மீடியாக்களில் இந்தியப் பெண்களின் பங்கும் அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளும்

மீடியாக்களில் இந்தியப் பெண்களின் பங்கும் அவர்கள் எதிர்கொள்ளும் பாகுபாடுகளும்

சமீபத்தில் ஐ நா சபை இந்திய மீடியாக்கள் குறித்து "பாலின சமத்துவம் அற்ற இந்திய மீடியா" என்கிற தலைப்பில் ஒரு ஆய்வறிக்கையை வெளியிட்டிருக்கிறது. முக்கியமான இந்திய மீடியா (indian media) துறை சார்ந்த அலுவலங்களில் பெண்களுக்கான முக்கிய உரிமைகள் மறுக்கப்படுவதாக இந்த அறிக்கை விரிவாக சொல்கிறது.

சந்திராயன் 2 விண்ணில் நிலவைப் புகைப்படம் எடுத்து அனுப்பும்போதே நெஞ்சம் பூரித்துப் போகிறோம். வெற்றிகரமாக விண்ணிற்கு சென்ற சந்திராயன் 2 விண்கலம் உருவாவதற்கு பெண் விஞ்ஞானிகளின் பங்கு அதிகமாக இருந்திருக்கிறது. ஆனால் பத்திரிக்கை துறையில் பெண்களால் ஆண்களை மிஞ்ச முடியாது போலிருக்கிறது.

ஆகாயத்திலேயே அஸ்தமனமான சௌந்தர்யா .. இறுதியாக சொன்ன ரகசியம்.. கண்ணீரில் இயக்குனர்..

Twitter

இந்தியாவில் மீடியா துறைகளில் தலைமைப் பதவி வகிக்கும் பெண்களின் எண்ணிக்கை என்பது ஆண்களின் எண்ணிக்கை சதவிகிதங்களோடு கணக்கிடுகையில் நான்கில் ஒரு பங்குதான் என்கிறது ஆய்வு. அதிலும் இதழ்களில் பணியாற்றும் பெண்களின் பங்கு என்பது அதைவிடவும் குறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
இணையதளம் 25.3% , தொலைக்காட்சி 20.9%, இதழ்கள் 13.6% தலைமைப் பதவியில் இருக்கும் பெண்களின் சதவிகிதம் இவ்வளவுதானாம்.

சீஃப் எடிட்டர், மேனேஜிங் எடிட்டர், எக்சிக்யூட்டிவ் எடிட்டர், பியூரோ சீஃப் இன்புட் மற்றும் அவுட்புட் எடிட்டர் ஆகிய பொறுப்புகளை பெண்கள் வகிக்கின்றனர். இந்தியாவில் முன்னணியில் இருக்கும் 7 இந்திப்பத்திரிக்கைகள் மற்றும் 6 ஆங்கிலப்பத்திரிக்கைகளில் தலைமைப் பதவியில் ஒரு பெண் கூட இல்லை என்பது அங்கே குறிப்பிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கென லைஃப் ஸ்டைல், ஃபேஷன் போன்ற சாதாரண எளிமையான பிரிவுகளில் பணியாற்றவே அதிக வாய்ப்புகள் தரப்படுகின்றன.அரசியல், விளையாட்டு, க்ரைம் மற்றும் பொருளாதாரம் போன்ற முக்கியமான பிரிவுகள் ஆண்கள் வசமே விடப்படுகின்றன.

நம்மை உளவியல் ரீதியாக ஆச்சர்யப்படவைக்கும் சில வித்யாசமான உண்மைகள்

Twitter

இந்தியாவின் 6 முன்னணி ஆங்கிலப் பத்திரிக்கைகளில் 2,963 ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இதில் கால் பங்கிலும் குறைவாகவே பெண்கள் பணியாற்றுகின்றனர். 17312 கட்டுரைகள் இந்தப் பத்திரிகைகளில் எழுதப்பட்டுள்ளன. இதில் பெண் செய்தியாளர்கள் பங்கு வெறும் 20% தான். வேடிக்கை என்னவென்றால் கிட்டத்தட்ட 500 கட்டுரைகள் பேசுவது பாலின சமத்துவம் பற்றித்தானாம்!

அதைப் போல இந்தி பத்திரிக்கைத் துறையில் பெண்களின் பங்கு என்பது மிகவும் மோசமான இடத்திலேயே இருக்கிறது. முன்னணி இந்தியபத்திரிகைகளில் 2084 செய்தியாளர்கள் இருக்கின்றார்கள்.இதில் வெறும் 17 சதவிகிதம் மட்டுமே பெண்களுக்கானது. அதிலும் கூட 11 சதவிகிதம் பெண்களுக்குத்தான் பைலைன் எனும் பெயருடன் செய்தி வெளியிடும் உரிமை தரப்பட்டிருக்கிறது.

சுதந்திரங்களால் ஏற்படுகிற சுகவீனங்கள் - பலவீனத்தை பயன்படுத்தும் ஆண்களிடம் இருந்து நம்மை பாதுகாப்பது எப்படி

Twitter

அதே சமயம் டிஜிட்டல் மீடியாக்களில் பெண்களின் பங்கு அதிகமாகவே இருக்கிறது. நவீன யுகத்தின் டிஜிட்டல் மீடியாக்களில் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் நிறைய கட்டுரைகள் எழுதுகின்றனர். அரசியல், க்ரைம், பொருளாதாரம் எனப் புகுந்து விளையாடுகின்றனர்.

பெண்களின் திறமைக்கு வானமே எல்லை என்பது போல டிஜிட்டல் மீடியா பெண்களுக்காக தனது வாசலை அகலத் திறந்து வைத்திருக்கிறது. டிஜிட்டல் மீடியாக்களில் பெண்களுக்கான பைலைனும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் உடனே தரப்படுகின்றன.

ஐ நா சபை வெளியிட்டிருக்கும் இந்த ஆய்வறிக்கை பார்க்கும்போது இந்தியா முன்னேற நீண்ட காலம் ஆகுமோ என்று நம்மை அயற்சியில் விடுகிறது. ஆனாலும் டிஜிட்டல் மீடியாக்கள் சொல்லும் செய்தி நமக்கு ஆறுதல் அளிக்கின்றன.

இந்த அறிக்கை 2018ம் ஆண்டு 13 இந்தியப் பத்திரிகைகள் , 6 முன்னணி ஆங்கில பத்திரிக்கைகள், இணையதளங்கள் 11, ரேடியோ நிறுவனங்கள் 5 மற்றும் பல தொலைக்காட்சி நிறுவனங்களைக் கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

twitter

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன