கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் : அலங்காரங்கள் மற்றும் பலகாரங்கள் செய்யும் முறைகள்!

கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் : அலங்காரங்கள் மற்றும் பலகாரங்கள் செய்யும் முறைகள்!

கம்சனையும், சிசுபாலனையும், நரகாசூரனையும் வதம் செய்வதற்காக அவதாரம் எடுத்தவர் கண்ணன். கண்ணன் ஆவணி மாதம் அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்துடன் கூடிய நல்ல நாளில் அவதரித்தவர். நள்ளிரவு நேரத்தில் சிறையில் அவதரித்த கண்ணனின் பிறந்தநாளை ஜென்மாஷ்டமியாக நாடு முழுவதும் இன்று கொண்டாடுகின்றோம்.  கிருஷ்ண ஜெயந்திக்கு வீடுகளை சுத்தம் செய்ய வேண்டும். 

பூஜை செய்யும் நாளில் வாசலில் இருந்து பூஜை அறை வரைக்கும் அரிசி மாவில் குட்டிக்குட்டி பாதங்கள் வரைந்து கண்ணனை அழைக்க வேண்டும். பூஜை அறையில் கண்ணனுக்கு பிடித்த வெண்ணெய், சர்க்கரை, அவல், முருக்கு, சீடை இனிப்பு சீடை, அதிரசம் தேன்குழல் என பலவகை பலகாரங்களை படையல் இட்டு பூஜை செய்ய வேண்டும். கிருஷ்ண ஜெயந்தியை (krishna jayanthi) கொண்டாட என்ன விதமான அலங்காரனால் செய்யலாம் என இங்கு காணலாம்.

pixabay

கிருஷ்ண ஜெயந்தி அலங்காரங்கள்

1. ஊஞ்சல் அலங்காரம் :

கிருஷ்ண ஜெயந்தியில் நம் வீட்டு பூஜையில் கண்டிப்பாக இடம் பெற்றிருப்பது ஊஞ்சல் தான். ராதையும் கிருஷ்ணாவையும் ஊஞ்சலில் அமர வைத்து மெளன ராகம் பாடுவார்கள். அப்படி உங்களின் வீட்டில் இருக்கும் ஊஞ்சலை அழங்குப்படுத்தலாம். ஊஞ்சல் சுற்றி தங்க கலர் பேப்பர் சுற்றி அலங்கரிக்கலாம்.

pixabay

2. கிருஷ்ணன் தொட்டில் :

கிருஷ்ணனுக்கு தொட்டில் என்றால் அலாதி பிரியம். அவரை அவளின் அம்மா யசோதை எப்போதுமே தொட்டிலில் வைத்து தான் தாலாட்டுவார். சிலர் அதை நினைவுப்படுத்தும் விதமாக வீடுகளில் தொட்டில் கிருஷ்ணரை அமர வைப்பார்கள். அதனால் ஒரு சிறிய தொட்டில் செய்து அதில் கிருஷ்ணன் சிலை வைத்து ஆட்டலாம்.

pixabay

3. மயில் அலங்காரம்:

கிருஷ்ணனுக்கு அலங்கரித்த தொட்டில் அல்லது ஊஞ்சலில் மயில் தொகை வைத்து அலங்கரிக்கலாம். இதனால் மயில் தொகைக்கு நடுவில் அமர்ந்திருக்கும் கண்ணன் அழகாக காட்சியளிப்பார். ராதையும், கிருஷ்ணாவையும் ஊஞ்சலில் அமர வைத்து மெளன ராகம் பாட வேண்டும்.

pixabay

4. குழந்தைகளுக்கு கண்ணன் வேடம்

வீட்டில் குழந்தைகளுக்கு (krishna jayanthi) கண்ணன் வேடம் போட வேண்டும். பக்கத்து வீட்டு சிறுவர், சிறுமிகளை பூஜைக்கு அழைத்து அவர்களுக்கு கண்ணனின் லீலைகளை சொல்லும் கதைகளை கூறலாம்.  ஒரு பானையில் தயிர் அல்லது மஞ்சள் நீர் வைத்துக் கட்டி, அதை கிருஷ்ணர் வேடமிட்ட ஒருவர் தடி எடுத்து உடைக்கும் நிகழ்வும் நடத்தலாம். 

pixabay

5. கோகுலத்து பெண்கள்

கிருஷ்ணன் கோகுலத்து பெண்களுடன் விளையாட ஆசைப்படுவார். எனவே உங்கள் குழந்தைக்கு கோகுலத்துப் பெண் போல் அலங்கரிக்கலாம்.

pixabay

6. பூக்கள் அலங்காரம்

பூஜை அறையில் இருக்கும் கண்ணன் சிலையை பூக்களால் அலங்கரிக்கலாம். அதிலும் நல்ல அடர் நிறத்தில் உள்ள செவ்வந்தி மற்றும் ரோஜா போன்றவற்றால் பூஜை அறையை அலங்கரிப்பது இன்னும் அழகாக இருக்கும். அதில் துளசி இருந்தால் இன்னும் சிறப்பு. பிறகு கிருஷ்ணருக்கு பிடித்த தயிர், வெண்ணை, அவல் கண்டிப்பாக வைக்க வேண்டும். 

pixabay

7. வெண்ணெய் சாப்பிடும் கிருஷ்ணன்

கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார். இதனால், கிருஷ்ண ஜெயந்தியன்று அவருக்கு மிகவும் பிரியமான பால், தயிர், வெண்ணெய் ஆகியவற்றை அவருக்கு படைக்க வேண்டும். ஒரு பானையில் வெண்ணையை வைத்து அதனை கிருஷ்ணன் வேடமிட்ட குழந்தையை சாப்பிட சொல்ல வேண்டும். 

கிருஷ்ணர் (krishna jayanthi) சுக்ல பட்சம், அஷ்டமி திதியில் இரவு 12 மணிக்கு பிறந்ததாக கருதப்படுவதால், அந்த நேரத்தில் கிருஷ்ணருக்கான சிறப்பு பூஜை, வழிபாடுகள் நடத்தலாம். கிருஷ்ணர் குறித்த பஜனை, கீர்த்தனைகள், மந்திரங்களை ஒன்றாக ஒரு பொது இடத்தில் கூடி சொல்லுவது, பாடுவது இன்னும் சிறப்பு. 

கிருஷ்ண ஜெயந்தி பலகாரங்கள்

கிருஷ்ண ஜெயந்திக்கு பல்வேறு பலகாரங்களை வீட்டில் செய்து படைக்கலாம். சிம்பிளான செய்முறையை கொண்ட பலகாரங்களை எப்படி செய்யலாம் என இங்கு காணலாம். 

எள் உருண்டை 

தேவையான பொருட்கள்:

கருப்பு எள் – 1 கப்
வெல்லம் – 1/4 கப்
ஏலக்காய் பொடி – 1 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலிலில் எள்ளைப் போட்டு சிறிது நேரம் வறுத்து இறக்கி குளிர வைத்து கொள்ள வேண்டும். பின்பு மிக்ஸியில் எள்ளை சேர்த்து, அத்துடன் வெல்லம் மற்றும் ஏலக்காய் பொடி சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். அதனை ஒரு பௌலில் போட்டு, பின் சிறு உருண்டைகளாக உருட்டினால், எள் உருண்டை ரெடி!

youtube

ரவை சீடை 

தேவையான பொருட்கள்:

ரவை – 1/2 கப்
பொட்டுக்கடலை – 2 1/2 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் – 2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
சீரகப் பொடி – 1/2 டீஸ்பூன்
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்
எள் – 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் – சிறிது (2 டீஸ்பூன்)
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை:

முதலில் ரவை, பொட்டுக் கடலையை மிக்ஸியில் போட்டு பொடி செய்து கொள்ள வேண்டும். பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் துருவிய தேங்காயைப் போட்டு பொன்னிறமாக வதக்கி தனியாக வைத்துக் கொள்ளவும். பிறகு ஒரு பௌலில் ரவை, பொட்டுக்கடலை மாவு, எள், சீரகப் பொடி, மிளகுத் தூள், வதக்கிய தேங்காய், உப்பு மற்றும் வெண்ணெய் சேர்த்து, சிறிது சிறிதாக தண்ணீர் ஊற்றி, மென்மையாக பிசைந்து 30-45 நிமிடம் ஊற வைக்க வேண்டும். அடுத்து அந்த மாவை சீடை அளவில் சிறு உருண்டைகளாக உருட்டி 10 நிமிடம் அப்படியே வைத்து அதனை எடுத்து சூடான எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால் ரவா சீடை ரெடி!

youtube

அவல் முறுக்கு

தேவையான பொருட்கள் : 

மாவாக பொடித்த அவல் - 2 கப், 
பயத்த மாவு  - ½ கப், 
பொட்டுக்கடலை மாவு - ½ கப், 
சீரகம் - 1 டீஸ்பூன், 
சுத்தமான எள் - 1 டீஸ்பூன், 
பெருங்காயத்தூள் - ¼ டீஸ்பூன், 
வெண்ணெய் - 2 டீஸ்பூன், 
உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை : 

எல்லா மாவையும் சலித்துக் கொண்டு தேவையான தண்ணீர், வெண்ணெய் மற்றும் எள், சீரகம், பெருங்காயத் தூள், உப்பு சேர்த்து முறுக்கு மாவு பதத்திற்கு பிசைந்து, கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் முறுக்கு அச்சில் பிழிந்து பொரித்தெடுத்து வடித்து பரிமாறவும். இந்த அவல் முறுக்கு கரகரப்பாக இருக்கும்.

உப்பு சீடை 

தேவையான பொருட்கள் : 

பச்சரிசி - 250 கிராம்
வெல்லம் - 200 கிராம்
ஏலக்காய்த்தூள் - சிறிதளவு
தேங்காய்த் துருவல் - ஒரு கப்
உளுத்த மாவு - ஒரு டேபிள்டீஸ்பூன்
எண்ணெய் - 250 மில்லி
எள் - 2 டீஸ்பூன் (வறுத்துக் கொள்ளவும்)

செய்முறை : 

அரிசியை இரண்டு மணி நேரம் ஊற வைத்து உலர்த்தி மிக்ஸியில் அரைத்து மாவு தயாரிக்கவும். வெறும் வாணலியில் மாவைப் போட்டு அடுப்பை மிதமான தீயில் வைத்து மாவு லேசாக சூடு வரும் வரை வறுக்கவும். வெல்லத்தை உடைத்து சிறிதளவு தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து வடிகட்டவும். வெல்லப்பாகுடன் மாவைப் போட்டுக் கிளறி, கொப்பரைத் தேங்காய்த் துருவல், எள், ஏலக்காய்த்தூள், உளுத்தமாவு சேர்த்துப் பிசைந்து உருண்டைகளாக உருட்டிக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு, அடுப்பை மிதமான தீயில் வைத்து, உருட்டிய வெல்ல சீடைகளைப் போட்டு நன்கு வெந்ததும் எடுத்தால் உப்பு சீடை தயார். 

youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.