ஸ்மார்ட் போன்களிடம் இருந்து உங்கள் இளம் வயது பிள்ளைகளை பாதுகாப்பாக விலக்கி வைப்பது எப்படி?

ஸ்மார்ட் போன்களிடம் இருந்து உங்கள் இளம் வயது பிள்ளைகளை பாதுகாப்பாக விலக்கி வைப்பது எப்படி?

தொழில்நுட்பத்தின் தாக்கம் அதிகமாக உள்ள இன்றைய தலைமுறையினர், பெற்றோர்களுக்கு என்றுமே ஒரு அச்சுறுத்தல் தான். அதிலும் குறிப்பாக அவர்களிடம் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் எங்கு, எப்போது எந்த விதமான ஆபத்தை கொண்டு வரும் என்கின்ற அச்சத்திலேயே பெற்றோர்கள் இருகின்றனர். இந்த சூழல் நிச்சயம் பெற்றோர்களுக்கு மன நிம்மதியையும், இளைஞர்களின் ஆரோக்கியமான முன்னேற்றத்தையும் தடுகின்றது. என்ன தான் இன்றைய இளைய தலைமுறையினர், இவ்வகை தொழில்நுட்ப ஆதிக்கம் இருக்கும் ஸ்மார்ட் போன்கள் மற்றும் பிற மின்னணு கருவிகள் ஒரு எல்லையை மீறும் போது ஆபத்தை உண்டாக்கி விடும் என்று தெரிந்தாலும், அவர்கள் அதற்கு அடிமையாகி விட்டால், தங்களை அறியாமலேயே சிக்கிக் கொள்கின்றனர். பின்னர் அதில் இருந்து மீள முடியாமலும் தவிகின்றனர், இதனால் தங்களது இந்த இளம் வயதில் கற்க வேண்டிய பாடங்களையும், சேர்க்க வேண்டிய திறமைகளையும், வளர்த்துக் கொள்ள வேண்டிய அறிவையும் தவற விடுகின்றனர்.

பெற்றோர்கள், இந்த ஆபத்தை உணர்ந்து தங்களால் முடிந்த வரை பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் தங்கள் மகன் மற்றும் மகளை இந்த ஸ்மார்ட் போன் தாக்கத்தில் இருந்து காக்க வேண்டும்.

நீங்கள் எப்படி உங்கள் மகன் மற்றும் மகனை இந்த தாக்கத்தில் இருந்து பாதுகாத்து, அவற்றை விட்டு விலக்கி வைப்பது என்று சிந்தித்துக் கொண்டிருகின்றீர்கள் என்றால், இங்கே உங்களுக்காக சில முக்கிய குறிப்புகள்;

pinterest

1. உங்கள் மகன்/மகளின் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை கண்காணிக்க தயங்காதீர்கள்: இன்றைய தலைமுறை பெற்றோர்கள், நாகரீகம் என்ற பெயரில், தங்கள் குழந்தைகளின் சுதந்திரத்தில் ஒரு எல்லைக்கு உள்ளே செல்வதில்லை. இதனால் அவர்கள் என்ன செய்கின்றார்கள், மற்றும் அவர்கள் செய்வது சரிதான என்பதை பற்றித் தெரியாமல், ஏதாவது பிரச்சனைகள் உண்டாகும் போது வருத்தப் படுகின்றனர். மேலும் அதில் இறுதி எப்படி விடுபடுவது என்று வழியறியாது தவிகின்றனர். அதனால், எந்த சூழலிலும், உங்கள் மகன் மற்றும் மகள் ஸ்மார்ட் போன்களை எப்படி பயன் படுத்துகின்றனர் மேலும் போனில் எந்த மாதிரியான தகவல்களை வைத்துள்ளனர் என்பதை கண்காணிக்க தயங்காதீர்கள்.

2. அவர்களது செயல்களை பின்தொடருங்கள்: உங்கள் குழந்தைகளின் நலன் மீது உங்களுக்கு அதிகம் அக்கறை உள்ளது என்றால், அவர்களது செயல்கள் மற்றும் ஸ்மார்ட் போனில் அவர்கள் பகிரும் மற்றும் சேகரிக்கும் தகவல், அவர்கள் யாருடன் பேசுகின்றார்கள், எவ்வளவு நேரம் பேசுகின்றார்கள் போன்ற தகவல்களை பின் தொடர தயங்காதீர்கள். இதனால் ஏதாவது தவறான செய்கைகளில் அவர்கள் இருந்தால், உடனடியாக கண்டறிந்த அவர்களை சரியான பாதையில் எடுத்து செல்ல உதவியாக இருக்கும்.

3. மென்பொருள் உதவியோடு கண்காணியுங்கள்: இன்று பல நவீன மென்பொருள் வந்து விட்டது. இதனை உங்கள் குழந்தையின் ஸ்மார்ட் போனில் இறக்கம் செய்து, உங்கள் போனுடன் இணைத்து விட்டால், உங்களால் எளிதாக உங்கள் மகன்/மகள் செய்யும் செய்கைகளை அறிய முடியும். இது பெரும்பாலும் அவர்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். எனினும், ஒரு பெற்றோராக நீங்கள் இன்றைய ஆபத்து நிறைந்த உலகத்தில், இத்தகைய கண்காணிப்பில் ஈடுபடுவது தவறு இல்லை.

