும் அவர்கள் கேள்வி எழுந்துள்ளது.
இந்த வாரம் எவிக்க்ஷன் லிஸ்டில் அபிராமி, லாஸ்லியா, சாக்ஷி ஆகியோரோடு சரவணனின் பெயரும் இடம்பெற்றிருந்தது. ஆனால் வாரத்தின் முதல் நாளிலேயே சரவணன் வெளியேற்றப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரோமோவில், சரவணன் நேற்று திடீரென வெளியேற்றப்பட்டது குறித்த அறிவிப்பை பிக்பாஸ் வெளியிடுவது போன்ற காட்சி வெளியிடப்பட்டுள்ளது. பிக்பாஸின் இந்த அறிவிப்பை கேட்டு போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தாலும் கவின் மற்றும் சாண்டி ஆகிய இருவரும் கதறி அழுகின்றனர்.
#Day44 #Promo1 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/MOS3Kce7Ox
— Vijay Television (@vijaytelevision) August 6, 2019
பிக் பாஸ் வீட்டில் சரவணனுக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் கவின் மற்றும் சாண்டி என்பது தெரிந்ததே. இதையடுத்து சரவணனின் திடீர் இழப்பை அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றே தெரிகிறது. சரவணனினை வெளிஏற்றியது குறித்த அறிவிப்பு சேரனுக்கும் மன வருத்தத்தை தந்துள்ளதாக அவரது செய்கைகளில் இருந்து தெரியவருகிறது. மேலும் சரவணன் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் குழப்பத்தில் உள்ளனர்.
கவினுக்கு காதலி இருக்கிறார்… மதுமிதாவை வறுத்தெடுத்த பிரபலம் : பிக் பாஸ் ரகசியங்கள்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.