எதிரெதிர் பாலினங்களின் ஈர்ப்பு என்பது ஒவ்வொரு உயிரினத்துக்கும் ஒவ்வொரு விதமாக நடைபெறுவது இயற்கை. பதின் பருவங்களில் நமது ஹார்மோன் மாற்றங்கள் நம்மை எதிர்பாலினர் மீது ஆர்வம் கொள்ள வைக்கின்றன.
உணர்வுகளின் ரோலர் கோஸ்டர் பயணத்தை தனது கட்டுக்குள் கொண்டு வந்து விட்ட பின்னர் பக்குவமான மனது ஒரு ஆணை நோக்கி ஈர்க்கப்படுகிறது என்றால் அவர்தான் உங்கள் க்ரஷ் (crush) எனப்படுபவர். க்ரஷ் எனும்போது நாம் பழக முடியாத நபருடன் தோன்றுவது செலிபிரிட்டி க்ரஷ் எனப்படும். அதனைத் தவிர்த்து நமது பழகும் வட்டத்திற்குள் குறிப்பிட்ட ஒரு ஆணை நம் மனம் அதிகமாக யோசிக்கிறது என்றால் அவரே உங்கள் க்ரஷ்.
Youtube
க்ரஷ் காதலராக மாற வேண்டுமா ?
உங்கள் மனதிற்கு பிடித்த க்ரஷ் எல்லாவகையிலும் உங்களுக்குப் பொருத்தமாகத்தான் இருக்கிறாரா என்பதை யோசித்து முடித்தபின்னர் அவரையே உங்கள் காதலராக மாற்றிக் கொள்ள நீங்கள் முன்னெடுக்க வேண்டிய முதல்படிதான் கீழே கொடுக்கப்பட்ட கேள்விகள். இந்தக் கேள்விகளை சூழ்நிலைகளை அனுசரித்து நீங்கள் அவரிடம் கேட்டு வாருங்கள். அதன் பின்னர் உங்கள் க்ரஷ் (crush) உங்கள் காதலராக மாறும் மாயத்தை உணருங்கள்.
Youtube
உங்கள் கிரஷ்ஷிடம் நீங்கள் கேட்க சில க்யூட் கேள்விகள்
உங்களுக்கு ஒருவர் மீது ஈர்ப்பு வந்து விட்டது. அவருடன் அப்போதுதான் பேச ஆரம்பிக்கிறீர்கள். எடுத்த உடனே எல்லாவற்றையும் சொல்லி விட முடியாது இல்லையா? கீழ்வரும் கேள்விகளைக் கொண்டு மெல்ல மெல்ல உங்கள் க்ரஷைக் கவர ஆரம்பியுங்கள்.
1.நீ ஒரே பையனா ? கூடப் பிறந்தவர்கள் யாரும் இருக்கிறார்களா?
2.உன் அப்பா அம்மாவுடன் நீ எந்த அளவுக்கு பாசம் வைத்திருக்கிறாய்?
3.உன் அப்பா அம்மா எப்படி சந்தித்தார்கள் என்பது உனக்குத் தெரியுமா?
4.உன் வீட்டில் உள்ளவர்கள் உன்னை அழைக்கும் செல்லப் பெயர் என்ன ?
5.உனக்குப் பிடித்த டிவி ஷோ என்ன?
6.உனக்குப் பிடித்த இசை என்ன? சினிமாவில் யாருடைய இசையை நீ விரும்புவாய்?
7.உன் ராசி என்ன? அதில் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?
8.உன் பிறந்த நாள் எப்பொழுது ?
9.நீ இதுவரை செய்ததியிலேயே எது மிக சிறந்த ரொமான்ஸ் என நீ நினைக்கிறாய்?
10.காதலை நீ எப்போதாவது அனுபவித்திருக்கிறாயா? உணர்ந்திருக்கிறாயா?
11.உன்னைப் பொறுத்தவரை ஃபர்பெக்ட் டேட் என்பதன் அர்த்தம் என்ன ?
12.கண்ட உடன் காதல், ஆத்ம காதல் இதிலெல்லாம் உனக்கு நம்பிக்கை இருக்கிறதா?
13.நீ யாராவது ஒருவராக மாற ஆசைப்பட்டால் யாராக மாற விரும்புகிறாய்? ஏன்?
