ஓணம் பண்டிகை கொண்டாட தயாராகுங்கள் : ஆடைகள் புது வரவு குறித்த விவரங்கள்!

ஓணம் பண்டிகை கொண்டாட தயாராகுங்கள் : ஆடைகள் புது வரவு குறித்த விவரங்கள்!

கேரள மாநிலத்தில் கொண்டாடப்படும் ஒரு பாரம்பரிய சிறப்பு மிக்கத் திருவிழா ஓணம் (onam) ஆகும். சாதி, மத வேறுபாடின்றி அனைவராலும் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையை கேரளாவின் அறுவடை திருநாள் என அழைக்கிறார்கள். கேரளாவில் மட்டுமின்றி கேரள மக்கள் வாழும் அனைத்து பகுதியிலும் இந்த பண்டிகையானது கொண்டாடப்பட்டு வருகிறது. கொல்லவர்ஷம் எனும் மலையாள ஆண்டின் சிங்கம் மாதத்தில் ஹஸ்த்தம் நட்சத்திரத்தில் தொடங்கி திருவோணம் நட்சத்திரம் வரை இருக்கும் 10 நாட்களாக இப்பண்டிகை கொண்டாடப்படுகிறது. 

கூந்தலை பராமரிக்கும் விதத்தில் நீங்கள் செய்யும் தவறுகள்

twitter

ஓணம் (onam) பண்டிகையின் சிறப்பம்சம் மகாபலி மன்னனை வரவேற்கும் விதமாகக் கேரளாவின் ஒவ்வொரு வீட்டு வாசலில் போடப்படும் "அத்தப்பூ" என்ற பூக்கோலம் ஆகும். முதல் நாள் ஒரேவகையான பூக்கள் இரண்டாம் நாள் இரண்டு, மூன்றாம் நாள் மூன்று எனத் தொடர்ந்து பத்தாம் நாள் பத்து வகையான பூக்களால் அழகு செய்வர். கேரளாவில் ஆவணி மாதம் பூக்கள் பூத்துக் குலுங்கும் மாதமாகும். அதனால் இக்காலத்தில் வரும் ஓணத்திருநாளையும் மக்கள் பூக்களின் திருவிழாவாகக் கொண்டாடுவர்.

மற்றொரு சிறப்பம்சம் கேரளா ஆடை. கசவு எனப்படும் தூய வெண்ணிற ஆடையை பெண்கள் அணிந்தும், பாடல்கள் பாடியும் மகிழ்வார்கள். 10 நாட்களாக நடைபெறும் திருவிழாவில் பலவிதமான போட்டிகள் வைத்து பரிசுகள் வழங்கப்படும். முக்கியமாக களறி, படகுப்போட்டிகள், பாரம்பரிய நடனப்போட்டிகள் போன்றவைகள் நடைபெறும். முன்னர் கேரளா சேலை மட்டும் வேஷ்டி மட்டுமே பிரபலமாக இருந்து வந்தது. ஆனால் தற்போது அனைத்து தரப்பினருக்கான உடையும் மார்க்கெட்டிற்கு புதிய வரவாக வந்துள்ளது. அவை குறித்து இங்கு காண்போம். 

ஓ பேபி சமந்தாவிற்கு பிறக்கப் போகுது நிஜ பேபி ! கர்ப்பமாக இருக்கிறார் சமந்தா!

youtube

குழந்தைகளுக்கான உடைகள்

குழந்தைகளுக்கு பட்டு பாவடை, சட்டை மற்றும் கெவுன் உடைகள் தற்போது வந்துள்ளது. கசவு மற்றும் காட்டன் துணி வகைகளில் இந்த ஆடைகள் கிடைக்கின்றன. அழகான வேலைப்பாடுகளுடன் காணப்படுகிறது. மேலும் சிறுமிகளுக்கு அவர்கள் அளவில் சேலைகளும் கிடைக்கின்றன. சிறிய டிசைன் போட்ட சேலைகள் பல்வேறு வண்ணங்களில் உள்ளன. அதேபோல சிறுவர்களுக்கு வெண்ணிற வேஷ்டிகளும், சட்டைகளும் உள்ளன.

