பிக் பாஸிலிருந்து வெளியேறினார் ரேஷ்மா.. சாக்ஷியால் அழும் அபிராமி, கண்டுகொள்ளாத முகென்!

பிக் பாஸிலிருந்து வெளியேறினார் ரேஷ்மா.. சாக்ஷியால் அழும் அபிராமி, கண்டுகொள்ளாத முகென்!

பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி கடந்த ஜூன் 23ம் தேதி தொடங்கி வார வாரம் பல சுவாரஸ்யங்களுடன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்நிகழ்ச்சியில் முதலாவதாக ஃபாத்திமா பாபு அதனை தொடர்ந்து வனிதா, மோகன் வைத்தியா, மீரா மிதுன் ஆகியோர் வெளியேறினர். இந்நிலையில் கடந்த வாரம் எலிமினேஷனுக்கு அபிராமி, சாக்ஷி, கவின், ரேஷ்மா, மதுமிதா ஆகிய 5 பேர் நாமினேட் ஆகினர். இவர்களில் மதுமிதா காப்பாற்றப்படுவதாக கமல்ஹாசன் ஏற்கனவே தெரிவித்திருந்தார். 

அபியிடம் ரகசியத்தை உடைத்த முகென்..லாஸ்லியா ஊமை குசும்பு, தர்ஷன் பச்சோந்தி : மீரா விளக்கம்

பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் வீட்டில் நேற்று ஒரேநாளில் ஏகப்பட்ட களேபரங்கள் நடந்தது. இந்த வாரம் யார் யார் எந்தெந்த கதாபாத்திரங்கலில் நடித்தார்களோ அதே கதாபத்திரத்தில் பேச வேண்டும் என்று கமல் கூறினார். அதன்படி அனைவரும் பேசினார். இதனை தொடர்ந்து எலிமினேஷன் நடைபெற்றது. அதுவும் வித்யாசமான முறையில் யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ரேஷ்மா வெளியேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

அதாவது  எலிமினேட்டிற்கு நாமினேட் செய்யப்பட்டுள்ள சாக்‌ஷி, கவின், அபிராமி மற்றும் ரேஷ்மாவின் கை விலங்கால் கட்டப்பட்டிருந்தது. அப்போது வீட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கும் சாவி இருக்கிறது என கூற அவற்றை எடுத்து விலங்கை அவிழ்த்து விடுவார்கள். அதில் கடைசியில் ரேஷ்மா வெளியேற்றப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி தொடங்கியதில் இருந்து பிக் பாஸ் வீட்டில் நடக்கும் பிரச்சனைகளில் நியூட்ரலாக கருத்துக் கூறி இரு தரப்பிலும் நல்ல பொண்ணு இமேஜை தக்க வைத்துக் கொண்டவர் ரேஷ்மா. 

 

twitter

கடந்த வாரம் சேரனும், முகெனும் எவிக்‌ஷனுக்கு ரேஷ்மாவை நாமினேட் செய்திருந்த நிலையில் யாரும் எதிர்ப்பார்க்காத விதமாக நாமினேட் ஆன முதல் எவிக்‌ஷனிலேயே ரேஷ்மா வெளியேற்றப்பட்டார். சாக்‌ஷி தான் வெளியேறப்படுவார் என பெரும்பாலோனோர் எதிர்பார்த்து வந்த நிலையில் ரேஷ்மா வெளியேறியது அனைவரையும் அதிர்ச்சி அடையவைத்தது. மக்கள் அளித்த வாக்குகளில் மிக குறைந்த வித்தியாசத்தில் பின் தங்கியதால் ரேஷ்மா வெளியேற நேர்ந்ததாக கமல்ஹாசன் தெரிவித்தார். 

கவினுக்கு காதலி இருக்கிறார்... மதுமிதாவை வறுத்தெடுத்த பிரபலம் : பிக் பாஸ் ரகசியங்கள்!