14.நீ இதுவரை வாழ்ந்த உன் வாழ்க்கையை ஒரே தத்துவத்தில் கூற முடியுமா?
15.நீ கடைசியாக படித்த புத்தகத்தின் பெயர் என்ன ?
16.உனக்குப் பிடித்த மேற்கோள் யாருடையது? அது என்ன ?
17.நீ செய்து முடித்த வேலைகளிலேயே மிகவும் பெருமைப்படக்கூடிய வேலை எது ?
18.என்னை முதலில் பார்த்ததும் உனக்கு என்ன தோன்றியது ?
அலாவுதீனின் அற்புத விளக்கு உன் கையில் இருந்தால் உன் முதல் மூன்று ஆசைகள் என்னவாக இருக்கும் ?
Youtube
உங்கள் கிரஷ்ஷிடம் கேட்கவேண்டிய சில ஆழமான கேள்விகள்
உங்களுக்கு கிடைத்த தருணங்களில் எல்லாம் உங்கள் கிரஷ்ஷிடம் கொஞ்சம் கொஞ்சமாக பேசி அவரது நெருக்கத்தை சம்பாதித்து விட்டீர்கள் என்றால் நீங்கள் அடுத்து முயல வேண்டியது இதுதான். சில ஆழமான கேள்விகளை அவரிடம் கேட்பதன் மூலம் அவர் உங்களை பார்த்து ‘வாவ்’ சொல்ல வையுங்கள். கீழே கொடுக்கப்பட்ட கேள்விகளுடன் கூடவே மானே தேனே பொன்மானே எல்லாமும் போட்டுக் கொள்ளலாம்.
19.நீ கடைசியாக எதற்காக பாராட்டப்பட்டாய்? யார் பாராட்டினார்கள் ?
20.கடந்த ஐந்து வருடங்களில் உன் வாழ்க்கையின் எந்தப் பகுதி நன்றாக இருந்தது? முன்னேற்றம் கொடுத்தது?
21.கடந்த ஐந்து வருடங்களில் உன் வாழ்க்கையின் எந்தப் பகுதி மோசமாக இருந்தது?
22.தனிமையின் மிக முக்கியமான காரணமாக நீ நினைப்பது என்ன?
23.உனக்குப் பிடித்த கலரை நீ கூற வேண்டும். ஆனால் நிறத்தின் பெயரை சொல்லாமல் உணர்வுகள் மூலம் அதனை எனக்குத் தெரிவிக்க முடியுமா?
24.இந்த மனித வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றும் தாரக மந்திரம் எது என நீ நினைக்கிறாய்?
25.நகர வாழ்க்கை உனக்கு பிடித்திருக்கிறதா? சௌகர்யமாக இருக்கிறதா?
26.இந்த உலகின் மிக அழகிய விஷயமாக நீ எதனைப் பார்க்கிறாய்?
27.இந்த உலகின் அசிங்கமான விஷயமாக நீ எதனைப் பார்க்கிறாய்?
28.அர்த்தமுள்ள உறவுகள் என்பதெல்லாம் இப்போது ஏன் கிடைப்பதற்கு அரிதாக இருக்கிறது?
29.உன் குணாதிசியங்களை வெளிப்படுத்தும் இசைக்கருவிகள் பெயரைக் கூற முடியுமா?
30.கண்சிமிட்டும் நேரத்தில் நீ இன்னொரு ஊருக்கு செல்லலாம் என்றால் நீ எங்கு செல்வாய் ?
31.உனது பெற்றோர்கள் இன்றுவரை உன் எல்லாவற்றிலும் துணை நிற்கிறார்களா?
32.உனக்கு ஏற்ற டேட் என்பவள் எப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய்?
33.காதலில் முதல் படியை முதலில் ஆண்கள் தான் எடுத்து வைக்க வேண்டுமா? பெண்களும் எடுக்கலாமா?
34.ஒரு நல்ல ரிலேஷன்ஷிப் வேண்டும் என்று நீ காத்துக் கொண்டு இருக்கிறாயா?