4. சில சட்டங்களை இயற்றுங்கள்: உங்கள் மகன்/மகளுக்கு ஸ்மார்ட் போன் வாங்கித் தருவதற்கு முன் அவர்களுக்கு சில சட்டங்கள் மற்றும் கட்டளைகள் இடுங்கள். அதற்கு அவர்கள் ஒத்துக் கொண்டால் மட்டுமே, இந்த சலுகை கொடுக்கப் படும் என்று கூறுங்கள். அப்படி செய்யும் போது, அவர்கள் உங்கள் கட்டுபாடிற்குள்ளேயே ஸ்மார்ட் போன் பயன் பாட்டை வைத்துக் கொள்வார்கள். அதனால் அவர்கள் தவறான செய்கைகளில் ஈடுபட வாய்புகள் குறையும்.

 

Pinterest

5. வெளிப்படையாக பயன் படுத்த நிர்பந்தியுங்கள்: இன்று பல வீடுகளில் இளம் வயது குழந்தைகள் ஒரு மறைவான இடம் அல்லது தனிமையான இடத்திற்கு சென்று, மணி கணக்கில் ஸ்மார்ட் போன்களை பயன் படுத்துகின்றனர். இதனால் பெற்றோர்களுக்கு அவர்கள் அப்படி தனிமையில் இருந்து என்ன செய்கின்றனர் என்று புரியாமல் குழப்பத்தில் இருகின்றனர். அதனால், ஸ்மார்ட் போன் வாங்கித் தரும் முன், உங்கள் குழந்தைகளுக்கு எந்த சூழலிலும் தனிமையில் போனை பயன் படுத்தக் கூடாது, மேலும் வெளிப்படையாக அவர்களது பயன்பாடுகள் இருக்க வேண்டும் என்று கட்டளையிடுங்கள். இதனால் அவர்களது பயன்பாடும் குறையும், தவறு செய்யும் வாய்ப்பும் குறையும்.

6. உங்கள் குழந்தைகளுடன் (kids) அதிக நேரம் செலவிடுங்கள்: உங்கள் குழந்தைகளுடன் முடிந்த வரை அதிக நேரம் செலவிடுங்கள். அவர்களுக்கு வீட்டில் கூட யாரும் தன்னுடன் பேச அல்லது நேரம் செலவிட இல்லை என்கின்ற ஒரு காரணம் கூட அவர்கள் அதிகம் ஸ்மார்ட் போனை பயன் படுத்த தூண்டலாம். ஆனால் அதற்கு முதலில் பெற்றோர்கள் தாங்கள் அத்தகைய போன்களுடன் நேரம் செலவிடுவதை தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் இருக்கும் அனைவரும் தினமும் தரமான நேரத்தை ஒன்று கூடி செலவிட வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.

7. கடவுச்சொல் போட்டு வையுங்கள்: உங்கள் மகன் /மகளின் ஸ்மார்ட் போன் பயன்பாட்டை குறைக்கக் ஒரு சில செயலிகளுக்கு கடவுசொற்களை போட்டு வையுங்கள். இதனால் அவர்களால் அதிகம் பயன்படுத்த முடியாமல் போவதோடு, தேவையற்ற செயல்களை செய்வதில் இருந்தும் விலக்கி வைக்கப்படுவார்கள்.

8. எளிமையான போனை வாங்கிக் கொடுங்கள்: முடிந்த வரை உங்கள் மகன்/மகளின் உண்மையான தேவை என்ன என்பதை புரிந்து கொண்டு ஒரு எளிமையான போனை அல்லது செயலிகள் மிகக் குறைவாக இருக்கும் ஸ்மார்ட் போனை வாங்கித் தரலாம். இதனால் அவர்களால் தானாகவே தேவையற்ற விடயங்களை செய்வதில் இருந்து தடுக்கப்படுவார்கள். இதனால் பெற்றோர்களும் நிம்மதியாக இருக்கலாம். உங்கள் குழந்தைகளுக்கு, போன் என்பது முதலில் தகவல் பரிமாற்றத்திற்கும், ஆபத்தான காலங்களில் உதவிக்கு உடனடியாக தகவல் பரிமாறவும் மட்டுமே என்பதை புரிய வையுங்கள். அதன் பின், அவர்கள் படிக்கும் பட்டம் அல்லது தொழில்நுட்ப கல்விக்குத் தேவை இருந்தால் மட்டுமே புது ரக ஸ்மார்ட் போன்களை வாங்கிக் கொடுங்கள். இது அவர்கள் பாதுகாப்பாகவும், சரியான முறையிலும் போனை பயன்படுத்த உதவும்.  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா?ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.