பிக் பாஸ் வரலாற்றிலேயே மிக குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் ரேஷ்மா வெளியாயுள்ளதாக கமல் தெரிவித்தார். இதன் மூலம் மக்களிடம் ரேஷ்மாவுக்கு உள்ள ஆதரவு தெரிய வந்தது. ரேஷ்மாவின் எவிக்‌ஷன் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் ஹவுஸ்மேட்ஸை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவர் வெளியேற்றப்பட்டதற்கு முகென் கதறி அழுதார். நாமினேஷனில் முகேன் தான் ரேஷ்மா பெயரை கூறினார் என்பதும், பின்னர் இதுகுறித்து அவரிடம் மன்னிப்பு கேட்டதும் குறிப்பிடத்தக்கது.

twitter

இந்த நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியில் வந்ததும் தனக்கு ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சமூகவலைதளப் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் ரேஷ்மா. அதில் அவர், இப்படி ஒரு வாய்ப்பைத் தந்த விஜய் டிவிக்கு மிக்க நன்றி. இது ஒரு அற்புதமான பயணம். நிறைய அன்பு மற்றும் மரியாதையை சம்பாதித்திருக்கிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி என குறிப்பிட்டுள்ளார். 

 

 
 
 
View this post on Instagram
 
 

@vijaytelevision for all the love ❤️

A post shared by Reshma Pasupuleti (@reshmapasupuleti) onஏற்கனவே ரேஷ்மாவின் கதையைக் கேட்டு அவரது தைரியத்தை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். அவர் நேற்று வெளியேறியது ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே, அவர்கள் உங்களது எவிக்சன் நியாயமற்றது. நீங்கள் மிகவும் நன்றாக விளையாடினீர்கள். சாக்‌ஷி தான் வெளியேறியிருக்க வேண்டும் என அவரது ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரோமோவில், ‘நான் முகெனுடன் பேசுவது உனக்கு பிடிக்கவில்லையா?' என அபிராமியிடம் சாக்‌ஷி கேட்கிறார். அப்போது அருகில்  முகெனும் உள்ளார். அதற்கு கோபமாக பதிலளிக்கும் அபிராமி, நீ எப்போதும் இப்படி தான் செய்கிறாய் என கூறிவிட்டு வேகமாக எழுந்து வீட்டிற்குள் செல்கிறார். பிறகு லாஸ்லியாவிடம் சென்று அழுது புலம்புகிறார். தான் எழுந்து வரும்போது கூட முகென் வரவில்லை என கூறுகிறார். சாக்ஷிக்கு அப்போதும் அவர் தான் சரி, அவருடைய பிரச்சனையை மட்டும் தான் கவனத்தில் கொள்வார், அவருக்கு மட்டும் தான் மனது உள்ளது போல நடந்து கொள்கிறார்.

இது எல்லாம் தெரிந்தும் முகென் அவருடன் உட்காந்து இருப்பது தான் எனக்கு இரிடேடிங்காக இருக்கிறது எனக்கூறி அழுகிறார். மற்றொரு வீடியோவில் அபியிடம் சென்று முகென் பேசுவது போலவும், அப்போது முகென் கட்டிலில் கோவமான அடித்தத்தால் அது உடைந்தது போலவும் காட்டப்பட்டுள்ளது. கடந்த வாரம் வரை கவின், சாக்ஷி, லாஸ்லியாவை வைத்து முக்கோண காதல் விளையாட்டு விளையாடிய பிக் பாஸ், இந்த வாரம் அபி, முகென், சாக்ஷியை வைத்து முக்கோண காதல் கதை சொல்லப் போகிறார் என தெரிகிறது. வேணாம் பிக் பாஸ் நாங்கள் பாவம் என்று பார்வையாளர்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

முக்கோண காதலால் சிக்கி தவிக்கும் பிக் பாஸ் இல்லம் : வைல்ட் கார்டில் நுழைகிறார் ஜான்சன்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.