போர்னோகிராபி பற்றி பெண்களின் எண்ணம் என்ன? அறிந்து கொள்ளுங்கள் ஆண்களே !

போர்னோகிராபி பற்றி பெண்களின் எண்ணம் என்ன? அறிந்து கொள்ளுங்கள் ஆண்களே !

பொதுவாக உளவியல் படி ஆண் இனம் விழிவழி காதல் செய்து பழகிய ஒரு இனம். ஆண்களுக்கு எல்லாமே பார்க்க வேண்டும். பார்த்து பிடித்திருந்தால் மேலும் அடுத்த லெவல் வேறு ஏதேனும் இருக்கிறதா என்று பார்க்க தூண்டு,

ஆனால் பெண்கள் அப்படி அல்ல. அவர்களுடையது செவி வழி காதல். காதால் தான் கேட்பவற்றை அறிந்து உணர்ந்து அதன் ஆழம் புரிந்து அதன் பின்னரே செயல்பட தொடங்குவார்கள். பெண்களுக்கு காட்சிகளை விடவும் செயல்களே முக்கியம் வாய்ந்தவை.

காமம் என்று வரும்போது ஆணுக்குப் பல் வேறு தேவைகள் ஏற்படுகின்றன. ஆகவே பெண்களை விட ஆண்களே அதில் அதிக கவனத்தை செலுத்துகின்றனர். காமத்தின் பால் அதீத ஆர்வம் அவர்களுக்கு இருக்கிறது.ஆகவே அதனைப் பற்றி ரகம் ரகமாக விதம் விதமாகத் தெரிந்து கொள்ள ஆசைப்படுகின்றனர். அறிந்ததை முயற்சி செய்வதும் அவர்களுக்கு பிடித்திருக்கிறது.

உடல் உறவின் போது பெண்களுக்கு பிடிக்காத விஷயங்கள் என்னென்ன தெரியுமா ?

Pinterest

போர்னோகிராபியை (pornography) பார்ப்பதன் மூலம் தூண்டப்படுபவது ஆண்கள் என்கிற உண்மை அனைவரும் அறிந்ததுதான். ஆகவே படுக்கையறையில் போர்னோகிராபி பார்ப்பதன் மூலம் தன்னுடைய ஆசையை அவன் அதிகமாக்கிக் கொண்டு அதன் பின்னர் தனக்குரிய பெண்ணிடம் இயங்க ஆரம்பிப்பது அவனுக்கு பிடித்திருக்கிறது.

ஆனால் பெண்களுக்கோ காட்சிகள் எதுவும் தேவை அற்றவை. காதலுக்குரியவனின் ஆசை வார்த்தைகள் அவள் மோகத்தை தூண்ட போதுமானதாக இருக்கின்றன. இன்னும் சிலருக்கோ காதல் கணவனின் ஒற்றைப் பார்வை போதுமானதாக இருக்கிறது.

நடந்து முடிந்த புதிய ஆய்வின் படி பாலுணர்வு தூண்டுதல் என்பது ஒருங்கிணைந்த நரம்பியல் சார்ந்த ஒன்றாகும். இது ஆளுக்கு ஆள் மாறுபடலாம். இது பெரும்பாலும் காட்சிகள் மூலம்தான் தூண்டப்படுவதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.

 

Pinterest

போர்னோகிராபியை பார்த்த உடன் முதலில் உடலில் உணர்வுகள் எழுகின்றன. அதன் பின்னரே அது பாலுணர்வு தூண்டப்பட்டு காமம் வேண்டும் என்கிற இடத்திற்கு வருகின்றன என்கிறது ஆய்வு. ஆனால் இதன் முடிவுகள் யாரும் எதிர்பார்க்காத ஒரு உண்மையை உடைத்துக் கூறி இருக்கிறது.

ஜெர்மனியின் Max Planck Institute for Biological Cybernetics ஆராய்ச்சி முடிவுகள் நரம்பியல் அடிப்படையில் ஆய்வு மேற்கொண்ட சமயம் போர்னோகிராபி பார்ப்பதன் மூலம் ஆண் மற்றும் பெண்கள் ஆகிய இருவருக்குமே ஒரே மாதிரியான எண்ணங்கள் எழுவதாகக் கண்டறிந்திருக்கிறது.

 

Pinterest

ஆபாசக் காட்சிகளை பார்க்கும்போது ஆணுடைய மூளை மற்றும் பெண்ணுடைய மூளை இரண்டுமே ஒரே உணர்வுகளையே பிரதிபலிப்பதாக கூறப்பட்டிருக்கிறது.

இந்த ஆய்வுக்கு உட்பட்டவர்களின் மூளை ஸ்கேனிங் செய்யப்படும்போது பாலியல் படங்கள் இவர்களுக்கு போட்டுக் காட்டப்பட்டுள்ளன. அப்போது அவர்களுக்கு எழும் உணர்வுகளை மூளை ஸ்கேனிங் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இரு பாலினங்களுக்கும், ஆபாச படங்கள் காட்டப்படும்போது Amygdala, Insula மற்றும் Striatum உள்ளிட்ட மூளைப்பகுதிகளில் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க மாற்றம் இல்லை. மேலும் பெண் காம உணர்வு பற்றி நிறைய மேலோட்டமான கருத்துகள் உள்ளன. காட்சிரீதியான விஷயங்களை பெண்கள் விரும்புவதில்லை என்கிற விஷயத்தில் ஆண்களைப் போல வெளிப்படையான தகவல் தெரிவிக்க விரும்பாதவர்களாக இருக்கலாம்.

காலம் மாறி வருவது , பெண்கள் சமுதாயத்தில் பங்கெடுத்து கொள்வது பொருளாதார மாற்றங்கள் பெண்ணின் மூளையில் இத்தகைய மாற்றங்களை உருவாக்கி இருக்கலாம் என்றும் இது பற்றி முழுமையாக அறிந்து கொள்ள இன்னும் ஆராய்ச்சி தேவை என்றும் ஆய்வின் முடிவுகள் கூறி இருக்கின்றன.

Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                         

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.