பிக் பாஸில் பெண்களை, ஆண்கள் பயன்படுத்துகிறார்கள் : மதுமிதா கிளப்பிய புதிய பிரச்சனை!

பிக் பாஸில் பெண்களை, ஆண்கள் பயன்படுத்துகிறார்கள் : மதுமிதா கிளப்பிய புதிய பிரச்சனை!

பிக் பாஸ் (bigg boss) இல்லத்தில் வனிதா கெஸ்டாக நுழைந்துள்ளார். அவர் வந்ததில் இருந்து ஒவ்வொரு பிரச்சனைகளாக தலை தூக்க தொடங்கியுள்ளது. வந்தவுடன் அபிராமியிடம் முகென் குறித்து கொளுத்தி போட்டார். அவர் எதிர்பார்த்தபடி முகென் மற்றும் அபிராமி இடையே சண்டை வெடித்தது. அபிராமி கோவமாக கத்தியதால் முகென் நாற்காலியை தூக்கி அடிக்க சென்றார். இதனால் பிரச்சனை பெரிதானது. பின்னர் சமாதானம் செய்யப்பட்டனர். இந்த பிரச்னை சற்று தணிந்த நிலையில் மதுமிதாவை டார்கெட் செய்தார் வனிதா. ஆண்களின் ஆதிக்கம் பிக்பாஸ் வீட்டில் நிறைந்துள்ளது.

கோவத்தில் கத்திய அபிராமியை சேரை தூக்கி அடிக்க பாய்ந்த முகென் : வனிதாவால் ரணகளம்!

twitter

அதனால் தான் பெண்களின் பங்களிப்பு பெரியளவில் தெரியவில்லை என்றார் வனிதா. இந்நிலையில் பிக்பாஸ் வீட்டில் இந்த வார லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க் முடிவுக்கு வந்தது. அதை தொடர்ந்து போட்டியில் சிறப்பாக பங்கெடுத்தவர்கள் மற்றும் சுவாரஸ்யமாக செய்யாதவர்களை தேர்வு செய்யும் நடைமுறை தொடங்கியது. முடிவாக டாஸ்கில் சிறப்பாக பங்கெடுத்ததாக மதுமிதா, தர்ஷன் மற்றும் ஷெரீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். தொடர்ந்து டாஸ்கில் சொதப்பியவர்களாக அபிராமி மற்றும் கஸ்தூரி தேர்வு செய்யப்பட்டனர். 

கஸ்தூரி தனது பணிகளை ஒழுங்காக செய்யததாலும், அபிராமி அதிகளவில் ஆங்கிலம் பேசினார்கள் என காரணம் கூறப்பட்டன. இதனால் கஸ்தூரியும் அபிராமியும் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அடுத்த வாரம் நடைபெறும் தலைவர் போட்டிக்காக மதுமிதா, தர்ஷன் மற்றும் ஷெரீன் ஆகியோர் போட்டியிடலாம் என அறிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து பிக் பாஸ் (bigg boss) வீட்டில் புயலை கிளப்பினார் மதுமிதா. ஆங்கிலம் அதிகம் பேசுகிறார் என அபிராமியை ஜெயிலுக்கு அனுப்பியது மதுமிதாவுக்கு பிடிக்கவில்லை. 

பிக் பாஸ் வீட்டிற்குள் மீண்டும் மாஸ் எண்ட்ரி கொடுத்த வனிதா : போட்டியாளர்கள் திணறல்!

twitter

இதுதொடர்பாக கவினிடம், மதுமீதா பேசினார். ஆனால் மதுமிதாவை கவினால் சமாதானம் செய்ய முடியவில்லை.இதை கவனித்த தர்ஷன், உடனே கவினை உள்ளே கூட்டிச் சென்றார். தன்னை அவமதித்து கவினை தர்ஷன் உள்ளே கூட்டிச் சென்றார் என மீண்டும் பிரச்னையை இழுத்தார் மதுமிதா. பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து ஆணதிக்கம் தலை தூக்குவதாகவும், பெண்கள் இங்கு அடிமைப்படுத்தப்படுகின்றனர் என்றும் சண்டையை இழுத்தார். அப்போது சாண்டி, தர்ஷன், கவின் ஆகியோருடன் மதுமிதாவுக்கு பிரச்னை உருவானது. வழக்கம் போல பிரச்னையை கொளுத்தி விட்ட ஓரமாக நின்றார் வனிதா. அப்போது கவின் நான்கு பெண்களை பயன்படுத்தினார் என மது கூறினார்.

