இருக்கும் விஷயங்களை விட்டு விட்டு கவின் லாஸ்லியா (kavin losliya) காதல்தான் தற்போது ஹாட் டாபிக் ஆக இருந்து வருகிறது. முதலில் சாக்ஷி உடன் காதலில் விழுந்த கவின் லாஸ்லியா தன் பக்கம் சாய்வதை உணர்ந்ததும் அவரைக் கை கழுவி விட்டு லாஸ்லியா மீது ஃபோகஸ் செய்ய ஆரம்பித்தார்.
லாஸ்லியாவிற்கு சாக்ஷி – கவின் பற்றிய அத்தனை விஷயங்களும் தெரியும். தெரிந்த உடனே கவினின் தவறுகளை சுட்டிக் காட்டி தட்டியும் கேட்டார். கேம் காக காதலிப்பேன் என்று சொல்வாயா என்று கவினை கேட்டு நீ என்ன செய்தாலும் அது நடிப்பாகத்தான் தோன்றுகிறது என்று கோபப்பட்டார்.
ஆனால் கவினின் வார்த்தை ஜாலங்கள் அந்த இளம் பெண் லாஸ்லியாவை மனமுருக செய்யவே மீண்டும் தடம் மாறினார் லாஸ்லியா. கவினின் கூற்றுப்படி சாக்ஷி கேம் விளையாட கவினைப் பயன்படுத்தியதாக லாஸ்லியாவிடம் சொல்லவே கவினின் மீது ஏற்கனவே க்ரஷ்ஷில் இருந்த லாஸ்லியா கவினைத் தொடர்ந்து நம்பினார்.
Youtube
சாக்ஷிக்கு எதிராகத் திரும்பினார். சாக்ஷி மனம் வலிக்கும் எனத் தெரிந்தே கவினுடன் நெருங்கிப் பழகினார். இதனால் மேலும் காயம்பட்ட சாக்ஷி மனரீதியாகத் தடுமாற ரசிகர்கள் அவரை வெளியே அனுப்பினர்.
சாக்ஷி வெளியே போனதும் லாஸ்லியா – கவின் ஜோடிக்கு வசதியாகப் போய் விட்டது. தங்கள் காதலை பொய்கள் ஊற்றி வளர்த்தார்கள். சேரன் அப்பாவின் அன்பையும் லாஸ்லியா மறக்கும் அளவிற்கு கவினின் காதல் லாஸ்லியாவின் கண்ணை மறைத்தது. இது வயதிற்கான கோளாறுமட்டுமே.
இந்நிலையில் தானும் லாஸ்லியாவும் காதலிக்கிறோமென்பதை கேமராக்கள் முன்னிலையில் கவின் உறுதிப்படுத்த வேண்டும் என விரும்பினார். அதற்காக சில தந்திரங்கள் செய்தார். எனக்கு 3 வருடமாக ஒரு காம்ப்ளிகேடட் ரிலேஷன்ஷிப் இருந்தது. ,முடிவாக என்னை விட்டு அந்தப் பெண் போய் விட்டார். அதன்பின்னரே நான் பிக் பாஸ் வந்தேன். காம்ப்ளிக்கேடட் னா நீ புரிஞ்சுப்பேல்ல என்று அங்கே லாஸ்லியாவுக்கு கொக்கி போட்டு விட்டு தான் உண்மையானவர் போலக் காட்டிக் கொண்டார் கவின்.
Youtube
உண்மையில் தன்னைப் பற்றிய உண்மையை சொல்ல வேண்டும் என்கிற நினைப்பு இருந்தால் கவின் அதனை முழுமையாக சொல்லி இருக்க வேண்டும். யாருடன் உறவு ஏன் அது காம்ப்ளிகேடட் என்று கூறுகிறார் என்பதை தெளிவாக விளக்கி இருக்க வேண்டும்.
குறைந்த பட்சம் மைக் பேட்டரி கழட்டி பேசும்போதாவது இதனை சொல்லி இருந்திருக்கலாம். ஆனால் அப்போதெல்லாம் விட்டு விட்டு காலை நேரத்தில் கேமரா முன்பு தன்னைப் பற்றி பட்டும்படாமல் பேசுவதெல்லாம் லாஸ்லியாவை ஏமாற்றும் நோக்கமே. பின்னாளில் லாஸ்லியா இதை ஏன் என்னிடம் மறைத்தாய் என்று கேள்வி கேட்டால் நான்தான் அன்னிக்கே 60 கேமரா முன்னாடி சொன்னேனே என்று சமாளிப்பதற்கான ஒரு டெக்னீக் இது.
அது கிடக்கட்டும். அது லாஸ்லியா யோசித்து முடிவெடுக்க வேண்டிய விஷயம். இதற்கிடையில் சீட்டு கம்பெனி மோசடியில் கவினின் குடும்பம் தற்போது ஜெயிலில் இருக்கிறது. இதெல்லாம் சேர்த்துதான் லாஸ்லியா யோசிக்க வேண்டும்.
Youtube
ஆனால் கவின் சொன்ன அந்த மூன்று வருட காதலி யார் என இப்போது இணையதளம் முழுக்க ஒரு விஷயம் பரவி வருகிறது. எல்லோருக்கும் பிரியமான ப்ரியா பவானி சங்கர்தான் கவினின் முன்னாள் காதலி என்று தற்போது புகைப்படங்கள் வெளியாகி உள்ளன.
இதன் உண்மைத் தன்மை பற்றி சம்பத்தப்பட்ட இருவர் பேசினால்தான் தெரியும். ஆனால் காம்ப்ளிகேடட் ரிலேஷன்ஷிப் என்றாலே அனுபவப்பட்டவர்களுக்கு புரிந்து விடும். கவின் ஒரு தவறான உறவில் இருந்திருக்கிறார் என்பது தான் அதன் அர்த்தமாக வருகிறது. அப்படிப் பார்த்தால் அதற்குப் பொருத்தமானவர் ப்ரியா பவானி சங்கர் அல்ல என்றுதான் தோன்றுகிறது. உண்மை வெளிவரும் வரை காத்திருப்போம்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!
அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.