இளம்பெண்களுக்கான உடைகள்

இளம்பெண்களுக்கான மதுபாலா சுடிதார், மற்றும் ஸ்கர்ட் போன்ற உடைகளும் தற்போது கேரள கசிவு துணியில் வருகிறது. இளம்பெண்கள் பெரும்பாலும் புதுமை விரும்பிகளாக உள்ளனர். அவர்களுக்கு ஏற்றார் போல உடைகள் பல்வேறு டிசைன்களில் கிடைக்கின்றன. சுடிதார்களே விதவிதமாகவும், சிம்பிளாகவும் உள்ளன. ஸ்கர்ட்டுகள் பெரும்பாலும் கேரள இளம்பெண்கள் உடுத்தும் உடையாக உள்ளது. வெண்ணிற ஸ்கர்ட் மற்றும் பச்சை, மெரூன், ஊதா நிற சட்டைகள் மார்க்கெட்டில் உள்ளன. தற்போது சட்டைகளில் பாசி மற்றும் ஸ்டோன் வைத்து கழுத்து மற்றும் கை பகுதியில் டிசைனுடன் கிடைக்கின்றன.

பிகில் டீமிற்குத் தங்க மோதிரம் பரிசளித்து அசத்திய நடிகர் விஜய்!பெருமையில் பூரிக்கும் குழு!

youtube

சேலை

ஓணம் (onam) பண்டிகைக்கான சேலை ரகங்களில், நிறங்களில் மாற்றம் கொண்டு வரப்பட்டன. கேரள பெண்கள் அதிகம் விரும்பியதையடுத்து, கலர் சேலை ரகங்கள் பொள்ளாச்சி அடுத்த நெகமம் சுற்றுப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டு, ஐந்து கோடி ரூபாய் மதிப்பிலான சேலை கேரளாவுக்கு அனுப்பப்பட்டது. துாய்மையான பட்டு, இயற்கை பருத்தி பாலி காட்டன் ஆகியவற்றில் 300க்கும் மேற்பட்ட வடிவமைப்பில் ஓணம் சேலைகளை கோ - ஆப்டெக்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

லெஹன்கா

இளவயது மங்கையர் புதிய புதிய வடிவமைப்பு ஆடைகளின் மீதுதான் அதிக கவனம் பதியும். பெண்களின் பாரம்பரிய ஆடைகளில் லெஹன்காக்கு தனிசிறப்பு மிகு ஆடையாக விளங்குகிறது. இதற்கென புதிய துணிரகம், புதிய மேற்புற டிசைன், கை அமைப்பு மாறுபாடு, வண்ண பிரகாசம் என அனைத்தும் புதுமையுடன் உருவாக்கப்படுகின்றன.தற்போது ஆர்ட் சில்க் ஜாக்கெட் லெஹன்கா, ஆர்ட் சில்க் சுழல் லெஹன்கா, பனாரஸ் லெஹன்கா போன்றவையுடன் நெட், ஜார்கெட், வெல்வெட், பட்டு, லெஹன்காக்களும் வந்துள்ளன.புது வரவான ஆர்ட் சில்க் லெஹன்காவில் ஜாக்கெட் மற்றும் சுழலி லெஹன்கா சில மாற்று வடிவமைப்புகள் உள்ளவாறு புதுபொலிவுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

youtube

பூ வேலைப்பாடு லெஹன்கா

லெஹன்காவில் மெல்லிய பட்டு துணியின் மீது அழகிய வண்ண வண்ண மலர்கள் பிரிண்ட் செய்யப்பட்டு தரப்படுகின்றன. கார்பா மலர்கள் என்ற இவை பல வண்ண சாயலில் அழகுடன் பிரிண்ட் செய்யப்பட்டு பளபளப்பும், வழவழப்பும் கூடிய பின்னணியில் இரவு நேர ஒளி அழகுற ஜொலிக்கின்றன. கற்கள், கண்ணாடி போன்றவை பதிந்த இந்த லெஹன்கா ஒற்றை வண்மம் மற்றும் பல வண்ண பின்னணியில் தனி சிறப்பு அழகுடன் காட்சி தருகின்றன.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.