Youtube
ஃப்ளிர்ட்டி கேள்விகள் கேட்கும் நேரம் இதுதான்
உங்கள் க்ரஷ் உங்கள் ஆழமான கேள்விகளால் அட இந்தப் பெண்ணிற்குள் இப்படி ஒரு அறிவா என்று வியந்திருக்கும் சமயம் உங்களுக்கு முக்கியமான நேரம். இதுதான் உங்கள் உறவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் சமயம். கீழ்கண்ட கேள்விகள் உங்கள் க்ரஷ் உங்கள் காதலராக மாறும் மாயத்தை செய்பவை.
35.ஒரு பெண்ணிடம் நீ எதிர்பார்ப்பது என்ன?
36.இவ்வளவு அழகான உடல்கட்டுடன் என்னை நீ ஏன் ஈர்த்தபடியே இருக்கிறாய்?
37.நீ அடிக்கடி உடற்பயிற்சி செய்வாயா ?
38.என்னை பற்றி நினைத்தவுடன் உன் மனதில் தோன்றும் முதல் விஷயம் என்ன?
39.நீ இதுவரை சந்தித்ததிலேயே சிறந்த டேட் பற்றி எனக்கு விரிவாக சொல்ல முடியுமா?
40.உனது செலிபிரிட்டி க்ரஷ் யார்? நயனா? த்ரிஷாவா?கீர்த்தியா? ராகுல் ப்ரீத்தா? சாய் பல்லவியா? இல்லை வேறு யாரும் இருக்கிறார்களா?
41.உன்னை மிகவும் சந்தோஷப்படுத்தும் அந்த ஒரு விஷயம் எது?
42.படுக்கையில் உறங்கும்போது நீ என்ன அணிந்திருப்பாய்?
43.கூடலின் போது நீ cuddling செய்வாயா இல்லை எடுத்தவுடனே எல்லாம் முடித்து விடுவாயா?
44.உனக்குப் பிடித்த வேலை என்றால் அது என்ன?
45.உன்னை மிகவும் படபடக்க செய்யும் விஷயம் எது?
46.உன் வாழ்க்கையை உன்னால் மாற்றிக் கொள்ள முடியும் என்றால் உன் வாழ்க்கையின் எந்த பாகத்தை நீ மாற்றிக் கொள்ள விரும்புகிறாய்?
47.உன் முதல் டேட் அனுபவம் எப்படி இருந்தது ?
48.காமம் கொண்ட அனுபவம் உன்னிடம் இருக்கிறதா?
49.உனக்கு பிடித்தது மார்பகங்களா இல்லை பின்புறமா?
50.உனக்குப் பிடித்த உடல் பாகம் எது?
51.உன்னை மற்றவர்கள் எப்படி பார்த்தால் உனக்குப் பிடிக்கும்? செக்ஸி அல்லது ஸ்மார்ட்?
52.உன் வீட்டின் எந்த இடம் உனக்கு காமத்தை அதிகம் தூண்டுகிறது ?
53.ஒருவருடன் டேட் செய்யும்போது அவள் மீது உனக்கு காம உணர்ச்சிகள் எழும்ப ஏற்படும் காரணங்கள் என்னனென்ன? எது உன்னை அவளை நோக்கி சுண்டி இழுக்கிறது?
54.நிர்வாண கடற்கரை உலா செல்ல உனக்கு விருப்பமா ?
55.என்னுடன் டேட் செல்ல உனக்கு சம்மதமா?
Youtube
உங்கள் கிரஷ்ஷிடம் எப்படி பேசுவது? எப்படி ஈர்க்க வைப்பது?
உங்கள் க்ரஷ் உங்களுடன் அதிகமாக நெருங்கி வர வேண்டும் என்று நீங்கள் உள்ளுக்குள் விரும்புகிறீர்கள் என்றால் கீழ்கண்ட முறைகளை முயன்று பாருங்கள்
புன்னகையோடு ஆரம்பியுங்கள்
ஒரு அட்டகாசமான புன்னகை எந்த துயரத்தையும் மறந்து விடச்செய்யும். அப்படி ஒரு புன்னகையோடு உங்கள் ஆணை நீங்கள் பாருங்கள். எந்த ஒரு மேக்கப் சாதனத்தை விடவும் உங்களுக்கு அழகை தருவது உங்கள் புன்னகை மட்டுமே. உங்கள் புன்னகையால் உங்கள் ப்ரியத்துக்குரியவரை மயக்குங்கள்.
மாலை நேரம் மழை தூறும் காலம்
எப்போதும் மாலை வேளைகளை உங்கள் ஆணிற்காக ஒதுக்கி வையுங்கள். இரவின் ஆரம்பத்தில் உங்கள் விருப்பத்துக்குரியவருடன் பேச ஆரம்பிப்பது என்பது உங்கள் வசம் அவரை ஈர்க்க செய்யும். இரவு நேர உரையாடல்கள் எப்போதும் உண்மையாகவும் ஆழமாகவும் இருக்கும். அதே நேரம் இரவு வேளைகளில் அந்த ஆணும் உங்களுடன் நேரம் செலவிட விரும்புகிறார் என்றால் நிச்சயம் நீங்கள் அவரின் விருப்பத்துக்குரியவள் ஆகி விட்டீர்கள் என்பதுதான் பொருள்.
பேசும் போது உங்கள் கூந்தலை சரி செய்தபடி பேசுங்கள்
ஒரு ஆணைக் கவர கூடியது எப்போதுமே கூந்தல்தான். அவருடன் பேசும் போது கூந்தலை அளைந்தபடி பேசுங்கள். முன்னே இழுத்துப் போடுங்கள். பின்னே ஸ்டைலாகத் தள்ளுங்கள். உங்கள் கூந்தலை நீங்கள் தொட்டு பேசும்போதெல்லாம் ஆண் உங்கள் வசம் ஈர்க்கப்படுவான்.
குறும்புத்தனம் அவசியமானது
உங்களுக்கான ஆணுடன் பேசும்போது யாரும் பாராத சமயங்களில் கண்களை சிமிட்டுங்கள். நாக்கை துருத்தி அழகு காண்பியுங்கள். இப்படியான சில உடல்மொழிகள் மூலம் நீங்கள் குறும்புத்தனம் செய்வதை ஒரு ஆண் மிகவும் ரசிப்பான். வெகு சீக்கிரமே அவனும் உங்கள் மீது க்ரஷ் ஆகி விடுவான்.
உங்கள் சிறப்பம்சம்களை கவனிக்க வையுங்கள்
உங்கள் சிறப்பம்சம் என்பது நீங்கள் ஒரு எழுத்தாளராக இருக்கலாம், கவிஞராக இருக்கலாம். உங்களது தனித்திறமைகளை பற்றி நீங்களே சொல்லாமல் மறைமுகமாக பேசுவது அவரை உங்கள் பக்கம் ஈர்க்கும். உதாரணமாக உங்களுக்கு யாருடைய எழுத்துக்கள் பிடிக்கும், எழுத்தை நீங்கள் எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பது போன்ற பல விஷயங்களை பேச்சுவாக்கில் சொல்லுங்கள். உங்கள் தனித்திறமையை கண்டு அவர் நிச்சயம் ஈர்க்கப்படுவார்.
உங்களுக்கு உண்மையாக இருங்கள்
எப்போதும் உண்மைத்தன்மையோடு இருப்பதை ஆண்கள் மட்டுமல்ல மனித இனமே விரும்புகிறது. உங்களை பற்றிய உண்மைத்தன்மையை நீங்களே கொண்டாடுவது சிறப்பானது. மற்றவர்களை பார்த்து நாம் போலியாக நடந்தோம் என்றால் நமக்குத்தான் நாம் நாடகம் போடுகிறோம் என்பது தெரியும் என்று நினைத்துக் கொள்கிறோம். உண்மையில் அனைவருக்குமே அது வெட்டவெளிச்சமாக தெரிய வந்து விடும் என்பதால் உங்கள் நிஜ நிறங்களை நீங்கள் ஒளிர விடுவதுதான் நல்லது.
சுதந்திரமாக இருங்கள்
நீங்கள் சுதந்திரமான பெண்ணாக இருந்தால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். யாரையும் சாராமல் உங்களுக்கான முடிவுகளை நீங்களே எடுக்கும் சுதந்திரம் கொண்ட பெண்ணாக நீங்கள் இருக்கும்போது ஆண் மிக நம்பிக்கையோடு உங்கள் வசம் வரத் தொடங்குகிறான்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.