அடிக்கடி அபிராமியிடம் முகேன் கூறும் அந்தக் காதலி இவர் தானாம்! வெளியான புகைப்படம் !

இந்த கருத்திற்கு அனைவரும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே கவின் மன்னிப்பு கேட்டு முடித்த பிரச்சனையை ஏன் மீண்டும் கொண்டு வருகிறீர்கள் என்று ஷெரின் கேள்வி எழுப்பினார். அதேபோல் இந்த பிரச்சனையில் நானும் சமந்தப்பட்டிருக்கிறேன், இனிமேல் இது குறித்து கதைக்க வேண்டாம் என லாஸ்லியா கோவமாக சொல்லி விட்டு சென்றார். இதனை தொடர்ந்து சமையலறையில் சேரன், மது மற்றும் வனிதா பேசி கொண்டிருந்தனர்.

அப்போது சாண்டி, கவின், தர்ஷன் மற்றும் லாஸ்லியா வெளியே உட்காந்திருந்தனர். அவர்கள் சேரன், மது மற்றும் வனிதா ஆகியோர் பேசியதை மிமிக்ரி செய்து நகைத்தனர். அதனை பார்த்த அபி நீங்கள் பத்ரி படத்தில் வருவதில் போல் வாய்ஸ் கொடுக்கிறீர்களா என கேட்டார். இந்த சம்பவம் கலகலப்பாக சென்றது. இந்த காட்சியை பிக் பாஸ் (bigg boss) பார்வையாளர்கள் பலரும் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகின்றனர். இதனை தொடந்து நேற்றைய நிகழ்ச்சியில் காலையிலேயே சேரன், ஷெரீனிடம் லாஸ்லியா குறித்து வனிதா குறை கூறினார்.

இதனிடையே ஜெயில் தண்டனை அனுபவித்து வரும் அபிராமி உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டதால், அவரை விடுக்குவிக்குமாறு பிக்பாஸ் உத்தரவிட்டார். பின்னர் தர்ஷன், கவின், சாண்டி, முகின் உள்ளிட்டோரிடம் இருந்த உறவை நிறுத்திக் கொண்டு அவர்களை வாங்க, போங்க, சார் என்று குறிப்பிட்டு அழைக்கத் தொடங்கினார் சேரன். இதை கவனித்த நான்கு பேரும் தங்களுக்குள் அதுகுறித்து பேசி கொண்டனர். இதனை தொடர்ந்து ’சபாஷ் சரியான போட்டி’ டாஸ்க் கொடுக்கப்பட்டது. 

twitter

இது ஒரு விவாதமாக அமைந்தது. இந்த விவாத டாஸ்க்கில் ஆண்கள், பெண்கள் தனித்தனியாக பிரிந்தனர். சிறந்த தலைவர்களாக இருந்தவர்கள் யார்..? சமைக்க தெரிந்தவர்கள் யார்..? தொடர்பான விவாதங்களில் பெண்கள் அணியினர் வெற்றி பெற்றனர். பிறகு வனிதாவும், தர்ஷனும் விவாதத்தில் பேசும் போது சிறு சலசலப்பு ஏற்பட்டது. பின்னர் ஆரவாரத்துடன் விவாதம் நிறைவுற்றது. இதனை தொடர்ந்த்து ஆண்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்த பெண்களை பாட்டால் பதிலடி கொடுக்க அவர்களுக்கு ஆதரவாக லாஸ்லியா இருந்தார். 

இந்நிலையில் இன்று காலை வெளியாகியுள்ள புரோமோவில், கவினிடம் மீண்டும் மது பிரச்னை செய்கிறார். இதில் கவின் ‘இத்தனை நாட்கள் நீங்கள் என்ன செய்தீர்கள்’ என கேட்க, உடனே லாஸ்லியா ‘நீங்கள் இவ்வளவு நாள் வேற்று கிரகத்திலையா இருந்தீர்கள், இப்போது மட்டும் பேசுகிறீர்கள்’ என கவினுடன் இணைந்து மதுவை தாக்குக்கிறார்  மேலும் இவ்வளவு நாள் சும்மா இருந்துவிட்டு இப்பொது வனிதா வந்து கூறியவுடன் பேசுகிறீர்கள் என்று கோவமாக கூறுகிறார். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.