மோனோகுரோம் மேக்கப்: ஒரே வண்ணமுடைய ஒப்பனை தோற்றத்தை பிரபலங்களை போல் எளிதில் பெறுங்கள்!

மோனோகுரோம்  மேக்கப்:  ஒரே வண்ணமுடைய ஒப்பனை தோற்றத்தை பிரபலங்களை போல்  எளிதில் பெறுங்கள்!

ஒப்பனை பல்வேறு விதமான தோற்றங்களை நமக்கு அளிக்கிறது. இதில் நாம் அனைவரும் தனித்துவமிக்க எளிதான ஒப்பனை தோற்றத்தை தொடர்ந்து முயற்சித்து தேடிக்கொண்டுதான் இருக்கிறோம். நீங்கள் உங்கள் ஆடைகளை அணிகலன்கள் உடன் மேட்ச் செய்திருப்பீர்கள் ஆனால் உங்கள் ஐ ஷேடோவை லிப்ஸ்டிக்  உடனோ அல்லது லிப்ஸ்டிக் நிறத்தை உங்கள் கன்னங்களின் பிளஷ் நிறத்துடன் மேட்ச் செய்ததுண்டா?

இதற்கு பெயர்தான் மோனோகுரோமாட்டிக் மேக்கப் லுக் (monochrome makeup look ). இத்தகைய ஒப்பனை உங்களின் கண்களின் நிறங்கள் ,கன்னங்களில் நிறங்கள் மற்றும் உதடுகள் இவை மூன்றும் ஒரே நிறம்  அல்லது அந்த நிறத்துடன் ஒன்றிப் போகும் ஒரு நிறமாக இருக்கவேண்டும். இதுவே மோனோக்ரோம் (மோனோகுரோம்) மேக்கப்பிற்கான  அடையாளமாகும். ட்ரெண்டில் எப்போதும் இருக்கக்கூடிய இந்த மோனோக்ரோம் தோற்றத்தை பிரபலங்களை போல் அடைய சில உதாரணங்களை நாங்கள் இங்கு தொகுத்துள்ளோம்.இதை முயற்சித்து ஒரு பொலிவூட்டும் அற்புதமான தோற்றத்தை பெறுங்கள். 

1. பிங்க் லேடி

Instagram

யார் : நடிகை சோனாக்ஷி சின்ஹா 

ஒப்பனை குறிப்பு : ஹ்யுடா  பியூட்டியின் பிங்க் டைமென்ட்( ரூ 5375)  நிறத்தை கொண்டு கண்களுக்கு ஒரு இலகுவான ஐ ஷேடோவை பூசிவிட்டு, உதடுகளுக்கு நைகாவின் ரேசி  ரோஸ் சோ மேட் ( ரூ 199) நிறத்தை பூசினால் இதுபோன்ற ஒரு இலகுவான மோனோக்ரோம் மேக்கப் தோற்றத்தை எளிதில் அடையலாம். பார்ட்களிலும்,நண்பர்களுடன் அவுட்டிங்கிலும் இது ஒரு பொருத்தமான தோற்றமாக அமையும். 

2. ஆரஞ்சு கேண்டி

Instagram

யார் : நடிகை பிரியங்கா சோப்ரா 

ஒப்பனை குறிப்பு : கோரல்  அல்லது ஆரஞ்சு நிறம் எப்பொழுதும் ட்ரெண்டில் இருக்கும் நிறம் ஆகும்.  இந்த நிறங்களை மோனோகுரோம் மேக்கப்பில் கொண்டுவருவதற்கு, வெட் அண்ட் வைல்ட் கலர் ஐகான்(ரூ 380)  பாலேட்டில் ஆரஞ்சு நிறத்தை புஸ்சிக்கொண்டு அதற்குமேல் உங்கள் விரல் நுனிகளில் சிறிது வேசலினை எடுத்துக்கொண்டு பூசினால் இதுபோன்ற கிளாசி லுக் கிடைக்கும். உதடுகளுக்கு நைகா வழங்கும் பீச் அண்ட் கிரீம் லிப்ஸ்டிக்  (ரூ 425) பொருத்தமாக இருக்கும்.

மேலும் படிக்க - 'நோ - மேக்கப்'  மேக்கப் லுக் அடைவதற்கான யுத்திகள்

3. நேர்த்தியான நியூட் நிறம்

Instagram

யார் : நடிகை ரகுல் ப்ரீத் சிங் 

ஒப்பனை குறிப்பு : பளிச்சிடும் நிறங்களை விரும்பாதவர்கள் இதுபோன்ற நியூட் நிறத்தை தேர்ந்தெடுக்கலாம். மேபிளீன் நியூ யார்க் பிளஷ்ட்  நியூட் பாலெட் (ரூ 899) உங்களுக்கு தேவையான நியூட் நிறங்களை வழங்குகிறது. இதற்கு மெல் ஒரு அழகிய அடர் ஐ லைனர் உங்கள் கண்களை பெரிதாக  காட்டும்.மேலும் உதடுகளுக்கு லாஃமே  9 டு 5 வெயிட்லெஸ் மெட் மூஸ் லிப் அண்ட் சீக் கலர் - கோகோ சாஃப்ட்(ரூ 373) அற்புதமாக பொருந்தும். 

 

4. புதுப்பிக்கும் பீச் நிறம்

Instagram

யார் : நடிகை ஷ்ரத்தா கபூர் 

ஒப்பனை குறிப்பு :  ஷ்ரத்தாவின் பீச் நிற ஒப்பனையை நீங்கள் ஒரே ஒரு பொருளை வைத்து முடித்து விடலாம். இதற்கு லாஃமே 9 டு 5 வெயிட்லெஸ் மெட் மூஸ் லிப் அண்ட் சீக் கலர் - காண்டி பிளாஸ் (ரூ 399) இருந்தால் போதுமானது. இதில் உங்களுக்கு தேவையான ஐ ஷேடோ, பிளஷ் மற்றும் லிப்ஸ்டிக் இவை அனைத்தையும் தேவைக்கேற்ப பூசிக் கொள்ளலாம்.

5. போல்ட் அண்ட் பிரவுன்

Instagram

யார் :  நடிகை வித்யா பாலன் 

ஒப்பனை குறிப்பு : நீங்கள் ஏதேனும் ஒரு அடர் நிற ஒப்பனையை விரும்புபவராக இருந்தால் இதுபோன்ற பழுப்பு நிறங்களிலும்  முயற்சிக்கலாம்.  வித்யாவின் இந்த தோற்றத்தை பெற ஹ்யுடா  பியூட்டியின் கோகோ நிற ஐ ஷேடோ  (ரூ 5375) பொருத்தமாக இருக்கும்.  இலகுவாக இந்த நிறத்தையே கணங்களுக்கும் பயன்படுத்தலாம். மேட் அஸ் ஹெல் க்ரேயன் லிப்ஸ்டிக் உட்ஹவுஸ் (எர்தி பிரவுன்) (ரூ 799) லிப்ஸ்டிக்கை பூசி இந்த தோற்றத்தை அடையலாம். 

மேலும் படிக்க - நீங்கள் அறியாமல் செய்யக்கூடிய சில  மேக்கப் தவறுகள்

பட ஆதாரம் - Instagram 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.