logo
ADVERTISEMENT
home / Budget Trips
வேதனை தீர்க்கும் கோயில்கள்  – சென்னையை சுற்றியுள்ள நவகிரக தலங்கள் !

வேதனை தீர்க்கும் கோயில்கள் – சென்னையை சுற்றியுள்ள நவகிரக தலங்கள் !

வாழ்வில் நாம் படும் துன்பங்கள் எல்லாவற்றிற்கும் காரணம் ஊழ்வினை என்பது இறை கோட்பாடு. இதனை இந்திய ஆன்மிகம் தீவிரமாக நம்புகிறது. பல்வேறு பிறவியில் நாம் செய்த தவறுகளுக்கான தண்டனைகளாவே தோஷங்கள் ஏற்படுகின்றன.     

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும் எனும் பழமொழிக்கேற்ப ஒருவர் இன்னொருவருக்கு செய்யும் குற்றங்கள், இழைக்கும் துரோகங்களுக்கு பலனாக இறைவன் நிறுத்தி நிதானமாக வேறொரு பிறவியின்போது அதற்கான தண்டனையை வழங்குகிறான்.

ஏன் நமக்கு இந்த வேதனை நாம் யாருக்கும் தீங்கு செய்யவில்லையே என்று நாம் மனம் வருந்துவதன் மூலம் நமது பழைய கர்மாக்கள் கரைகிறது. இந்த தண்டனை வேலைகளை செய்யத்தான் நவகிரகங்கள் உருவாக்கப்பட்டன. வாழ்க்கையில் வரக்கூடிய நன்மை தீமைகள் அனைத்துமே நவகிரகங்களின் அமைப்பு மூலமே நிர்ணயிக்கப் படுகிறது.

நம் மன வேதனை தீர்க்க நவகிரஹ தலங்களுக்கு சென்று உளமார தான் செய்த எல்லா தவறுகளுக்கும் மன்னிப்பு கேட்டு மனம் வருந்த இறைவனை வேண்டினால் அதற்கு காரணமான நவகிரகங்கள் மனம் குளிர்ந்து தனது தண்டனையை தளர்த்தி உங்களுடைய வேதனைகளை தீர்த்து வைக்கின்றனர்.

ADVERTISEMENT

பொதுவாக கும்பகோணம் அருகே உள்ள நவகிரக தலங்கள் இருக்கின்றனர். அதே சமயம் சென்னையில் உள்ளவர்கள் வணங்கும் விதத்தில் சென்னையை சுற்றிலும் நவகிரக தலங்கள் (navagraha temples) ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உருவாகி இருக்கின்றன. நவகிரக பரிகாரங்களுக்கு சென்னை மக்கள் இங்கேயும் சென்று தங்கள் பரிகாரங்களை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

Youtube

சூரியன் பரிகார தலம்

ADVERTISEMENT

சென்னை போரூர் அருகே உள்ள கொளப்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயில் சூரிய பரிகார தலமாக இருக்கிறது. 1300 ஆண்டுகள் பழமையான இந்த கோயிலில் இறைவன் அகத்தீஸ்வரர் இறைவி ஆனந்தவல்லி ஆக இருந்து அருள் புரிகின்றனர். சூரிய தோஷங்கள் நீங்க இங்கே செல்லலாம்.

சந்திரன் பரிகார தலம்

குன்றத்தூர் அருகே சதுர்வேதி மங்கலத்தில் சோமநாதீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த இடம் சோமங்களம் என்றும் வழங்கப்படுகிறது. இறைவன் சோமநாதேஸ்வரர் இறைவி காமாட்சி அம்மனாக இருந்து அருள்பாலிக்கின்றனர். சந்திர தோஷம் நீங்க இங்கே செல்லலாம்.

செவ்வாய் பரிகார தலம்

ADVERTISEMENT

போரூர் அருகே உள்ள பூந்தமல்லியில் இந்தக் கோயில் அமைந்துள்ளது. வைத்தீஸ்வரன் கோயில் எனும் பெயருடைய இக்கோயில் செவ்வாய் தோஷ நிவர்த்திக்கு ஏற்ற தலம். 1300 ஆண்டுகள் பழமையான இக்கோயில் சோழர்களால் கட்டப்பட்டிருக்கிறது. இறைவன் வைத்தியநாத சுவாமி இறைவி தையல் நாயகி அம்மையார். செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் நோய்கள் உள்ளவர்கள் இங்கே செல்லலாம்.

