எங்கள் நேசத்தை மீண்டும் புதுப்பிக்கும் நாச்சியார்புரம்.. ரக்ஷிதா -தினேஷ் காதல் கதை!

எங்கள் நேசத்தை மீண்டும் புதுப்பிக்கும் நாச்சியார்புரம்.. ரக்ஷிதா -தினேஷ் காதல் கதை!

சின்னத்திரை ரக்ஷிதா என்றாலே நினைவுக்கு வரும் முதல் சீரியல் சரவணன் மீனாட்சி தான். தனது நடிப்புத் திறமையால் சின்னத்திரை உலகில் தனக்கென தனி இடம் பிடித்த ரக்ஷிதா பிக் பாஸ் சீசன் சமயங்களில் ஜூலியைக் கழுவி ஊற்றிய பிரபலங்களில் ஒருவர்.

சரவணன் மீனாட்சி தொடருக்கு முன்பாகவே ரக்ஷிதா( rachitha) நடித்தது பிரிவோம் சந்திப்போம் தொடரில்தான். அங்குதான் அவர் தனது எதிர்கால வாழ்க்கைத்துணையாக வரப்போகும் தினேஷை சந்தித்திருக்கிறார். அந்த சீரியலில் நடித்த பின்னர் அனைவரும் ரக்ஷிதாவை பார்த்து எப்படி கலர் ஆனாங்க என்று ஆச்சர்யப்படுகிறார்களாம். நன்றாக இருந்த ரக்ஷிதாவை கருப்பாக காட்டியது பிரிவோம் சந்திப்போம் தொடர்.

அந்த சீரியலின் இயக்குனரே ரக்ஷிதாவிடம் நீங்க இந்த சீரியலில் நடித்தது எங்களுடைய அதிர்ஷ்டம் என்பர் கூறுவாராம். காரணம் மிகவும் சிரமமாக இருந்தாலும் தொடர்ந்து 3 வருடங்கள் கருப்பு மேக்கப்பில் ரக்ஷிதா நடித்திருக்கிறார். 

ஓ பேபி சமந்தாவிற்கு பிறக்கப் போகுது நிஜ பேபி ! கர்ப்பமாக இருக்கிறார் சமந்தா!

Youtube

அதன் பின் தற்போது ஜீ தமிழில் நாச்சியார்புரம் சீரியல் மூலம் இந்த ரியல் ஜோடி மீண்டும் ரீலில் இணைந்திருக்கிறார்கள். நாச்சியார்புரம் கதை பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு ரக்ஷிதா (rachitha) கூறுகையில் எங்களை நிஜ வாழ்வில் ஒன்றாக்கியது பிரிவோம் சந்திப்போம் கார்த்திக் ஜோதி பெயர்கள்தான். சென்டிமெண்டாக அதே பெயரை நாச்சியார்புறத்திலும் வைத்திருக்கிறோம்.

ஆரம்பத்தில் தினேஷின் பெயரை நான் கார்த்திக் என்றுதான் நினைத்திருந்தேன். அதன் பின்னர்தான் அவர் நிஜப்பெயர் தினேஷ் என்று அறிந்து கொண்டேன். திருமணத்திற்கு பின்னர் கூட தினேஷின் அப்பா என்னை ஜோதி என்றுதான் அழைப்பார். தினேஷுக்கும் என்னை ஜோதி என்று அழைப்பதுதான் பிடிக்கும்.

 

நடிகை தேவயானியின் காதல் ரகசியங்கள் ! சுவாரசியமான காதல் கதை !

Youtube

கார்த்திக் ஜோதி பெயர் எங்கள் வாழ்வில் அதனை முக்கியமானது. பிரிவோம் சந்திப்போம் கார்த்திக் ஜோதிதான் எங்களுக்கு மிகவும் பிடித்த ஜோடி. நாங்கள் ஒன்றாக நடித்தது பிரிவோம் சந்திப்போம் சீரியலில் மட்டும்தான். அதன் பின் நாங்கள் இருவரும் நீண்ட நாள் நடிக்க வேண்டும் என்று காத்திருந்து நாச்சியார்புரத்தில் ஜோடி சேர்ந்திருக்கிறோம்.

எங்கள் நேசத்தை மீண்டும் புதுப்பித்துக் கொள்ள இந்த சீரியல் உதவியாக இருக்கிறது இரண்டரை வருட முயற்சிக்கு பின்னர் இப்போது அது சீரியல் ஆக மாறியிருக்கிறது என்று கூறியிருக்கிறார்கள் தனியார் பத்திரிக்கைக்கு பேட்டி கொடுத்த ரக்ஷிதா தினேஷ் தம்பதியினர்.

உங்கள் க்ரஷ் உங்கள் காதலராக மாற வேண்டுமா? அவரை உங்களுடையவராக்க சில உதவிகள்!

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                             

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.