நடிகர் ரஜினிகாந்த் சகோதரருக்கு அறுவை சிகிச்சை : மருத்துவமனையில் நேரில் நலம் விசாரிப்பு!

நடிகர் ரஜினிகாந்த் சகோதரருக்கு அறுவை சிகிச்சை : மருத்துவமனையில் நேரில் நலம் விசாரிப்பு!

நடிகர் ரஜினிகாந்தின் (rajinikanth) மூத்த சகோதரர் சத்ய நாராயண ராவ்  மூட்டு வலி காரணமாக கர்நாடகா மாநிலம் பெங்களூரு பன்னரகட்டா ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 77 வயதான சத்ய நாராயண ராவுக்கு முழங்காலில் கடுமையான ஆஸ்டியோ ஆர்த்ரைட்டிஸ் பாதிப்பு இருந்து வந்தது. அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறியதால், அங்கு அவருக்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தனர். இந்நிலையில் மும்பையில் தர்பார் படத்திற்கான படப்பிடிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், உடனடியாக பெங்களூருவுக்கு புறப்பட்டு வந்து, மருத்துவமனைக்கு நேரில் சென்று சகோதரரை சந்தித்து நலம் விசாரித்தார்.

twitter

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிப்பில் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பேட்ட திரைப்படம் வெளியானது. ரசிகர்களின் ஆரவார வரவேற்பைப் பெற்ற இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்புப் பெற்றது. இப்படத்தைத் தொடர்ந்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் முதன் முதலாக நடித்து வருகிறார். இப்படத்திற்கு தர்பார் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து யோகி பாபு, நிவேதா தாமஸ், நயன்தாரா, சுனில் ஷெட்டி, தம்பி ராமையா, ஸ்ரீமன், நவாப்ஷா, ப்ரதீப் பப்பர் ஆகியோர் பலர் நடித்து வருகிறார். 

இப்படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வந்த நிலையில் அதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனையடுத்து நடிகர் ரஜினிகாந்த் (rajinikanth) படப்பிடிப்பில் ஈடுபட்டிருந்தார்.  இந்த நிலையில் மீண்டும் தர்பார் படத்தின் புகைப்படங்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதில் ரஜினி போலீஸ் உடையில் இருப்பது போன்றும் அருகில் நயன்தாரா நிற்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதுபோன்ற பல்வேறு பிரச்சனைகள் எழுந்து வரும் நிலையிலும் தனது சகோதரரரை பார்க்க ரஜினிகாந்த் நேரில் வந்துள்ளார். 

twitter

நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அண்ணன் சத்யநாராயண ராவ் மீது அளவு கடந்த பாசமும் மரியாதையும் கொண்டவர். தன்னை சிறு வயதில் இருந்தே ரஜினியை வளர்த்து ஆளாக்கியவர். என்ன தான் இந்தியாவே கொண்டாடும் சூப்பர் ஸ்டாராக தான் இருந்தாலும், தன்னுடைய அண்ணனைக் கண்டால் பாசத்தில் உருகுவார். அண்ணன் மீது அவ்வளவு மரியாதை கொண்டவர். அதேபோல அவரது சகோதரரும் ரஜினி மீது பாசம் மிக்கவர். ரஜினியின் அரசியல் வருகை உள்ளிட்ட முக்கிய முடிவுகளை அவரது சகோதரர் தான் அறிவித்து வந்தார். சிறு வயதில் இருந்து ரஜினியின் வாழ்வில் முக்கிய நபராக செயல்பட்டவர் சத்யநாராயணன்.

twitter

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிறுநீரக கோளாறு காரணமாக சத்யநாரயணின் மனைவி கலாவதி மரணமடைந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் மூட்டு வலியால் அவதியடைந்து வந்த சத்யநாராயணனுக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதனையடுத்து ரஜினி தன்னுடைய சகோதரர் உடல் நலம் குறித்து கேட்டு விசாரித்த ரஜினி நேற்றே மீண்டும் மும்பை விரைந்தார்.  தர்பார் திரைப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருப்பதால் படப்பிடிப்பு வேலைகளில் மும்பரமாக இயங்கி வருகின்றனர் படக்குழுவினர். 

இந்த சந்திப்பிற்கு பின் நடிகர் ரஜினிகாந்த் (rajinikanth) , அவரது சகோதரர் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்டோர் சிகிச்சை வெற்றிகரமுடன் முடிந்தது என்பது வெளிப்படும் வகையில் தங்களது கட்டை விரலை உயர்த்தி காட்டினர். அங்கிருந்த மருத்துவர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் செல்பி எடுத்து கொண்டார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

twitter

சத்யநாராயண ராவ் சிகிச்சை குறித்து பேசிய தனியார் மருத்துவமனை மருத்துவர் கிரண் சவுகா சத்யநாராயணா நலமுடன் உள்ளார்.  அறுவை சிகிச்சை நடந்து முடிந்த அன்றே நடந்து செல்லும் வகையில் உடற்தகுதியுடன் அவர் இருக்கிறார் என தெரிவித்துள்ளார். ரஜினியின் அண்ணன் சத்யநாராயண ராவ் விரைவில் குணமடைய வேண்டும் என்று பல ரசிகர்களும்  வேண்டுதல் நடத்தி வருகின்றனர். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.