கண்ணாடி போன்ற சருமத்தை பெற தினமும் செய்ய வேண்டிய இயற்கை ஃபேஸ் பேக்ஸ்!

கண்ணாடி போன்ற சருமத்தை பெற தினமும் செய்ய வேண்டிய இயற்கை ஃபேஸ் பேக்ஸ்!

நாம் அன்றாடம் பயன்படுத்தும் க்ரீம் மற்றும் சோப்புகளின் ரசாயனங்கள் வெளியேறாமல் சருமத்திலேயே தங்கி இளம் வயதிலேயே சுருக்கங்கள் வந்துவிடுகின்றன. இவற்றை சில இயற்கை பேஸ் பேக்குகள் முறியடிக்கின்றன. இவ்வளவு நன்மைகளை தந்து சரும அழகை அதிகரிக்க செய்யும் ஃபேஸ் பேக்குகள் (face packs) குறித்து நாம் இங்கு காணலாம். 

நாக்குக்கு ருசியான நாட்டுக்கோழி குருமா சமைக்கலாம் வாங்க !

pixabay

மஞ்சள் ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள் : 

கடலை மாவு - இரண்டு டேபிள் ஸ்பூன்
கஸ்தூரி மஞ்சள் - அரை ஸ்பூன்
பாதாம் எண்ணெய் - ஒரு டீஸ்பூன்
பால் - மூன்று டீஸ்பூன்

கடலை மாவில் மஞ்சள், பாதாம் எண்ணெய் விட்டு, கடைசியில் ஃபேஸ்ட் செய்யும் அளவிற்கு பால் சேர்த்து நன்றாக கலக்கிக் கொள்ளுங்கள். இதனை முகம் மற்றும் கழுத்து முழுவதும் தடவி இருபது நிமிடங்கள் காய வைக்கவும். பின்னர் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனை இரவில் தூங்குவதற்கு முன் உபயோகிப்பது நல்லது.

குறிப்பு : வாரம் இருமுறை செய்து பாருங்கள். முகப்பரு, கரும்புள்ளி, தேமல் போன்ற தொற்றுக்கள் வராமல் தடுக்கலாம்.

எலுமிச்சை ஃபேஸ் பேக்

தேவையான பொருட்கள் :

எலுமிச்சை தோல் - இருபது கிராம்
கஸ்தூரி மஞ்சள் - ஐம்பது கிராம்
கசகசா - இருபத்திஐந்து கிராம்
பயத்தம் பருப்பு - இருநூறு கிராம்
கடலை மாவு - ஐந்து டீஸ்பூன்
முல்தானி மட்டி - அரை டீஸ்பூன்
எலுமிச்சைச் சாறு - மூன்று டீஸ்பூன்

முதலில் எலுமிச்சை தோல், கஸ்தூரி மஞ்சள், பயத்தம் பருப்பு மற்றும் கசகசாவை நன்றாக வெயிலில் காய வைத்து மெஷினில் கொடுத்து நன்கு அரைத்துக் கொள்ளுங்கள். அரைத்த மாவில் கடலை மாவு, முல்தானி மட்டி கலந்து வைத்து கொள்ளவும். தேவைப்படும் போது இந்த பவுடரில் சிறிதளவு எடுத்து அதனுடன் எலுமிச்சை சாற்றை கலந்து முகம் முதல் பாதம் வரை பூசி பதினைந்து நிமிடங்கள் கழித்து குளியுங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இந்த ஃபேஸ் பேக்கை (face packs) உடலில் தேய்த்து குளிப்பதன் மூலம் சருமம் சுத்தமாக்குவதுடன், இழந்த பொலிவும் விரைவிலேயே திரும்ப கிடைக்கும்.

எண்ணெய் பசை சருமத்திற்கான காரணங்கள் மற்றும் இயற்கை முறையில் பராமரிக்கும் வழிமுறைகள்!

பால் பவுடர் ஃபேஸ் பேக்

 • பால் பவுடரை கொண்டு நாம் பல வகை ஃபேஸ் பேக்குகள் (face packs) தயாரிக்கலாம். பால் பவுடர் உடன் நம் சமையலறையில் உள்ள மற்ற பொருட்களையும் கொண்டு ஃபேஸ் பேக்குகள் தயாரிக்கலாம். இவ்வாறு பால் பவுடரை கொண்டு தயாரிக்கும் ஃபேஸ் பேக்குகள் சரும நிறமாற்றம், பருக்கள், சன் டான், சரும வறட்சி தன்மை ஆகியவற்றை போக்குகின்றது. நாம் நமது சருமத்திற்கு ஏற்ற வகையான ஃபேஸ் பேக்கை தேர்ந்தெடுத்து உபயோகிக்க வேண்டும். இப்பொழுது பால் பவுடரை கொண்டு தயாரிக்கும் ஃபேஸ் பேக்குகள் சிலவற்றைப் பார்க்கலாம்.
 • ஒரு கிண்ணத்தில் இரண்டு மேஜைக்கரண்டி பால் பவுடர் மற்றும் இரண்டு மேஜைக்கரண்டி தேன் சேர்த்து கலக்கவும். இதனை நன்றாக கலந்த பின்னர் முகத்தில் தடவவும். பதினைந்து நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரால் கழுவவும். இந்த ஃபேஸ் பேக் சருமத்திற்கு சிறந்த மாய்ஸ்சுரைசராக இருக்கும்.
 • பால் பவுடரில் தேன் மற்றும் எலுமிச்சை சாறு கலக்கவும். இதனை பசை பதத்திற்கு கொண்டு வரவும். அதை, முகம் மற்றும் கழுத்தில் தடவி, குறைந்தது இருபது நிமிடங்கள் வரை காய வைக்கவும். பின்னர், குளிர்ந்த நீரால் கழுவவும். இது ஒரு சிறந்த சரும வெண்மைக்கான ஃபேஸ் பேக் ஆகும். இதனை தினமும் பயன்படுத்தலாம்.
 • ஒரு மேஜைக்கரண்டி தேன், ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடர் மற்றும் அரை மேஜைக்கரண்டி பாதாம் எண்ணெய் ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் கலந்து பசை போலாக்கவும். இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி இருபது நிமிடங்கள் ஊற வைத்து கழுவவும். இதனை தினமும் பயன்படுத்தி வந்தால், சன் டானில் இருந்து விடுபடலாம்.
pixabay

 • ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடரில், அரை மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெயை கலந்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளவும். இதனை பசை பதத்திற்கு கொண்டு வரவும். இதை முகத்தில் தடவி பதினைந்து நிமிடங்கள் காய விடவும். பின்னர் சுடுநீரில் கழுவிவிடவும். இந்த ஃபேஸ் பேக் சருமத்தை மாய்ஸ்சுரைஸ் செய்து, ஒட்டுமொத்த சரும வலிமையை மேம்படுத்தும்.
 • ஒரு மேஜைக்கரண்டி பால் பவுடர், ஒரு மேஜைக்கரண்டி தயிர், ஒரு மேஜைக்கரண்டி தேன் மற்றும் அரை மேஜைக்கரண்டி ஆலிவ் எண்ணெய் எடுத்துக் கொள்ளவும். இதனை ஒரு கிண்ணத்தில் கலந்து ஃபேஸ் பேக் தயாரிக்கவும். பின் இதனை முகம் மற்றும் கழுத்தில் தடவி இருபது நிமிடங்கள் கழித்து சுடுநீரில் கழுவிவிடவும்.

பெண்களுக்கான அழகு பொருட்கள் – எப்படி சரியான அழகுப் பொருட்களை தேர்வு செய்வது?

தேன் ஃபேஸ் பேக்

 • ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் சந்தனம், சின்ன ஸ்பூன் கடலைமாவு, பால் ஆடை ஒரு ஸ்பூன், ஒரு ஸ்பூன் பன்னீர், இவை அனைத்தையும் கலந்து சருமத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து லேசான சூடு தண்ணீரில் கழுவவும். இவ்வாறு வாரம் ஒருமுறை செய்து வந்தால் விரைவில் சருமம் மிருதுவாக மாறும்.
 • அரை ஸ்பூன் பால் பொடி, அரை ஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன், ஒரு சின்ன ஸ்பூன் பாதாம் ஆயில் ஆகியவற்றை கலந்து முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து லேசான சூடு தண்ணீரில் கழுவவும். இதனால் வெயிலால் ஏற்பட்ட கருப்பு நிறம் படிப்படியாக மாறும்.
 • ஒரு ஸ்பூன் தேன், ஒரு ஸ்பூன் பால் பவுடர், எலுமிச்சை சாறு ஒரு ஸ்பூன், இதை மிக்ஸ் பண்ணி முகத்தில் தடவி இருபது நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து செய்து கொண்டால் சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும்.
 • எண்ணெய் பசையுள்ள முகத்திற்கு ஒரு பெரிய ஸ்பூன் தேன், ஒரு சின்ன ஸ்பூன் முட்டையின் வெள்ளை கரு, ஒரு ஸ்பூன் தயிர் இவை அனைத்தையும் கலந்து முகத்தில் தடவி அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
 • இரண்டு ஸ்பூன் கடலைமாவும் ஒரு சின்ன ஸ்பூன் தேனும் அரை ஸ்பூன் எலுமிச்சை சாறும் மிக்ஸ் பண்ணி முகத்தில் தடவி சிறிய மசாஜ் கொடுத்து மூன்று நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி வர கரும்புள்ளிகளிலும் மறையும். 
pixabay

ஆல்கஹால் ஃபேஸ் பேக்

 • ஆல்கஹாலை வைத்து ஃபேஸ் பேக் செய்வதில் ஒயின் சிறந்தது. இந்த ஒயினை வைத்து ஃபேஸ் பேக் செய்தால் சருமமானது ரிலாக்ஸ் ஆகும். ஒயினானது உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் அடக்கியுள்ளது. இத்தகைய ஒயினை கற்றாழை ஜெல்லுடன் கலந்து ஃபேஸ் பேக்காக பயன்படுத்தும் போது, இது சருமத்தில் ஊடுருவி சென்று பொலிவைத் தருகிறது. இந்த ஃபேசியலை செய்வதால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்கள் எளிதில் வெளிவந்துவிடும்
 • வோக்கா என்பது நீர்நிலையில் பிடிக்கும் புகையிலை. இந்த வோக்காவை ஐஸ் கட்டியாக செய்து தான்  ஃபேஸ் பேக் செய்ய வேண்டும். மேலும் இதை வைத்து ஃபேஸ் பேக் செய்வது மிகவும் குறைவு. இதற்கு முதலில் புதினா டீ மற்றும் ரோஸ் டீயை தயார் செய்து இதனுடன் கடலைமாவு, வோட்கா சேர்த்து ஃபேஸ் பேக் போட வேண்டும். இது முகத்திற்கு ஏற்ற இளமைப் பொலிவைத் தருகிற ஒரு ட்ரிக் ஆகும்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.