Youtube

புதன் பரிகார தலம்

ADVERTISEMENT

சென்னை போரூருக்கு அருகே இருப்பது புதன் பரிகார தலம் . கோவூர் எனும் இடத்தில் இந்த தலம் உள்ளது. இறைவன் சுந்தரேஸ்வரர் இறைவி சவுந்தராம்பிகை. கோயில் பெயர் சுந்தரேஸ்வரர் கோயில். கிபி 965ம் ஆண்டு சுந்தர சோழன் மூலம் கட்டப்பட்ட கோயில் எனக் குறிப்புகள் இருக்கின்றனர். புதன் தோஷம் உள்ளவர்கள் இங்கே செல்லலாம்.

குரு பரிகார தலம்

இரண்டு குரு ஆலயங்கள் உள்ளன. ஒன்று போரூர் ராமநாதேஸ்வரர் கோயில். ராமன் சிவனை குருவாக ஏற்ற தலம். இறைவன் ராமநாதேஸ்வரர் இறைவி சிவகாம சுந்தரி. 500 ஆண்டுகள் பழமையானது.

இரண்டாவது கோயில் பாடி திருவல்லீஸ்வரர் கோயில். திருவலிதாயம் எனப் பழங்காலத்தில் அமைக்கப்பட்டது. 1000 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்தது. இறைவன் திருவல்லீஸ்வரர் இறைவி ஜெகதாம்பிகை. பாடல் பெற்ற தலங்களில் இதுவும் ஒன்று. கருங்குருவியாக சாபம் பெற்ற பரத்வாஜர் தினமும் இறைவனை பூஜை செய்து தனது தீவினைகள் நீங்கப்பெற்று சாபம் நீங்கிய தலம். நினைத்தது நிறைவேறும். குருவிற்கான பரிகாரங்களை இங்கே செய்யலாம்.

ADVERTISEMENT

சுக்ர பரிகார தலம்

சென்னை பூந்தமல்லி அருகே உள்ள மாங்காட்டில் சுக்கிரன் தோஷ நிவர்த்தி கோயிலாக வெள்ளீஸ்வரர் கோயில் இருக்கிறது. இதன் வில்வ மரம் அடியே மிகப்பெரிய பாண லிங்கம் இருக்கிறது. வெள்ளிக்கிழமைகளில் இவரை வழிபட கண்பார்வை குறைபாடுகள் நீங்கும். சுக்ர தோஷம் உள்ளவர்கள் இங்கே உள்ள இறைவனை தரிசிக்கலாம்.

Youtube

ADVERTISEMENT

ராகு பரிகார தலம்

போரூர் அருகே உள்ள குன்றத்தூர் திரு நாகேஸ்வரர் கோயில் ராகு பரிகாரத்தலமாக விளங்குகிறது. இறைவன் நாகேஸ்வரர் இறைவி காமாட்சி. ராகு தோஷம் இருப்பவர்கள் இங்கே சென்று தங்கள் பரிகாரங்களை செய்து கொள்ளலாம். கால சர்ப்ப தோஷம் நிவர்த்தி ஸ்தலம்.

கேது பரிகார தலம்

போரூர் அருகே உள்ள கெருகம்பாக்கம் நீலகண்டேஸ்வரர் ஆலயம் கேதுவுக்குரிய பரிகார தலம். இதனை வட கீழ்ப்பெரும்பள்ளம் என்றும் அழைக்கின்றனர். இறைவன் நீலகண்டேஸ்வரர் இறைவி ஆதி காமாட்சி. ஒவ்வொரு நாளும் வரக்கூடிய எமகண்ட வேளை என்பது கேதுவுக்கு உரிய நேரமாகும். சிவனுக்கும் நந்திக்கும் நடுவே விதானத்தில் சூரியனை கேது விழுங்குவது போன்ற சிற்பம் உள்ளது. அதற்கு நேர் கீழே நின்றபடி ஸ்வாமியை தரிசனம் செய்தல் நல்லது.

ADVERTISEMENT

சனி பரிகார தலம்

சனிக்குரிய திருத்தலம் திருநள்ளாறு. அதனைப் போலவே வடநள்ளாறு எனும் பெயருடன் சென்னையில் சனி பரிகார தலம் இருக்கிறது. பல்லாவரம் அருகே உள்ள பொழிச்சலூரில் இந்தக் கோயில் அமைந்திருக்கிறது. இறைவன் அகத்தீஸ்வரர் இறைவி ஆனந்தவல்லி. காலபைரவர் இங்கே ஆக்ரோஷமாக இருக்கிறார். சனியின்தோஷங்களை அகற்றுவதில் காலபைரவர் மிகவும் முக்கியம் வாய்ந்தவர். இங்கே நளதீர்த்தமும் இருப்பது சிறப்பு.

 

 

ADVERTISEMENT

 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

ADVERTISEMENT
25 Aug 2019
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT