பிக் பாஸ் 3 சீசன் தொடங்கி 46 நாள் கடந்துவிட்டது. இதுவரை பாத்திமா பாபு, வனிதா, மோகன் வைத்யா, மீரா, ரேஷ்மா மற்றும் சரவணன் ஆகியோர் வெளியேறியுள்ளனர். சரவணன் திடீரென வெளியேறியதால் கவின், சாண்டி மற்றும் மதுமிதா உள்ளிட்டோர் அழுதனர். சரவணன் வெளியேற்றப்பட்டதற்கான காரணம் வரும் சனிக்கிழழை கூறப்படும் என பிக் பாஸ் கூறியுள்ளார். இதனை தொடர்ந்து போட்டியாளர்களுக்கு ‘தன் கையே தனக்கு உதவி’ டாஸ்க் கொடுக்கப்பட்டது.
பிக் பாஸ் இல்லத்தில் இருந்து சரவணன் திடீரென வெளியேற்றம் கதறி அழும் சாண்டி, கவின்!
உடல் உழைப்பை அதிகமாக தேவைப்படும் டாஸ்க் என்பதால் லோஸ்லியா, கவின், சேரன் உள்ளிட்ட போட்டியாளர்கள் உடல்நலக் கோளாறு ஏற்பட்டு அவ்வப்போது தவித்தனர். லக்ஸுரி பட்ஜெட் டாஸ்க்குக்கான பஜர் அடிக்கப்பட்டவுடன் போட்டியாளர்கள் நேற்றைய ‘தன் கையே தனக்கு உதவி’ போட்டியை விளையாடத் தொடங்கினர். போட்டியாளர்கள் இருவர் இருவராக பிரிக்கப்பட்டு போட்டியை துவங்கினர். முதல் சுற்று ஆட்டத்தில் யாரெல்லாம் கிடைக்கிறாரோ அவர்கள் மீதெல்லாம் கில்லர் காயின் ஓட்டப்பட்டது.
பிறகு இரண்டாவது சுற்றில் சுதாரித்திக் கொண்ட போட்டியாளர்கள் அதிக மதிப்பெண்களை வைத்திருக்கும் தர்ஷன், சாண்டி ஆகியோரை மட்டும் தேர்வு செய்து விளையாடினர். அதை தொடர்ந்து மற்ற போட்டியாளர்கள் டாஸ்குகளின் வழியே பறிக்கும் புதிய போட்டி வழங்கப்பட்டது. அதில் சாக்ஷி முதலாவது இடத்தை பிடித்தார். இதனால் சாக்ஷி இந்த வாரம் எலிமினேட் ஆகவில்லை என்றால், அவரை அடுத்த வாரம் எலிமினேஷனுக்கு நாமினேட் செய்ய முடியாது.
அவரை தொடர்ந்து அபிராமி மற்றும் மதுமிதா இருவரும் இரண்டாவது, மூன்றாவது இடங்களில் வந்தனர். இந்த டாஸ்கின் போது கவினுக்கு அடிபட்டது. மேலும் சேரன் மயக்கமடைந்து பின்னர் சரி ஆனார். முன்னதாக போட்டியாளர்களுக்கு டாஸ் ஒன்று கொடுக்கப்பட்டது. அதில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நபர்களை பற்றி சொல்லுமாறு கூறப்பட்டது. அதில் சாண்டி, கவின் மற்றும் சேரன் ஆகியோர் சரவணன் பெயரை குறிப்பிட்டனர்.
அப்போது பேசிய ஷெரின் அவரது மூன்று வயதிலேயே அவர் அப்பா விட்டு சென்றதாகவும், அதன் பின்னர் அவர் அம்மா தான் அவரை வளர்த்ததாகவும் கூறினார். மேலும் அவர் அம்மா தனது முழு வாழ்க்கையும் அவருக்காக ஒதுக்கியதாக கூறியது அனைவரையும் கண்கலங்க வைத்தது. இதேபோல் மதுமிதாவின் காதல் திருமணத்திற்கு யாருடைய ஆதரவும் இல்லாத சமயத்தில் நடிகை நளினி தான் அவருக்கு திருமணம் செய்து வைத்ததாக தெரிவித்தார். மேலும் காலம் முழுவதும் அந்த உதவியை நான் மறக்க மாட்டேன் என்று கூறி நெகிழ்ந்தார்.
பிக் பாஸிலிருந்து வெளியேறினார் ரேஷ்மா.. சாக்ஷியால் அழும் அபிராமி, கண்டுகொள்ளாத முகென்!
இதனை தொடர்ந்து பிக் பாஸ் வீட்டு பெண் போட்டியாளர்கள் ஆண் போட்டியாளர்கள் போல வேடமணிந்து நடிக்கும் டாஸ்க் வழங்கப்பட்டது. இதில் சேரனாக நடித்த மதுமிதா மற்றும் முகினாக நடித்த அபிராமி வெற்றியாளராக தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அபி மற்றும் முகென் தனியாக அமர்ந்து பேசி கொண்டிருந்தனர். அப்போது யார் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பது குறித்த பேச்சுவார்தையில் தர்ஷன் வெற்றி பெற விரும்புவதாக முகென் கூறினார். பின்னர் போட்டியாளர்களுக்கு கடலை மிட்டாய் கொடுக்கப்பட்டது. அத்துடன் இந்த வாரத்திற்கான பிக் பாஸ் எபிசோட் நிறைவடைந்தது.
இந்த நிலையில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக நடிகை கஸ்தூரி (kasthuri) செல்லவுள்ளதாக ஒரு செய்தி இணையதளத்தில் உலா வந்து கொண்டு இருந்தது. அது தற்போது உண்மையாகவே நடந்துள்ளது. இன்று காலை வெளியாகியுள்ள முதல் புரோமோவில் ஹவுஸ் மேட்ஸ் அனைவரும் ஒரு பரிசு டப்பா இருப்பதைக் கண்டு ஓடி பிரிக்க ஆர்ப்பாட்டம் செய்கின்றனர். அப்போது அதிலிருந்து வெளியே வந்த கஸ்தூரியைப் பார்த்து அனைவரும் அரவணைத்து வரவேற்றனர்.
இந்தா இருக்கு கிஃப்டு!#Day46 #Promo1 #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #BiggBossTamil #VijayTelevision pic.twitter.com/0xg0VZtZ0M
— Vijay Television (@vijaytelevision) August 8, 2019
வந்த உடனே கஸ்தூரி, சாக்ஷியிடம், ‘உங்களிடம் நான் நிறைய கேள்வி கேட்க ஆசைப்படுகிறேன்’ என்று ஆரம்பித்துவிட்டார். அதுமட்டுமின்றி இவர் தனக்கு சாண்டியை பிடிக்காது என்று ஒரு முறை பேட்டியில் கூறியுள்ளதால் கண்டிப்பாக எதாவது ஒரு சர்ச்சையைக் கிளம்புவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. சமூகவலைத்தளங்களில் எப்போதும் சர்ச்சைகளை மற்றும் பல நடிகர்களின் ரசிகர்களை வம்பிழுத்து வரும் நடிகை கஸ்தூரி (kasthuri) பிக் பாஸ் வீட்டிலும் அதனையே திறம்பட செய்வார் என பார்வையாளர்கள் கூறி வருகின்றனர். இதனால் பிக் பாஸ் வீட்டில் இனிமேலும் பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது.
முக்கோண காதலால் சிக்கி தவிக்கும் பிக் பாஸ் இல்லம் : வைல்ட் கார்டில் நுழைகிறார் ஜான்சன்!
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.