வாழை நாரில் இருந்து நாப்கின் தயாரித்து ஐ.ஐ.டி மாணவர்கள் சாதனை : 120 முறை பயன்படுத்தலாம்!

வாழை நாரில் இருந்து நாப்கின் தயாரித்து ஐ.ஐ.டி மாணவர்கள் சாதனை : 120 முறை பயன்படுத்தலாம்!

வாழை நாரில் இருந்து சானிட்டரி நாப்கின் (sanitary pads) தயாரித்து டெல்லி ஐ.ஐ.டி மாணவர்கள் சாதனை செய்துள்ளனர். ஜி.எஸ்.டி வரி வசூலிக்கும் நடவடிக்கைக்கு பிறகு மக்களிடன் அடிப்படைத் தேவைகளுக்குப் பயன்படுத்தும் பல பொருட்களின் விலை உயர்ந்ததால் மக்கள் மிகுந்த சிரமங்களைச் சந்தித்தனர். குறிப்பாக பெண்கள் பயன்படுத்தக் கூடிய சானிட்டரி நாப்கின் விலையும் உயர்ந்தது. சராசரியாக ஒரு பெண் தன் வாழ்நாளில் சுமார் 8 ஆயிரத்து 400 நாப்கின்களை பயன்படுத்துகிறார். 

மாதவிடாய் காலங்களில் இன்னமும் பெண்கள் சரியான நாப்கின் வசதி இல்லாமல் தவித்து வந்த நிலையில் டெல்லி ஐ.ஐ.டி மாணவர்கள் வாழை நாரில் இருந்து தயாரித்து சானிட்டரி நாப்கின் தயாரித்துள்ளனர். இயற்கை முறையில் எவ்வித பக்க விளைவுகள் இன்றி இந்த நாப்கின்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த சானிட்டரி நாப்கினை 120 முறை பயன்படுத்தலாம் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஐ.ஐ.டி டெல்லி பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உதவியுடன் ‘சான்பே’ என்ற தொழில்முனைவு நிறுவனம் இந்த நாப்கினைத் தயாரித்துள்ளது.

அமேசான் காடுகளில் திடீரென பற்றி எரியும் காட்டுத்தீ : பூமியின் நுரையீரல் அழியும் அபாயம்!

twitter

தற்போது காப்புரிமை பெறுவதற்காக அனுமதி கோரியுள்ளது. காப்புரிமை கிடைத்தவுடன் சந்தைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலும் இன்று சந்தைகளில் விற்கப்படும் சானிட்டரி நாப்கின்கள் செயற்கைப் பொருட்களைக் கொண்டுதான் தயாரிக்கப்படுகிறது. குறிப்பாக பிளாஸ்டிக் போன்ற பொருட்கள் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது. இதனால் அது மக்குவதற்கு 60 ஆண்டுகளுக்கும் மேலாகும். மேலும் பலர் இதை முறையாக அப்புறப்படுத்தாமல் விட்டுவிடுவதால் தொற்று நோய் ஏற்படும் பாதிப்பும் உள்ளது. மேலும் நாப்கினை எரிப்பதனால் புற்றுநோயை உண்டாக்கும் கார்சினோஜென்கள் வெளிபடுகிறது. 

இந்நிலையில் வாழை நாரில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த நாப்கின்கள் (sanitary pads) இயற்கைக்கு வரப்பிரசாதமாகவே உள்ளது. இது குறித்து பேசிய சான்பே’ நிறுவனத்தின் நிர்வாகி ஆர்சிட் அகர்வால், பெரும்பாலான சானிட்டரி நாப்கின்கள் செயற்கை பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக்குகளால் தயாரிக்கப்படுகின்றன. தற்போது சந்தைகளில் கிடைக்கு நாப்கின்களால் பல்வேறு பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இவை மட்குவதற்கு 50 முதல் 60 ஆண்டுகள்  வரையாகும். இந்த சானிட்டரி நாப்கின் கழிவுகள் பொதுவாக மண்ணில் புதைக்கப்படுகிறது, திறந்தவெளியில் வீசப்படுகிறது, நீர்நிலைகளில் கொட்டப்படுகிறது, எரிக்கப்படுகின்றன அல்லது கழிவறைகளுக்குள் போடப்படுகிறது.

twitter

நாப்கின்களை (sanitary pads) அகற்றுவதில் உள்ள தொழில்நுட்ப அம்சங்கள் காரணமாக சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது. நாப்கின்களை எரிப்பதால் உண்டாகும் புகையானது பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். இவற்றை மண்ணில் புதைப்பதால் குப்பைகள் அதிகரிக்கிறது. ஆனால், வாழை நாரில் தயாரிக்கப்படும் நாப்கினால், சுற்றுச்சூழலுக்கு அச்சுறுத்தல் கிடையாது. அதே நேரம் தற்போது பயன்படுத்தப்படும் நாப்கின்கள் விலையும் அதிக அளவில் உள்ளது. இதனைக் கணக்கில் எடுத்துக் கொண்டுதான் எங்கள் நிறுவனம் வாழை நாரில் நாப்கின் தயாரிக்க முடிவு செய்தோம்.

இதனால் சுற்றுச்சூழலுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதுமட்டுமின்றி இந்த நாப்கின்கள் 2 ஆண்டுகள் வரை இருக்கும், இவற்றை 120 முறை வரை மீண்டும் பயன்படுத்தலாம். எரிச்சல், வலி, சிராய்ப்பு போன்ற எந்த பாதிப்பு இந்த நாப்கின்களால் ஏற்படுவதில்லை. இவற்றை தயாரிக்க மூலப் பொருட்கள் எளிதில் கிடைப்பதால் இதன் விளையும் குறைவாகவே நிர்ணயம் செய்யப்பட்டுளளது. மேலும் 199 ரூபாய்க்கு இரண்டு நாப்கின்கள் விற்க உள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.

விஹான் இனி தனி ஆள் இல்லை ! ஸ்னேஹாவிற்கும் ப்ரசன்னாவிற்கும் பிறக்க போகுது அடுத்த குழந்தை!

twitter

கோவை மாவட்டம் கிராமப் பகுதிகளில் ஏழைப் பெண்களின் மாதாந்திர பிரச்சனையை சமூக நோக்கில் மிகக்குறைந்த விலையில் சமாளிக்க கற்றுக் கொடுத்த அருணாச்சலம் முருகானந்தம் உலக மக்களின் பாராட்டுக்களை பெற்ற வண்ணம் இருக்கிறார். கடந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது வாங்கி அனைவரது கவனத்தையும் பெற்றார். இந்தியப் பெண்களின் வாழ்க்கை மேம்பாட்டில் ஒரு முக்கிய மைல்கல்லாக முருகானந்தத்தின் கண்டுபிடிப்பு கருதப்படுகிறது. இந்நிலையில் ஐஐடி மாணவர்கள் உருவாக்கியுள்ள வாழை நார் நாப்கின் பாராட்டுகள் பெற்று வருகிறது.

எகிப்தியர்களின் அழகு ரகசியம் - உங்களையும் மெருகேற்றட்டும் !

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.